உனக்கென்ன மேலே நின்றாய்! ஓ SPB!
பாடும் போது நான் தென்றல் காற்று என்று அவர் பாடிய வரிகளுக்குப் பொருத்தமான குரலுக்குச் சொந்தக்காரர்.
ஒரு கலைஞன் புகழடைந்த பிறகு ஆயிரம் வெற்றிக் கூட்டணிகள் உருவாகலாம். ஆனால் அந்தக் கலைஞனை தொடக்கத்தில் ஏற்றிவிட்ட படிகள் கோயில்படிகள். #SPB
தெலுங்கில் சில பாடல்கள் பாடியிருந்தாலும் 1967ல் தமிழில் வாய்ப்புக்கு அவர் சென்ற கோயில் எம்.எஸ்.வி. வாய்ப்பு கிடைத்ததா? எம்.எஸ்.வி என்ன சொன்னார்? அதை #SPB சொல்லியே கேட்கலாமே.
மெல்லிசை மன்னரிடம் ஒரு வழக்கம்... தமிழைத் தமிழாய்ப் பாடாவிட்டால் பாடவைக்க மாட்டார். தமிழ் படித்துவிட்டு வா என்று #SPB இடம் அவர் சொன்ன பிறகு SPB மீண்டும் போனாரா? அவரை #MSV நினைவு வைத்திருந்தாரா? அதையும் SPB சொல்லக் கேட்போம்.
2 ஆண்டுகள் கழித்து தற்செயலாக #SPB ஐப் பார்த்து நினைவுகூர்ந்து வாய்ப்புக் கொடுத்தார் #MSV. அந்த இசைமாமேதையின் இசைப்பதிவுக் கூடமும் இசையமைப்பும் பற்றி SPB கூறத் தெரிந்து கொள்வோம்.
மாபெரும் இசையமைப்பாளரிடம் முதல் பாடலைப் பாடியும் அப்பாடல் வெளிவராமல் போனது #SPB இன் பின்னாளைய வெற்றிகளுக்கு முன்பே கண்ணேறு கழித்துவிட்டது. ஹோட்டல் ரம்பாவுக்காக பாடிய அத்தானோடு இப்படி இருந்து பாட்டை அடுத்து இசையரசி பி.சுசீலாவோடு சாந்தி நிலையம்.
நல்ல நேரம் வந்துவிட்டால் வெற்றிக்கு வெற்றி முந்திக் கொண்டு வரும். அது “எம்ஜிஆர்” படப் பாடலாகக் கிடைத்தது. கேவிஎம் இசையில் பி.சுசீலாவோடு இணைந்து பாடல். அடிமைப்பெண் படம் சாந்திநிலையம் வெளியாவதற்கு சரியாக 22 நாட்கள் முன் (1-05-1969)வெளிவந்து முந்திக் கொண்டது.
அதே ஆண்டில் #SPB க்கு இன்னொரு எம்ஜிஆர் படப்பாட்டு. இந்த முறை #MSV இசையில். கன்னிப்பெண் படத்தில் பௌர்ணமி நிலவில் பாட்டு. எஸ்.ஜானகியோடு தமிழில் SPB பாடிய முதல் பாடல் இதுதான். இந்த வைரப் படியில் முதலில் ஏறித்தான் பின்னால் ஆயிரமாயிரம் வெற்றிப் படியேறினார்கள்.
அறிமுகம் ஆன ஆண்டியிலேயே முன்னணி இசையமைப்பாளர் #MSV இசையில் ஐந்து பாடல்கள். முன்னணி நடிகர் #MGR படத்தில் இரண்டு பாடல்கள். எந்தப் பாடகருக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைக்கும்?!? #SPB க்கு கிடைத்தது. 1970ல் வெற்றி மீறு வெற்றி வந்து #SPB யைச் சேர வைத்தார் #MSV.
சாந்தி நிலையம் படத்திலேயே #SPB இன்னொரு பாடலும் பாடியிருக்கிறார். அந்தப் பாடல் நன்றாகத் தெரிந்த பலருக்கும் கூட அதில் SPB குரல் இருப்பது தெரியாது. அந்தப் பாட்டு.... கடவுள் ஒரு நாள் உலகைக் காண தனியே வந்தானாம்.
நீங்கள் கண்டுபிடிக்கிறீர்களா என்று பார்ப்போம்.
1970திலும் #MSV பல பாடல்களை #SPB வழங்கினார். அந்தப் பாடல்களுக்கு முன்பு வேறொரு பாடலைப் பார்ப்போம். ஆயிரம் நிலவே வா பாடலுக்குப் பிறகு கேவிஎம் புதிய பாடல்கள் கொடுக்காவிட்டாலும், புதிதாக இசையமைப்பாளாகியிருந்த சங்கர் கணேஷ் இசையில் 1970ல் கல்யாண ராமனுக்கும்...
1970ல் ஜெய்சங்கருக்கு நிலவே நீ சாட்சி படத்தில் #SPB#MSV முதலில் பாடவைத்தார். அதுவும் இரண்டு பாடல்கள். இரண்டும் இரண்டு விதம்.
பொன்னென்றும் பூவென்றும் தேனென்றும் சொல்வேனோ.... SPBயின் குரலை. அட்டகாசமான பாட்டு.
நிலவே நீ சாட்சியின் மகிழ்ச்சி வடிவத்தை பி.சுசீலா பாட... சோக வடிவத்தை #SPB பாடி முதன்முதலாக ராதா என்ற பாடகியோடு கூட்டணி சேர்ந்தார்.
மென்மையான ஆண்குரலும் வன்மையான பெண்குரலும் இணைசேர்ந்தால் எப்படியிருக்கும்?
அங்கம் புதுவிதம்
அழகினில் ஒருவிதம்
மங்கை முகம் நவரச நிலவு
இப்படியொரு பாடலை எல்.ஆர்.ஈசுவரியோடு #SPB ஐ பாடவைத்தார் #MSV வீட்டுக்கு வீடு படத்தில்.
1970ல் இன்னொரு எம்.ஜி.ஆர் பாடலை #SPB க்கு மாபெரும் வெற்றிப் பாட்டாகக் கொடுத்தார் #MSV.
வெற்றி மீது வெற்றி வந்து SPBஐச் சேரும் என்று அன்றே சொல்லாமல் சொல்லிவிட்டது MSVயின் இந்தப் பாட்டு.
தேடி வந்த மாப்பிள்ளை படத்தில் வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்.
1970ல் #MSV இசையில் காவியத்தலைவி மற்றும் மாலதி படங்களிலும் #SPB பாடினார். அந்த ஆண்டு சங்கர் கணேஷ் இசையில் முதல் பாட்டு பாடியது போல வி.குமார் இசையிலும் முதல் பாட்டு பாடினார். நவக்கிரகம் படத்தில் உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது பாடல்.
1971ல் மற்ற இசையமைப்பாளர்களும்ம் சில பாடல்கள் #SPB க்கு கொடுத்தாலும், ஒரு மாணவனுக்கு கற்றுக் கொடுப்பது போல பலவிதமான பாடல்களை அள்ளிக் கொடுத்தார் #MSV. அதில் முதலில் சொல்ல விரும்புவது சுடரும் சூறாவளியும் படத்தில்... அன்பு வந்தது. என்னை ஆள வந்தது.
1971ல் #SPB ஐ பி.வசந்தாவோடு இரண்டு பாடல்கள் பாட வைத்தார் #MSV.
வீட்டுக்கு ஒரு பிள்ளை என்ற படத்தில் வரும் இந்த அரிய பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. இரண்டு குரல்களின் குழைவும் சுகமாக இருக்கும்.
இன்று முதல் செல்வமிது
என்னழகு தெய்வமிது
1971ல் கே.வி.எம் இசையில் #SPB நான்கு பாடல்கள் பாடியிருந்தாலும், அருணோதயம் படத்தில் “எங்கள் வீட்டுத் தங்கத் தேரில்” பாட்டும் இருளும் ஒளியும் படத்தில் “திருமகள் தேவி வந்தாள்” பாட்டும் பிரபலமானவை.
