ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு மோடியினால் மிகப்பெரிய
அளவில் இறங்கு முகமாகி கொண்டு வருகிறது.சீனாவுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் பனிப்போரில் ரஷ்யாவை
அமெரிக்காவுடன் பயணிக்க வைக்க மோடி செய்த முயற்சிகள் பயன் அளிக்க
ஆரம்பித்துவிட்டன என்று சௌத் சீனா
மார்னிங் 1/23
போஸ்ட் கூறுகிறது.

அது மட்டுமல்ல இந்தியா ரஷ்யாவை தன்னுடைய கூட்டாளியாக இந்தோ பசிபிக்
ரீஜனுக்குள் அழைத்து வந்து அமெரிக்காவுடன் கை கோர்க்க வைக்க இருக்கிறது
என்றும் இதனால் இந்தோ பசிபிக் பெருங்கடல் ரீஜனில் சீனா டம்மியாகி விடும்
என்று சௌத் சீனா மார்னிங் போஸ்ட்
கூறி இருக்கிறது.
2/23
ரஷ்யா சீனா மோதலுக்கு மையப்புள்ளியாக விளாடிவோஸ்டோக் நகரம்தான் இருக்க போகிறது என்கிறது சௌத் சீனா மார்னிங் போஸ்ட். கூறுகிறது.சமீபத்தில் இந்த விளாடிவோஸ்டோக் நகரத்தின் 160 உதய தினத்தை ரஷ்யா கொண்டாடிய பிறகுதான் சீனா ரஷ்யா மோதல் உதயமாகி இருக்கிறது.

1962 இந்திய சீனாப்போரில் 3/23
சீனாவுக்கு
ஆதரவாக இருத்த ரஷ்யா ஏன் இப்பொழுது சீனாவை கைவிட்டு இந்தியா பக்கமாக வருகிறது என்று யோசித்தால்
அதற்கு மோடி உருவாக்கிய தொடர்பியல் முக்கோண விதியே காரணமாக இருக்க முடியும்.
இப்பொழுது மோடி அந்த தொடர்பியல் முக்கோண விதியை பற்றி சீனாவுக்கு பாடம் எடுத்து வருகிறார்.அதாவது 4/23
எல்லைப்
பிரச்சனையில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் எப்படி முட்டல் மோதல்கள் வந்ததோ அதே மாதிரி சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஏற்பட ஆரம்பித்து இருக்கிறது.

இதற்கு மையப்புள்ளியாக இருக்க போவது விளாடிவோஸ்டோக் என்கிற துறைமுக நகரம்தான்.இந்த நகரம் பற்றி உலகம் அவ்வளவாக கடந்த 5/23
ஆண்டு வரை அறிந்து இருக்கவில்லை.ஆனால்
கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் இருந்து உலகம் முழுவதும் விளாடிவோஸ்டோக் பற்றி பேச ஆரம்பித்தார்கள்.

விளாடிவொஸ்டோக் பற்றி உலகம் பேச
ஆரம்பித்த பிறகு தான் சீனர்களுக்கே
ஆஹா அது நம்முடைய பகுதி அல்லவா
அங்கிருந்து இந்தியாவுக்கு பாதை போட்டதன் 6/23
மூலமாக விலாடிவொஸ்டோக்
பற்றி இனி சீனா கனவில் கூட நினைக்க
முடியாதபடி மோடி செய்து விட்டாரே என்று சீனா இந்தியா மீது எரிச்சல் கொள்ள ஆரம்பித்தது.

சீனர்கள் மறந்து போன ஒரு பகுதியை
மீண்டும் அவர்களுக்கு நினைவூட்டி ரஷ்யா மீது சீனாவின் கோபம் திரும்பவைத்துள்ளதன் மூலமாக மோடி உலக 7/23
அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு
வர இருக்கிறார்.

அதற்கு காரணமாக இருக்கப்போகும் விளாடிவோஸ்டோக் நகரம் பற்றி கடந்த கால வரலாறும் நிகழ்கால வரலாறும் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏதோ இப்பொழுது தான் பஞ்சாயத்து இருக்கிற து என்று நினைக்க 8/23
வேண்டாம்.கடந்த 3 நூற்றாண்டுகளாக நடைபெற்று கொண்டு இருக்கிறது

சீனாவின் வரலாற்றை மாற்றிய அபினி
போர்களை பற்றி படித்து இருப்பீர்கள்.இந்தியாவில் போதை பொருளான அபினை
பயிரிட்டு அதை சீனாவில் விற்று பதிலுக்கு தேயிலை வாங்கி வந்தார்கள் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள்.

இதில் நல்ல லாபம் 9/23
கிடைக்கவே எதற்கு
தேயிலையை சீனாவிடம் வாங்க வேண்டும்? அதை இலங்கை மாதிரி காலனி
நாடுகளில் பயிரிட்டு கொள்வோம். சீனாவுடன் ஒன்லி அபின் மட்டும் னதான் டீலிங்
என்று முடிவெடுத்து ஆங்கிலேய அரசு
முழு அளவில் இந்தியாவில் இருந்து அபினை சீனாவில் கொட்டி கொண்டே இருந்தது.

சீனர்கள் போதைக்கு 10/23
அடிமையாகி தள்ளாட ஆரம்பித்தார்கள். அப்பொழுது சீனாவை கிங் வம்ச மன்னர்கள் ஆண்டு
வந்தார்கள்.இந்த அபினை வைத்து சீனாவுடன் இரண்டு போர்களை இங்கிலாந்து பிரான்ஸ் அமெரிக்க நாடுகள் நடத்தி சூறையாடி இருக்கின்றன.

1940 களில் நடைபெற்ற முதலாம் அபினி போரில்தான் ஹாங்காங்கை சீனாவிடம் இருந்து 11/23
இங்கிலாந்து பறித்தது.1860ல்
நடைபெற்ற இரண்டாவது அபினிப்போரிலும் மரண அடி வாங்கி இருந்த சீனாவுக்கு மத்தியஸ்தம் செய்ய வந்த ரஷ்யா சந்தடி சாக்கில் விலாடிவோஸ்டொக் நகரை கூலியாக எடுத்துக் கொண்டது.

பரப்பளவில் உலகின் நம்பர்-1 நாடான ரஷ்யாவின் கிழக்கு மூலையிலும் ரஷ்யா கனடா அமெரிக்காவை 12/23
அடுத்து நான்காவது பெரிய நாடான சீனாவின் வடக்கு
மூலையிலும் உள்ள ஒரு குட்டி துறைமுக
நகரமான விளாடிவொஸ்டோக்கில் இருந்து மோடியின் தொடர்பியல் முக்கோன
விதி ஆரம்பமாகிறது.

இது வரை ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வர்த்தகம் ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமும் ரஷ்யாவின் மிகப்பெரிய 13/23
துறைமுகம் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்திற்கும் மும்பை துறை முகத்திற்கும் இடையேதான் நடைபெற்று வருகிறது

அதாவது ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் துறைமுகத்தில் இருந்து மும்பைக்கு வரும் கப்பல்கள் பின்லாந்து வளைகுடா பால்டிக் கடல்,கட்டிகாட்கடல், வடக்கு கடல் இங்கிலீஸ் 14/23
கால்வாய், பிஸ்கே வளைகுடா வடக்கு அட்லாண்டிக் கடல் நைல்நதி சூயஸ் கால்வாய் செங்கடல் வழியாக ஆடம் வளைகுடாவுக்குள் நுழைந்து அப்படியே அரபிக்கடலில் கலந்து மும்பை துறைமுகத்திற்கு வந்து போய்க்கொண்டு இருக்கின்றன.

இது தான் பல நூறு ஆண்டுகளாக ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள 15/23
கடல் வழிப்பாதை. ஆனால் கடந்த
ஆண்டு ரஷ்யா சென்ற மோடி இனி இந்தியா ரஷ்யா இடையே விளாடிவொஸ்டோக்கில் இருந்து சென்னை வழியாக நடைபெறும் என்று அறிவித்தார்.

அப்பொழுது நிறைய பேர் சீனாவின் ஆளுமையில் உள்ள தென் சீனக்கடல் வழியாக மோடி போடும் இந்த பாதையின் தொலைவு குறைவாக இருந்தாலும் 16/23
பாதுகாப்பு இல்லாதது என்றார்கள்.ஆனால் மோடியோ இந்த பாதைதான் இனி ரஷ்யா இந்திய உறவை தீர்மானிக்கும்
பாதை என்றார்.

வருசத்துக்கு 5 பில்லியன் டாலர் அளவில் கூட இல்லாத இந்திய ரஷ்ய பிசினஸ்
இனி வரும் காலங்களில் 30 பில்லியன்
டாலர்களை தாண்டி நிற்கும் என்றார்.
மோடி சொன்னது மாதிரியே 17/23
நாடெங்கும்
எஸ்ஸார் பெட்ரோல் பங்குகளின் மூலமா க ரஷ்யாவின் பெட்ரோல் இந்தியா முழுவதும் சென்று கொண்டு இருக்கிறது.

மோடி ரஷ்யாவை இந்தியாவின் காலடியில் விழ எடுத்த ஒரு மிகப்பெரிய முயற்சியை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.நஷ்டத்தில் இருந்த இந்தியாவின் தனியார் எண்ணெய் நிறுவனமான 18/23
எஸ்ஸார் ஆயில் நிறுவனத்தை ரஷ்யாவின் அரசு பெட்ரோல் நிறுவனமான ரோஸ்நெப்ட்டுக்கு மோடி அளித்ததன் மூலமாக ரஷ்யாவை இந்தியாவின் நீண்ட கால
பிடிக்குள் மோடி கொண்டுவந்து விட்டார்.

இந்த நிலையில் விளாடிவொஸ்டோக் நகரை இந்திய ரஷ்யா வர்த்தக பாதையின்
மையப்புள்ளியாக மோடி கொண்டு வந்த
தன் மூலமாக 19/23
சீனாவை நம்மிடம் இருந்து
ரஷ்யா அபகரித்த ஒரு நகரத்தில் இருந்தே ரஷ்யா இந்தியா நட்பு பலமாகி கொண்டு வருவதால் சீன மீடியாக்கள் ரஷ்யாவை நண்பன் அல்ல எதிரி என்றும் நம்முடைய விரலை வைத்தே இந்தியா நம்
கண்களை குத்தி வருகிறது என்றும் எழுத
ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இந்தியாவிடம் சீனா 20/23
அபகரித்த காஷ்மீரின் ஒரு பகுதியான அக்சாய்சின் அருகில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில்தான் இந்திய சீனா மோதல் நடைபெற்றது.

இது எதற்காக நடைபெற்றது என்றால் சீனா ரஷ்யா எல்லைப்பகுதியில் ரஷ்யாவினால் 160 ஆண்டு களுக்கு முன் ஆக்கிரமிக்கப்பட்ட விளாடிவொஸ்டோக் நகரை இந்திய ரஷ்யா வர்த்தக 21/23
மையமாக
அறிவித்ததினால் சீனாவுக்கு ரஷ்யா
இந்தியா மீது கோபம் வந்தது.

இந்த தொடர்பியலின் மையப்புள்ளியாக
இருக்கும் விளாடிவொஸ்டோக் நகரம்
தான் 160 ஆண்டுகளுக்கு முன் ரஷ்யா
அமெரிக்கா இங்கிலாந்து நாடுகளை நட்பாக இணைத்து வைத்து இருந்தது.

இப்பொழுது எதிர் எதிர் துருவங்களாக 22/23
மாறிநிற்கும் அமெரிக்கா ரஷ்யாவை மீண்டும் ஒரே அணியில் இணைக்கும் என்பதை நினைத்து பார்த்தால் மோடி சீனாவுக்கு போதிக்கும் தொடர்பியல் முக்கோண விதியை புரிந்து கொள்ளலாம்... 23/23
You can follow @vanamadevi.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: