🌸வெண்ணெயை அமுது செய்யவே ஓர் அவதாரம்🌸*

நாம் அனைவரும் நினைப்பது போல் கிருஷ்ணாவதாரம் கம்சனை சகடாசுரனை துரியோதனாதி யர்களை கொல்லவோ பாண்டவர்களை திரௌபதியை ரக்ஷிக்கவோ இல்லையாம்
இதையெல்லாம் அவன் க்ஷீராப்தியில்* *இருந்தபடியே ஒரு சங்கல்பத்திலேயே முடிக்க முடியுமாம்

பின் ஏன் கிருஷ்ணாவதாரம
என்றால் அதற்கு முக்கிய காரணமாக ஆழ்வார் கூறுவதை பார்ப்போம்.

கண்ணன் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஆயர்பாடியில். அவன் அங்கே ஏன் வளரவேண்டும். ஏன் அங்கு வெண்ணையை திருடவேண்டும்.

பொதுவாக தன்னிடம் இல்லாத ஒன்றை அது விலை மதிப்பு உள்ளதோ அல்லாததோ மறைமுகமாக அடுத்தவரிடம் இருந்து அல்லது பொருளின்
உரியவர்களுக்கு தெரிவிக்காமல் எடுப்பது அல்லது களவாடுவது திருடர்களின் பழக்கம்.

பகவான் கண்ணனிடம் என்ன இல்லை. அனைத்தும் அவனால்
படைக்கப் பட்டவையே.

அண்டமனைத்தையும் உடைய உண்ட பூரணன் அல்லவா? அவன்.

சரி விஷயத்துக்கு வருவோம் பகவான் ஏன் கிருஷ்ணாவதாரம் எடுத்தான் என காண்போம்.
ஆழ்வார் கூறுவது பகவான் கிருஷ்ணாவதாரம் எடுத்ததே வெண்ணெய் சாப்பிடத்தான்.

என்ன புதுக்கதை என கேட்கிறீர்கள் தானே?

அதாவது பகவான் வைகுண்ட வாசனுக்கு அந்த ஶ்ரீ வைகுண்டத்தில் இடைவிடாமல் ஆராதனைகள் செய்து எப்போதும் ஒரே அமிர்தத்தை மட்டுமே கண்டருள செய்து செய்து பகவானுக்கே சலிப்பு ஏற்படுத்தி
விட்டார்களாம் நித்ய சூரிகள்.

பகவானோ எத்தனை நாள் தான் இந்த ஒரே அமிர்தத்தையே சாப்பிடுவது என எண்ணிய தருணம்,
நந்தனின் ஆயர்பாடியில் யசோதை பசும் பாலை சுண்ட காய்ச்சி தயிராக்கி கடையும் மோரில் இருந்து வெண்ணெயின் வாசனை கோகுலத்தையும் தாண்டி பகவானின் வைகுண்டத்தை அடைந்ததாம்.
அவ்வளவுதான் பகவானுக்கு வைகுண்டத்தில் இருப்புக் கொள்ளவில்லை.

நிதம் நிதம் கண்டருளும் திகட்டிப்போன இந்த அமிர்தத்தை தவிர்த்து தன் கணக்கின் படி ஒரு நொடிப் பொழுது ஆயர்பாடி போய் அங்கே யசோதா உட்பட ஆயர்பாடி பெண்கள் பசும்பாலில் இருந்து எடுக்கும் சுத்தமான வெண்ணெயை அழுது செய்து வரலாமே என
எண்ணியதுடன்,
இதற்காக இன்னும் ஓர் அவதாரம் பூமியில் எடுத்தால் கூட பரவாயில்லை என நினைக்க..

அவனுக்கு அதற்கும் ஒரு சங்கடம் இருந்ததாம்.

ஆம்காரணம் வைகுண்டத்தில் தனக்கான நித்ய ஆராதனைகள் குறைவின்றி நடக்கும்போது அவர்களை விட்டு எப்படி போவது என கருணையுடன் நினைத்தானாம்.
மேலும் அப்படியே போனால் நித்யசூரிகள் மனம் எப்படி கஷ்டப்படும்.

நித்யசூரிகள் ஒரு நொடிப் பொழுது தங்கள் கண்களை மூடித் திறந்தால் போதுமே. அதற்குள் இன்னொரு அவதாரம் எடுத்து ஆயர்பாடிக்கு சென்று யசோதா மற்றும் ஆயர்பாடியின் ஆய்ச்சிமார்கள் கடைந்தெடுக்கும் அந்த வெண்ணெயை விழுங்கி விட்டு வரலாமே
என எண்ண,

அவனது உள்ளத்தை அறிந்த தாயார் ஸ்வாமி இந்த அமுதமும் அந்த வெண்ணையும் ஒன்றாகுமா என அவன் திருமார்பில் இருந்தபடியே கேட்க,

பகவான் சொன்னாராம். தேவி நீயே அந்த பாற்கடலை கடைந்த போது வந்தவள் தானே. அதுபோல் இந்த அழுதமும் பாற்கடலை கடைந்த போது வந்தது.
ஆனால் இந்த அமுதம் தேவாசுர போட்டிக்காக கடையபட்டது. ஆனால் அங்கே பூலாகத்தில் எந்த போட்டியும் இல்லை. பக்தியுடன் கடையபடுகிறது. அந்த வாசனை உன் நாசிக்கும் வந்திருக்குமே என கேட்க.

தாயார் சிரித்துகொண்டே ஸ்வாமி அதற்காக ஏன் வருத்தபடுகிறீர்.

நித்ய சூரிகள் எப்போதும் இமையே மூடாதவர்கள் எனவே
நான் சொல்லும் உபாயத்தை கேளும்.

தேவரீருக்கு இப்போ திருவாராதனத்தில் அலங்காரம் முடித்து அகில் சந்தனம் ஜவ்வாது புனுகு போன்றவை கலந்த வாசனை தூபம் காட்ட போகின்றனர்.

அப்படி அவர்கள் காட்டும் மேக மண்டலத்தைப் போன்ற அந்த தூபப் புகையின் இடையில் தேவரீர் ஆயர்பாடி சென்று அவதாரத்தை பூர்த்தி
செய்து வரலாமே என கூற... ( நித்யசூரிகள் காட்டும் தூபத்தில் இருந்து வரும் வெண்மையான வாசனையான புகை சூரிகளுக்கும் பகவானுக்கும் இடையே வெண்மேகத்தால் போட்ட திரை போல் இருக்குமாம்)

பகவானும் ஆம், இதுதான் சரியான சந்தர்ப்பம் நாம் ஒரு அவதாரம் எடுத்து வருகிறேன் என்று கூறியபடியே
லோகத்தில் தேவகியின் வயிற்றில் ஓரிரவில் ஒருத்தி மகனாக பிறந்து ஆயர்பாடி சென்று யசோதாவின் மகனாக ஒளித்து வளர்ந்தபடிக்கே..

ஆயர்பாடியில் யசோதா மற்றும் ஆயர்பாடி பெண்கள் கடைந்தெடுத்த வெண்ணையை தன் ஆசை தீர அமுது செய்தும் அதற்காகவே அவன் ஆயர்பாடி சிறுவர்களுடன் ஆடிபாடி பலவிதமான லீலைகள்
செய்துகொண்டும் இறுதியில் பாண்டவர்கள் குந்தி திரௌபதை ஆகியோருக்கு நட்பாகவும் அவர்களுக்காகவே கம்சன் சகடாசுரன் காளிங்கன் துரியோதனாதிகளான கௌரவர்கள் கிருபர் துரோணர் கர்ணன் பீஷ்மன் போன்றோர்களையும் எதிர்த்து போரிட வைத்து கிருஷ்ணாவதாரத்தில் தன்னோடு அவர்களையும் இணைத்து கொண்டு தனது
தனது இருப்பிடமான வைகுண்டத்தையே அடைந்தானாம்.

தாயருக்கும் பகவானுக்கும் இடையே ஏற்பட்ட உரையாடல். அதன் காரணமான கிருஷ்ணாவதாரம் என எதையும் முழுவதுமாக அறிய முடியாத நித்ய சூரிகள் அந்த தூப புகை குறைந்ததும் தீப ஆராதனை செய்தனராம்.

பகவான் காலத்தையே கட்டுக்குள். வைத்திருப்பவன். அவனுக்கு காலம
ம் ஒரு பொருட்டே அல்ல என்ற இந்த அதி அற்புதமான தத்துவத்தை நமக்கு உணர்த்தும் விதமாக குருகூர் சடகோபனான நம்மாழ்வாரின் பாசுரம்அமைந்துள்ளது.

சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர் ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால் ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன்
கூன் கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே.🙏

திருவிருத்தம்–21

அதாவது வைகுண்டத்தில் இருந்து யசோதை வீட்டு வெண்ணெயை அமுது செய்யவே ஆயர்பாடியை நாடி வந்த பகவானுக்கு..
பகவானின் எண்ணத்தை அறியாத யசோதை வேண்டிய அளவு வெண்ணெய் அவருக்கு கொடுக்காததால் கண்ணனான அவன். வெண்ணையை வீடு தோறும் சென்று திருடக் கிளம்பினானாம்.

பகவான் கண்ணனின் அவதாரமே வேறு எதற்காகவும் அல்ல, வெண்ணெய் திருடத்தான் என அழகாக ஆழ்வார் சுட்டி காட்டியுள்ளார்..🙏🙏🙏
You can follow @BKannigaa.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: