#SWIFT
#THREAD

கிமு, கிபி நு வரலாற இரண்டா பிரிக்கிற மாதிரி ஸ்விப்ட் க்கு முன் ஸ்விப்ட்க்கு பின் அப்படினு இந்திய வாகன சந்தைய இரண்டா பிரிச்சுடலாம். முன்னாடிலாம் மாருதி 800, ஓம்னினு இந்த இரண்டு கார வச்சுகிட்டு இந்திய மார்க்கெட்ல முடி சூடா மன்னனா மாருதி இருந்துச்சு.
வருஷம் 2000
ஹீண்டாய், சாண்ட்ரோவோட இந்தியால எண்ட்ரி ஆகுது. ஷாருக்கான் சர்தார்ஜிய வச்சு விளம்பரம் பன்றான். பேசிக் மாடல் மேனுவல் ஸ்டீயரிங்க பார்த்துகிட்டு இருந்த இந்திய மார்க்கெட்ல பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோனு மாடல் செம்ம ஹிட் அடிக்கிது. இன்னோரு பக்கம் சரக்கு வாகனத்துல
பெரிய கவனம் செலுத்திக்கிட்டு இருந்த மற்றொரு ஜாம்பாவான் ரத்தன் டாடா அவனோட முழு முதல் இந்திய தயாரிப்பான டாடா இண்டிகாவ களம் இறக்குறாரு. டீசல் வேரியண்ட்டோட வந்த முதல் குட்டி கார். இந்திய சந்தைய நல்லா புரிஞ்சு சின்ன பட்ஜெட் காரா இறக்குனாரு. விற்பனை அமோகமா ஆச்சு.
இந்த பக்கம் மாருதியோட சாம்ப்ராஜியம் ஆட்டம் காண ஆரம்பிச்சுச்சு. 5 வருஷம் மாருதியால நிமிறவே முடியல. அவன்க்கூட போட்டி நிறுவனமா இருந்த பிரீமியர், ஹிந்துஸ்தான் நிறுவனங்கள் அவங்க கடைய சாத்திட்டாங்க. எஸ்டீம், வாகன் ஆர், பலினோனு கொஞ்சம் கொஞ்சம் தாக்கு புடுச்சு மாருதி தப்பிச்சுச்சு
போர்ல கடைசி ஆயுதமா எதையோ எடுப்பாங்களே அது மாதிரி சுசூகி எடுத்த மிகபெரிய ஆயுதம் தான் ஸ்விப்ட். அவன் ஓனர்க்கூட நினைச்சு பாத்துருக்க மாட்டான் இவ்வளவு பெரிய ஹிட் ஆகுமுனு. ரெட்ரோ மாடல்ல பின்னாடி லைட்டா குண்டி தூக்கிட்டு டிசைன் பன்னுனான். நம்மாளுக்களுக்கு குண்டி பெருசா இருந்தாதானே
பிடிக்கும் அந்த மாதிரி இதையும் புடிக்க ஆரம்பிச்சுச்சு. இப்ப இருக்க பசங்களுக்கெல்லாம் மங்காத்தா அஜித் ஸ்விப்ட் ஓட்டுறதுதான் தெரியும் ஆனா முத முறையா தமிழ் சினிமால 2006ல வல்லவன் படத்துல நயந்தாரா ஓட்டிட்டு வருவா பாருங்க சிவப்பு கலர் ஸ்விப்ட். ஸப்பப்பா அத பாக்குறதுக்குதான் 3 வாட்டி
அந்த படத்த தியேட்டர்ல போய் பார்த்தேன். அதான் கார் அதுமட்டும் தான் கார். ரோட்ல போணுச்சுனா சைக்கிளலயே வேகமா பின்னாடி சேஸ் பண்ணி போய் பார்ப்பேன். அந்தளவுக்கு அந்த கார் மேல பைத்தியம் ஆனேன். வெறும் அவுட்லுக்க மட்டுமே வச்சு பிடிச்ச கார். 2012 ல முத கார் வாங்குனேன் பட்ஜெட்
இல்ல ஆனா ரெட் கலர் ஹீண்டாய் அசெண்ட் வாங்குனேன்.

அப்படி என்ன இருக்கு ஸ்விப்ட்ல?

வாஜ்பாய் காலத்துல ரோடெல்லாம் நாற்கர சாலையா மாற ஆரம்பிச்சுச்சு. எல்லாரும் பெட்ரோல் இஞ்சின்ல முக்கிகிட்டு இருந்தாங்க. 1248 சிசி டீசல் இஞ்சின் மிதிச்சா பறக்கும். செம்ம சடன் பிக்கப் இருக்கும்
இனிசியல் டார்க் செம்ம அதிகமா இருந்துச்சு. சில பல நொடிகளல 120 கிமி ஸ்பீட தொட்டுச்சு. அந்த வேகத்த இந்திய யூத்துக்கள் அள்ளி அனைச்சுகிட்டாங்க. அஜித்துக்கு இந்த கார் ஏன் ரொம்ப புடிக்குமுனு இப்ப உங்களுக்கு தெரிஞ்சுருக்கும். சக்ஸஸ்புல் பிரேக் செக்‌ஷன், ஷாக் அப்ஸர்னு இந்தியர்கள் புது
அனுபவம் அடைஞ்சாங்க. பியட்டோட DDIS இஞ்சின் மாருதிக்கு புத்துயிர் அளிச்சது. ஸ்விப்ட் டிசைர், ரிட்ஸ் நு அதே இஞ்சின போட்டு மாருதி கல்லா கட்ட ஆரம்பிச்சுச்சு. நல்ல மைலேஜ், கம்மியான சர்வீஸ், ரொம்ப நல்ல ரீசேல் வேல்யூனு மாருதி 800 ஓரம் கட்டிட்டு விற்பனைல முதல் இடம் புடிச்சது.
மற்றொரு அனுபவம். 2013 ல துபாய்க்கு வேலைக்கி போனேன். துபாய் அபுதாபிய இணைக்கிற ஷேக் சையது ரோடு இருக்கு. 8+8நு 16 லைன் இருக்கும் எல்லாமே அல்ட்ரா மாடர்ன் கார்ஸ்தான் போட்டி போட்டுகிட்டு போயிட்டு இருக்கும். இந்திய ரோட்ல ஓடுற கார்கள்ல ஸ்விப்ட் மட்டும்தான் அந்த ரோட்ல போட்டி போட்டு ஓடும்
அப்பதான் அதோட முழு திறன் தெரிஞ்சுது. 2016 வரை பார்த்தும், அத பத்தி கேட்டும் தெரிஞ்சுகிட்டுருந்த எனக்கு 2016 ல ஒரு ஸ்விப்ட் வாங்குற வாய்ப்பு கிடைச்சது. ஸ்ரீரங்கத்துல ஒரு இஞ்சிநேயர் ட்ட செகண்ட் ஹாண்ட்ல வாங்குனேன். சில்வர் கலர். OLX ல போஸ்ட் பண்ணுன அடுத்த நாள் காலைல
7 மணிக்கி அவர் வீட்டு வாசல்ல போய் நின்னேன். அவங்க அம்மா மறு பேச்சு பேசல. கேட்குற காசுக்கு வண்டிய எடுத்துட்டு போப்பா நல்லா வருவேனு சொன்னாங்க. 1000 அட்வான்ஸ். 2.85 லட்சம் 2008 மாடல் . 10 மணிக்கு பேங்ல நகை வச்சேன் 12 மணிக்கு கார வீட்டுக்கு கொண்டு வந்துட்டேன். ஸ்டேரிங்க தொடும்போது ம்
#swift vs #physcology

காருக்கும் மனநிலைக்கும் சம்பந்தம் இருக்கா? கண்டிப்பா இருக்கு. குறிப்பா ஸ்விப்ட்.

மனசு சரியில்ல அப்படினா கார்ல ஒரு டிரைவ் போனா ரிலாக்ஸ்ஸா இருக்குமுனு சொல்லுவாங்கல்ல ஆனா ஸ்விப்ட் வச்சுருக்கவங்களுக்கு அதுல ஏறி உக்காந்தாலே போதும் ரிலாக்ஸ் ஆகிடுவாங்க.
எக்ஸாஜுரேட் பண்ணி சொல்லல. அதான் உண்மை. அம்மாவை போல. வண்டி எடுத்தா எங்கேயும் நடுவழில நிருத்திராதுனு ஒரு புல் நம்பிக்கை கொடுக்கும். E க்கு கீழ போனாலும் ஒரு 50 கிமீ ஓட்டிடலாம். அவசரத்துக்கு சென்னைக்கி 3.30 மணி நேரத்துலலாம் போயிருக்கேன். மித்த எத்தனையோ மாடல் வண்டி
வச்சுருக்கேன். ஆனா ஸ்விப்ட் தர தைரியம், பாசிட்டிவ் வைப் எந்த வண்டிலயும் கிடைக்காது. ஸ்விப்ட் வச்சுருக்கவங்கள நல்லா கவணிங்க. ஒருத்தவன்கிட்ட ஸ்விப்ட் இருந்தா அவன் அவ்வளவு நம்பிக்கையா வாழ்க்கைல இருப்பான். ரொம்ப நேர்மையானவனா இருப்பான். ஒரு பைனான்சியர்ட்ட பேசும் போது சொன்னாரு
ஸ்விப்ட் வச்சுருந்தானா அவன நம்பி பணம் கடன் கொடுக்கலாம். நியாயமா இருப்பாங்கனு. நானும் நிறைய இடத்துல கவனிச்சுருக்கேன். ஒரு வீட்ல ஸ்விப்ட்டோ, டிசைரோ நின்னுச்சுனா அவங்கல ஈசியா அனுகலாம். அதான் உண்மை.
ஹீண்டாயும், டாடாவும்னு இந்தியால இருக்குற அத்தனை நிறுவனங்களும் ஸ்விப்ட்க்கு மாற்று கண்டுபிடிக்கிறேனு நாக்கு தள்ளி நிக்கிறதுதான் மிச்சம். அதே இஞ்சின் வச்சிகிட்டு பலினோ, எர்டிகா, சியாஸ், எஸ் கிராஸ், இக்னிஸ்னு மிக பெரிய சந்தைல மாருதி நிக்கிறதுக்கு காரணம் ஸ்விப்ட் மட்டும்தான்
இப்பவும் என்கிட்ட அட்வைஸ் கேட்குறவங்களுக்கு என்னோட முதல் சாய்ஸ் ஸ்விப்ட் தான். BS6 நு இப்ப அடிச்சுருக்க சுனாமில டீசல் இஞ்சின் வேணானு சுசூகி எடுத்துருக்க முடிவு மிக பெரிய முட்டாள்தனமாதான் நான் பாக்குறேன். இனி சுசூகி மெல்ல மெல்ல சாகும். பத்திரமா பாத்துக்கொங்கடா என் பறைய (ஸ்விப்ட்)
இன்னும் நிறைய சொல்ல இருக்கு. இந்த த்ரெட் என் அனுபவத்த வச்சு போட்டது. கூகுள்ள ஆராய்ச்சி பண்ணல. சோ யாரும் பூட்டை ஆட்ட வேண்டாம். பிடிச்சுருந்தா ஆர்டி பண்ணுங்க. நன்றி @aram_Gj @guruvetri1 @monk_offi @bharath_kiddo @_VarunKannan @gsagapa @gcybertron @pandi_thamizha
@itzcaptain @vicky_rockfort @8tttuu @Riddletiger @chithradevi_91 @_AngelKD @subramaniandeva

ரொம்ப நாள் என்கிட்ட ஸ்விப்ட் பத்தி த்ரெட் போட சொல்லி கேட்ட என பாலோயர் நண்பர்களுக்கு நன்றிகள். இதுக்குதான் இந்த சீனானு திட்டாதிங்க. வச்சுகிட்டா வஞ்சகம் பன்றோம்.
You can follow @vinothpaper.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: