#Neuralink

கண் தேறியாத ஒரு நபர் கண் மாற்று அறுவை சிகிச்சை இல்லாமல் அவரால் பார்க்க இயலும். பிறவியிலேயே காது கேக்கும் திறன் இல்லாத ஒரு நபரால் கேக்க இயலும். மறதி இது பலர்க்கு வரம் பலருக்கு இது சாபம். ஆனால் மறதியே இல்லாமால் ஒரு நபரால் இருக்க முடியுமா என்று
கேட்டால் முடியாது ஆனால் உங்கள் நினைவுகள் அனைத்தையும் உங்களால் உங்கள் கணினியில் சேமிக்க முடியும். என்று சொன்னால் நம்புவீர்களா

இதற்க்காக #ElonMusk அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு ப்ராஜெக்ட் தான் neuralink.
Elon musk அவரபத்தி சொல்லனும்னா மின்சார கார் உற்பத்தியில் சிறந்து விளங்கும் நிறுவனமான #Tesla இவருடையது தான். அமெரிக்காவிர்க்கு விண்வெளி துறைக்கு உதவும் #SpaceX நிறுவனம் இவருடையது. அடுத்ததாக இவர் கால் பதிக்க நினைப்பது மனிதர்கள் தலையில்.
அதற்க்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் இந்த Neuralink.

இந்த neuralink நிறுவனம் 2016 ஆம் ஆண்டு எலான் மஸ்க் அவர்களால் தொடங்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை என்று #twitterல் ஒரு அறிவிப்பு விடுக்கிறார்.

உலகில் உள்ள பல ஆராய்ச்சியாளர்கள் இந்த பணியயை
செய்து தருவதாக சொல்லி வருகிறார்கள். 2019 ஆம் ஆண்டு ஒரு அறிவிப்பு வருகின்றது. ஒரு புதிய #chip தயாரித்ததாகவும். அதனை குரங்கின் மூளையில் வைத்து பரிசோதனை செய்ததாகவும் அந்த பரிசோதனை வெற்றிகரமானதாக இருந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார்கள்.
அதன்படி அந்த குரங்கு கனினியயை இயக்கியதாக குறிப்பிட்டு உள்ளார்கள்.

இது முதலில் ஹெட் செட் அமைப்பு போன்ற தோற்றத்தில் இருந்தது. அதில் இருந்து 4 வயர்கள் மூளைக்கு அருகில் பொருத்துவது போன்று இருந்தது. இது தான் முதலில் கண்டுபிடிக்கபட்ட மாடல் இதன் பெயர் V1.
இவர்கள் 2020 ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி ஒரு அறிவிப்பு வருகின்றது. இதில் அடுத்த மாடல் N1 என்ற சிப் செட் தயாரித்து இருப்பதாகவும். அதனை பன்றியின் மூளையில் வைத்து சோதனை செய்து வெற்றி கண்டதாகவும் சொல்லி இருக்காங்க.

ஏன் பன்றியின் மூளை என்றால் அது மனித மூளையின் கட்டமைப்புடன் ஒத்துபொகும்
இந்த N1 chip set அளவு 2mm to 4mm வரை இருக்கும். இதன் வெளிபுறத்தில் வயரிங் அமைப்பு ஏதும் கிடையாது. இது ப்ளூடூத் மூலம் தகவல்களை பரிமாற்றம் செய்யும் தன்மை கொண்டது.

இதில் உட்புறமாக மொத்தம் 1024 வயர்ஸ் இருக்கும். இவை அனைத்தும் நமது முடியயை விட 10 மடங்கு மெல்லியதாக இருக்கும்.
இது உள்ளே இருப்பது தெரியாதது போல் ஆப்ரேசன் செய்யப்படும். அதற்க்கு தனியாக ரோபோட் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதை DARPA என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

அந்த இயந்திரததில் நம் தலையயை வைத்த உடன் அது தலையில் மண்டை ஓட்டில் 2mm அளவில் துளையிடும் உள்ளே மூளையில் அந்த சிப் பொருத்தப்படும்.
எலான் மஸ்க் அவர்கள் நீங்க இதுக்கு மயக்க மருந்து எதும் பயன்படுத்த தேவை இல்லை காலையில் வாங்க உங்களுக்கு ஆப்ரேசன் செய்யப்படும். மாலையில் நீங்கள் வீட்டிற்க்கு செல்லலாம் என்று சொல்லி உள்ளார்.

இது இப்பொது நம் தலை மண்டை ஓட்டில் உள்ளே இருக்க்கும். நம் மூளையில் உருவாகும் சமிக்ஞை
அனைத்தும் அனலாக் வகையயை சேர்ந்தவை. ஆனால் நம் கணினிகள் அனைத்தும் டிஜிட்டல் வகையை சேர்ந்தவை.

உள்ளே வைக்கப்பட்ட அந்த சிப் நம் மூளையில் உள்ள அனலாக் சிக்கனலை அது டிஜிட்டல் சிக்னல் ஆக மாற்றி தரும். அந்த சிக்னல் ஆனது ஒரு மொபைல் ஆப் மூலமாக
நாம் என்ன நினைக்கிறோமோ அதை அப்படியே அந்த மொபைல் போன் மூலம் செய்ய முடியும். மற்றும் அந்த மொபைல் போன்னை இயக்க முடியும். உதாரனமாக இப்போது அந்த மொபைல் போன்க்கு அழைப்பு வரும் போது நாம் அதனை கையால் எடுத்து பேச வேண்டிய அவசியம் இல்லை.
அந்த அந்த ஆப் மூலம் மூளைக்கு சிக்னல் தரும். மூளை அழைப்பை இணைக்க உத்தரவு தரும். அந்த அழைப்பு தானாக கனேக்ட் செய்யபடும். இவை அனைத்தும் உங்கள் கைகளின் உதவியின்றி எந்த தடங்களும் இல்லாமல் நடைபெறும்.

நீங்களும் அப்படியே பேசிக்கொள்ளலாம். இப்பொது நீங்கள் ஒரு பொருளை பார்க்கும் போது
அது என்ன என்று கண்டறிய வேண்டும் என்றால் மூலையில் இருந்து சிக்னல் அனுப்பபட்டு அது போன்னில் இருந்து கூகிள் சர்ச் செய்து அது உங்களுக்கு தகவலை நேரடியாக மூளைக்கு அனுப்பும். அதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இதனால் என்ன நன்மை என்று கேட்டால் கண் தெரியாதவர்களுக்கு இதன் மூலம் கண் பார்வை கிடைக்கும். ஒரு கேமரா ஒன்று தொப்பியில் பொருத்தபட்டு தலையில் மாட்டி கொள்ளும் வகையில் தரப்படும். அந்த கேமரா மூலம் பதிவு செய்யபடும் டிஜிட்டல் போட்டோ அனைத்தும் அனலாக் முறையில் மாற்றி அப்படியே மூளைக்கு
அனுப்படும். அந்த கேமரா 108 Mp வரை இருக்கும் என கூறப்பட்டு உள்ளது.

இதன் மூலம் அவர் என்ன பார்க்கிறார் என்பதை மூளை அறிந்து கொள்ளும். இது போல காது கேளாதோர்க்கும் செய்ய முடியும் என்று சொல்லி இருக்கிறார்.

மூளையில் ஏற்ப்பட்டும் மாற்றத்தினால் தான் நோய் வருகின்றது.
இந்த சிப் மூலம் மூளையில் உள்ள மாற்றத்தை அறிந்து என்ன நோய் என்பதையும் கண்டுபிடிக்க இயலும் அப்படினு சொல்லி இருக்கிறார் எலான் மஸ்க் அவர்கள்.

இதில் இன்னும் வேறு விதமான சிந்தனைகளும் உள்ளன. அதாவது நாம் ஒன்றை நினைத்து மனதை ஒறுமுகபடுத்தி உருவம் கொண்டுவந்தால் அதனை அப்படியே
வரையும் படியான சாப்ட்வேர் ஒன்றை வடிவமைக்க திட்டமிடபட்டுள்ளது.

உதாரனமாக நான் இப்பொது அப்துல்கலாம் என்று சொன்னால் உங்கள் மூளையில் தோன்றும் விசயம் அப்படியே படமாக கணினியில் பார்க்க இயலும். (சிலருக்கு நன்மை பலருக்கு பாதகமாத தான் அமையும்)
இத்தனையும் செய்யும் அந்த சிப் வேகமாக செய்யுமா என்றால் செய்யும் என்று பதில் அளித்து உள்ளார்கள். அதில் உள்ள ஒவ்வொரு வயர்ஸ் அனைத்தும் ஒவ்வொரு வினாடிக்கும் 200MB/sec விகிதத்தில் டேட்டா ட்ராஸ்பர் செய்யும் என்று சொல்லியுள்ளார்கள்
நீங்கள் தினசரி பார்க்கும் காட்சிகள், குரல், செய்தி இவை எல்லாம் இந்த ஆப் மூலம் ஆன்லைன்ல் ஸ்டோர்(like cloud storage) செய்து கொள்ள முடியும். நீங்கள் எப்போது வேண்டும் என்றாலும் அதனை பார்க்க இயலும். அதற்க்கு தேவையானது எல்லாம் அந்த சிப் மற்றும் அந்த ஆப் மட்டுமே.
10 வருடம் கழித்து இன்று நடந்த ஒரு நிகழ்வை திரும்ப பார்க்க வேண்டும் என்றால் கூட பார்க்க இயலும். (நம்ப ஊரில் பெண்கள் ரீவைன்ட் செய்து காண்பித்து திட்ட பயன்படும்)

இது ப்ளூடூத் மூலம் இயங்கும் என்பதால் இதற்க்கு பேட்டரி தேவை. இதன் பேட்டரி கேப்பாசிட்டி ஒரு நாள் மட்டுமே.
அதனால் இதனை வயர் லெஸ் (wire less) மூலம் சார்ஜ் செய்யும் வழி முறை பற்றி ஆராய்ச்சி நடைபெறுகிறது.

இன்னும் சிறிது நாட்களில் இது மனிதர்களுக்கு சோதனை சேய்யப்படும் என்று சொல்லி இருக்காங்க. அதற்க்கான பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது.
இது மனிதர்களுக்கு கட்டாயம் என்று சட்டம் கூட வரலாம் பின்நாட்களில். காத்திருந்து பார்ப்போம்.

இதில் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டும் நிறையவே இருக்கிறது என்று சொல்லலாம். குறிப்பிட்டு சொல்லி

நன்மை என்று பார்த்தால் கண் தெரியாதவர்கள் காது கேக்காதவர்களுக்கு இது வரம்.
தீமை என்றால் இது ப்ளூடூத் மூலம் இயங்கும் என்று சொல்லி இருந்தென் அதனால் இதனை சுலபமாக ஹேக்(hack) செய்ய இயலும். இதனால் நான் என்ன பார்க்கிறேன் என்று சுலபமாக மற்றவர்களால் பார்க்க முடியும்.(Even though your personal matters also) 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️
இது கொஞ்சம் பெறிய த்ரெட் தான். ஆனாலும் நம் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதர்க்கான ஒரு ஆரம்பம் தான் இது.

இதில் எனக்கு தெரிந்தவரையில் சொல்லி இருக்கேன் தவறு இருந்தால் சொல்லுங்க மாத்திக்கலாம். உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்க நானும் தெரிந்து கொள்கிறேன்.
கொஞ்சம் சலிப்பு தட்டும் த்ரெட் தான். படிக்க வாய்ப்பு குறைவு. படிச்சா எப்படி இருக்குனு சொல்லுங்க.

நன்றி
வணக்கம்🙏🙏🙏
You can follow @thaniyorumanith.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: