ஒரு முக்கியமான செய்தி

இன்று மத்திய அரசின் பரிந்துரைப்படி RBI priority sector guideline எனப்படும் " அத்தியாவசிய துறை" கடன் நிர்ணய வரைமுறையை மாற்றி அமைத்து இருக்கிறது.
1/n
Priority sector lending PSL என்றால் என்ன ? ஆர்பிஐ , சிறு குறு தொழில்கள் மற்றும் விவாசயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்களுக்கு சரியான அளவிலும், சரியான வட்டியிலும் கடன் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் PSL வரைமுறையை அமைத்திருக்கிறது

2/n
இந்த வரைமுறைப்படி 20க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட வங்கி 100 ரூ தனியார் பெரு நிறுவனத்திற்கு கடனாக கொடுத்தால் 40 ரூ சிறு, குறு , விவசாயி, விவாசய நிறுவனங்களுக்கு கடனாக கொடுக்க வேண்டும். இது பல வருட நடைமுறை.

3/n
இவ்வகையான கடன்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டிற்கு கிடைக்க காரணம் தமிழ்நாட்டில் உள்ள நிலையான அரசியல், வளர்ச்சி மற்றும் தொழில் செய்வோரின் நேர்மை.

இதை இப்போது ஆர்பிஐ மாற்றி அமைத்திருக்கிறது. இந்த விவசாய / விவசாயம் சார்ந்த கடன்கள் மற்றும் சிறு குறு கடன்களை எந்தெந்த
4/n
மாநிலங்களுக்கு கொடுத்தால் எவ்வளவு விகிதம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பது தான் அந்த மாற்றம். இதற்கு ஆர்பிஐ சொல்லும் காரணம் முன்னேறாத மாநிலங்களுக்கு கடனும், வளர்ச்சியும் சென்றடைய வேண்டும் என்பதுவே.

5/n
இதில் தமிழ்நாட்டின் மாவட்டங்களில் 33 மாவட்டங்கள் ஏற்கனவே அதிக வங்கியின் கடன் / பரிமாற்ற அளவு இருப்பதாக ஆர்பிஐ சொல்லியுள்ளது. குஜராத், உபி, பீகார் போன்ற மாநிலங்களுக்கு கடன் கொடுத்தால் அதிகளவு மதிப்பீடு இருக்கும்.

6/n
இந்த மாற்றத்தால் தமிழக சிறு குறு, விவசாய நிறுவனங்களுக்கு இனி கடன் கிடைப்பது குறையும்.

நம் வரியை எடுத்தார்கள், மொழியை பிடுங்கினார்கள், வேலையை எடுத்திக்கொண்டார்கள், புதிய நிறுவனங்களை எடுத்துசென்றார்கள், நாம் உழைத்து உருவாக்கும் தொழில்களையும் அழிக்கிறார்கள்.
You can follow @Sivaji_KS.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: