கரூர்ல கடந்த ஆண்டு எங்க வீட்ட வாடகைக்கு விடும்போது முதல் மாடியில் இருக்கும் வீட்டுக்கு ஒரு இசுலாமிய குடும்பம் குடி வந்தாங்க. மேல்மாடி ல முஸ்லீம்க்கு விட்டுட்டீங்க கீழ் வீட்டுக்கு வர்றதுக்கு யாரா இருந்தாலும் யோசிப்பாங்களேன்னு புரோக்கர்ங்க சொன்னப்போ 1/n
வர்றவங்க வரட்டும். இல்லன்னா கீழ் வீட்டுக்கும் முசுலீமே வரட்டும்னு சொல்லிட்டோம். கிட்டத்தட்ட 9 மாசமா கீழ்வீடு காலியாவே இருக்கு ( கொரோனா லாக்டவுனும் ஒரு காரணம்). பெரியப்பா தவறினப்ப அந்த வீட்லதான் self quarantine ல இருந்தேன். 2/n
இப்போ, அப்பாவோட surgery க்கு o+ve blood தேவப்பட்டுச்சு. கடைசி நேரத்துல சொன்னதால நானே கொடுக்கறேன் னு சொன்னேன். Blood relation அதுவும் மகன்லாம் கொடுக்கக்கூடாது. Storage ல இருக்கிறதும் கூடாது. Fresh blood தான் வேணும்னு சொன்னாங்க. Twitterல, whatsappல எல்லாம் request போட்டுட்டு 3/n
Blood bank போய் விசாரிச்சா இது normal blood donation இல்ல. SDP (Single Donor's Platelet) வேணும்னாங்க. Regularஆ blood donate பண்றவங்ககூட SDP சொன்னதும் தயங்கினாங்க. ஏன்டா முதல்ல Blood test பண்றதுக்கு 45 நிமிடம் அப்புறம் Blood donation க்கு 2 மணிநேரம் ஆகும். 4/n
Donor கிட்ட இருந்து Blood எடுத்து அதுல platelets மட்டும் filter பண்ணி எடுத்துட்டு filter பண்ண blood மறுபடியும் Donor உடம்புக்கே செலுத்தனும். இது மாதிரி 8 - 10 cycle நடக்கும். ஒரு cycle க்கு 15 நிமிசம். நிறைய பேர்கிட்ட பேசிப்பார்த்து கடைசியில ஒருத்தர் வந்தார். 5/n
3 மாசம் முன்னாடிகூட donate பண்ணியிருக்கேன் பயப்படாதீங்க டெஸ்ட்ல reject பண்ணமாட்டாங்கன்னு சிரிச்சுட்டே சொன்னார். 3 மணி நேரத்துக்கு மேல இருந்து donate பண்ணிட்டுப்போனார். எனக்கு எப்படி நன்றி சொல்லன்னுத் தெரியல. கை கொடுத்துட்டுக் கிளம்பிப்போயிட்டார். பெயர் ரியாசுதீன். 🙏🏽
You can follow @arutperungo.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: