#Thread

வேளாண் சட்ட மசோதாக்கள் எனும் மாநில அரசின் உரிமைகள் மற்றும் கூட்டாட்சி முறைக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக மத்திய அரசின் அடுத்த சதி திட்டம்...

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தேசத்தை மீட்டெடுக்க, ஏற்கனவே தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வரும் விவாசியகளை மீட்டெடுக்க https://twitter.com/Sivaji_KS/status/1308500645633122304
எந்தவொரு செயல்பாட்டையும் கொண்டு வராத மத்திய அரசு தற்போது குறைந்தபட்ச ஆதார விலை என்று சொல்லப்படும் Minimum Support Price னால் எந்தவொரு பயனும் விவசாயிகளுக்கு இல்லை என்று கூறி மூன்று மசோதாக்களை தாக்கல் செய்து அதை சட்டமாக்கியுள்ளது.
1. Bill on agri marketFarmer's Produce Trade and Commerce(Promotion and Facilitation) Bill, 2020

அதாவது விவசாயிகள் விளைப்பொருள் வர்த்தகம் மேம்பாடு மற்றும் வசிதிக்கான மசோதா
2. Bill on contract farmingThe Farmer (Empowerment and Protection) Agreement of Price Assurance and Farm Services Bill, 2020

அதாவது விளைப்பொருள் விலை உத்தரவாதத்திற்கான பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் அதிகாரம் அளிப்பு மசோதா..
3. Bill relating to commoditiesThe Essential Commodities (Amendment) Bill, 2020

விவசாய சேவை மசோதா...

இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டம் விவசாயம் மற்றும் அதன் விளை பொருட்களை மாநில அரசின் உரிமைக்கு உட்பட்டவை என்ற ஒரு சுதந்திர சலுகையை கொடுத்துள்ளது...
தற்போது இந்த மத்திய பாஜக அரசு இந்த மூன்று சட்டங்கள் மூலம் மாநில அரசின் உரிமைகளை பரித்து விவசாயம் மற்றும் அதன் விளை பொருட்கள் மீது நேரடியாக கார்ப்பரேட்களின் கால் தடம் பதிக்க செய்துள்ளது...

APMC ( AGRICULTURAL PRODUCE MARKET COMMITTEE ) என்கிற விவசாய உற்பத்தி சந்தைக் குழு
மூலம் மாநில அரசுகள் விவசாயிகளை தங்களுடைய விளைவிளை பொருட்களை விற்க செய்கின்றன... இதற்கு மாநில அரசு மண்டிகளை வைத்துள்ளது அதன் உரிமையாளர்கள் அதாவது மண்டி மூலம் விளை பொருட்களை வாங்குவோருக்கு அரசாங்கம் உரிமம் வழங்கும்...
இந்த புதிய சட்டம் விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை இந்த சந்தை குழு மற்றும் மண்டிகளில் அல்லாமல் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்று கூறியுள்ளது...

மேலும் இந்த சந்தை மற்றும் வண்டிகளுக்கு எல்லை வரைவுரையையும் அறிவித்துள்ளது...
சந்தை குழு மற்றும் மண்டிக்கு வெளியே விற்கப்படும் விளை பொருட்களுக்கு உத்திரவாதம் இல்லை, வாங்குபவருக்கு உரிமம் அவசியம் என்ற ஒரு நிபந்தனையும் இல்லை... நேரடியாக கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து விலை பொருட்களை வாங்குவதற்கு வழி செய்யும் விதமாக சட்டம் உள்ளது...
துவக்கத்தில் விவசாயிகளுக்கு ஏற்ப விலைகள் தீர்மானிக்க பட்டாலும் விவசாய விளைபொருட்கள் மீது மாநில அரசுக்கு இருக்கக்கூடிய உரிமைகளை மெல்ல மெல்ல இழக்க நேரிடும் பிறகு கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விலைகளை தீர்மானிக்கும் என்பதே இதன் உண்மை தனம்...
விவசாயத்தை பொறுத்தவரை Prohibited_list என்று சொல்லப்படும் விளை பொருட்களுக்கு தடை செய்யப்பட்ட பட்டியல் என்ற ஒன்று உள்ளது... முழுக்க முழுக்க மாநில அரசு மட்டுமே அப்பொருட்கள் மீது உரிமம் கொள்ளலாம்...

தற்போது இந்த சட்டம் அத்தகைய எந்தவொரு பட்டியலும் இல்லை ஆகையால் கார்ப்பரேட்
நிறுவனங்கள் அனைத்து விவசாய விளை பொருட்கள் மீது தங்களது கைகளை பதிக்கலாம் என்று கூறியுள்ளது...

இறுதியாக Essential_Commodities என்கிற அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து தானியங்கள், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பொருட்களை நீக்கியுள்ளது இந்த சட்டம்...
அத்தியாவசிய பொருட்கள் பட்டியல் எதற்காகத் தேவைப்படுகிறது என்றால் வறட்சி அல்லது இந்த நோய் தொற்று போன்ற அவசர கால கட்டத்தில் மக்களுக்கு குறைந்தபட்சம் அத்தியாவசிய உணவு கிடைக்க வேண்டும் என்று அரசு சார்பில் இந்த அத்தியாவசிய பொருட்களை #Stock என்று சொல்லும் இருப்புச்சரக்காக
செய்து வைப்பது வழக்கம்...

தற்போது தானிய வகைகள் வெங்காயம் உருளைக்கிழங்கு போன்ற பல பொருட்கள் அத்தியாவசிய பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதால் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய அவசர நிலையின் போது இதனுடைய விலைகளை தீர்மானிக்கும் இடத்தில் கார்ப்பரேட் நிறுவனம் இருக்கக்கூடும்
கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த பொருட்களை தங்களுடைய இருப்புச் அழகாக வைத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது என்ற அச்சமும் எழுந்துள்ளது...

ஆக நம்முடைய பிரதமர் மோடி வங்கிகளை பொதுத்துறை நிறுவனங்களை விமான நிலையங்களை ரயில்வே துறையை தனியாருக்கு அர்ப்பணித்தது போதாது என்ற பட்சத்தில்
இந்திய நாட்டின் முதுகெலும்பான விவசாயம் மற்றும் விவசாயிகளின் உழைப்பையும் தனியார் வசம் ஒப்படைக்க ஒப்பந்தம் செய்து சட்டம் இயற்றி உள்ளார்.

#AgricultureBills
You can follow @Sivaji_KS.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: