மத்யமர் என்று ஒரு முகநூல் குழுமம் இருப்பது நம் நண்பர்கள் பலருக்கும் தெரியும்.

அதிலுள்ள அத்தனை பேரும், நம்ம ஸ்லீப்பர் செல் ஆட்களைத்தவிர ஒரே மாதிரிதான் எழுதுவார்கள். அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் 20 வயதாக இருந்தாலும், 60 வயதாக இருந்தாலும் ஒரே மாதிரிதான் பேசுவார்கள்.
1.கலைஞர், அண்ணா, பெரியாரை வசைபாடுவது
2. ஆசிரியர் வீரமணி, சுபவீ ஐயா போன்றவர்களை வசைபாடுவது.
3. திமுக தலைவர் ஸ்டாலின் பற்றிய அவதூறு.
4. பட்டியலினத்திற்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் கொடுக்கும் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது.
5.அவர்களுக்கு மட்டும் இருக்கும் 10% இட ஒதுக்கீட்டை ஆதரிப்பது.
6. இந்தி திணிப்பை ஆதரிப்பது
7. நீட் தேர்வை ஆதரிப்பது.
8. குலக்கல்வித்திட்டத்தை ஆதரிப்பது
9. புதிய கல்விக்கொள்கையை ஆதரிப்பது
10. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும் அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டையும் ஆதரிப்பது.
11. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிறுபான்மை மதத்தவர் மீது வன்மத்தைக் கக்குவது.
12. என்ன நடந்தாலும் மோடி, பாஜகவை விட்டுக்கொடுக்காமல் இருப்பது,
13. அவ்வளவு ஏன், எடப்பாடியை கூட விட்டுக்கொடுக்காமல் இருப்பது.
மேற்கண்ட நிலைப்பாடுகளில் கிட்டத்தட்ட அனைவருமே இந்த நிலைப்பாட்டில்தான் இருப்பார்கள். இதெல்லாம் அவர்கள் சமூக ஊடகங்கள் வந்து கற்கவில்லை. சமூக ஊடகங்களில் இல்லாதவர்களை தனித்தனியாக கேட்டுப்பார்த்தால் கூட ஒருவர் விடாமல் இந்த நிலைப்பாட்டில்தான் இருப்பார்கள்.
அவர்களில் முட்டாள்கள் இருக்கலாம், கோமாளிகள் இருக்கலாம், இருந்தாலும் இதுபோன்று வன்மத்தை கக்குவதிலும் வர்ணாசிரம படிநிலையைக் காப்பதிலும் ஒருவருக்கு கூட வேறு எந்த நிலைப்பாடும் இருக்காது.

இந்த ஒற்றுமையையும் கூட்டு அரசியல் நிலைப்பாட்டையும் தான் நாம் அவர்களிடமிருந்து கற்க வேண்டும்.
இங்கு முற்போக்கு பேசுகிறேன் பெரியாரியம் பேசுகிறேன் என்று நம்ம ஆட்கள் மீதே வன்மத்தை வெறுப்பை கக்கும் முட்டாள்கள்தான் மூடர்கள் அதிகம்.

ஒற்றுமையுணர்விற்கு பதிலாக பொறாமையுணர்வுதான் அதிகம்.

நமக்கான தலைவர்கள் யார், நமக்கான கட்சிகளும் இயக்கங்களும் எது?
ஒவ்வொரு அரசியல் பிரச்சனைகளிலும் நம்முடைய நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கவேண்டும்.

உண்ணுவது போல, உடற்பயிற்சி செய்வதைப்போல, நமக்கு எது நல்லது என்பதையும் தொடர் பரப்புரையாக செய்ய வேண்டும்.சுயமரியாதையுடன் வாழ தொடர் அரசியல் செயல்பாடு அவசியம்.
You can follow @karthickmr.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: