#CreditCards 😊
#கடன்_அட்டை
(EMI -1)

#இழை #Thread

இதை ஒரே பதிவாக பதிவிட்டால் Detailing இருக்காது. அதனால இத ஒரு மூணு EMI ல கட்டி முடிக்க பார்ப்போம்.😂
(அதாங்க மூணு பாகங்களாக)😂
சரி வாங்க,
Credit Card வாங்கலாமா இல்ல வேணாமான்னு முடிவு பண்ணலாம்..!🧞

#EMI #Loan #Finance #Banking
Credit Card (CC) வாங்குறதுக்கு முன்னாடி நமக்கு அடிப்படை விஷயங்களான

🔥கடன் ( Loan)
🔥வட்டி (Intrest)
🔥வட்டி விகிதம் (Intrest Rate)
🔥திரும்ப செலுத்தும் காலம்
(Pay back period)
🔥 Penalty (அபராதம்)

இது பற்றி நமக்கு ஓரளவுக்காவது தெரிந்து இருக்க வேண்டும்.
இதெல்லாம் ஏற்கனவே நமக்கு தெரிஞ்ச விஷயம் தானேன்னு நினைப்போம்..!
"அப்புறம் ஏன் நிறைய பேர் கிரெடிட் கார்டு வாங்கி அவஸ்தைப்பட்டேன், அத தூக்கி போட்ட ன்னு சொல்றாங்க..!" ன்னு யோசிச்சிருக்கீங்களா..!
ஏன்னா இதையெல்லாம் நம்முடைய பொருளாதார சூழ்நிலையோடு பொருத்திப் பார்க்கத் தவறுகின்றோம்..!😊
#கடன் #Loan

நமக்கு தேவையான பணத்தை மற்றொரு நபரிடம் (Individuals) இருந்தோ அல்லது நிறுவனங்களிடமிருந்தோ
(Banks, Finance Companies) சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு திரும்ப செலுத்திவிடுவேன் என்ற உத்திரவாதத்துடன் பெறுவதற்கு பெயர்தான் கடன்.

வங்கிகள் கடனை வேறு வேறு காரணிகள் அடிப்படையில்
வெவ்வேறு வகையாக பெயர்களில் குறிப்பிடுகிறார்கள்.!
(அது மிகப்பெரிய Chapter நாம் தற்போது அதற்குள் செல்லவேண்டாம்)

நமக்கு தெரியவேண்டியது,
நாம் கடன் வாங்கும் தொகையைப் பொறுத்து நாம் கடனை இரண்டு வகையாக பிரிக்கலாம்,
📜சிறு கடன் அல்லது
📜பெரும் கடன்

இதில் சிறியகடன் எவ்வளவு பெரியகடன்.,
எவ்வளவு என்பதெல்லாம் அவரவர் நிதி நிலைமை
(Financial Status) மற்றும் வருமானத்தைப் (Income)பொறுத்ததே..!

இருபதாயிரம் ரூபாய் மாத சம்பளம் வாங்கும் ஒருவருக்கு 2000 ரூபாய் என்பது சிறுகடன் இரண்டு லட்ச ரூபாய் என்பது பெரிய கடன்..!

அதுவே இரண்டு லட்சம் ரூபாய் மாதம் சம்பாதிக்கும் ஒருவருக்கு
இருபதாயிரம் ரூபாய் என்பது சிறுகடன் 20 லட்ச ரூபாய் என்பது பெரிய கடன்.!

இந்த சிறு கடன் என்பது நாம் கைமாற்றாக வாங்க கூடிய தொகை மாதிரி.
எளிதாக அடுத்த மாதம் சம்பளம் வந்தவுடனேயே கூட கொடுத்து விடலாம்.
ஆனால் அந்த பெரிய கடன் என்பது,
தொகை அதிகம் எனவே நமக்கு திருப்பி செலுத்த சில வருட
கால ஆவகாசமாவது தேவை.

இப்போ உங்களை பொறுத்த வரைக்கும் எந்த Amount,
சிறிய கடன் எது பெரிய கடன் அப்படின்னு உங்களுக்கு ஒரு புரிதலை நீங்க ஏற்படுத்தி கொள்ளுங்கள்..!

எல்லாம் 'சைபர்' செய்யும் சித்து விளையாட்டு.!😂
#வட்டி #Intrest
பொதுவாக கடன் கொடுத்தவருக்கு (நாம் வாங்கிய அசல் தொகையை முழுவதுமாக திருப்பி கொடுக்கும் வரை) மாதம் மாதம் தொடர்ந்து நாம் செலுத்த வேண்டிய தொகையின் பெயர் தான் வட்டி. இது கடன் தொகைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது..!

(மாதாமாதம் வட்டி கட்டுவதால் அசல் குறையாது)
#வட்டி_வகிதம் #Intrest_Rate
நாம் வாங்கிய கடனுக்கு மாதா மாதம் நாம் எவ்வளவு வட்டி கட்டவேண்டும் என்பதை இந்த வட்டி விகிதம் தான் தீர்மானிக்கிறது..!
பொதுவா இத Annual Intrest Rate ன்னு சொல்லுவோம்.

சரி, இந்த 5 பைசா வட்டி அல்லது
5 வட்டிகன்னா Annual Intrest Rate எவ்வளவு இருக்கும்...🤔
நீங்க 100ரூ கடன் வாங்குறீங்க..! இதுல 24% Annual Intrest Rate னா வருஷத்துக்கு நீங்க 100 ரூபாய்க்கு 24 ரூபாய் வட்டி கட்டணும்.
அப்படின்னா மாதம் 2 ரூபாய் வட்டி. (24/12=2)

இதேயே கடன் 1ரூ ன்னு வைங்க.
அப்போ வருஷத்துக்கு 24 பைசா.
அப்படின்னா மாசம் 2 பைசா வட்டி.
இதைத்தான் 2 பைசா வட்டி
அல்லது இரண்டு வட்டின்னு சொல்லுறோம்..!

அப்போ 5 பைசா வட்டின்னா..!
மாசம் அஞ்சு பைசா கட்டனும்
வருஷத்துக்கு 60 பைசா (5x12).
அதாவது 1 ரூ கடன் வாங்கினால் ஒரு வருஷத்துக்கு 60 பைசா வட்டியாக மட்டுமே கட்டனும்.🙄
(Annual interest rate 60%)
ஆனா அசல் அப்படியே தான் இருக்கும்..!
#Pay_Back_Period
(திரும்ப செலுத்தும் காலம்)

நம்ம ஒரு கடன் வாங்குறோம்..
அந்தக் கடனுக்கு மாச மாசம் வட்டி கட்டுவோம். இப்படியே மாசம் மாசம் வட்டியை மட்டும் கட்டி கொண்டு இருக்க முடியுமா...
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும் அல்லவா...
கடன் வாங்கும்போது இத்தனை வருஷத்துக்குள்ள அசலை திருப்பி செலுத்திவிடுவேன் அப்படின்னு ஒரு நிபந்தனையுடன் கடன் வாங்குவோம். அந்த குறிப்பிட்ட கால அளவுதான் Pay Back Period.

இப்போ நீங்க அஞ்சு பைசா வட்டிக்கு 1000‌ரூ கடன் வாங்கி இருக்கீங்கன்னு வச்சுப்போம்.
அப்படின்னா நீங்க மாசம் 50 ரூ
வட்டி கட்டணும். ஒரு வருஷத்துக்கு 600 ரூ. இரண்டு வருஷத்துக்கு
1200 ரூ வட்டி.
இப்ப பாருங்க நீங்க வாங்குன கடனே 1000ரூ தான். ஆன வட்டி மட்டும் 2 வருஷத்துல 1200 கட்டியிருக்கீங்க. ஆனா இன்னும் அசல் அப்படியே தான் இருக்கு.
(என்ன கொடுமை சார் இது..!🤦)
எனவே தனிநபர் கிட்ட வட்டிக்கு
வாங்குனா அசலை சீக்கிரம் செலுத்தி கடனை அடைக்க பார்க்க வேண்டும். அதுலையும் வட்டி விகிதம் குறைவாக இருந்தா ரொம்ப நல்லது.

📜 #தனி_வட்டி
இது பொதுவாக வெளியே தனி நபர்களிடம் கடன் வாங்கும் பொது அசலை மொத்தமாக தான் திருப்பி தர சொல்லுவார்கள்..!
அதுவரை மாதாமாதம் நாம் வட்டி கட்ட வேண்டும். இது #Simple_Intrest(தனிவட்டி).
அசலை மொத்தமாக திருப்பி அடைக்கும் வரை வட்டியில் மாற்றம் இராது..!

📜 ₹கூட்டு_வட்டி
இது பெரும்பாலும் வங்கிகள் நாம் வாங்கும் கடனை சுலப மாத தவணை ( #EMI) முறையில் திருப்பி செலுத்தும் போது கூட்டுவட்டி
( #Compound_Intrest) முறையை வங்கிகள் கடைபிடிக்கும்..!

அதாவது EMI - Easy Monthly Installments என்பது அசல் + வட்டி என்ற இரு கூறுகளை உடையது.
மாதாமாதம் நாம் கட்டும் தொகையில் ஒரு பகுதியை வங்கி அசல் தொகையில் கழித்து கொண்டே வரும். இன்னொரு பகுதியை வட்டியாக வங்கி எடுத்துக்கொள்ளும்..!
இந்த அசல் தொகை கழிந்து கொண்டே வருவதால் வட்டியும் குறைந்து கொண்டே வரும்.

இவ்வாறு அசலை பொறுத்து வட்டி மாறிக்கொண்டே வருவதை தான் #Compound_Intrest ( #கூட்டு_வட்டி) என அழைக்கிறோம்.

இதில் Loan க்கு வட்டி குறைந்து கொண்டே வருவதைபோல Deposit களுக்கு வட்டி அதிகரித்து கொண்டே செல்லும்..!😊
இந்த
EMI தொகை =(P)அசல் +( I) வட்டி
என்பது ஒரு Fixed Amount. மாதாமாதம் மாறாது. அனால் அதில் உள்ள அசல் மற்றும் வட்டியானது மாதா மாதம் மாறும். ஏனெனில் இது கூட்டு வட்டி.
EMI காலம் முடியும் போது கடன் + வட்டி முழுமையாக முடிந்திருக்கும்.
(நம்ம ஒழுங்கா மாசாமாசம் EMI ய கட்டி இருக்கனும்)😂
#அபராதம் #Penalty
நம்ம வாங்கிய கடனை சரிவர திருப்பி செலுத்தவில்லை
(அசல், வட்டி அல்லது EMI) எனில் அபராதம் கட்ட வேண்டி வரும்.
இது கட்ட தவறிய தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் இருக்கும்.
வட்டி சரியாக கட்ட வில்லை எனில் கட்டத்தவறிய வட்டிக்கும் சேர்த்து அபராதம் வசூலிக்கப்படும்.🙄
கடன் தொகை பெரிதாக இருப்பின் கொடுக்கப்பட்ட கடன் தொகைக்கு ஈடாக சொத்துக்களை கூட பறிமுதல் செய்யலாம். எனவே கடன் வாங்கும் முன்பு இதை பற்றி தெரிந்து கொள்ளவது அவசியம்.

இதெல்லாம் ஒரு புரிதலுக்காக மட்டுமே..!😊
🔥சரி இப்போ நம்ம Credit Card க்கு வருவோம்.

சதுரங்க வேட்டை படத்துல ஒரு Dialogue வரும்
"ஒருத்தன ஏமாத்தனும்னா அவன் ஆசைய தூண்டனும்"

வங்கிகளும் அதைதான் பண்றாங்க..!
"ஒருத்தர கடன் வாங்க வைக்கனும்னா அவரு ஆசைய தூண்டனும்"

அப்படி ஆசையை தூண்ட வைக்கிற ஒன்று தான் இந்த #கடன்_அட்டை யும்😊
இந்த கடன் அட்டை ஆசைய தூண்டுவதோடு மட்டும் அல்லாமல் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவும் எளிதாக வழி செய்கிறது. இது தான் Trap. அதாவது வலை.!

இங்கதான் புத்தர் நம்மள பார்த்து சிரிக்கிறார். ஏன்னா அவரு சொன்ன
"ஆசையே துன்பத்துக்கு காரணம்"
ங்கற தத்துவத்துக்கு உதாரணமாக நாம் மாறிவிடுகிறோம்..!
கடன் அட்டையை வங்கிகள் எப்படி வழங்குறாங்கன்னா

📜மாத சம்பளம் அல்லது வருமானம்
(Monthly Salary/Income)
(Min 20000 இருத்தல் நலம்)
📜Cibil மதிப்பு(Cibil Score)
📜பழைய கடனை தரவுகள்
(Past Loan Tracks)
📜வங்கிகணக்கு பரிவர்த்தனைகள் விபரம்(A/C Transaction Details)
📜வைப்பு தொகை (Deposits)
இதையெல்லாம் வச்சு நமக்கு Eligibility இருக்கான்னு பார்ப்பாங்க.
அப்படி இருக்கும் பட்சத்தில் வங்கிகள் நமக்கு கடன் அட்டையை வழங்கும்.(நீங்க Apply பண்ணி இருக்கனும்)
ஒருவேளை இந்த Criteria எல்லாம் உங்களுக்கு மிகச்சிறப்பாகவே இருந்தா வங்கிகளே உங்களுக்கு Phoneபண்ணி வேணுமான்னு கேட்பாங்க.!😊
கடன் அட்டையை முதல் தடவை வாங்குவதற்கு மட்டும் Documentation, Income Proof or Salary Slip அப்புறம் ID Proof & Address Proof தேவைப்படும். இதில் நாம் மேலே பார்த்த Eligibility Criteria வை வைத்து Credit Limit கொடுப்பார்கள். (எவ்வளவு கடன் வாங்கலாம் என்னும் ஒரு வரையறை)🙄
இது இருந்தால் மாதக் கடைசியில் நாம் நண்பர்களிடம் கைமாத்தா கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வராது. ஏன்னா இந்த கடன் அட்டையைக்கொண்டு நாம் கடைகளில் Purchase பண்ணலாம், Online ல் பொருட்கள் வாங்கலாம்.
(நினைவு இருக்கட்டும் நாம் வாங்குவது எல்லாம் கடனில்)
நாம் Credit Card முலம் செலவு செய்ததற்கான Monthly Dues ஐ மட்டும் குறிப்பிட்ட நாட்களுக்குள் சரியாக திருப்பி கட்டிவிட்டால் (கைமாத்தா வாங்குன பணத்த சம்பளம் வந்தவுடன் திருப்பி கொடுக்கிற மாதிரி) எவ்விதமான கூடுதல் தொகையும் (வட்டி உட்பட) கட்ட தேவையில்லை என்பது தான் இதன் சிறப்பு..!😊
நல்லது...,
🔥இந்த Credit Card பக்கம் யாரெல்லாம் போகக்கூடாது
🔥நமக்கு பொருத்தமான கடன் அட்டையை எப்படி தேர்வு செய்வது
🔥பயன்படுத்தும் முறை
🔥சாதக பாதகங்கள்

இவையெல்லாம் பற்றி வரும் பதிவுகளில் காணலாம்.😊

நன்றி மக்களே..!
🙏🙏🙏
You can follow @theroyalindian.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: