தமிழ்நாட்டின் குபீர் போராளியான விஜய் சேதுபதியும், திடீர் போராளியான ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்தால் ஒரு படம் எப்படி இருக்கும்?

முழு இந்திய எதிர்ப்பு படமாகத்தான் இருக்கும்

அப்படி நக்சலைட்டுகள் சேர்ந்து "ரணசிங்கம்" என்றொரு படத்தை எடுத்திருக்கின்றன, முழுக்க முழுக்க உணர்ச்சியினை மட்டும்
தூண்டி அறிவினை மழுங்கடிக்க வைக்கும் படம் இது.

ஒருவன் வாழ வழியில்லாமல் வெளிநாட்டுக்கு செல்கின்றானாம், அவன் பிணம் கூட வராமல் அரசு ஏமாற்றுகின்றதாம், பொறுப்பில்லா அரசு ஒழிக என ஒரு மாதிரி முடித்திருக்கின்றார்கள்

மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளின் சிக்கல் இது,
உலகில் சீனா வல்லரசு சந்தேகமில்லை ஆனால் உலகெல்லாம் சீன தொழிலாளர் உண்டு, ஆண்களும் பெண்களுமாய் சில ஆயிரங்களுக்கு படும் பாடு சொல்லி முடியாது

ஐரோப்பிய நாடுகளில் கூட தொழிலாளர்கள் நாடுவிட்டு நாடு ஓடுவதுண்டு

இதில் இந்தியர் மட்டும் வெளிநாட்டுக்கு ஓடுவது போல் ஒரு கற்பனை கதை
வெளிநாடு ஒன்றும் இந்திய அரசின் சட்டம் செல்லுபடியாகும் இடம் அல்ல,அங்கு ஆவணங்கள் மட்டும் பேசும் அரசு பேச முடியாது

ஆவணங்கள் சரியாக இருந்தால் எதற்கும் சிக்கல் இல்லை,போலி ஆவணம் மற்றும் சந்தேகத்துக்கிடமான ஆவணங்களால் சிக்கல் அதிகம்

மனைவி என்று பெண்களை கடத்துவதும்,குடிநுழைவு துறையின்
பலவீனமான இடங்களில் புகுந்து அடிப்பதும், கடத்தலும் இன்னும் சொல்லணா அட்டகாசங்களும் நடக்கும் ஏரியா அது

இதனால் ஆவணங்கள் மிக சரியாக இருந்தால் மட்டுமே விஷயம் சரி , இல்லையேல் பெரும் குழப்பமே மிஞ்சும்

விஷயம் இதுதான் ஆவணங்கள் முறையாய் இருக்கும் பட்சம் அரசு பேசவேண்டிய அவசியமே இல்லை,
எல்லாம் மிக சரியாக முடியும்

ஆவணம் இல்லை என்றால்தான் சிக்கல்,இதற்கு முழு காரணம் இங்கு பணத்தாசை பிடித்தலையும் ஏஜெண்டுகளும் அதை ரகசியமாக கண்டும் காணாமலும் இருக்கும் அந்நிய நாட்டின் சில மனுகுல விரோதிகளுமே காரணம்

இங்கு ஒருவன் வெளிநாட்டுக்கு வேலை செய்ய செல்லும்பொழுது ஏகபட்ட விஷயங்கள்
ஆவணமாக வேண்டும்,அங்குள்ள தூதரகம் முதல் பல விஷயங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்

இங்கே செல்பவனே பாதிபேர் போலி பாஸ்போர்ட் என்பதால் அதை எல்லாம் செய்யமாட்டார்கள், பல முறைகேடுகளும் இன்னும் பலவும் நடக்கும்

யாருடைய மனைவியோ என அழைத்து வரப்படும் பெண்கள் செய்ய கூடாத வேலையினை செய்து
கசக்கி எறியபட்டு நிற்கும் கொடுமைகளை எத்தனையோ விமான நிலையத்திலே இங்கு பலரும் கடந்திருக்கலாம்

ஆம், இந்த படம் மக்களிடம் ஒரு விழிப்புணர்வு படமாக வந்திருக்கலாம், முறைபடுத்தபடா ஆவணங்கள் எவ்வளவு பெறும் சிக்கலுக்கு வழிவகுக்கும், சம்பளம் உபரி நிதி ஏன் பிணம் கூட ஆவணம் இல்லாவிட்டால் வராது
என்பதை சொல்லியிருக்கலாம்

அது சமூகத்துக்கும் நல்லது. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது.

ஆனால் இப்படி எல்லாம் நல்லதை சமூக மக்களுக்கு சொன்னால் என்ன தமிழ் சினிமா?

இதனால் இல்லாததை பொல்லாத கற்பனைகளையெல்லாம் கலந்து இந்திய அரசின் பெயரை, அதிகாரிகள் பெயரை கெடுப்பதில் அவர்களுக்கு
அப்படி ஒரு ஆனந்தம்

ஏன் என்றால் இம்மாதிரி அரச வெறுப்பு மக்களிடம் ஏற்பட சில சக்திகள் திட்டமிட்டு செயல்படுகின்றன, வெறுப்பையும் கசப்பையும் மக்களிடம் விதைத்து குழப்பத்தை ஏற்படுத்துவது அவர்களின் தொழில்

இதன் வேர்கள் இந்தியாவில் இருப்பதில்லை, கடல் தாண்டியவை
சென்னையில் என்.ஐ.ஏ அலுவலகம் மட்டும் திறக்கபட்டு ஒழுங்காக செயல்படட்டும், அதன் பின் இம்மாதிரி படம் வரும் என நினைக்கின்றீர்கள்?

அந்த அலுவலகம் கோடம்ப்பாக்கத்தில்தான் திறக்கப்பட வேண்டும் என அழுத்தமாக மத்திய அரசுக்கு சொல்லி கொள்கின்றோம்
(வளைகுடா போர் காலம், ஐ.எஸ் காலம் இப்பொழுது கொரோனா காலம் என ஒவ்வொரு காலத்திலும் அந்நிய மண்ணில் இருந்து இந்தியர்களை எவ்வளவு பத்திரமாக கொண்டுவருகின்றது என்பதையெல்லாம் கண்ணார கண்டும், இப்படி அநியாயத்துக்கு படம் எடுப்பதெல்லாம் தேச விரோதம் )
You can follow @Wolfrik1.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: