ஒரு நாட்டோட பொருளாதாரம் எவ்வாறு நிர்வகிக்க படுகிறது என்பதை பற்றி இந்த thread la பாப்போம். இரண்டு வகையில் ஒரு நாட்டினுடைய பொருளாதாரம் நிர்வகிக்கப்படுகிறது. 1.monetary policy(by central bank) 2.fiscal policy(by government)
ஒரு நாட்டோட பொருளாதாரம் அப்படினு சொன்னதும் நிறைய பேருக்கு உடனே ஞாயபகம் வரது GDP(உள்நாட்டு உற்பத்தி) and inflation(பண வீக்கம்) தான். சரி GDP அப்டினா என்னனு தெரிஞ்சிக்குவோம் முதல்ல. ஒரு நாடு உற்பத்தி பண்ண பொருள்களோட மொத்த மதிப்ப தான் GDP அப்படினு சொல்றோம்.
GDP=C+I+G+(X-M). C- (consumer spending) மக்கள் பொருள்கள் வாங்க எவ்வளவு செலவழிச்சிறுக்காங்க I-(business investments) நிறுவனங்கள் எவ்வளவு இன்வெஸ்ட் பண்ணிருக்காங்க G- (government spending) அரசு எவ்வளவு இன்வெஸ்ட் செஞ்சிருக்கு X-(exports)நாட்டோட ஏற்றுமதி M-(imports)நாட்டோட இறக்குமதி.
GDP மதிப்பு ரொம்ப கம்மி உச்சுனா அது recession கான அறிகுறி. தொடர்ந்து கம்மி ஆகிடே போச்சுனா depression அர்த்தம். Depression is extreme of recession.
GDP சீரான வேகத்துல வளரனும். ரொம்ப வேகமா வளர்தாளும் பணவீக்கம்(inflation) உயர்ந்து மக்கள் வாங்க கூடிய பொருள்களின் விலையும் அதிகம் ஆயிடும். அதனாலதான் government and rbi பொருளாதாரம் நளிவடையும் போதும் அல்லது அதி தீவிரமா வளரும் பொழுதும் intervene பண்ணி கட்டு பாட்டுள வச்சிப்பாங்க.
அவங்க முக்கியமா கவனம் வைக்கறது GDP and inflation/CPI(consumer purchasing index). CPI அப்படிங்கிறது மக்களோட வாங்கும் திறனை அளவிட பயன்படும் முறை. இதை கொண்டே பணவீக்கம் (inflation) கணக்கிடப்படுகிறது. இந்தியாவ பொருத்த வரை 4% பணவீக்கம் என்பது ஏற்புடையதாக உள்ளது.
பொருளாதார வளர்ச்சியுடன் கூடிய பண வீக்கமானது ஏற்புடையது. உதாரனத்துக்கு நாம சின்ன பசங்கலா இருந்தப்ப வாங்கிய பொருள்களின் விலை இன்று உயர்ந்திருப்பதை காணலாம். பால்கோவா இட்லி வடை பஸ் டிக்கட்னு எல்லாமே. உங்களினுடைய பொருளாதாரமும் உயர்ந்து அதர்கேற்ப பொருள்களின் விலையும் உயர்ந்திருக்கிறுது
இதுல எதாவது ஒன்று முரண்பாடா அமைஞ்சா அது inflation or deflation க்கு வழி வகுக்கும். இதனை சரி செய்யவே monetary policy and fiscal policy பயன்படுத்த படுகிறது.சிம்பிளா ரெண்டும் என்ன பண்ணும்னா பணப்புழக்கத்த குறைக்கும் அல்லது அதிகப்படுத்தும்.
1. Monetart policy னா ஒரு நாட்டினுடைய சென்ரல் பேங்க் interest rate change பண்ணுவாங்க. பொருளாதார வளர்ச்சி கம்மியா இருக்குனா இன்டரெஸ்ட் ரேட் குறைப்பாங்க. இந்த இன்டரஸ்ட் ரேட்டுங்கிறுது சென்ட்ரல் பேங்க் அதுக்கு கீழ செயல்படுற பேங்க்குக்கானது. இத இந்தியால ரெபோ ரேட்னு சொல்வொம்.
இந்த ரெபோ ரேட் சென்டரல் பேங் அதுக்கு கீழ செயல்படுற பேங்க்கு சார்ஞ் பன்ற இன்டரெஸ்ட். இத பேஸ் பண்ணி தான் மத்த பேங் அவங்ளோட இன்ட்ரஸ்ட் ரேட்ட ஃபிக்ஸ் பண்ணுவாங்க. லோன் அல்லது சேவிங்ஸ்கான இன்டரஸ்ட் ரேட் மற்ற பேங் ஃபிக்ஸ் பன்னிப்பாங்க.
பணவீக்கம் உயருதுனா பணப்புழக்கம் அதிகமா இருக்குன அர்த்தம் அதே சமையம் அந்த நாடடோட பண மதிப்பு கம்மி ஆகுதுனும் அர்த்தம். இத கட்டுகுள்ள வைக்க சென்ரல் பேங் இன்ட்ரஸ்ட் ரேட் அதிகரிக்கிறாங்க. அதனால மற்ற பேங்கும் அவங்க பேங் இன்ட்ரஸ்ட் ரேட்ட அதிகரிப்பாங்க.
இதனால லோனுக்கான இன்ட்ரஸ்ட் அதிகமாகும். அதனால் புதுசா லோன் எடுத்து எந்த புதிய தொழிலோ அல்லது கம்பேனிகளின் விரிவாக்கமோ கட்டுபடுத்தப்படும். பேங் சேவிங்ஸ் இன்ட்ரஸ்ட் அதிகம் ஆகுரதால நிறைய இன்வஸ்ட்மென்ட்ஸ் பேங் சேவிங்சா மாறிடும். எக்கனாமிக் ஸ்லோடவுன் தொடங்கிடும்.
பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கம் சமநிலை அடையும் பொழுது அல்லது அதற்கு கீழே செல்லும் பொழுது சென்ரல் பேங் இன்ட்ரஸ்ட் ரேட் கம்மி பண்ணி பொருளாதாரத்த சிமுலேட் பண்ணுவாங்க. சேவிங்ஸ்ல இருக்க பணம் வெலில வரும்,இன்ட்ரஸ்ட் குறைவு அதனால லோன் வாங்கி புதிய தொழில் அல்லது விரிவாக்கம் ஏற்படும்
Employment and unemployment இந்த எக்கனாமி சைக்கிள்ள அடங்கிடும். இந்த monetary policy இம்பேக்ட் சில சமையம் உதவும் பல சமயம் எதிர்பாக்கிற இம்பேக்ட கிடைக்காது. அதனால அரசு fiscal policy பயன்படுத்துவாங்க.
2.fiscal policy அப்படினா ஒரு நாட்டினுடைய அரசு இன்வெஸ்ட் பண்றது மற்றும் அவங்களோட வரி விதிப்ப சொல்வோம். அரசு இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் டெவலப்மன்ட்க்கு இன்வஸ்ட்பண்றப்போ அதன் மூலம் வேலை வாய்ப்பு உயர்ந்து பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். வரி விதிப்பினை நிர்நயம் செய்வதன் மூலம்
அரசின் வருவாயை அதிகரித்து /குறைத்து,பணப்புழக்கத்தை அதிகரித்து/குறைத்து பொருளாதார சமநிலையை கொண்டு வருவது.
Monetary policy and fiscal policy இரண்டுமே எக்கனாமிக்க சீராக்க பயன்படுகிறது. Inflation அதிகம் ஆனா என்ன ஆகும்ங்கிறதுக்கு zimbabwe and venizula example. Germany before wwii நடந்த இன்ஸிடன்ட்ஸ் குகிள் பண்ணி தெரிஞ்சிக்கிங்க. எழத நிறைய இருக்கு ஆனா என்னால முடில. நிறைய சொல்லல பட் எனஃப்🤗
You can follow @PrabakaranThama.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: