விருமாண்டி சூட்டிங்கில் கமல் சார் மாட்டை அடக்கியவுடன்..என்னிடம் "என்னா மைக்ல "சொல்லிட்டாகளா செயிச்சாச்சின்னு..நானும் "ஆமண்ணே சொல்லிட்டாய்ங்க"..என்றதும் கை மண்ணை தட்டி விட்டு நிற்கையில் எழுந்து நின்று மாட்டிடம் குத்து வாங்குவார். அப்போது காயத்திற்கு மருந்தாக சாராயம் ஊற்றுவேன்.
அந்தக் காட்சிக்குப் பின்னர் உதவி இயக்குனர்களிடம் "நாளைக்கு கொம்புல பூவ சுத்தி" பாடலுக்கு ஜிம்னாஸ்டிக் தெரிந்த நாலு பேருக்கு சொல்லிவிடுங்கள் டிரம்ஸ் செட்டுக்கு முன்பாக பல்டி அடிக்க வேண்டுமென்றார்.
நான் ஆர்வ மிகுதியால்.
" சார் எனக்கு ஜிம்னாஸ்டிக் தெரியும்."
நான் ஆர்வ மிகுதியால்.
" சார் எனக்கு ஜிம்னாஸ்டிக் தெரியும்."
.அப்படியா எங்கே பண்ணுங்க"என்றார்..
நானும் காட்ருவீல் கட்டடித்து பேக் டைவ் இரண்டு அடித்து இது ஓகேவா சார்.. மதுரை டிஸ்டிக் லெவல் கோல்டு மெடல் சார்" என்றேன்.
"நல்லாருக்கே..ஆனா இந்த பாட்டுக்கு முன்னால அப்பத்தாவ நீங்க வண்டில கூட்டிட்டுப் போற மாதிரி சீன் எடுத்தாச்சே நீங்க

இருக்க மாட்டீங்களே".
என்று சொல்லவும் நல்ல பாட்டை மிஸ் பண்ணிட்டோமே என்று என் முகம் வாடியதைப் பார்த்தவர் .."இங்க வாங்க என அழைத்துக்கொண்டே கேரவன் போகும்போது
"என்கிட்ட சொன்ன மாதிரி எல்லா இடத்துலயும் போய் பல்டி அடிக்கத் தெரியும்னு சொல்லிடாதீங்க.அப்புறம் எல்லா படத்துலயும் வந்து பல்டி

போடுங்கன்னு சொல்லிடுவாங்க.தமிழ் சினிமால ஐஸ்வர்யா அழகு இருந்தாலும் தங்கச்சி கேரக்டர் நடிச்சி ஹிட் ஆனா அப்புறம் எல்லா படமும் அந்த ரோல்தான் தருவாங்க.இப்டித்தான் நினைத்தாலே இனிக்கும்னு படத்துல மைக் வச்சி பாடி ஹிட்டு.. அதுக்கப்புறம் வர்ற எல்லா படத்துலயும் அதே மைக்
.. செட்டு..கமல் படமா எடுத்து வைடா அந்த மைக்கன்னு ஃபிக்ஸ் ஆயிட்டாங்க.என்னடா இந்த மைக்க விட முடியலியேன்னு ஏங்கறப்போ.. வந்தாரு மோகன்னு ஒருத்தர் புடிங்க இந்த மைக்கன்னு குடுத்துட்டு ஓடியாந்துட்டேன்.அப்புறம் அது முரளி கைக்குப் போயிடுச்சி..எனக்கு நல்லா நடிக்கத் தெரியும்னு யாரும்
என்கிட்ட வித்தியாசமா நடிப்பே வாங்கல.சில படங்கல்ல பாருங்க நான் ஒரே மாதிரி அழுதுருப்பேன்..உங்ககிட்ட சில உடல் மொழி ஒரு காமெடியனோடதா இருக்கு..நல்ல நடிகனாகணும்னு ஆசப்பட்டா ..இன்னோருத்தர் மாதிரி மிமிக்ரி கூட பண்ணிப் பார்க்கக் கூடாது.நம்மள மறந்து அது வெளியே வந்து நம்ம
சுயத்தை மறைச்சிடும்னு.. சொல்லிட்டு தோள்ல தட்டிட்டு போய்ட்டாரு..
இதையேன் சொல்றேன்னா.. வடிவேலு சாரை மேடைகளில் டீவியில் முதல் முதலாக இமிட்டேட் செய்த நடன கலைஞன் நான்தான். கமல் சார் சொன்னதுக்கப்புறம்தான் யோசிச்சேன்... அதுக்குள்ள டீவி ஷோக்கலில் ரூபாய்க்கு பத்து வடிவேலு வந்துட்டாங்க..

காதலுக்கு அப்புறம் நானாகவே திரும்பி வந்துட்டேன்.இன்னும் பேசுவேன்..
இப்போ உங்கள் நண்பனாக
அன்புடன் ~காதல் சுகுமார்
இப்போ உங்கள் நண்பனாக
அன்புடன் ~காதல் சுகுமார்