Thread: #சச்சின் என்னும் கிரிக்கெட் கடவுளின் சாதனைகள் ஒரு பார்வை:

❤ சச்சின் என்பது வெறும் பெயரல்ல..
அது ஒர் உணர்வு, உற்சாகம், உத்வேகம் ❤

👉 30 வயதில் - 2003 உலக கோப்பை போட்டியில், 11 ஆட்டங்களில் 673 ரன்கள் எடுத்தார்

உலக கோப்பை தொடர்களில், இதுவே ஒரு வீரரின் அதிகபட்ச ரன் ஆகும்
👉 31 வயதில் 👈

டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் அதிக சதங்கள்(34) அடித்த கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார்.

சச்சினின் அதிகபட்ச டெஸ்ட் ரன் 248* Vs Bangladesh.
👉 32 வயதில் 👈

டெஸ்ட் கிரிக்கெட் லரலாற்றில் கவாஸ்கர் அடித்த அதிகபட்ச சதங்களை(34) முறியடித்து 35 சதங்களுடன் முதலிடம் பிடித்தார்.
👉 34 வயதில் 👈

ODI போட்டிகளில் 15,000 ரன்களை கடந்தும்,

Test போட்டிகளில் 11,000 ரன்களை கடந்தும் சாதனை படைத்தார்.
👉 35 வயதில் 👈

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்திருந்த "பிரைன் லாரா"வின்(11,953 ரன்கள்) சாதனையை முறியடித்து முதலிடம் பெற்றார்.
👉 36 வயதில் 👈

ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம்(200) அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்றை படைத்தார்.
👉 37 வயதில் 👈

உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தனது கனவை நினைவாக்கிய, 2011 இந்திய அணியில் இடம்பிடித்ததோடு மட்டுமல்லாமல்

இந்திய அணிக்காக 482 ரன்கள் குவித்து சாதித்தார்.
👉 38 வயதில் 👈

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 100 சதங்கள் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
👉 39 வயதில் 👈

முதல் தர போட்டிகளில் கவாஸ்கர் அடித்திருந்த 81 சதங்களை சமன் செய்து சாதித்தார்.
👉 40 வயதில் 👈

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் 50,000 ரன்கள் கடந்த முதல்(No.1) ஆசிய விரர் மற்றும் உலகளவில் 15-வது கிரிக்கெட் வீரர் என்னும் சாதனையை படைத்தார்.
"நாங்கள் இந்தியாவிற்கு எதிராக தோற்கவில்லை. சச்சின் என்னும் தனி மனிதருக்கு எதிராக தோற்றோம்"

1998-ம் சென்னை டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த போது ஆஸ்திரேலிய கேப்டன் மார்க் டெய்லர் சொன்ன வார்த்தைகள் இவை.

ஆம், இன்னும் ஆயிரம் வீரர்கள் உருவாகலாம்,ஆனால் இன்னொரு சச்சினை இனி காண முடியாது
#சச்சின் என்பது வெறும் பெயரல்ல..
அது உணர்வு, உற்சாகம் , உத்வேகம்...

சச்சின்..சச்சின்...சச்சின் - ஆம் இந்த வார்த்தைகள் கிரிக்கெட் அழியும் வரை உலகின் அனைத்து மூலைகளிலும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

The Name is Sachin Tendulkar @sachin_rt 🔥🔥🔥🔥
You can follow @Satheesh_2020.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: