கன்னித்திரை (Hymen)
பெண்களின் பிறப்புறுப்பில் இருக்கும் ஒரு சவ்வு போன்ற அமைப்பு. இதை வைத்துதான் பெண்களின் கன்னித்தன்மை, கற்பு முடிவு செய்யப்படுகிறது.

கன்னித்திரை ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு அளவில் இருக்கும் படத்தில் உள்ளது போல.
முதல் உடலுறவின் போது இந்த சவ்வு கணவனால் கிழிக்கப்பட்டால் மட்டுமே அவள் கற்போடு திருமணம் செய்தாள் இல்லையென்றால் கற்பு இழந்தவள் என கருத்தப்படுகிறது. இந்த இழவெடுத்த சவ்வினால் தான் பெண்களுக்கு எப்பொழுதும் முதல் உடலுறவு வலி நிறைந்த அனுபமாக அமைகிறது.
ஆரம்ப காலங்களில் முதலிரவு முடிந்தவுடன் காலையில் கன்னித்திரை கிழிக்கப்பட்டதால் வந்த ரத்தம் படுக்கையில் உள்ளதா என மாப்பிள்ளையின் அம்மாவால் சோதிக்கப்படும்.
ஆனால் உண்மை அதுவல்ல கன்னித்திரை கிழிய உடலுறவு தவிர நிறைய காரணங்கள் உண்டு. விளையாட்டு வீராங்கனைகளுக்கு , நீச்சல் அடிப்பதால், வேகமாக ஓடுவதால் , சுயஇன்பம் செய்வதால், சைக்கிள் ஓட்டுவதால் என பல காரணங்களால் கன்னித்திரை கிழியும்.
ஆணால் கன்னித்திரை கிழியாமலேயே உடலுறவின் போது கிழிவது போல பெண்ணால் நடிக்கவும் முடியும். அதே போல கன்னித்திரை படத்தில் உள்ளது போல ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்,
சிலருக்கு நிறைய ரத்தம் வரும், சிலருக்கு சுத்தமாக ரத்தமே வராது. ஆண்கள் குருட்டுத்தனமாக ஒரு கற்பிதம் பண்ணிக்கொண்டு இருப்பதற்கு பெண் பலியாகிறாள்.
இப்போது கன்னித்திரை மீட்பு அறுவை சிகிச்சை வேறு நடக்கிறது. திருமணத்துக்கு முன்பு செய்து கொண்டால் எவனாலும் கண்டுபுடிக்க முடியாது. ஆனால் அது முட்டாள் தனமானது. திரும்ப திரும்ப அடிமை வலையில் விழ பெண்களே தேடி போகின்றனர். இங்கு மனதில் தான் மாற்றம் வர வேண்டுமே தவிர உடலில் அல்ல.
கன்னித்திரை கிழியாமல் வேண்டும் என சொல்வதற்கு காரணம் பெண் சுயஇன்பம் கூட செய்யாமல் தன்னிடம் வந்து சேரவேண்டும் என ஆண் நினைப்பதால் தான். இதேபோல ஆணும் சுயஇன்பம் கூட செய்யாமல் தனக்கு வேண்டும் ஒவ்வொரு பெண்ணும் நினைத்தால் எந்த ஆணுக்கும் கல்யாணம் ஆகாது.
இங்கே காதல் தான் வாழ்க்கை என நினைப்பவர்கள் மட்டுமே நிம்மதியாக வாழ்கிறார்கள். மத்தவர்கள் எல்லாம் அரைகுறை வாழ்க்கை தான் வாழ்கிறார்கள்.
You can follow @Kannaki_g.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: