தமிழகத்திலும் ஒரு காலத்தில் நுழைவுத்தேர்வு இருந்தது.
12ம் வகுப்பு மதிப்பெண்,மருத்துவ நுழைவுத் தேர்வு(TNPCEE) மதிப்பெண் இரண்டையும் சேர்த்து கணக்கிட்டு(200+100)கல்லூரிக்கு தேர்வு செய்தார்கள்.

அதை யாரும் எதிர்க்கவில்லை ஏனென்றால் அது பள்ளியில் படித்த பாடத்திட்டம்.தனியாக படிப்பதற்கு
அவசியம் இல்லை. 12ம் வகுப்பில் படிப்பதே போதும். அதிலும் கூட நுழைவுத் தேர்வுக்கு புற்றீசல் போல பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு,மாணவர்களுக்கு அதிக பளுவானதால் பிறகு நுழைவுத்தேர்வு முற்றிலும் நீக்கப்பட்டது வேறு கதை.

இந்த NEETல் நடப்பது அடிப்படையில் முற்றிலும் வேறானது.புதிய புத்தகம்,
புதிய சிலபஸ் அதற்கான அவசியம் என்ன வந்தது?

CBSEல் படித்த அறிவாளிகள் எந்தெந்த துறைகளை தூக்கிப் பிடித்து உயர்த்தி இருக்கிறார்கள், அல்லது STATE BOARDல் படித்த முட்டாள்களால் எந்தெந்த துறைகள் பாதிப்படைந்து இருக்கின்றன என்பதற்கான புள்ளி விவரங்கள் ஏதும் இருக்கிறதா?ஒன்று சிறந்தது என்று
சொன்னால் அதனால் அந்த சமுதாயம் பயனடைந்திருக்க வேண்டும். தமிழகம் STATE BOARDல் பயனடைந்து இருக்கிறது. தமிழக மாணவர்கள் பயனடைந்து இருக்கிறார்கள்.

CBSEஐ பின்பற்றும் மாநிலங்களில் கல்வியறிவு சதவீதம் எத்தனை? மருத்துவர்கள் எத்தனை? கல்லூரிகள் எத்தனை?சுகாதார நிலையங்கள் எத்தனை?
சுகாதாரத் துறையின் சாதனைகள் எத்தனை? இந்த நாடும் நாட்டு வளங்களும் இங்கே எல்லாருக்கும் பொதுவானது. ஏற்றத்தாழ்வான இந்த சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் ஒருங்கிணைத்து செல்வது தான் உண்மையான வளர்ச்சி.

இது புரியவில்லை என்றால் உண்மையில் நீங்கள் தான் முட்டாள்கள். நாங்கள் அல்ல.
#shared
You can follow @navo_talks.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: