Thread :: தேசியகீதம்

1947, ஆகஸ்ட் 14 ஆம் நாள் இரவு. கடிகார முள் 11.59யைக் கடந்து 12.00 மணியை அடைந்தது.  சுதந்திரக் காற்று இந்தியா முழுவதும் வீசத் தொடங்கி, ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் சுவாசக் குழலையும் ஈரப்படுத்தியது.
நாடாளுமன்றத்தில் கூடியிருந்த அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களுக்கு மத்தியில்

‘சாரே ஜஹான்சே அச்சாஹ், ஹிந்துஸ்தான் ஹமாரா

ஹம் புல்புல்ஹேன் இஸ்கி, ஏ குல்ஸிதான் ஹமாரா..’

என்று பாடிய பாடல் இந்தியாவின் சுதந்திரத்தை பிரகடனம் செய்தது.
ஆம், சுதந்திர இந்தியாவில் தேசிய கீதமாய் முதன் முதலில் ஒலித்தது அல்லாமா முஹம்மது இக்பாலால் எழுதப்பட்ட, புகழ்பெற்ற இப்பாடலே…

தற்போது இந்தியாவின் தேசிய கீதமாக இருக்கும் ‘ஜன கண மன’ என்னும் பாடலுக்கு சென்ற டிசம்பர் மாதம் 27ஆம் தேதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுவிட்ட நிலையில்,
இந்தியாவின் தேசிய கீதம் உருவான வரலாற்றை கொஞ்சம் தெரிஞ்சுக்குவோம்வாங்க 🚶...

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்குப் பின்னர் தேசிய கீதத்தை தேர்ந்தெடுக்கும் பொருட்டு மூன்று பாடல்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

1.இரவீந்திரநாத் தாகூர் எழுதிய, ‘ஜன கண மன…’
2.பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய, ‘வந்தே மாதரம்’

3.அல்லாமா முஹம்மது இக்பால் எழுதிய,  ‘சாரே ஜஹான்சே அச்சா’

இம்மூன்று பாடல்களின் பின்னணியை முதலில் பார்க்கலாம்.

1.காங்கிரஸின் எதிர்ப்பால் வங்கப் பிரிவினையை திரும்பப் பெற்று, உத்தரவு பிறப்பித்த மன்னர் ஐந்தாம் ஜார்ஜை வரவேற்கும்
பொருட்டு 1911 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் எற்பாடு செய்யப்பட்டிருந்த காங்கிரஸின் மாநாட்டின் இரண்டாவது நாளான டிசம்பர் 27 அன்று  ‘ஜன கண மன’ பாடல் முதன் முதலாகப் பாடப்பட்டது.

2.1882 ஆம் ஆண்டு பக்கிம் சந்திர சாட்டர்ஜி என்னும் வங்காள எழுத்தாளர் ‘ஆனந்த மடம்’ என்னும் நாவலை வெளியிட்டார்.
காளி என்னும் தெய்வத்தின் பக்தர்கள் சுதந்திர தேவியை காளியாகவும், காளியை சுதந்திர தேவியாகவும் பாவித்து,

‘சுஜலாம் சுபலாம் மபஜய சீதளாம்

சஸ்ய சியாமளாம் மாதரம்’

எனத் தொடங்கிப் பாடும் பாடலாக வந்தே மாதரம் பாடல் ‘ஆனந்த மடம்’ நாவலில் வருகிறது.
3. இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் விதமாக 1904 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் நாள் ‘இத்திஹாத்’ என்னும் வார இதழில் முதன் முறையாக வெளிவந்த பாடலே முஹம்மது இக்பாலின்

‘சாரே ஜஹான்சே அச்சாஹ்’ என்னும் பாடல்

வந்தே மாதரமும், ஜனகணமன பாடலும் பல்வேறு சர்ச்சைளுக்கு உள்ளானது.
1.ஜன கன மன

இந்த பாடல் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வரவேற்பதற்காக எழுதப்பட்ட பாடல் என்ற சர்ச்சை எழுந்தது.  1911, டிசம்பர் 27 ஆம் நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் துவக்கப் பாடலாக பாடப்பட்டது.

தாகூர் இந்த பாடலை 5 பத்திகளாக எழுதினார்.தேசிய கீதமாகப் பாடப்படுவது அவற்றில் முதல் பத்தி மட்டுமே.
2. வந்தே மாதரம்

1876 ஆம் ஆண்டே  வந்தே மாதரம் பாடல் எழுதப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டாலும் 1882 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆனந்த மடம்’ என்னும் நாவலில்; வந்தே மாதரம் பாடல் இடம்பெற்ற பின்னரே பிரபலமடையத் தொடங்கியது.

வந்தே மாதரம்’ என்னும் சொல்லுக்கு ‘தாயே உன்னை வணங்குகிறோம்’ என்று பொருள்.
வந்தே மாதரம் பாடலில் துர்க்கை என்னும் பெண் தெய்வம் பாரத மாதாவாக சித்திரக்கப்பட்டு வணங்குவது போல் இருந்ததால் முஸ்லிம்களின் மத்தியிலும், மதச்சார்பற்ற தலைவர்களின் மத்தியிலும் இப்பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. 

