பகவான் #ஸ்ரீகிருஷ்ண #SriKrishna அவதாரங்கள் என்னென்ன என ஸ்ரீமத் பாகவத புராணம் கூறுகிறது. பகவான் கிருஷ்ணர் அவதாரி. அவதாரி என்றால் அனைத்து அவதாரத்திற்கும் மூலம்.
ஸ்ரீமத் பாகவதத்தில் 1.3.5 ல் தெரிந்து கொள்வோம்
1. நான்கு குமார்கள்(சனக, சனாதன, சனந்தன, சனத்குமார-பிரம்மதேவரின் மகன்கள் )
2. வராஹ அவதாரம் (பூமிதேவியை கர்போதக கடலிலிருந்து மீட்டு அசுர ஹிரண்யாக்ஷனை அழித்தவர்)
3. நாரதரிஷி (சக்தியளிக்கப்பட்ட பக்த அவதாரம்-பிரம்மதேவரின் மகன்)
4. நரநாராயணர் (தர்மராஜனின் மகன். தவம் எப்படி செய்யவேண்டும் என கூறியவர்கள்)
5. கபிலர் (தேவஹூதியின் மகன் -சாங்கிய (பௌதிக)
தத்துவத்தை விளக்கியவர்)
6.தத்தாத்ரேயர் (அத்ரி-அனஸுயா தேவியின் மகன்)
7. யக்ஞர் (பிரஜாபதி ருசி-ஆஹூதியின் மகன்)
8. ரிஷப் தேவர் (நபிமஹராஜன்-மேருதேவியின் மகன், பரத மஹராஜரின் தந்தை & ஜைனரின் முதல் தீர்த்தங்கர்)
9. ப்ருதுமஹராஜ் (பாவியான வேனனின் மகன், பூமியிடமிருந்து வவளத்தை கறந்து
பிரஜைகளுக்கு தந்தவர்)
10. மச்ச அவதாரம் (சாக்ஷுஷ மனுவின் காலத்தில் வெள்ளப் பெருக்கிலிருந்து உலகை காத்தவர்)
11. கூர்ம அவதாரம் (பாற்கடல் கடைய மத்துக்குப் பிடிமானமாக இருந்தவர்)
12. தன்வந்திரி (பாற்கடல் கடையும் போது வந்த மருத்துவர்)
13. மோகினி (பாற்கடல் கடையும் போது அசுரரை மயக்க
வந்த பெண் அவதாரம்)
14.நரசிம்ஹ அவதாரம் (பக்த பிரகலாதனை காத்து அசுரன் ஹிரண்யகசிபுவை அழித்த அவதாரம்)
15. வாமன அவதாரம் (கஸ்யபர் அதிதிக்கு அவதரித்தவர், பலி சக்கரவர்த்தியிடமிருந்து இந்திரனுக்கு இந்திர லோகத்தை மீட்டு தந்தவர்)
16. பரசுராமர் (ஜமதக்னி முனிவர்-ரேணுகா தேவியின் மகன். நல்ல
பிராமணரின் அறிவுரை கேட்காமல் அரசாளும் 21 தலைமுறை அரசர்களை அழித்தவர்)
17. வியாசதேவர் (பராசர முனிவர்-சத்யவதியின் மகன். வேதங்களை தொகுத்தவர்)
18. ஸ்ரீராமர் (தசரதன்-கௌசல்யாவின் மகனாக அவதரித்தவர். அசுர்களான இராவணன், கும்பகர்ணனை அழித்தவர்)
19. பலராமன்
20. கிருஷ்ணர் (இதில் பகவான்
கிருஷ்ணன் அவதாரி)
21. புத்தர் (கலியுகத்தில் நம்பிக்கை அற்ற ஆத்திகர்களை தந்திரமாக வழி நடத்தியவர்)
22. கல்கி அவதாரம் (விஷ்ணு யசாவின் மகன்-கெட்ட கொள்ளையர்களை அழிப்பார்)
அவதாரங்கள் 6 வகைகள்
(1) புருஷ அவதாரங்கள் 3 வகை. அவை
1. காரணோதகசாயி விஷ்ணு
2. கர்போதகசாயி விஷ்ணு
3. க்ஷீரோதகசாயி விஷ்ணு.
காரணோதகசாயி விஷ்ணு தனது உடலில் உள்ள மயிர் துளையின் மூலமாக கோடானுகோடி பிரபஞ்சங்களை வெளியே விடுகிறார்.
கர்போதகசாயி விஷ்ணு ஒவ்வொரு அண்டத்திலும் இருக்கிறார். இவரது நாபியில் இரேழு 14 உலகங்களை வைத்துள்ளார். க்ஷீரோதகசாயி விஷ்ணு பூமண்டலத்தில் உள்ள 7 கடலில் 5 வது
கடல் பாற்கடல். இதில் வசிக்கிறார். இவர்தான் பரமாத்மாவாக இருக்கிறார்.
ஸ்வாயம்புவ மனு சதரூபையின் மகன் ப்ரியவ்ரதனுக்கு 10 பிள்ளைகள் பிறந்தார்கள். இதில் 3 பேர் ராஜ்ஜியம் வேண்டாம் என்றதால் 7 பிள்ளைகளுக்குப் பூ மண்டலத்தை 7 தீவாக(த்வீபமாக) பிரித்தார். 7 த்வீபத்தில் நடுபகுதி ஜம்புத்வீபம்
நாம் உள்ள பகுதி. (7த்வீபத்தில் 7 கடல்கள் உள்ளன முதல் கடல் உப்பு கடல். உப்பு கடல் கரும்பு சாறு கடல் இதற்கு இடைப்பட்ட தூரம் 2லட்சம் யோஜனை தூரம். கரும்புசாறு கடல், கள் கடல் இதற்கு இடைப்பட்ட தூரம் 4லட்சம் யோஜனை தூரம். கள்கடல் நெய் கடல் இதற்கு இடைப்பட்ட தூரம் 8லட்சம் யோஜனை தூரம்.
நெய்கடல் பாற்கடல் இதற்கு இடைப்பட்ட தூரம் 16லட்சம் யோஜனை தூரம். பாற்கடல் தயிர் கடல் இதற்கு இடைப்பட்ட தூரம் 32லட்சம் யோஜனை தூரம். தயிர் கடல் சுத்த நீர் கடல் இதற்கு இடைப்பட்ட தூரம் 64லட்சம் யோஜனை தூரம்.
இந்த பூமண்டம் அனைத்தையும் ஆதிசேஷன் தன் தலையில் தாங்குகிறார். பூலோகத்திற்கும்
ஆதிசேஷன் தலைக்கும் இடைப்பட்ட இடைவெளி 30000 யோஜனை. (ஒருயோஜனை என்பது 8 மைல்)
(2) லீலா அவதாரம் மேலே பார்த்த 25 அவதாரங்கள்
1. நான்கு குமாரர்கள்
2. நாரத முனி
3. வராஹ
4. மத்ஸ்ய
5. யக்ஞ
6. நர நாராயண
7. கர்தமி கபில
8. தத்தாத்ரேய
9. ஹயக்ரீவ
10. ஹம்ஸ
11. த்ருவப்ரிய/ப்ருஷ்னிகர்ப (த்ரேதா
யுகம்-ப்ருஷ்னிதேவி, பிரஜாபதி சுதபவின் மகன்)
12. ரிஷபதேவர்
13. ப்ருது மஹராஜ்
14. நரசிம்ம
15. கூர்ம
16. தன்வந்திரி
17. மோஹினி
18. வாமன
19. பார்கவ பரசுராம
20. ராகவேந்திர (ராம)
21. வ்யாச தேவ
22. ப்ரலம்பரி பலராம
23. கிருஷ்ண
24. புத்தர்
25. கல்கி
(3) குண அவதாரம் (3 வகை)
சத்ய
குணத்திற்கு பகவான் விஷ்ணு, ரஜோகுணத்திற்கு பிரம்மதேவர், தமோகுணத்திற்கு சிவபெருமான் அதிபதிகள்.
(4) யுக அவதாரம் 4 வகை.
1.சத்ய யுகம் - வெள்ளையாக சுக்ல, கபில அவதாரம்.
2. த்ரேதா யுகம் - சிவப்பாக யக்ஞ
3. துவாபர யுகம் - கருப்பாக கிருஷ்ணர்
4. கலியுகம்- மஞ்சளாக பகவான் சைதன்ய மஹாபிரபு
(பக்த அவதாரம்)
(5) மந்வந்திர அவதாரங்கள் 14 வகை.
1. ஸ்வாயம்புவ மனுவாக யக்ஞ
2. ஸ்வாசோசிஷ மனுவாக விபு
3. உத்தம மனுவாக சத்யசேன
4. தாமஸ மனுவாக ஹரி (கஜேந்திரனை முதலையிடமிருந்து காத்தார் ஹரி அவதாரம்)
5. ரைவத மனுவாக வைகுண்ட
6. சாக்ஷு மனுவாக அஜித (பாற்கடல் கடையும் போது மந்திரமலையின் மேலே
இருந்து தனது ஆயிரம் தோள்களால் தாங்கியவர்)
7. வைவஸ்வத மனுவாக வாமன (தற்போதைய மனு)
8. சாவர்ணி மனுவாக சார்வபௌம
9. தக்ஷ-சாவர்ணி மனுவாக ரிஷபதேவ
10. பிரஹ்ம -சாவர்ணி மனுவாக விஷ்வக்ஸேன
11. தர்ம-சாவர்ணி மனுவாக தர்மஸேது
12. ருத்ர-சாவர்ணி மனுவாக சுதாம
13. தேவ-சாவர்ணி மனுவாக யோகேஸ்வர
14. இந்தி -சாவர்ணி மனுவாக பிருஹத்பானு
(6) ஆவேச அவதாரம்.
இதில் இரண்டு பிரிவு உண்டு.
1. ஆவேச அவதாரம்
பகவான் கிருஷ்ணர் தானே குறிப்பிட்ட செயலுக்காக தோன்றும் அவதாரம்.
1.கபிலதேவர்
2. ரிஷபதேவர்
(2) சக்தி ஆவேச அவதாரம்
7 நபர்கள். பகவான் கிருஷ்ணர் தானே ஒரு மனிதனின் உடலில் சக்தி மட்டும்
அளித்து குறிப்பிட்ட செயலுக்காக தோன்றும் அவதாரம்.
1.ஷேச நாக(ஸ்வ சேவன சக்தி)
2. அனந்த தேவி(பூ தார சக்தி)
3. ப்ரம்ஹ்மா(ஸ்ருஷ்டி சக்தி)
4. நான்கு குமாரர்கள் (ஞான சக்தி)
5. நாரத முனி (பக்த சக்தி)
6. ப்ருது மஹராஜ் ( பாலன சக்தி)
7. பரசுராம(துஷ்ட தமன சக்தி)
நம் இந்து மதம் சனாதன தர்மம். நம் மதத்தைப் பற்றி தெரிந்துகொள்ள பல நூல்கள் எல்லா மொழிகளிலும் உள்ளன. நமக்கு ஆர்வமும் உழைப்பும் தான் தேவை. மேலும் தெரிந்து கொள்ள பாகவத மகா புராண நூல் உதவும்.
You can follow @anbezhil12.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: