"விஸ்வரூபம் - சில நுணுக்கங்கள்"

பல பிரச்சனைகளுக்கு பிறகு வெளிவந்த படம்.இந்த படத்தை ஆடியோ MUTE பன்னிட்டு பார்த்த ஹாலிவுட் படம் பாக்கிற மாதிரியே இருக்கும்.மனுஷன் மட்டும் அரசியலுக்கு வராம இருந்திருந்தா இது மாதிரி படைப்புகள் நிறைய பாத்திருக்கலாம்.
🔥 தலைப்பு வரும் காட்சியில் ஒருவர் புறா ஒன்றை பறக்க விடுவார்.அதை உற்று பார்த்தால் அதன் கால்களில் ஒரு சிறிய குண்டு கட்டப்பட்டிருக்கும்.அது பறந்து கடைசியாக நிருபமா இருக்கும் இடத்தை வந்தடையும்.இதிலிருந்து நிரும்பமாவுக்கும் கதைக்கும் இருக்கும் முக்கியத்துவத்தை மறைத்து எழுதியுள்ளார்.
🔥 முதல் காட்சியில் உளவியலாளரை(psychologist) நிருபமா சந்திக்கும் போது, “PLEASE TALK ME ABOUT PHD” என்று கேட்கிறாள், மேலும் அவள் “YOUR PHD” என்று கூறுகிறாள் - இதிலிருந்து விஷ் ஒரு Phd பெற்றிருக்கலாம் என்பதை இது மறைமுகமாக தெரிவிக்கிறது.
🔥 நிருபமா விஸ்வநாத்தை“விஸ்”என்று அழைக்கிறார்,அவள் அவரை விஸ்வநாத்தின் குறுகிய வடிவம் என்று கருதி அழைக்கிறாள்,இது உண்மையில் விசாமின் குறுகிய வடிவம் விஸ்வநாத் என்ற பெயரை வேண்டுமென்றே விசாம் தேர்ந்தெடுத்துள்ளார், இதனால் அவரது உண்மையான பெயரால் அழைத்தாலும் சிக்கலில் மாட்டமாட்டார்.
🔥 ஒரு பெண்மை கலந்த ஆண்மையை முழு கதக் நடனக் காட்சிகளில் கமல் வெளிப்படுத்திகிறார்,பல இடங்களில் அவர் இந்த தன்மையை வெளிப்படுத்திகிறார்.
🔥தொலைபேசியை எடுக்கும்போது, அவர் எப்போதும் ”Mrs. and Mr. Vishwanath’s residence” என்றே குறிப்பிடுவார்.அதன் விரிவாக்கமாக, இறைச்சியை சமைக்கும் போது “மனாலனே மங்கையின் பாக்யம்”க்கு மாறாக “மணவாட்டியே மணாளனின் பாக்கியம்” என்று குறிப்பிடுவார்.
🔥"உன்னை காணாது"பாடலில்”,2 ஷாட்கள் வரும்-ஒன்று கண்ணாடியின் மறுபக்கத்திலிருந்து மற்றொன்று சிறிது தூரத்திலிருந்து-2 நிகழ்வுகளிலும், ஆடியோவின் சத்தம் குறையும், எதார்த்தமா இருக்கும்."விதை இல்லமால் வேர் இல்லையை" என்ற வரியின் போது, தனது விரல்களால் DNA கட்டமைப்பை காட்சிப்படுத்துவர்.
🔥 விஸ் இல்லத்தில் இரண்டு பக்கம் கொண்ட சிலையை நாம் காணலாம்,ஒரு பக்கம் ராஜாவாகவும்,மறுபுறம் ராணியாகவும் காட்சிஅளிக்கும் இதை உன்னை காணாது பாடலில் கண்ணாடியில் வாயிலாக இரண்டு பக்கத்தையும் நாம் காண முடியும்
🔥 திரைப்படத்தில் காட்டப்படும் காலம் குளிர்காலம்,அதை நேர்த்தியாக அணைத்து இடத்திலும் குறிப்பிட்டுருப்பார்.விஸ் வீட்டின் ஜன்னல் பனியாக இருக்கும்,பயிற்சிக்குப் பிறகு பெண்கள் தங்கள் ஜெர்கின்ஸ் எடுத்து செல்வார்கள் அதே காட்சியில்,பெண்கள் வெளியேறும் போது கதவை மூடிட்டு போக சொல்வார்,
🔥 தீபக் விஸ் வீட்டில் இருக்கும்போது அங்கு வரும் கமல் குளிரில் உறைந்து வருவார்.எல்லா கதாபாத்திரங்களும் குளிர்கால துணிகளை அணிந்துகொள்கின்றன,கிடங்கில் இருக்கும் நோயாளிகள் விஷ் மற்றும் நிரு உள்ளே வரும்போது கதவை மூடச் சொல்கிறார்கள்.எந்த காட்சியும் படத்துல் திணிக்க படவில்லை.
🔥 தௌபிக் அறிமுக காட்சியில்,ஓபியம் செடிகளை நாம் காணலாம்.அதிலிருந்து அபின் என்னும் போதை பொருள் தயாரிக்கப்படுகிறது.அதை கமலுக்கு கொடுப்பார்.ஆப்கானிஸ்தான் ஓபியத்தின் மிகப்பெரிய சட்டவிரோத உற்பத்தியாளர்களில் ஒன்றாகும் .
🔥 ஜிஹாதி நடவடிக்கைகளுக்கான நிதி ஆதாரங்களில் போதைப்பொருள் ஒன்றாகும்.இந்த பணம் நைஜீரியா, யேமன் போன்ற குறைந்த கண்காணிப்பு நாடுகளின் வழியாக பெறப்படுகிறது.பின்பு அமெரிக்காவில் மறைத்து வைக்கபடுகிறது.அப்படி தீபக் தனது கம்பெனியில் பணத்தை மறைத்து வைத்து இருப்பதை கமல் கண்டுபுடிப்பார்.
🔥 கர்னல் வரும் ஆரம்ப காட்சியில்,அஸ்மிதா விஸிடம் “நிருபமா டின்னர்கு வரமாட்டானு "ஆகாஷ்வானி" சொல்லிச்சா?”என்று கேட்கிறாள்.விஸ்“EXACTLY” என்று கூறுகிறார், இதிலிருந்து அவர்கள் நிருபமாவின் அலுவலகத்தைக் ரேடியோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உளவு பார்க்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது;
🔥 டாக்கின்ஸ் “Hope it doesn’t turn out to be a wet job tomorrow” என்று கூறுகிறார்.இரகசிய சேவையில் (CIA/MI6) விதிமுறைகளில்,"WET JOB"என்றால் கொலை செய்வது.டாக்கின்ஸ் கிளம்பும்போது கமலை அவர் பார்த்து, “Goodnight Cuckold“ என்பார்.
🔥 இந்த வார்த்தையின் அர்த்தம்"கணவனை ஏய்த்தொழுகுதல்", பெரும்பாலும் கேலிக்குரிய பொருளாகக் கருதப்படுகிறார்.’ நிரு விஸ்ஸை ஏமாற்றுகிறார் என்று எல்லோரும் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்பதற்கு இது மற்றொரு குறிப்பாகும்.
🔥 WAREHOUSE,காட்சியில்,அவரது பெயரைக் கேட்டபோது,விசாம் தன் பெயரை “தோபிக்”மற்றும்“நாசர்”என்று சொல்கிறார். இவை அவரது கடந்த காலத்திலிருந்து வந்த பெயர்கள்,அவர்களுடைய மரணத்திற்கு தான் காரணம் என்று கருதுகிறார், குற்ற உணர்ச்சி ஆழமாக இருந்ததால் அவர்களின் பெயரை உடனடியாக நினைவு கூர்ந்தார்.
🔥 ஃபாரூக் விசாமின் முகத்தின் மீது அடிக்க முயற்சிக்கும்போது விசாமின் பற்களால் விரல் மூட்டுல்(KNUCKLES) காயப்படுகிறார்.கையில் துப்பாக்கியை புடிக்க முடியாமல் புடித்து கொண்டு இருப்பார்.இதனால் சன்டைக்காட்சியில் விசாமை சரியாக சுடமுடியமால் போனது.
🔥 சண்டைகாட்சி முடிந்தபின் விசாம் நிரூபமாவிடம் 2 குண்டு சத்தம் கேட்டபின் 10 வரை எண்ணுமாறு சொல்வார்,எண்ணிமுடித்தபின் காரில் கிளம்ப சொல்வார்.நிரு குண்டு சத்தம் கேக்கும்போதே ஒன்று என்று எண்ண ஆரம்பிப்பித்துவிடுவர்.அதும் மிக வேகமாக.இதில் அவரின் பதட்டநிலையை அழகாக படம் பிடித்திருப்பார்.
🔥 உமரின் மனைவிக்கு சிகிச்சையளிக்க டாக்டர் கிளாரா வரும் காட்சியில்",Medisin sans frontiers" என்ற சொற்களைக் காணலாம்.ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த பிரெஞ்சு வார்த்தையின் அர்த்தம், “மருத்துவர்கள் இல்லாத எல்லை” என்று பொருள்தரும்
🔥 ஓமர்,நாசரின் கண்ணை கட்டி ஆயுதங்களை தொட்டு பார்த்து கண்டுபுடிக்க சொல்லுவார்.அப்போது NATO தாக்குதலை தொடங்கியிருக்கும்.உமர் உடனே சலீமுடன் சென்றுவிடுவார்.உமரின் மனைவி ஓடிவந்து நாசரின் கண்கட்டை அவிழ்த்துவிடுவார்.இதில் தாய் தந்தை இருவரின் வேறுபட்ட அன்பு முன்வைக்கப்படுகிறது.
🔥 விசாம் தீபக் ஆய்வகத்திற்கு செல்லும் காட்சியில்,நிரு "LEFT"னு வழி சொல்லுவார்,விசாம் “YA I KNOW” என்றும் கூறுகிறார்,இதிலிருந்து விசாம் குழுவால் இந்த இடம் வீடியோ கண்காணிப்பைக் கொண்டிருப்பதை மிகத் தெளிவாகக் காட்டுகிறது.
🔥 ஃபாரூக் பீட்டரைத் தாக்கிய பிறகு, ஒரு நீண்ட "FOGHORN" கேட்கிறோம், எனவே WAREHOUSE கடலுக்கு அருகில் இருக்க வேண்டும். டாம்க்கு(FBI) WAREHOUSE இருப்பிடத்தை விசாம் காண்பிக்கும் போது, வரைபடத்தில் அது உண்மையில் கடலுக்கு அருகில் இருப்பதைக் காண்கிறோம்.
🔥 குழந்தைகள் ஆயுத விற்பனை கடையில் தோட்டாக்களை எடைபோடுகிறார்கள்.அங்கு மிகவும் பழைய திரைப்பட சுவரொட்டியைக் நாம் காணலாம்- இங்கு பொழுதுபோக்கு எவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது..
🔥 மருத்துவர் கிளாரா(American) இறந்து கிடக்கும் காட்சியில்,ஒரு சிறுவன் இறந்து கிடப்பதைக் காண்கிறோம்,விசாம் அவனது கையிலிருந்து துப்பாக்கியை அகற்றுவார். அடுத்து,அவர் மருத்துவரை காண்கிறார் சுற்றியுள்ள அனைவருமே மோசமாக காயமடைந்து குண்டுவெடிப்பிலிருந்து இறந்து இருக்கும் வேளையில்,
மருத்துவர் தனது நெற்றியில் குண்டு பாய்ந்து இறந்து இருப்பார்.தனது குடும்பத்தில் யாரோ ஒருவர் அமெரிக்கர்களால் கொல்லப்பட்டதற்கு பதிலடி என்று அந்த சிறுவன் உண்மையில் மருத்துவரை சுட்டுக் கொன்றிருக்கலாம்.குழந்தைகள் மனதில் தீவிரவாதம்!!
ஒசாமா பின்லேடனைப் பிடிப்பதே விசாமின் குறிக்கோள் ஆகும் தோபிக் வரும் நாளுக்கு முன்பு, ஒமர் விசாமிடம் ஒரு உயரமான ஷேக் வருவதாகக் கூறுகிறார்,ஒசாமாவைப் பற்றி விசாம் எப்போதுமே விசாரிப்பதைக் காணும்போது டிராக்கரின் மூலம் ஒசாமாவை வெளிப்படுத்தும் முயற்சி என்பது தெளிவாகத் தெரிகிறது;
விசாம், நிருபமா, ஜாக் மற்றும் அஷ்மிதா ஆகியோர் அடித்தளத்தில் நுழையும்போது, பக்க சுவரில் வாமன அவதாரத்தின் புகைப்படத்தைக் காணலாம். புராணங்களில் விஸ்வரூபத்திற்கு பெயர் பெற்ற விஷ்ணு அவதாரம்.
க்ளைமாக்ஸில் "farady shield" என்ற கருத்தை பற்றி கூறுவார்கள். வெடிகுண்டு தொலைபேசியில் அழைக்கப்பட்ட அழைப்பின் மூலமாகவோ வெடிக்கப்படலாம்.விமானத்திற்குள் இருக்கும்போது வெடிக்க வைக்க முயற்சிக்கிறார்.அதன் மேல் "microwave" பொறுத்திவிடுவார்கள்.(faraday cage) விதிப்படி செயல் இழந்து விடும்.
எளிமையாக சொல்லப்போனால் அது ஒரு "jammer" மாதிரி,அதில் சுத்தி இருக்கும் shield வெளியில் இருந்து வரும் "electric maganetic interfernce" தடுக்கும்.அதான் செல்போன் signals கிடைக்கில.
“எழுத்து பிழை ஏதும் இருந்தால் மன்னிக்கவும்”.
The faraday cage is an enclosure used to block the external electric fields in conductive materials."Microwave ovens: mechanism used is based on Faraday cage such that the electromagnetic energy within the oven is contained and the exterior is a shield from radiation."
இந்திய சினிமா வரலாற்றில் கமல்ஹாசன் என்ற நடிகருக்கு தவிர்க்க முடியாத இடம் உள்ளது.ரசிகனின் ரசனையை வேறு தளத்துக்கு எடுத்து சென்றதில்,கமல் மாதிரி கலைஞனை இது வரை நான் கண்டது இல்லை. சந்தானம் சொல்லற மாதிரி "நல்லவங்க கருத்து ரீச் ஆகும், ஆனா என்ன கொஞ்சம் லேட்டா ரீச் ஆகும்" @devarkamal
You can follow @karthi_Nan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: