#வாமனனா?
#மகாபலியா?
"செத்த மகாபலியையும் கொண்டாடறாங்க, அவனைக் கொன்ன வாமனனையும் கும்பிடறாங்க."
நண்பர் @minimeensன் ஸ்டேட்டஸ் இது..!
உடன் கன்னத்தில் கைவைத்த ஸ்மைலி வேறு.!
...ஆக இவர்களில் நல்லவர் யார்.?
ஏன்..?
ஒரு சிறிய விவாத மேடை இது..!
1/n

மகாபலி..
அசுர அரசர்களிலேயே வலிமை மிகுந்த அரசர். சிவபக்தர். அறிவார்ந்த ஞானி. அன்பானவர். தர்மத்தின் அடையாளச் சின்னமாக விளங்கியவர். தன்னிடம் பிச்சை கேட்டுவந்த வாமனன் என்ற ஏழை பிராமண வேடம் தரித்த கடவுளுக்கு, கொடுத்த வாக்கிலிருந்து தவறாததால், தனது சாம்ராஜ்யம் முழுவதையும் இழந்தவர்.
2/n

அனைத்தையும் இழந்தபின்னும், தனது மக்கள் நலமும், வளமும் பெற்று வாழ்ந்திட வரம் கேட்டதோடு, அவர்களை ஆண்டிற்கு ஒருமுறை காண வருபவர் மகாபலி.
அவர் வருகை தரும் நாளான ஓணத்தையும், அன்பு நிறைந்த அந்த மகாபலியையும், மக்கள் கொண்டாட வேறு காரணங்கள் எதுவும் தேவையில்லை என்றே தோன்றுகிறது..!!
3/n

அப்போது வாமனன்..?
கடவுள் என்பதால் வணங்குகிறோமா?
பொதுவாகவே யாசகம் கேட்கும்போது மனதளவில் குன்றிவிடுகிறோம் என்பது தானே உண்மை?
ஆக, கொடுப்பவர்கள் எப்போதும் உயர்ந்து விடுகிறார்கள்.
பெற்றுக்கொள்பவர்கள் குன்றிவிடுகிறார்கள் என்பதற்கு அழகான எடுத்துக்காட்டாக உள்ளனர் வாமனனும், மகாபலியும்

ஆம். மகாபலியிடம் நிலத்தை யாசகம் கேட்கும்போது, கடவுள் கூட வடிவம் குன்றி வாமனனாகிப் போனார்.
உண்மையில் கடவுளின் வடிவம் சின்னதாகவில்லை..
தானம் கேட்ட காரணத்தால் அவருக்கு மகாபலியின் முன்பு குள்ளமாகிப் போனதைப் போல ஒரு உணர்வு என்பதே நிதர்சனம்..!
(நன்றி: 'சந்தித்ததும் சிந்தித்ததும்')

அப்படியிருக்க, எதிர்மறையான வாமனனை ஏன் வணங்க வேண்டும்?
..பதில் கூறுகிறாள் திருப்பாவை.
"ஓங்கி உலகளந்த உத்தமன்"என்றும், "உலகளந்த உம்பர் கோமானே" என்றும், "அன்று இவ்வுலகம் அளந்தாய்" என்றும் வாமன அவதாரத்தை மூன்றுமுறை போற்றிப்பாடுகிறாள். அப்படி என்னதான் சிறப்பு இந்த வாமன அவதாரத்தில்?

பக்தப் பிரகலாதனின் பேரனும், அசுரகுலச் சக்ரவர்த்தியுமான மகாபலி சக்கரவர்த்தி, தனது நற்குணங்களால் தேவர்களுக்கும் மேலானவனாகக் கருதப்பட்டவன்..
ஆனால், அதுவே அவனது கர்வத்தை அதிகப்படுத்த, தனக்கு இந்திரப் பதவி வேண்டி யாகம் ஒன்றைத் துவங்குகிறான் மகாபலி.!

தேவர்களைக் காப்பாற்ற குள்ள வாமனனாக உருவெடுத்து மகாபலியிடம் யாசகம் கேட்டு வருகிறார் இறைவன்.
யாசகம் தர ஒப்புக் கொண்ட மகாபலியிடம், மூன்றடி நிலம் கேட்ட வாமனனைப் பார்த்து மகாபலி, 'இவ்வளவு குள்ள வடிவில் இருக்கும் உனக்கு மூன்றடி என்பது மிகவும் சிறியதாக இருக்குமே?' என்று சிரிக்கிறார்.

அவமானத்தில் தலைகவிழ்ந்து நின்ற வாமனனிடம், 'நீ கேட்டபடியே நிலத்தை அளந்து எடுத்துக் கொள்..' என்று மகாபலி அலட்சியமாய்ச் சொல்ல, அதன்பிறகு என்ன நடந்தது என்பதை நாம் அறிவோம்.
"உருவு கண்டு எள்ளாமை வேண்டும்.." என்கிறது வள்ளுவம்.
ஆம்..
எந்தக் கால்களை மிகவும் குட்டையாக இருக்கிறது என்று மகாபலி ஏளனம் செய்தானோ, அதே வாமனனின் கால்கள்தான், திருவிக்கிரம அவதாரமாக ஓங்கி உலகளந்து, மூன்றாவது அடியில் மகாபலியின் தலையில் அழுத்தி, அவன் ஆணவத்தை அழித்து அவனை ஆட்கொண்டது.

ஆனால் வாமனனைப் பாடும் போதெல்லாம், வெறுமனே பாடாமல் உத்தமன் என்றும் உம்பர் கோமான் என்றும் தொடர்ந்து கோதை சொல்கிறாளே ஏன் என்றால் அதற்கும் காரணம் இருக்கிறது..
மனிதர்களை எல்லாம், அவர்கள் குணங்களை வைத்து அதமாதமன், அதமன், மத்யமன், உத்தமன் என்று நான்கு வகையாகப் பிரிக்கிறார்கள்..

தான் அழிந்தாலும் பரவாயில்லை, பிறர் வாழ்ந்துவிடக் கூடாது என்று மற்றவர்களை அழிப்பவன் அதமாதமன்.
பிறரை அழித்து, தன்னைக் காத்துக் கொள்பவன் அதமன். பிறர் வாழ வழிவிட்டு தானும் வாழ்பவன் மத்யமன்.
தான் அவமானப்பட்டாலும், அழிந்தாலும்
பிறரை வாழ வைப்பவன் உத்தமன்..

இதன்படி பார்த்தால், இராம மற்றும் கிருஷ்ண அவதாரங்களில் கூட முறையே இராவணனையும், கம்சனையும் அவர்கள் இருவரும் அழித்தனர்.
ஆனால் வாமன அவதாரத்தில், மகாபலியை அழிக்கவில்லை. மாறாக, அவனது செருக்கைத் திருத்தி, அவனை ஆட்கொள்கிறார் திருவிக்கிரமப் பெருமாள்.

பிச்சை எடுக்கும்போது ஒருவனுடைய கல்வி, கேள்வி, புகழ், சாதுரியம் மற்றும் வெற்றி என்ற ஐந்து தேவதைகளும் அவனை விட்டு நிரந்தரமாகப் பிரிந்துவிடுமாம். இத்தனையும் தெரிந்தும் வரம் மட்டுமே தரும் பரந்தாமன், இந்திரனுக்காக மகாபலியின் யாகசாலையில் யாசகம் கேட்டு நின்றார்.
அதுமட்டுமல்ல, மகாபலியை ஆட்கொள்ள உலகை அளந்தபோது திருமாலின் திருவடியானது, நல்லவர்- கொடியவர் என்ற பாகுபாடு எதுவுமின்றி அனைவருக்கும் அருள் வழங்கியதாம்..
(நன்றி: மார்கழி உற்சவம்)
(நன்றி: மார்கழி உற்சவம்)
இப்போது சொல்லுங்கள்..
பிறர் நலன் காக்க, தன்னைத் தானே உருமாற்றி, குறுகி யாசகம் செய்த உத்தமனான வாமனனையும்,
தனது மக்களும் நலமும், வளமும் பெற்று வாழ்ந்திடவே வாழ்ந்த மத்யமனான மகாபலியையும் அதே ஊரில், அம்மக்கள் ஒன்றாகக் கொண்டாடுவதில் வியப்பேதும் இல்லையே.?!
ഓണം ആശംസകള്..!!
n/n

@minimeens
@saattooran
@venujanakan
@mythilitvb
@subramaniangood
@2nrc
@kavitha129
@sweetsudha1
@umasrikanthk
@agizo_jay
@Jankiramanagm
@brubala
@AmmU_MaanU
@mpgiri
@chandra_kalaS
@VanthiyaDevan15
@Davisri_14
@DeNationS_
@saattooran
@venujanakan
@mythilitvb
@subramaniangood
@2nrc
@kavitha129
@sweetsudha1
@umasrikanthk
@agizo_jay
@Jankiramanagm
@brubala
@AmmU_MaanU
@mpgiri
@chandra_kalaS
@VanthiyaDevan15
@Davisri_14
@DeNationS_