இன்றைய ஓட்டை உடைசல் ரிப்பேர்: மிக்ஸி ஜார் சின்னது சரியாக சுற்றவில்லை என்று... அது ஐந்து நிமிடத்தில் சரி செய்தாகிவிட்டது. ஆனால் பழைய பிரிட்ஜின் கதவிலே மாட்டக்கூடிய ஸ்டாண்டு உடைந்துவிட்டது. அதற்கு spare வாங்குவது கடினம் என்பதால் அதையே சரி செய்ய வேண்டியதாகிவிட்டது. 1/4
வெறுமனே உடனடிப் பசையால் ஓட்டினால் இருக்காது என்பது கூடவே ஒரு உலோகத் தகட்டை பொருத்த தீர்மானித்து
Blind rivet வழியாக செய்ய எத்தனித்தது சொதப்பல்... 2/4
Blind rivet வழியாக செய்ய எத்தனித்தது சொதப்பல்... 2/4
அழுத்தம் தாங்காமல் பிளாஸ்டிக் மேலும் உடையத் தொடங்க, ஸ்குரு கொண்டு பொருத்துவது சிறந்தது என்று முடிவு செய்தேன். செய்தும் விட்டேன். கடைசியில் உடனடிப் பசையாலும் ஒட்டி விட்டேன்.
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="💪" title="Angespannter Bizeps" aria-label="Emoji: Angespannter Bizeps">. 3/4
அம்மா பயன்படுத்தும் பழைய பிரிட்ஜ், நன்றாக வேலை செய்கிறது. அழகாய் இருப்பதை விட பயன்பாடு முக்கியம். இந்த வேலைக்கு தேவையான கருவிகள் & உதிரிபாகங்கள் அனைத்தும் கைவசம் இருந்தது என்பது நான் எத்தனை பெரிய அப்பாடக்கர் என்பதை காட்டுகிறது என்பதை அவை அடக்கத்துடன் கூறிக்கொள்கிறேன்
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😬" title="Grimasse schneidendes Gesicht" aria-label="Emoji: Grimasse schneidendes Gesicht">
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😎" title="Lächelndes Gesicht mit Sonnenbrille" aria-label="Emoji: Lächelndes Gesicht mit Sonnenbrille"> 4/4