1971ல் குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்தது ஒரு படம் தான். அந்த ஒரு படத்திலும் மிக அருமையான பாடலை #SPB க்கு கொடுத்தார். எல்.ஆர்.ஈசுவரியோடு அனங்கன் அங்கஜன் பாட்டு. கே.டி.சந்தானம் வரிகள். தொடங்கும் முன் ஏபி.நாகராஜன் குரலில் “வெண்ணிலவு குடை பிடிக்க” வசனம்.
1971ல் வி.குமார் மற்றும் சங்கர் கணேஷ் இசையில் #SPB க்கு பாடல்கள் இல்லை. அதனால் என்ன... நிறைய படங்களுக்கு இசையமைத்த #MSV தன்னுடைய 90% படங்களில் SPBஐப் பாடவைத்தார்.
மாதமோ ஆவணி... மங்கையோ மாங்கனி
உத்தரவின்றி உள்ளே வா என்று ரசிகர் மனங்கள் SPBஐ அழைத்த பாடல்.
உத்தரவின்றி உள்ளே வா படத்தில் #MSV இசையில் டி.எம்.சௌந்தரராஜனோடும் எல்.ஆர்.ஈசுவரியோடும் சேர்ந்து பாடிய இந்தப் பாட்டும் #SPB க்கு சூப்பர் ஹிட். ஒரு பாட்டில் மூன்று பாட்டுகள் வகைப்பாடல். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி இசை.
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
எப்படிப் பட்ட பாட்டுகளை #MSV அவர்கள் #SPB என்ற புதுப்பாடகருக்குக் கொடுத்து வளர்த்துவிட்டிருக்கிறார் பாருங்கள்.
அவளுக்கென்று ஒரு மனம். இந்தப் பாடலுக்கு மயங்கும் ரசிகர்களின் மனம்.
கே.பாலச்சந்தர் மிகுந்த பொருட்செலவில் கோவா சென்று எடுத்த நான்கு சுவர்கள் என்ற வண்ணப் படத்தில் வரும் ஓமைனா பாட்டும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய பாட்டு. படம் ஓடியிருந்தால் இந்தப் பாட்டும் பிரபலமாயிருக்கும். #MSV #SPB
1971ல் தமிழில் நடித்துக் கொண்டிருந்த அத்தனை முன்னணி நடிகர்களுக்கும் #SPB பாடிவிட்டார். நடிகர் திலகம் ஒருவரைத் தவிர. அந்தக் குறையும் எதற்கு என்று #MSV கொடுத்த காலத்தை வென்ற காவியப் பாட்டு “பொட்டு வைத்த முகமோ”. சுமதி என் சுந்தரி.
காதலிக்க நேரமில்லை படத்திலேயே ஏசுதாசை #MSV பாடவைத்திருந்தாலும் #SPB க்கு மட்டும் தொடக்கத்திலிருந்தே பாடல்களை அள்ளிக் கொடுத்திருந்தார் MSV. அதற்கு SPBயின் தமிழ் உச்சரிப்பும் எந்தவிதமான பாடலையும் கற்றுக் கொண்டு பாடும் திறமையுமாகும். 1972லும் #MSV இசையில் SPBக்கு அத்தனை பாடல்கள்.
இரண்டில் ஒன்று
நீ என்னிடம் சொல்லு
என்னை விட்டு வேறு யாரு உன்னைத் தொடுவார்
1972ல் இன்னொரு சிவாஜி பாட்டு #SPB க்கு #MSV இசையில் “ராஜா” படத்தில். இந்த முறையும் பி.வசந்தாவோடு. ஆனால் துள்ளல் பாட்டு.
அறிமுகமான முதலிரண்டு ஆண்டுகளிலேயே #MSV பல பாடல்களைக் கொடுத்து வளர்த்தாலும் மற்ற இசையமைப்பாளர்கள் #SPB க்கு நிறைய பாடல்கள் கொடுத்துவிடவில்லை. என்ன தயக்கம் இருந்திருக்குமென்று தெரியவில்லை. 1972ல் MSV MGR பிணக்கால் SPBக்கு MGR பாடல்கள் இல்லை. அதை 1973 மிக அழகாக நேர் செய்தது.
பிணக்கு மறந்து மீண்டும் #MSV #MGR இணைந்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் 1973ல் #SPB க்கு இப்படியொரு சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்.
அவளொரு நவரச நாடகம்
ஆனந்தக் கவிதையின் ஆலயம்
#MSV 1973ல் #SPB க்கு MGRடு அப்படியொரு பாட்டு கொடுத்து தூக்கி விட்டால்... சிவாஜியோடும் இப்படியொரு பாட்டு கொடுத்து இன்னும் உயரமாக தூக்கி விட்டார்.
யமுனா நதி இங்கே
ராதை முகம் இங்கே
கண்ணன் போவதெங்கே!
1973ல் #SPB க்கு இன்னொரு குறிப்பிட வேண்டிய பாடல் பொண்ணுக்கு தங்க மனசு படத்தில் ஜி.கே.வெங்கடேஷ்(ராஜா) இசையில் தேன் சிந்துதே வானம் பாடல்.
1973ஐ முடிப்பதற்கு முன் ஒரேயொரு புதுமையான பாடலைப் பார்ப்போம்.
பாக்தாத் பேரழகி படத்தில் #MSV இசையில் கவ்வாலி வகையான பாட்டு. எஸ்.ஜானகியோடு இணைந்து #SPB பாடியிருக்கிறார். திரையில் SPB பாடிய முதல் கவ்வாலி வகைப்பாட்டு இது. SPB க்கு பல முதல்கள் MSV இசையில்தான்.
1974/75களில் விஜய பாஸ்கர் இசையில் இரண்டு #SPB பாடல்கள் குறிப்பிடத்தக்கவை.
எங்கம்மா சபதம் படத்தில் அன்பு மேகமே இங்கு ஓடிவா
மயங்குகிறாள் ஒரு மாது படத்தில் சம்சாரம் என்பது வீணை
1974/75ல் சங்கர் கணேஷ் இசையில் #SPB க்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய பாட்டு பட்டிக்காட்டு பொன்னையா படத்தில் உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் பாட்டு.
1974/75ல் வி.குமார் இசையில் #SPB க்கு குறிப்பிடத்தக்க பாடல் ராஜநாகம் படத்தில் தேவன் வேதமும் கண்ணன் கீதையும் பாடல்.
1974லிலும் 1975லும் #SPB க்கு #MSV கொடுத்த பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தை வென்றவை.
அவள் ஒரு தொடர்கதை படத்தில் கடவுள் அமைத்து வைத்த மேடை.
சூரியகாந்தி படத்தில் ஜெயலலிதாவோடு பாடிய நான் என்றால் அது அவளும் நானும்.
நான் அவனில்லை படத்தில் ராதா காதல் வராதா.
கண்மணி ராஜா படத்தில் இரண்டு முத்தான பாடல்களை #SPB க்கு கொடுத்தார் #MSV.
1. காதல் விளையாட கட்டில் உண்டு கண்ணே
2. ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருளென்ன
இந்த இரண்டு பாட்டுகளும் காலத்தை முந்திச் சென்ற பாட்டுகள் என்றால் மிகையில்லை.
#MSV இசையில் இரண்டு #SPB எல்.ஆர்.ஈசுவரி பாடல்களைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
1. அக்கரைப் பச்சை படத்தில் ஊர்கோலம் போகின்ற கிளிக்கூட்டமெல்லாம் பாட்டு.
2. அத்தையா மாமியா படத்தில் மறந்தே போச்சு ரொம்ப நாள் ஆச்சு.
அட்டகாச அதிரசப் பாட்டுகள்.
பட்டியலை வளர்த்துக் கொண்டே போகலாம். எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் புது நடிகர்களுக்கும் பாடிய பாடல்கள் அத்தனை. ஏசுதாஸ் ஜெயச்சந்திரன் புகழ் பெறத் தொடங்கியிருந்த நிலையில் #SPB க்கு #MSV அப்போது கொடுத்த பாடல்கள் தரமான அடித்தளம். அதன் மேல் தான் நீங்கள் ரசிக்கும் பாடல்களின் கோட்டை.
You can follow @RagavanG.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: