கலையுலகில் கமல் மட்டும் தான் இந்த ரசிகர்களுக்கு இவ்வளவு போதும் என குறைத்து மதிப்பிட்டதே இல்லை.. நேர்மையற்ற முறையில் நம்பகத்தன்மை இல்லாமல் தரம் தாழ்ந்த படங்களை அவர் கொடுத்ததே இல்லை..ஒருபோதும் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத கலைஞன்..!

அது மாதிரி அவர் செய்த கதாபாத்திரங்கள் ஏராளம்..
முதலில் அவர்கள் படத்தில் ஜனார்த்தனன் என்ற கேரக்டர் பொம்மையை(ஜீனியர்) கையில் வைத்துக் கொண்டு அது பேசுவது போல இவரே அந்த பொம்மைக்கு குரல் கொடுப்பார்.. அதே சமயம் பொம்மைக்கு குரல் கொடுக்கும் போது அவர் வாயசைப்பதே தெரியாது.. உதடுகள் திறந்து மூடாமல் வாயில் உள்புறம் தொண்டை வாயிலாக குரல்
இதெல்லாம் அவ‌சிய‌மே இல்லை திரையில் ரசிப்பவர்கள் கண்டா பிடிக்க போகிறார்கள்..??! ஆனால் உண்மையிலேயே இப்படி ஒரு சோதனை முயற்சிகளை செய்ததே உலக நாயகனின் சிறப்பு..

அப்பு கதாபாத்திரம் தொழில் நுட்பம், கிராபிக்ஸ் வசதி இல்லாத நேரம்.. அந்த காலத்திலே அவர் குள்ளமாய் நடித்து தமிழ் சினிமாவை
இந்திய அளவிலும்,உலக அளவிலும் யாரும் செய்ய துணியாத ஒரு கின்னஸ் சாதனை..மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஓரிரு காட்சிகளுக்கு மட்டுமே கேமரா டிரிக்ஸ்.. ஆச்சி மனோரமா விஜய் அவார்ட் நிகழ்ச்சியில் கூட சொல்லுவார்.. ஷூட்டிங்கில் அப்பு காட்சி முடிந்த பிறகு கமலின் கால் கட்டை அவிழ்பார்கள் ரத்தம்
குடுப்பார்..பொம்மைக்கும், தன்னோட கேரக்டருக்கும் சேர்த்து நடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை என ரஜினி அதை கண்டு மலைத்து போனதை #கமல்60 நிகழ்ச்சியில் சொல்லி பார்த்து இருப்பீர்கள்..
அடுத்து இந்திரன் சந்திரன் மேயர் கேரக்டர்.. அதில் கெட்-அப் , நெகடிவ் கேரக்டர், பேச்சு, நடை, உடை, பாவனை அனைத்துமே பயங்கர வித்தியாசம் காட்டிருப்பார் கமல்.. அந்த கேரக்டர் சற்று தொப்பை போட்டு இருப்பார்.. இதை சுலபமாக பொருளை வைத்து நடிப்பிலயே ஏமாற்றலாம் ஆனால் உண்மையிலேயே தொப்பைக்காக
வயிற்றில் ஒப்பனை செய்து கொண்டார் கமல்..

பிறகு அன்பே சிவம் படத்தில் +10 பவர் உள்ள புட்டி கண்ணாடி அதை அணிந்தால் அவ்வளவு தான் மனிதன்.. ஆனால் அதை ஈடு கட்ட -10 பவர் உள்ள காண்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பார்.. பிறகு காலணிகள் ஒன்று குட்டையாகவும், மற்றொன்று உயரமாகவும்..
You can follow @Prashu94Haasan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: