மொபைல் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை :-

இரண்டு வருடத்துக்கு ஒரு முறை மொபைலை மாற்றும் சூழ்நிலைக்கு இப்போது நாம் வந்துவிட்டோம் அதற்கு காரணம் புதிதாக வந்திருக்கும் ஆப் அண்ட் சாப்ட்வேர் மற்றும் இம்ப்ரூவ் ஸ்பெசிஃபிகேஷன். புதிய டிசைன் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்
ஓகே புதிதாக மொபைலை வாங்க நினைக்கிறீர்களா? இதனை கொஞ்சம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்

முதலில் மொபைலை நேரில் பார்க்காமல் எந்த மொபைலை வாங்க வேண்டாம். இணையத்தில் போட்டோ,வீடியோ மட்டுமே பார்த்து வாங்கி அது கையில் வந்ததற்குப் பிறகு பிடிக்காமல் போய்விடும்.
அதனால் நீங்கள் வாங்கப்போகும் போனை இதற்கு முன் நண்பர் வாங்கி இருந்தாலோ அல்லது கடையில் சென்று அது எப்படி இருக்கிறது என்று நேரில் பார்த்து பிறகு ஆர்டர் செய்யவும்.

போனை உங்களுக்காக வாங்குங்கள் மற்றவர்களுக்காக வாங்க வேண்டாம். சில பேர் ஐபோன் வாங்கி இருப்பார்கள் மற்றவர்கள் பெருமையாக
நினைக்க வேண்டும் என்று.. ஆனால் அவர்களுக்கு அதை யூஸ் பண்ண கூட தெரியாது வெறும் கால் மட்டும் அட்டென்ட் பண்ணி வைத்துவிடுவார்கள் நான் எல்லோரையும் சொல்லவில்லை.

அடுத்து நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் பிராசசர். மிகவும் பவர்புல்லானது ஆப்பிளின் ஏ சீரிஸ் பிராசஸர்
அதற்குத்தான் விலை அதிகம் அதுக்கு அடுத்து நல்ல ரியல் லைப் பிராசஸர் என்றால் ஸ்னாப்ட்ராகன் குவால்காம் பிராசஸர்
அதிகமாக இன்டெர்நெட் பயன்படுத்துபவர்கள், அதிகமாக கேம் விளையாடுபவர்கள் ஸ்னாப்ட்ராகன் ப்ராசெஸர் உள்ள மொபைல்களை வாங்கலாம்.Qualcomm Snapdragon 725, Qualcomm Snapdragon 820/821
ஆகியவை பல ப்ரீமியம் மொபைல்களில் இருக்கும். இன்டர்நெட், கேம் ஆகியவற்றை அதிகம் பயன்படுத்தாததவர்களுக்கு மீடியாடெக் ப்ராசெஸர் போதுமானதாகவே இருக்கும் விலை சற்று குறைவு தான் பேர்பார்மன்ஸ் குறைவாகவே இருக்கும்.

அடுத்து நாம் பார்க்க வேண்டியது மெமரி. நமக்கு தேவையான அளவு மெமரி கொண்டது
இருந்தால் போதும் மொபைலில் படம் தரவிறக்கம் செய்வது பாட்டுக்களை அதிகம் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்வது இதற்கு நீங்கள் 8GB 128GB வாங்குவது நல்லது மற்ற சாதாரண பயன்பாட்டிற்கு 4 / 6GB 64GB போதும்
அடுத்து கேமரா எத்தனை மெகா பிக்ஸல் கொண்டது என்று பார்ப்பதை விட அதில் அப்ரேச்சர் ஐ.எஸ்.ஓ.,ஆட்டோ ஃபோக்கர் ஆகியவை பற்றி அறிவது அவசியம். அப்ரேச்சரைப் பொறுத்தவரை, குறைந்த வெளிச்சத்திலும் துல்லிமான படங்களுக்கு f/2.0 அல்லது குறைவான அப்ரேச்சர் தேவை. முக்கியமாக அந்த கேமரா அண்ட் சென்சார்
எந்த கம்பெனியின் தயாரிப்பு என்று பார்க்கவேண்டும் சோனி, சாம்சங் என்றால் நல்லது
ரியர் கேமரா 48 மெகாபிக்சல்,செல்பி கேமரா 32 மெகாபிக்சல் இருப்பது நல்லது.
நீடித்து நிற்கும் பேட்டரி கண்டிப்பாக கவனிக்க வேண்டிய அம்சம். இதை கவனிக்காமல் ஸ்மார்ட் போன் வாங்கினால் அடிக்கடி ப்ளக் போர்டை தேடிக்கொண்டிருக்க நேரும். குறைந்தபட்சம் 4500mAh பேட்டரி இருந்தால் சராசரி பயன்பாட்டில் ஒரு நாள் முழுக்க தாங்கும்.
தற்போது பாதுகாப்பு அம்சம் மிகவும் முக்கியம் ஏனென்றால் நாம் மொபைலில் தான் எல்லாவிதமான பண பரிவர்த்தனையும் நடத்திக் கொண்டிருக்கின்றோம் அதனால் பாதுகாப்பான ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள போனை வாங்குவது நல்லது அதற்கு மார்க்கெட்டில் முதன்மையாக இருப்பது ஆப்பிள் மற்றும் கூகுள் போன்
மற்றும் ஒன் பிளஸ்,பிளாக்பெரி விலை சற்று அதிகம் தான் இதற்கடுத்து ஓரளவு பாதுகாப்புடன் இருப்பது சாம்சங் போன்கள்.

அடுத்து டிஸ்ப்ளே அளவு மற்றும் துல்லியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். HD, Full HD திரைகள் பல ஸ்மார்ட் போன்களில் உள்ளன. Full HD திரை துல்லியமாக வண்ணங்களைக் காட்டும்.
கைக்க்கு அடக்கமாக பயன்படுத்த அதிகபட்சம் 5 இன்ச் அளவுள்ள திரை இருந்தால் போதும். அதற்கு மேல் போனால் கைக்குள் அடங்காமல் நழுவும் வாய்ப்பு உண்டு. ஆனால், வீடியோ பார்ப்பதற்கு மொபைலை அதிகம் பயன்படுத்துபவர்கள் 5.5 முதல் 6.5 இன்ச் வரையுள்ள மொபைலை வாங்கலாம்
மொபைல் தயாரிப்பாளர்கள் எல்லா சிறப்பம்சங்களையும் ஒரே போனில் வைக்க மாட்டார்கள் ஒரு போனில் கேமரா நன்றாக இருந்தால் பேட்டரி பார்மென்ஸ் கம்மியாக இருக்கும் ப்ராசஸர் நன்றாக இருந்தால் கேமரா குவாலிட்டி குறைவாக இருக்கும் அதனால் நாம் தான் நமக்குத் தேவையான மொபைலை கவனத்துடன் தேர்ந்தெடுக்க
வேண்டும் அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க அப்படினு சொல்றவங்களுக்கு இருக்கவே இருக்கு இந்த இணையதளம்

https://www.android.com/phones/whichphone/

இந்த">https://www.android.com/phones/wh... தளத்தில் நுழைந்ததுமே , நீங்கள் வாங்க இருக்கும் ஆண்ட்ராய்டு போன் எந்த வகை பயன்பாட்டிற்கானது என்பதை குறிப்பிட வேண்டும். புகைப்படங்கள் எடுக்க, இசை கேட்க,
சமூக ஊடகங்களை பயன்படுத்த, இணையத்தில் உலாவ என்று பலவகையான பயன்பாடுகளும் வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து ஒன்றை தேர்வு செய்து, அதில் உங்கள் தேவை என்ன என்பதை குறிப்பிட வேண்டும். இதே போல நீங்கள் அதிகம் விரும்பும் 3 பயன்பாடுகள் தொடர்பான தேவைகளை தெரிவித்தால்,
இந்த தளம் எந்த ஆண்ட்ராய்டு போன் சரியாக இருக்கும் என பரிந்துரைக்கிறது.

அப்புறம் என்ன இந்த மாசம் வரும் பிளிப்கார்ட் & அமேசன் ஆஃபர்ல நல்ல போனைவாங்கி என்ஜாய் பண்ணுங்க
You can follow @FilmFoodTravel.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: