சிங்கப்பூரை தொட்டதுக்கெல்லாம் முன்மாதிரியா காட்டுற முகரக்கட்டை எல்லாம் வரிசைல வா..
இதையும் முன்மாதிரியா எடுத்துக்க.

=========

பதிவு Krishna Dhasarathan
சிங்கப்பூரில் மருத்துவக் கல்வி.

சிங்கப்பூரில் எந்த தனியார் மருத்துவக் கல்லூரிகளும் கிடையாது. இரண்டே இரண்டு அரசு 1/13
பல்கலைக் கழகங்களில் மட்டுமே மருத்துவம் உண்டு. அதில் சேர்வதற்கு நீங்கள் ஆறாம் வகுப்பு பொது தேர்வுலேயே நல்ல மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

ஆறாம் வகுப்பில் பொதுத் தேர்வா என்று பொங்க வேண்டாம். சிங்கப்பூரில் மூன்றாம் வகுப்பில் கூட ஒரு பொது தேர்வு உண்டு. அந்த மூன்றாம் வகுப்பு 2/13
பொது தேர்வில் தேர்வு பெறும் அதிபுத்திசாலி மாணவர்கள்(இங்கே இட ஒதுக்கிடு கருமாந்திரமெல்லாம் கிடையாது) GEP (Gifted Educated Pupil) எனப்படும் தனிப் பாடப்பிரிவில் சேர்க்ப்படுவார்கள். 10 பள்ளிகளில் மட்டுமே இந்த வகுப்புகள் நடெபெறுகிறது. நம்மூர் CBSE எல்லாம் இந்த பாடங்கள் முன்பு 3/13
தூசு. 10-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் பாடங்களை எல்லாம் இவர்கள் ஆறாம் வகுப்பு போவதற்குள் படித்து முடித்து விடுவார்கள். எனது மகனும் ஒரு GEP மாணவனே.

சரி.. மறுபடியும் ஆறாம் வகுப்பு பொது தேர்வுக்கு வருவோம். ஆறாம் வகுப்பு என்பது சிங்கப்பூரில் துவக்கப் பள்ளி. ஏழாம் 4/13
வகுப்பில் இருந்து தான் உயர்நிலைப் பள்ளி. இந்த ஆறாம் வகுப்பு பொது தேர்வு என்பது, கற்றல், கேட்டல் மற்றும் எழுதுதல் என மூன்று பிரிவுகளை கொண்டது. தாய் மொழி மற்றும் ஆங்கிலத்தில் சாதாரண மற்றும் உயர் மொழி தேர்வுகள். தாய்மொழி என்பது அவரவர் தாய்மொழி தானே தவிர வேறு மொழிகள் கிடையாது. 5/13
தமிழ் மொழி தெரியாத மற்ற இந்திய மாணவர்கள் இந்தி அல்லது மலாய் மொழியை படிக்கலாம். என்னது சிங்கப்பூரில் ஹிந்தியா? அய்யகோ.. என் தமிழ் அழிந்து விடுமே என்று கதற வேண்டாம். நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று. ஆனால் இன்னும் எத்தனை நாளைக்கு தமிழ் ஆட்சி மொழியாக இருக்கும் என்று 6/13
தெரியாது. காரணம் மற்ற மாநிலத்தை சார்ந்த இந்தியர்கள் ஹிந்தியை வற்புறுத்துகிறார்கள். தமிழர்களைக் காட்டிலும் இங்கே ஹிந்தி பேசுபவர்கள் சிங்கப்பூரில் அதிகரித்து விட்டார்கள். ஆறாம் வகுப்பு பொதுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களுக்கு ஏற்ப தான் அடுத்து போக இருக்கும் உயர்நிலைப் 7/13
பள்ளியை தேர்ந்தெடுக்க முடியும்.

எல்லாம் அரசு பள்ளிகள் தானே? பிறகு ஏன் அதில் வேறுபாடு என்கிறீர்களா? கிடையவே கிடையாது. ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு வகையான பாடத் திட்டங்கள். டாப் 10 பள்ளிகளில் சேர்வதற்கு பொது தேர்வுக்கும் முன்பே மாணவர்களுக்கு ஒவ்வொரு பள்ளியும் நுழைவுத் 8/13
தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்தும். அதாவது ஏழாம் வகுப்பு போகவே இத்தனை கட்டுப்பாடுகள்.

அப்படியென்றால் மருத்துவக் கல்வி??

சிங்கப்பூர் மருத்துவக் கல்லூரிகளில் சேர நீங்கள் ஒன்றாம் வகுப்பில் இருந்தே நன்றாக படித்து வர வேண்டும். மேலும் புறக்கல்வி நடவடிக்கைகளிலும் 9/13
ஈடுபட்டிருக்க வேண்டும். புறக் கல்வி நடவடிக்கையென்றால், NCC, Scout, RedCross போன்றவற்றிலும், விடுமுறை நாட்களில் அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், அரசு மருத்துவமனைகள் போன்றவற்றில் நீங்கள் தன்னார்வ தொண்டூழியராக பணிபுரிந்திருக்க வேண்டும். இதெற்கெல்லாம் கூடுதலாக மதிப்பெண்கள் 10/13
கிடைக்கும். பிறகு 12-ஆம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் நீங்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவீர்கள். 90% மதிப்பெண் பெற்றவர்கள் தான் விண்ணப்பிக்கவே முடியும்.

விண்ணப்பித்த உடனே சீட் கிடைக்குமா என்றால் அதுவும் கிடையாது. நீட் தேர்வைப் போலவே இங்கேயும் எழுத்து 11/13
தேர்வுகள் உண்டு. அதன் பின்பு கிட்டத்ட்ட 12 பல்வேறு வகையான தேர்வுகள். இதிலெல்லாம் வெற்றி பெற்றால் தான் உங்களுக்கு மருத்துவ சீட்டே கிடைக்கும்.

அதன் பிறகு 5 ஆண்டுகள் மருத்துவக் கல்வி. அதன் பிறகு 5 ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் கட்டாயம் வேலை செய்தாக வேண்டும். பிறகு தான் 12/13
நீங்கள் மேற்படிப்பே படிக்க முடியும்.

என்ன கண்ணைக் கட்டுகிறதா?? நம்மூர் நீட் எதிர்ப்பு பரதேசிகளிடம் சொல்லி வையுங்கள். 13/13
You can follow @usraju1965.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: