சற்றே நேரம் ஒதுக்கி இது பத்தி பதிவு பண்ணனும்ன்னு விரும்பறேன். ஏன்னா இதைத்தாண்டிய கேமரா நடிப்பு எடிட்டிங், எக்ஸ்பிரஷன்ஸ் எல்லாம் கச்சிதமா வொர்க் அவுட் ஆகுற, கொஞ்சம் கூட மெலோடிராமா இல்லாம எமோஷனலி கனெக்ட் ஆகுற சீன் தமிழ்ல வருமான்னு எனக்கு தெரியலை.
கமல் தன் கேன்சரை பத்தி குடும்பத்துக்கு சொல்ல குரு கேபியோட வீட்டுக்கு வர்றார். கார்விண்டோ திறந்து பையனுக்கு கை காட்டினா, பையன் ஃப்ரெண்டை திட்டுறாப்ல “Really stupid I tell you"ன்றான்.
ஒரு நார்மலான சீன், @.24ல கமல்+கேபியின் சிறு பார்வை பரிமாற்றத்துல extraordinaryஆ மாற துவங்குது.
ஒரு நார்மலான சீன், @.24ல கமல்+கேபியின் சிறு பார்வை பரிமாற்றத்துல extraordinaryஆ மாற துவங்குது.
கேபியும், கேவிஸ்வநாத்தும் கோர்ட்கேஸ் வரை போனவங்க ரொம்பநாள் கழிச்சு சந்திக்கிறாங்க. கேபியே ஐஸ்ப்ரேக் பண்றார் “சாரி ரொம்ப திட்டிட்டேன்”ன்னு. அதுக்கு கேவி ’நானும் திட்டிருகேனே’ன்னு முடிச்சிக்கிறார். ஆனா convo தொடரனுமே. கேபி lighter veinல அவரே BP டாபிக் கொண்டு வர்றது வெகு இயல்பு

அதுக்கும் கேவி கடுகடுன்னு “என் பொண்ணு பிபி விட என் பிபி பரவால்ல”ன்னுட்டு விஷயத்துக்கு வாங்கங்கிறார். அப்ப கேபி “நீயே சொல்லிடேன்”ன்னு குடுக்கிற ரியாக்ஷன். இந்த சீன்ல தொடர்ச்சியா கேபி தானும் கமலுக்கு இணையான நடிகன்னு நிரூபிசிட்டே வருவார், இல்ல அப்படி கமல் வேலை வாங்கிருக்கார்.

ஆச்சா, இப்ப கமல் தன் கேன்சர் பத்தி மெல்ல ஆரம்பிக்கிறார் “நான் ரொம்பநாள் இருக்கமாட்டேன்”ன்னு. கேவிக்கு அவர் வயசுக்கு சட்னு புரிஞ்சுது ஏதோ தப்பா போகுதுன்னு. இதுக்கு நடுவுல இந்த கேவி, கமல் இருவர் சஜசன் ஷாட்லயும் பின்னால வைக்கப்படிருக்கிற நிஜ இளமைப்புகைப்படங்களின் டீடைலிங் அட்டகாசம்.
கமல் ஆரம்பித்தவுடன் கேவி அடையும் அதிர்ச்சிக்கு கட்டியமா க்ரிக்கெட் பந்து சொத்துன்னு கிட்சன்ல விழுது. இந்த சீன் முழுக்கவே கிரிக்கெட் பால் ஒரு அங்கமாவே வருது. கே.விஸ்வநாத் மனைவி கிட்சன்ல உட்கார்ந்திருக்கிறது பக்கா பணக்கார வீடுகள்ள பெருசா வேலையில்லாத முதலாளியம்மா தோரணை.
கிச்சன் உள்ள விழுந்த ball-ஐ எடுத்துவெச்சுட்டு சுந்தரத்தெலுங்கான தமிழ் அக்செண்ட்ல அந்த பாட்டி “தாத்தா செருப்பு பார்த்திருக்க இல்ல”ங்கிறாங்க. தன் அப்பாவை இன்னொருத்தர் முன்னாடி எடுத்தெறிய தயங்காத பேரனுக்கு தாத்தான்னா பயமுண்டுன்றது, கேவிஸ்வநாத் கேரக்டரை இன்னமும் எஸ்டாப்ளிஷ் பண்ணுது.
இந்நேரத்துல கமல் தன் கேன்சர், கேவி செய்த துரோகம் etc சொல்லிமுடிச்சிருப்பாருன்னு புரியறமாதிரி, கேவி தன் மாப்பிள்ளை கால்லயே விழ ட்ரை பண்ணுவார். இது மெலோடிராமா ஆகிருக்கனும். ஆனா “இந்த Rheumatism"ன்ற ரைட்டிங், ரொம்ப மைல்டான பிஜிஎம்ல ஆகாம தடுத்திருப்பார் டைரக்டர் கமல்.
இப்ப கமல் பையன் ஃப்ரேம்குள்ள எண்ட்ரி. ஏதோ அப்நார்ம்லன்னு உடனே ஸ்மெல் பண்ணி “வாட்ஸ் ஹேப்பனிங்”பான். அவனுக்கேயுரிய அக்செண்ட்ல “இன்னொரு பொம்ப்ளேக்காக அம்மாவ ‘வ்ட்டுர’போறீங்களா”ம்பான். இந்த படத்துல spot on castingன்னா இந்த பையன். அவன் தமிழ் பெரிய நம்பகத்தன்மை குடுக்கும் கேரக்டருக்கு
அந்த பையன் அப்படி திடீர்ன்னு கேட்டோன்ன அதுவரை சீன்ல வராத டாக்டர் அர்ப்பனா (ஆண்டிரியா) கேரக்டரை ஒரு ஸ்பிளிட் செகண்டுக்கு கமல் காட்டுவார். கில்ட்டி கான்சியஸ்னெஸ், கமல் என்ன சொல்வாரோன்னு ஒரு மௌனசாட்சியாய் ஆண்ட்ரியா பார்க்கிறது சான்சேயில்ல.
இப்ப தாத்தா பேரனை “போடா வெளில”ன்னு திட்ட, மேலும் ரசாபாசம் ஆகாம தடுக்க, கமல் “மனோகர் வா”ன்னு வெளில கூட்டிட்டு போவார். அப்ப ஒரு நொடி மனோகர் ஆண்ட்ரியாவை ஏறிட்டு பார்ப்பான். அதுல “எனக்கு எல்லாம் தெரியும்”, கோபம் எல்லாமே இருக்கும். அதுக்கு ஆண்ட்ரியா ஹெல்ப்லஸா ஒரு ரியாக்சன் தருவாங்க.
கேவிக்கு அடுத்து அந்த பாட்டிக்கு தெரியனும். ஆனா படத்துக்கோ சீனுக்கோ அது முக்கியமல்ல. அந்த பாட்டி வந்தோன்ன “கூச்சோ”ன்னு சொல்லி அதை கமல் ஷார்ட்டா முடிச்சிருவார்.
இப்பதான் சீன் கசலுக்கு வருது. கமல் பையனை கூட்டிட்டு வெளில வர்றார். க்ரிக்கெட்பாலை வெச்சு ஒரு wordplay ஆரம்பிக்கும்.
இப்பதான் சீன் கசலுக்கு வருது. கமல் பையனை கூட்டிட்டு வெளில வர்றார். க்ரிக்கெட்பாலை வெச்சு ஒரு wordplay ஆரம்பிக்கும்.
ஆங்கிலத்துல “playing hardball"ன்னு முரண்டு பிடிக்கிற ஆசாமி/சிச்சுவேசனை குறிக்கும் ஒரு idiom உண்டு. க்ரிக்கெட்பாலை அப்படி உபயோகிச்சிருப்பார். வேகமா வர்ற பந்தை பிடிச்சு “Easy நான் சின்னப்பையன்ப்பா”ம்பார் கமல். அதுக்கும் snub பண்ணுவான் “அதான் தெரியுதே, அம்மாவ விட்ர போறீங்களா”ன்னு
இப்பதான் கமலுக்கும் தன் சுயம் கொஞ்சம் தலைதூக்கி “You wanna play rough? Am dying"ன்னு போட்டு உடைப்பார். ஒரு ஸ்ப்ளிட் செகண்டுக்கு ஷாக்காவான். ஆனா உடனே சுதாரிச்சு “குடிச்சு குடிச்சு லிவர் சிரோசிஸா, குடிக்கிறத நிறுத்து சாகமாட்ட”ன்னு இன்னொரு யார்க்கர் பாலை இறக்குவான்.
அப்ப கமலுக்கு அவர் சுயம் இன்னமும் பொங்கிரும். குடிப்பழக்கம் உள்ள ஒருவர்கிட்ட அதை குத்திக்காமிச்சா, It's like pushing their buttons. கமல் “லிவர்ல்லாம் நல்லாதான் இருக்கு”ன்னு ஒரு instinctive retort குடுத்துட்டு வியாதி பேரை சரியா சொல்ல ஒரு sec யோசிக்கிறது,பக்கா கமல் ஸ்கூல் நடிப்பு.
வியாதி பேர் சொன்னவுடன் ”What's that in English"ன்னு மனோகர் கேட்கறதும் நேரடி பொருள்ள எடுத்துக்கக்கூடாது. ”எனக்கு புரியறாப்ல சொல்லு”ன்னு நக்கலா கேட்கறான். கமல் எனும் டைரக்டர் “ப்ரெய்ன் ட்யூமர், தமிழ்ல சொன்னா மூளைல கட்டி”ன்னு ஆடியன்ஸ்க்கும் சேர்த்து அதுக்கு அருஞ்சொற்பொருளிருவார்.
இப்ப மனோகர் டோனே மாறிடும். ஓடிப்போய் பந்தை எடுப்பான், வெயில்ல நிக்கலாமா, உள்ள போயிடலாமான்னு பதறுவான். சீன் இன்னொரு ஃப்ரேமுக்கு ஒரு porch மாதிரி இடத்துக்கு மாறும். கமல் என்ன பண்ணப்போற, லா படிக்கப்போறேன்னியேன்னு கேட்பார். உங்களுக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்கான்னு நெருங்கி வருவான்.
என்ன பண்ணப்போறங்கிறதுக்கு ரைட்டிங் படிக்கனும், அப்பாவுக்கு ஸ்க்ரிப்ட் எழுதி கோடம்பாக்கத்துக்கு என் அப்பாவை யாருன்னு காட்டனும்பான். கமல் ஜெண்டிலா அதுக்குள்ள தான் இருக்கமாட்டேன்ன்னு imply செய்வார். மத்தவங்கள்ளாம் என் அப்பா இல்லையேன்னவுடன் வரும் பிஜிஎம், கமலின் முகபாவங்கள்

இதற்கு பிறகு இக்காட்சியில் திரையில் விரியும் உணர்வுகளுக்கு வார்த்தையில்லை. அப்பாவின் முன் அழக்கூடாதென நினைக்கும் மகனை அணைத்து, அந்த தருணத்துக்கு இடைஞ்சலாய் M.S.பாஸ்கர், பிறகு ‘தலைவா அவார்ட் கன்ஃபர்ம்’ என இங்கிதமில்லாது கத்தும் ரசிகர்கள் எல்லாம் சமாளித்து சமாதானப்படுத்துவார் கமல்.
ஒரு நாடகத்தின் உச்சகட்ட காட்சிபோல பின்னணியில் அதிரும் இசையோடு,”But why you" எனும் மகனிடம் “எல்லாருக்கும் இது உண்டுப்பா, Even you my baby, Everybody dies" என ஆற்றுப்படுத்தி, அமைதியாய் இந்த லாங்ஷாட்டோடு இக்காட்சி முடியும்.
Kamal is the most underrated Director of our time. Dot.
Kamal is the most underrated Director of our time. Dot.
சிலர் உத்தமவில்லன் டைரக்டர் ரமேஷ் அரவிந்த் என சுட்டிக்காட்டுகிறார்கள். அது அஃபிசியலி, பொலிடிக்கலி கரெக்ட் தான். அப்படிப்பார்த்தால் ஒருதலைராகம் ஈ.எம்.இப்ராஹிம் படம், துள்ளுவதோ இளமை கஸ்தூரிராஜா படம், இது நம்ம ஆளு பாலகுமாரன் படம். உங்களுக்கு தோதுபட்டது வெச்சுக்கங்க.