1908ஆம் ஆண்டு அமிர்தசரசில் நடைபெற்ற முஸ்லிம் மாநாட்டில் தலைமை
உரையாற்றிய சையத் அலி இமாம் வந்தே மாதரம் பாடலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

1937 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் முதல்வராக பொறுப்பேற்ற ராஜாஜி சட்டசபையில் வந்தே மாதரம் பாடலைப் பாடி நிகழ்ச்சிகளை ஆரம்பம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வர முனைந்தார்.
அவையில் இருந்த முஸ்லிம்கள் வந்தே மாதரம் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தீர்மானம் கைவிடப்பட்டது.

ஆரம்பத்தில் தாகூர் வந்தே மாதரம் பாடலை ஆதரித்தாலும் 1939 ஆம் ஆண்டு நேதாஜிக்கு எழுதிய கடிதத்தில் ‘வந்தே மாதரம் பாடல் துர்க்கை அன்னையை வணங்குவது போலப் பாடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்துக்கள் தவிர முஸ்லிம்கள் மற்றும் பல மதத்தினர் இருக்கின்றனர்.  எனவே இந்தப் பாடலைத் தேசிய கீதமாக அறிவிக்கக் கூடாது’ என்று  தாகூர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி, எம்.என். ராய் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் போன்றோரும் இப்பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
நேதாஜி தனது இந்திய தேசிய படைக்கு (INA) ஜனகணமனவையே கீதமாகக் கொண்டிருந்தார்.

3. சாரே ஜஹான்சே அச்சாஹ் பாடல் பரவலாக அனைத்து தரப்பு மக்களிடமும், தேசிய தலைவர்களிடமும் வரவேற்பைப் பெற்றிருந்தது. வந்தே மாதரம் பாடலின் ஆதரவாளர்கள் மட்டும் சாரே ஜஹான்சே அச்சா பாடலை எழுதியது ஒரு முஸ்லிம் என்ற
காரணத்திற்காக புறக்கணித்து வந்தனர். இத்தனைக்கு மத்தியில் இந்தியாவிற்கு சுதந்திரமும் கிடைத்தாகிவிட்டது. 

அரசியல் நிர்ணய சபையின் கடைசி நாளான 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் நாள் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர். இராஜேந்திர பிரசாத் தலைமையில் கூடிய கூட்டத்தில் விவாதித்து
இந்தியாவின் தேசிய கீதம் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்கூட்டத்தில் தேசிய கீதம் பற்றி எந்தவித விவாதமும் நடைபெறவில்லை. அதற்கு பதிலாக டாக்டர். இராஜேந்திர பிரசாத் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

இது தான் அந்த அறிக்கை 👇👇
ஜனகணமன என்ற பாடலின்சொற்கள்,இசையும் இந்தியாவின் தேசிய கீதமாக இருக்கும்.இந்திய விடுதலைப் போராட்டத்தில் வரலாற்றுப் பங்களித்த வந்தே மாதரம் என்ற பாடலுக்கும் ஜனகணமனவுக்குச் சமமான அந்தஸ்து வழங்கப்படும்.இந்த அறிவிப்பு அனைவருக்கும் திருப்தி அளிக்கும் என நம்புகிறேன்’. என்பதே இந்த அறிக்கை.
சுதந்திர இந்தியாவில் முதன் முறையாகப் பாடப்பட்ட பாடல்,  1984 ஆம் ஆண்டு விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியரான ராகேஷ் சர்மா விண்வெளியிலிருந்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியுடன் உரையாடும் போது பாடிய பாடல், முப்படைகளின் அணிவகுப்புகளில் பாடப்படும் பாடல், இந்தியாவின் முதல் பிரதமரான நேரு
பல இடங்களில் மேற்கோள் காட்டிய பாடல்,

மதக் கருத்துக்களுக்கு இடமளிக்காத, சர்ச்சைகளுக்கு உள்ளாகாத பாடல் என பல சிறப்புகளைப் பெற்ற ‘சாரே ஜஹான்சே அச்சா’ புறக்கணிக்கப்பட்டதற்குக் காரணம் அப்பாடல் பெரியது, இசை அமைப்பதற்கு ஏற்புடையதாக இல்லை என சில காரணங்கள் சொல்லப்பட்டாலும்
அப்பாடலை எழுதியது ஒரு முஸ்லிம் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்பட்டதா? என்ற சந்தேகமும் இந்நேரத்தில் எழாமல் இல்லை.🤔

என்ன நடந்திருந்தாலும் இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு இல்லையா 😁😅......

இது ரொம்ப பெரிய thread பொறுமை இருந்தால் மட்டும் படிக்கவும்.... நன்றி
You can follow @thug1one.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: