கருணாநிதி இந்நாட்டிற்கு கிடைத்த ஒரு வரம்.

கருணாநிதியின் தொண்டினை எந்த காலத்திலும் யாராலும் மறக்க முடியாது.

அவரது மூத்த மகன் மு.க. முத்து தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கினார்.

இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் 200 நாட்கள் முன்னூறு நாட்கள் என்று ஓடி சாதனை படைத்த படங்கள்.
நம் நாட்டின் முன்னேற்றத்திற்க்காக உழைத்த கருணாநிதி அந்த பணியை செவ்வனே செய்ய தனக்கு ஒரு மனைவியையும் ஒரு துணைவியையும் வைத்துக் கொண்டார்.

ராசாத்தி அம்மாள் தனது கடின உழைப்பால் இந்நாட்டிற்கு கனிமொழி என்ற மங்காத செல்வத்தை வாரி வழங்கினார்.
கனிமொழியும் வளர்ந்து தனது தந்தையின் பெயரை நிலைநாட்டும் வண்ணம் நம் தேசத்திற்காக உழைத்தார்

இவரது தேச பணியை பொறுத்துக்கொள்ள முடியாத அயல் நாட்டு நிறுவனங்கள் இவருக்கு அவப் பெயரை உண்டாக்க அவருக்கு தெரியாமலேயே அவரது ஊடகத்திற்கு கோடிக் கணக்கில் பணத்தை கடனாக கொடுத்து அவரை கடனாளியாக்கியது
வாரி கொடுக்கும் கருணாநிதியின் வாரிசான கனிமொழி அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க நினைத்து அந்த நிறுவனங்களின் முகவரிகளை தேடி சென்று பார்க்கும் போது அங்கு அது போன்ற நிறுவனங்களே இல்லை என்பது தெரிய வந்தது.
இப்படி திட்டமிட்டு நடத்தப்பட்ட அந்நிய நாட்டு சதியால் கனிமொழி திகார் சிறையில் அடைக்கப்பட்டு சொல்லொன்னா துயரங்களை அனுபவித்தார்.

அதை தொடர்ந்து மத்திய அரசு வேண்டுமென்றே கருணாநிதியின் மனைவியிடம் விசாரணை நடத்தியது.
அந்த நேரத்தில் கூட தன் நாட்டு மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்ற சிந்தனையில் கருணாநிதி கூட்டணி பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

கருணாநிதியின் இன்னொரு மகனான அழகிரியோ வீரத்தின் விளை நிலம்.இவரது நெஞ்சு ஈரத்தின் இருப்பிடம்.
இவர் ஒரு நவீன ராபின் ஹுட் .
இவரது கட்சி ஏழைகள் பசியால் வாடி வதங்குவதை கண்ட இவர் பணமுதலைகளான ஹார்லிக்ஸ் கம்பெனி பணக்காரர்கள் மட்டுமே பருக வைத்திருந்த ஹார்லிக்ஸ் பாட்டில்களை எடுத்து ஏழை கட்சிக்காரர்களுக்கு கொடுத்தார்.
வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தை உடையவர்.

அதனால் யாராவது நடந்து சென்றாலே இவருக்கு பிடிக்காது ,அது சொந்த கட்சிக்காரராக இருந்தாலும் தண்டனை கொடுப்பார்.
அதனால் இவரது சாம்ராஜிய எல்லைக்குள் காலை எழுந்தவுடன் நடப்பதற்கே அனைவரும் அஞ்சினர்.

கருணாநிதியின் இன்னொரு தவப்புதல்வன் ஸ்டாலின்.

இவர் வசீகர தோற்றத்திற்கு சொந்தக்காரர்.

இவரது இளமை தோற்றத்தில் அனைவரும் மயங்கியதால் இவருக்கு 60 வயது ஆன பிறகும் இளைஞர் அணி தலைவராக நீடித்தார்.
கட்சிக்காரர்கள் அனைவரும் ஸ்டாலினுக்கு வயது 16 என்றே நினைத்தனர்.

நம் தேசத்தை முன்னேற்ற கருணாநிதிக்கு இவர் தோள் கொடுத்து அதனால் துணை முதல்வர் என்ற மிகப் பெரிய பொறுப்பை சுமக்க வேண்டிய கட்டாயம் இவருக்கு ஏற்பட்டதால் அடிக்கடி லண்டன் சென்றார்.
புலிக்கு பிறந்து பூனை ஆகுமா என்ற வாக்கிற்கேற்ப இவரது மகன் உதயநிதி தமிழ் திரையுலகில் தனது பண்பட்ட நடிப்பால் அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டார்.

இவரது ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தை ஐ.நா.சபையில் திரையிட்டார்கள்.
கருணாநிதியின் கண்கள் கவி பாடும் கண்கள் அதே கண்ணமைப்புடன் மு.க.முத்து பிறந்தார்.

அதே போன்ற கண்ணமைப்புடன் பிறந்த அருள்நிதி என்ற மாபெரும் நடிகர் தனது நடிப்பாற்றலால் அன்றைய முன்னணி நடிகர்களை புறமுதுகிட்டு ஓட செய்தார்.

அழகிரியும் ஸ்டாலினும் ராமர் லக்ஷ்மணன் போன்றவர்கள்.
துணை முதல்வர் என்ற பாரத்தை தனது தம்பி சுமப்பதை காண சகிக்காத அழகிரி தானும் அதே பாரத்தை சுமப்பேன் என்று தந்தையிடம் அன்பு வேண்டுகோள் விடுத்தார்.

அது இளைஞர் ஏற்க வேண்டிய பொறுப்பு நீ உன் தம்பியை விட ஒரு வயது மூத்தவன் என்ற உண்மையை அழகிரிக்கு விளங்க வைத்த கருணாநிதி அழகிரியை மத்திய ...
மந்திரி ஆக்கினார்.

தாய்மொழி பற்றுள்ள அழகிரியால் டெல்லியில் மக்கள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் டெல்லி செல்வதை தவிர்த்து தமிழனின் புகழ் பரப்ப ஆஸ்திரேலியா துபாய் அமெரிக்க என்று ஊர் ஊராக செல்ல ஆரம்பித்தார்.
கருணாநிதியின் ஆட்சியில் மக்கள் மிக மிக மகிழ்ச்சியாக இருந்தனர்.

கே.டி.வி.சூரியா டி.வி.ஆதித்தியா டி.வி.சண் டி.வி.முரசு டி.வி. உஷா டி.வி.உதயா டி.வி.என்று ஏகப்பட்ட டி.விகளில் பலபல நிகழ்ச்சிகளை பார்த்து நாட்டை பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருந்தனர்.
மண் பொன் பெண் என்று எந்த ஒரு விஷயமும் மக்களை பாதிக்க கூடாது என்ற உயர்ந்த சிந்தனையில் அந்த விஷயங்கள் அனைத்தையுமே கருணாநிதி குடும்பமே பார்த்துக் கொண்டது.

கருணாநிதியின் பெரும் முயற்சியால் இலங்கை யில் அதிக அளவில் இருந்த தமிழர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
வாழ்வாதாரங்கள் குறைந்து மக்கள் தொகை அதிகமாகும் போது அடிப்படை தேவைகளுக்கு மக்கள் கஷ்டப்படுவார்கள் என்பதை உணர்ந்த கருணாநிதி இலங்கையில் ராஜபக்ஷேவால் தமிழர்களின் வாழ்வாதாரங்கள் குறைந்த போது மத்திய அரசு துணையுடன் தமிழர்களின் மக்கள் தொகையை குறைத்தார்.
இலங்கையில் எஞ்சி இருந்த தமிழர்கள் தங்களது அடிப்படை தேவைகள் அதிகமாக கிடைக்க காரணமான கருணாநிதியை மனதார பாராட்டினார்கள்.

இப்படி கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் தமிழக மற்றும் இலங்கை தமிழர்களுக்காக அல்லும் பகலும் பாடுபட்டனர்.
இவரது ஆட்சியில் நடைப்பெற்ற செம்மொழி மாநாட்டில் உலகத்தில் பல பாகங்களிலிருந்தும் தமிழ் அறிஞர்கள் பலர் வந்திருந்தனர்.

அனைவருக்கும் தன்னுடன் இணைந்து தமிழக முன்னேற்றத்திற்காக பாடு படும் தன் குடும்பத்தினரை அறிமுக படுத்த வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தோடு ....
தனது குடும்பத்தினரை மேடையில் அமர்த்தி.உலக தமிழ் அறிஞர்கள் அனைவரையும் கடைசி வரிசையில் அமர்த்தி தனது முழு குடும்பமும் அவர்களது பார்வைக்கு படும்படி தமிழ் அறிஞர்களை கடைசி வரிசையில் அமர்த்தி அழகு பார்த்தார் கருணாநிதி.
திரை நட்சத்திரம் குஷ்புவை தமிழக ஆளுனராக ஆக்கி தன் அருகிலேயே அமர்த்தி நல்லாட்சி தரவேண்டும் என்ற அவருடைய கனவு கடைசிவரை நிறைவேறாமல் தன் இள வயதிலேயே காலமானார் தமிழின தலைவர்

காலம் தான் எத்தினை கொடியது
😖😩😫😵
You can follow @hsejarsa.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: