தென்னிந்தியாவின் “சூப்பர்ஸ்டார்” என அழைக்கப்படும் ரஜினிகாந்த் அவர்கள்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் இதுவரை சுமார் 167 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

(Thread Must RT Every Post)
#45YearsOfSuperStarRajini
இந்தியாவில் மட்டுமல்லாமல், இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் தனக்கென ஒரு இடத்தை பதிவு செய்த ஒரே நடிகன்.

ஒரு கண்டக்டராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு திரைப்படத்துறையில் மாபெரும் கதாநாயகனாக சாதனைப் படைத்தவர்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

#45YearsOfSuperStarRajini
சிவாஜிராவ் கைக்வாட் என்ற இயற்பெயர் கொண்ட ரஜினிகாந்த்1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 அன்று கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில் ராமோசி ராவ் காயக்வடுக்கும் ரமாபாயிக்கும் நான்காவது மகனாக பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்களும் மற்றும் ஒரு சகோதரியும் உள்ளனர்
#45YearsOfSuperStarRajini
5 வயதில் தாயை இழந்த தலைவர் பெங்களூரில் உள்ள ஆச்சாரியா பாடசாலை & விவேகானந்த பாலக சங்கத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார் சிறு வயதிலேயே பயம் இல்லாத துணிச்சல் மிக்கவராகவும் இருந்தார் பள்ளிப்படிப்பை முடித்தப் பிறகு நடத்துனராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார்

#45YearsOfSuperStarRajini
பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார் காலப்போக்கில் நடிப்பின் மீது ஏற்பட்ட ஆவலால் நடிகராகும் நோக்கத்தோடு சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

ஆரம்பத்தில் பல இன்னல்களை சந்தித்த தலைவர் ஒரு நண்பனின் உதவியால் சென்னை திரைப்படக்கல்லூரியில் சேர்ந்தார்.

#45YearsOfSuperStarRajini
1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த "அபூர்வ ராகங்கள்” என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் திரையுலக வாழ்க்கையை தொடங்கினார்

அதில் அவர் பேசிய முதல் வசனம் "பைரவி வீடு இதுதானே..."என்பது தான்.

மொத்தம் நடித்த காட்சிகள் ஆறு

#45YearsOfSuperStarRajini
1976ல்“கதா சங்கமா”என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தார்

அதே ஆண்டில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “மூன்று முடிச்சு” திரைப்படம் அவரை ஒரு சிறந்த நடிகனாக அடையாளம் காட்டியது சிகரெட்டை மேலே தூக்கிப் போடும் ஸ்டைலினை இந்த படத்தில் அற்புதமாக செய்திருப்பார்

#45YearsOfSuperStarRajini
அவர்கள் (1977) 16 வயதினிலே (1977) திரைப்படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றார்

ரஜினி பேசிய முதல் பன்ஞ் டயலாக் "இது எப்படி இருக்கு? படம் 16 வயதினிலே

இந்த வசனத்தையே ஹவ் இஸ் இட்? என்று ஆங்கிலத்திலும் இப்புடு சூடு என்று தெலுங்கிலும் பின்னாளில் பேசினார்

#45YearsOfSuperStarRajini
1977 ஆம் ஆண்டு நடித்த புவனா ஒரு கேள்விக்குறி திரைப்படம் தலைவருக்கு பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படமாக இருந்தது இந்த வெற்றியைத் தொடர்ந்து முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றியை அவர் பெற்றார்

#45YearsOfSuperStarRajini
வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினி தனி ஹீரோவாக நடித்த முதல் படம் “பைரவி” இதில்தான் அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப்பட்டது.

வழங்கியவர் கலைப்புலி எஸ்.தாணு. நான் போட்ட சவால் படத்தின் டைட்டில் கார்டில் தான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் போடப்பட்டது.

#45YearsOfSuperStarRajini
பில்லா,போக்கிரிராஜா,தனிக்காட்டு ராஜா, முரட்டுக்காளை போன்ற திரைப்படங்களில் ஒரு அதிரடி நாயகனாக நடித்தார்.

1981 ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “தில்லு முல்லு” திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக வெளிப்படுத்தியிருப்பார்.

#45YearsOfSuperStarRajini
வேலைக்காரன்,பணக்காரன்,மிஸ்டர் பாரத், தர்மத்தின் தலைவன்,எங்கேயோ கேட்டக் குரல்,மூன்று முகம,நல்லவனுக்கு நல்லவன் மற்றும்நான் சிவப்பு மனிதன் போன்ற திரைப்படங்கள் இவருக்கு மேலும் பல வெற்றிகளை பெற்றுத்தந்தது.

#45YearsOfSuperStarRajini
தலைவர் நடித்த திரைப்படங்களில், 1985 ஆம் ஆண்டு எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த அவருடைய 100 வது படமான “ஸ்ரீராகவேந்திரா” இப்படத்தில், இந்து சமயப் புனிதரான “ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்” வாழ்க்கையை, ஒரு நடிகராக வாழ்ந்து காட்டியிருப்பார் தலைவர்

#45YearsOfSuperStarRajini
படிக்காதவன்,மாவீரன்,ஊர்காவலன்,மனிதன், குரு சிஷ்யன்,தர்மத்தின் தலைவன்,ராஜாதி ராஜா,ராஜா சின்ன ரோஜா, மற்றும் மாப்பிள்ளை போன்ற திரைப்படங்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படங்களாக இருந்தது.

#45YearsOfSuperStarRajini
1990 ஆம் ஆண்டுகளில் நடித்த பணக்காரன், அதிசயப்பிறவி,தர்மதுரை,தளபதி,மன்னன், அண்ணாமலை,பாண்டியன்,எஜமான், உழைப்பாளி,வீரா,பாட்ஷா,முத்து, அருணாசலம்,படையப்பா போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்று இந்தியாவின்‘சூப்பர்ஸ்டார்’ என்ற அந்தஸ்த்தையும் பெற்றுத் தந்தது

#45YearsOfSuperStarRajini
1995 ஆம் ஆண்டு வெளிவந்த "முத்து” இந்தியாவை தாண்டி வெளிநாட்டிலும் முத்திரை பதித்தது குறிப்பாக ஜப்பானிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஜப்பானிலும் பெரும் வெற்றியைப் பெற்றது ஜப்பானிய மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்ற தகுதியை பெற்றது.

#45YearsOfSuperStarRajini
மாபெரும் எதிர்பார்ப்பில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, 2002 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்திலும், ஏ.ஆர்.ரகுமான் இசையிலும் வெளிவந்த “பாபா” திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியைத் தரவில்லை

#45YearsOfSuperStarRajini
2005 ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் வெளிவந்த “சந்திரமுகி” திரைப்படம் மற்றும் 2007 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த “சிவாஜி” திரைப்படம் நல்ல வசூலை பெற்றுத்தந்தது.

#45YearsOfSuperStarRajini
மீண்டும் ஷங்கருடன் இணைந்து, அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட “எந்திரன்’ திரைப்படம் 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, பல சாதனைகளை படைத்ததோடு மட்டுமல்லாமல், தமிழ் சினிமா வரலாற்றில் புதிய திருப்பத்தையும் ஏற்படுத்தியது.

#45YearsOfSuperStarRajini
தலைவர் தமிழ்மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார்
50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

உங்களுக்காக அவை கீழே👇👇👇

#45YearsOfSuperStarRajini
கதா சங்கமா (1976), பாலு ஜேனு(1976), ஒண்டு பிரேமதா கதா (1977), சகோதர சவல் (1977), குங்கும ரக்சே (1977), கலாட்டா சம்சாரா (1977), கில்லாட் கிட்டு (1978), மாது தப்படமகா (1978), தப்பிட தலா (1978), ப்ரியா (1979), கர்ஜனே (1981) கன்னட திரைப்படம்,

#45YearsOfSuperStarRajini
அந்துலேனி கதா(1976), சிலக்கம்மா செப்பண்டி’ (1977), தொலிரேயி கடிட்சண்டி(1977), ஆமே கதா (1977), அன்னடம்முளு சவால்(1978), வயசு பிலிசிண்டி(1978), இதாரு அசாத்யுலே(1979) அந்தமைனா அனுபவம்(1979), டைகர்(1979) அம்மா எவரிக்கைன அம்மா(1979), ராம் ராபர்ட் ரஹீம்(1980)
#45YearsOfSuperStarRajini
மாயதாரி கிருஷ்ணடு (1980), காளி’ (1980), ஏதே நாசவல் (1984), ‘ஜீவன போராட்டம் (1986), பெத்தராயிடு’ (1995) போன்ற தெலுங்கு திரைப்படங்களிலும்,

#45YearsOfSuperStarRajini
‘அலாவுதினும் அற்புத விளக்கும்’ (1979), ‘கர்ஜனம்’ (1981) மலையாள மொழித் திரைப்படங்களிலும்,

#45YearsOfSuperStarRajini
அந்தா கானூன் (1983), ஜீத் ஹமாரி(1983), மேரி அதாலத்(1984), கங்குவா(1984), ஜான் ஜானி ஜனார்தன்(1984), மஹா குரு’ (1985), வஃபாதர் (1985) பேவஃபாய் (1985), பவான் தாதா (1986) அசலி நகலி (1986), தோஸ்தி துஸ்மன் (1986) இன்சாப் கோன் கரேகா (1987),உத்தர் தஷின்(1987)

#45YearsOfSuperStarRajini
தமாசா (1988), பிரஸ்டார்ச்சர் (1989), சால்பாஸ் (1989), ஹம் (1991), ஃபரிஸ்தே (1991), கூன் கா கர்ஜ்’ (1991), பூல் பனே அங்காரே (1991), தியாகி (1992), இன்சானியத் கே தேவதா (1993), ஆதங்க் ஹீ ஆதங்க் (1995) இந்தி மொழித் திரைப்படங்கள்

#45YearsOfSuperStarRajini
பாக்கியதேவ்தா என்ற பெங்காலி மொழித் திரைப்படத்திலும் மற்றும் ‘பிளட் ஸ்டோன் (1988) என்ற ஆங்கில திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

#45YearsOfSuperStarRajini
தனக்கென ஒரு பாதையில் ஸ்டைலான நடிப்பில் அசைக்கமுடியாத ராஜாவாக நடைபோட்டு வரும் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் தான் திரையுலகில் நிரந்தர ‘சூப்பர்ஸ்டார்’ 46ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வாழும் மகானுக்கு வாழ்த்துக்கள்

#45YearsOfSuperStarRajini
You can follow @SSR_Sivaraj.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: