வீட்ல அவ்லோ கஸ்டம் ...திருச்சில இருந்தே காலேஜ்ல Course Completion(B.Pharm) சர்டிபிகேட் வாங்கிட்டு அப்டியே சென்னை பஸ் ஏறிட்டேன் ...இருந்தது 100 ரூபாய் 96 ரூபாய் டிக்கெட் ...காலைல 5 மணிக்கு இறக்கி விட்டாங்க தாம்பரத்துல ..ஒரு டீ & ஒரு சிகரெட் மீதம் 4 ரூபாயும் காலி
அங்கே இருக்கிற கிஷ்கிந்தா துணி கடையில் எங்க ஊர் பையன் வேலை செய்றேன்னு சொல்லிருக்கான் அவன பாப்போம்னு போனேன் வேற யாரையும் தெரியாது...கடை 8 மணிக்கு தான் திறப்பாங்க சோ அதுவரை வெயிட் பண்ணேன் ...8 மணிக்கு வந்தான் ..என்னனு கேட்டான் ..வீட்ல கஸ்டம் ஏதாவது வேலை வாங்கி கொடு உங்க கடையில்
எனக்கு சாப்பாடும் தங்க இடம் கொடுத்தா போதும் நான் மெடிக்கல் ரெப் வேலைக்கு ட்ரை பண்ண போறேன்..ஏதாவது இண்டர்வியூனா மட்டும் போய்ட்டு வர பெர்மிசன் வாங்கி கொடு மத்தபடி இங்கே வேலை செய்றேன்...சாப்பாடும் தங்க இடமும் மட்டும் போதும் சம்பளம்லாம் வேண்டாம்னு சொல்லிட்டேன்.
அவன் ஒரு டீ & அரை பாக்கெட் சிகரெட் வாங்கி கொடுத்தான் ...ஓனர் 10 மணிக்கு வந்தார் விசயத்தை சொன்னான் ...என்ன வேலை தெரியும்னு கேட்டார் ..ஒரு வேலையும் தெரியாது படிச்சு முடிச்சுட்டு வந்திருக்கேன்...என்ன வேல கொடுத்தாலும் செய்றேனு சொன்னேன்...
அங்கே வேலை செய்றவங்க தங்கி இருக்கிற ரூம்க்கு அனுப்பி ரெஸ்ட் எடுத்துட்டு ஈவ்னிங் 5 மணிக்கு வர சொன்னார்...வந்தேன் ...வாசல்ல நின்னு கஸ்டமர வாங்க என்ன வேண்டும்னு கேட்டு அவுங்கள அந்த செக்சனுக்கு கூப்பிட்டு போற வேலை (எதிர்ல ராஜானு ஒரு கடை இருந்துச்சு அங்கே போகாம இங்கே கூப்பிட்டு வரனும்
வேலை முடியவும் எல்லோருக்கும் 10 ரூபாய் பேட்டா காசு எனக்கு 30 ரூபாய் கொடுத்தார் ..சோப்பு எண்ணெய் பவுடர் வாங்கிக்கிறனு நினைக்கிறேன்...புதன் ஞாயிறு ல Classifiedல மெடிக்கல் ரெப் Vacancy இருக்கும் அட்ரஸ் பார்த்து Resume அனுப்புவேன்..இண்டர்வியூ போவேன் ...Fresh ஆனு கேட்டு ரிஜக்ட்
Or Communication டெவலப் பண்ணுங்கனு அனுப்பிடுவாங்க ...நான் படிச்சது கவர்மெண்ட் ஸ்கூல் தான் இங்கிலீஷ் வாத்திக்கே இங்லிஷ் வராது.....4 வது நாள் சர்ட் செக்சனுக்கு புரமோட் பண்ணார் அது தான் மடிக்கிறது ஈசி ...அடுத்து பொங்கல் வந்தது ...கூட்டம் அலைமோதியது ...கேசியர்னால சமாளிக்க முடியல
உடனே ஒரு கவுண்டர் ரெடி பண்ணி என்னை மேனுவல் பில் போட சொல்லி பக்கத்தில் ஒரு ஆண்டியை பணம் வாங்க உக்கார வச்ச்சார்...சிறப்பாக பொங்கலை கழித்தோம் ...ரம்ஜான் வந்தது ஊருக்கு போறீங்களானு கேட்டார் ஆமாம்னு சொன்னேன் ...பிடிச்ச ட்ரெஸ் எடுத்துக்க சொன்னார் 1 பேண்ட் 1 சர்ட் எடுத்தேன்
கூட 2 எடுத்துக்க சொன்னார்...ரூம்ல போய் ரெடியாகுங்க வர்றேனு சொன்னார்...வந்து பாக்கெட்டில் இருந்து ஒரு கட்டு பணம் 50 ரூபாய் தாள் எடுத்து கொடுத்தார்..மனசு கேக்கல போல மேல பாக்க்ட்டில் மத்த பாக்கெட்டில் இருந்த 1000 2000 யும் மொத்தமா எடுத்து கொடுத்து போய்ட்டு வாங்கனு சொன்னார்.
ஊர்ல வந்து காலைல இறங்குறேன் அண்ணன் அவர் மாமனார் கூட சண்டை போட்டதுல போலீஸ் கூப்பிட்டு போய்ட்டாங்கனு சொல்லவும் அப்படியே போலிஸ் ஸ்டேசன் போய் கொண்டு போன காசுல 5000 கொடுத்துட்டு இனி இது மாதிரி நடக்காது நான் பொறுப்புனு எழுதி கொடுத்து கூப்பிட்டு வந்தேன்..மீதி 5000 அம்மாட்ட கொடுத்தேன்
அடுத்து சென்னை பயணம் ரம்ஜான் முடிந்து ..இப்போ பில் போடுற வேலை ..நல்லா போய்ட்டு இருந்தது .என்னை கூப்பிட்டு என்ன வேலைக்கு ட்ரை பண்றீங்கனு கேட்டார் மெடிக்கல் ரெப்னு சொன்னேன் புரியல அவருக்கு டாக்டர் பார்த்து நம்ம கம்பெனி மெடிசின் பத்தி சொல்லி அவுங்கள நம்ம மெடிசின் எழுத வைக்கனும்னேன்
சம்பளம் 5000+ டெய்லி அல்லோவன்ஸ் 50+ கிடைக்கும்னு சொன்னேன்...நம்ம கிட்ட ஈசா பனியன் ஜட்டி இருக்கு இத மார்க்கெட்டிங பண்ணுங்க கடையில் ஆர்டர் மட்டும் எடுங்க வசூல் வேற ஆள் வச்சு பண்ணலாம் 10000 சம்பளம் டெய்லி 100 ரூபாய் பெட்ரோல்க்கு வண்டி எடுத்து தாரேன்னு சொன்னார்.
இப்போதய என் குடும்ப சூழ்நிலைக்கு இது பெரிய காசு இப்ப கஷ்டபடுறோம்னு இந்த வேலைக்கு போய் 2 3 வருசம் இதுலயே இருந்துட்டு அப்ரோம் மெடிக்கல் ரெப் வேலைக்கு போனா படிச்சு முடிச்சு இவ்லோ நாள் என்ன பண்ணீங்கனு கேப்பாங்க ...என்னோட கேரியர் போய்டும் படிச்சது வீணா போய்டும்னு சொன்னேன்
உங்க இஷ்டம்னு சொல்லிட்டார்

போன இண்டர்வியூ எல்லாம் Communication டெவலப் பண்ண சொன்னாங்க ...சோ ஸ்போக்கன் இங்லிஷ் போலாம்னு முடிவு பண்ணி கடையில் இருந்து நின்னுட்டு தோழர் ஒருவர் kk நகர் ல ரூம் எடுத்து தங்கி இருந்தார் அவர்கிட்ட கேட்டு kk நகர்ல தங்கி T.நகர்ல ஸ்போக்கன் இங்லிஷ் போலாம்னு
முடிவு பண்ணியாச்சு ...அடுத்த நாள் பணம் கட்டி சேரலாம்னு முடிவு பண்ணியாச்சு ...காலையில் ஒரு போஸ்ட் இண்டர்வியூ வர சொல்லி ( Ordain Health care) அடுத்த நாள் இண்டர்வியூ ...இதுவரை மொத்தம் 43 இண்டர்வியூ போயாச்சு எல்லாம் ரிஜக்டட்...ஒரே அட்வைஸ் Communication டெவலப் பண்ணுங்க
இவுங்களும் அததான் சொல்ல போறாங்க போகலனா பஸ்ஸுக்கு போற காசாவது மிஞ்சும் நைட் சாப்பிட்டுக்கலாமம்னு சொன்னேன்...இல்லை இந்த இண்டர்வியூ லாஸ்ட் போய் பாருனு சொன்னார் தோழர் ...நைட் சாப்பாடு அவருக்கு சாப்பிட கொடுக்கிற காசுல தான் நாங்க ரெண்டு பேரும் சாப்பிடுவோம்.
சரினு இண்டர்வியூக்கு சொன்ன டைமுக்கு போயாச்சு மொத்தம் ஒரு 25 பேர் இருந்தோம் ..ஒரு ஹால்ல உக்கார சொன்னாங்க ..காலைல 10 மணிக்கு போனோம் ஈவ்னிங் 4மணி வரை யாரும் கூப்பிடல ...25 பேர்ல 10 பேர் போய்ட்டாங்க ...மீதம் இருந்த 15 பேரும் செலக்டட்.
அதில் நானும் ஒருவன் ..மேனேஜர் கூப்பிட்டு வண்டி இருக்கானு கேட்டார் இருக்குனு பொய் சொல்லிட்டேன் இல்லைனு சொன்னா வேலை கிடைக்காதுனு பயத்தில்...எங்க தங்கி இருக்கீங்கனு கேட்டார் KK நகர்னு சொன்னேன்...வொர்க் பண்ண நுங்கப்பாக்கம் ஏரியா கொடுத்தார் அங்கே தான் அப்பல்லோ ஹாஸ்பிடல் வருது
2600 சம்பளம் 54 ரூபாய் டெய்லி அல்லோவன்ஸ் ...இம்ரஸ் கேஸ் 2000 கொடுத்தாங்க ...என்னோட ஏரியா புரசைவாக்கம் PH ரோடு நுங்கம்பாக்கம் அயனாவரம் பெரம்பலுர் இந்த பெல்ட் ..இம்ப்ரஸ் கேஸ் 2000 ல ஒரு Tvs 50 வாங்கிட்டேன்...120 டாக்டர்ஸ் லிஸ்ட் ரெடி பண்ணனும் 80 டாக்டர் அப்பல்லோல எடுத்துட்டேன்
வாரத்தில் 4 நாள் அப்பல்லோ போய்டுவேன்...மீதி நாள் ல ஏதாவது ஒரு கிளினிக்ல வண்டிய நிப்பாட்டிட்டு அந்த ஏரியா வொர்க் பண்ற பசங்க கூட பின்னாடி உக்காந்து போவேன் .kinesis கம்பெனி மதன்னு ஒரு பையன் தான் என்னை அப்படி பார்த்துக்கிட்டான்...சமோசா டீ எல்லாம் அவன் தான் வாங்கி கொடுப்பான்
2000 ரூபாய்க்கு வாங்குன வண்டி எப்படி இருக்கும்...ஆக்சிலேட்டர் திருகி கிட்டே இருக்கனும் இல்லைனா ஆப் ஆகிடும் அடுத்து ஸ்டார்ட் ஆகாது....போய்ட்டே இருக்கும் போது ஆப் ஆகிடும் ...பின்னாடி ஒருத்தர் உக்காந்தா வண்டி இழுக்காது ..அது பேருக்கு மட்டும் தான் வண்டி
அது என்ன சுமந்தத விட நான் அத தள்ளிட்டு போனது தான் அதிகம் ...அதல்லாம் கொடுமை... உச்சி வெயில்ல தள்ளிட்டு மெடிக்கல் ரேப் பேக் தோளில் போட்டுக்கிட்டு போகும் போதெல்லாம் எத்தனையோ தடவை அழுதிருக்கேன்...அசிங்கமா இருக்கும் ..ஆனால் நல்லா வருவேன் ஒருநாள்னு மட்டும் மனசு சொல்லுச்சு
சென்னை டார்கெட் 6 லட்சம் ...என் பெல்ட் மட்டும் 3 லட்சம் வந்திடும் மீதி 3 லட்சம் மத்த 5 பெல்ட் சேர்ந்து வர்றதே கஸ்டம் ..அப்பல்லோ ல நல்ல பிசினஸ் வந்துச்சு ...புரசவாக்கத்தில் மீனா மெடிக்கல் டிஸ்ட்ரிபியூட்டர் அவிச்சி அண்ணன் வெத்து ஆர்டர் புக்ல Sign பண்ணி சீல் போட்டு கொடுப்பார்
உனக்கு டார்கெட்க்கு எவ்வளவு குறையுதோ மொத்தமா எனக்கு அனுப்புனு சொல்லுவார் ...என் மேல அவ்லோ நம்பிக்கை ..அப்பல்லோ ல ஒரு கலக்கு கலக்குனேன்...அந்த ஏரியா வொர்க் பண்ண ஒரு ரெப் Srinish மேனேஜரா புரமோட் ஆகுறார் அந்த இடத்துக்கு ஒரு ரெப் வேண்டும்னு என்னை கூப்பிட்டார் ( Pharmed)
8000 சம்பளம் + 90 ரூபாய் அல்லோவன்ஸ் ...கருணாகரன் ரீஜனல் மேனேஜர் அவர்கிட்ட கூப்பிட்டு போனார்...Moti&Co ல தான் ஆபிஸ் அந்த கம்பெனிக்கு ...அவரை ஏற்கனவே சென்னைல இருந்து கடலூர்ல போய் அவர் வீட்ல பார்த்திருக்கேன் வேலை கேட்டு அவரும் Communication இம்ப்ரூவ் பண்ண சொன்னார்
இப்ப அவர்கிட்டயே கூப்பிட்டு போனார் அவருக்கு என்னை நியாபகம் இல்லை ...நியாபக படுத்தினேன் ....Tell Me Something About You னு சொன்னார் ...இது வேலைக்கு ஆகாதுனு அந்த மேனேஜர பார்த்துட்டு என் பேரு ஊரு படிச்சது எல்லாத்தையும் எனக்கி தெரிஞ்ச இங்கிலீஷ் ல சொன்னேன்...
மேனேஜர் என் வொர்க் பத்தி சொல்லிருப்பார் போல ஒரு 15 பேர் பெங்களூர் ட்ரெயிங் போனோம் ...வொயிட்பீல்டு ரோட்ல தான் ஆபிஸ் ..சாய்பாபா ஆசிரமத்துக்கு எதிர்த்த மாதிரி தங்குறதுக்கு ரூம் ரெடி பண்ணிருந்தாங்க ...மொத்தம் ஒரு 50+ பேர் வந்திருப்பாங்க இந்தியா புல்லா ...நான் தான் டாப் பெர்பாமர்.
இறுதி நாள் சரக்கு பார்ட்டி கொடுத்து அனுப்பி வச்சாங்க ..
....சென்னை வந்து வொர்க் ஆரம்பிச்சோம் நல்லா போய்ட்டு இருந்தது ..அடுத்து திருச்சில அந்த கம்பெனி லாஞ்ச் பண்ணவே இல்லை திருச்சில லாஞ்ச் பண்ணனும்நு என் கிட்ட சொல்லி கேட்டார் RSM ..சரினு ஓகே சொல்லி கிளம்பியாச்சு
திருச்சி ஒரு கேவலமான மார்க்கெட் ....மேக்சிமம் டாக்டர்ஸ் பார்மசியும் வச்சுக்கிட்டு ஆர்டர் கேட்டா பேரம் பேசுவாங்க ...அவ்லோ Free கொடு சேம்பிள் கொடுனு. ..ஆகஸ்ட் 19 கல்யாணம் பிக்ஸ் ஆச்சு ஒரு மாசம் லீவு கேட்டேன் ஆரம்பத்தில் ஓகே சொன்னார்.
ஆனால் முன்னாடியே 25 ம் தேதி ஒரு ப்ரி மெடிக்கல் கேம்ப் அரேஞ்ச் பண்ணிருந்தேன் (Bone Density) அத முடிச்சுக்கொடுத்துட்டு சேல்ஸ் குளோசிங் முடிச்சு கொடுத்துட்டு போக சொன்னார் ...சரினு வந்து முடிச்சுக்கொடுத்துட்டு லீவு கேட்டா முடியாதுனுட்டார் மேனேஜர் தீபக் From கோயம்பத்தூர்.
போடா மயிறுனு ஊருக்கு போய்ட்டேன் ...பத்து நாள் கழிச்சு வக்கீல் நோட்டீஸ் அனுப்புனாங்க ...மெடிக்கல் ரெப் பேக் திருடிட்டு போய்ட்டேனு நான் மெடிக்கல் ரெப் யூனியன்ல கம்ப்ளயிண்ட் பண்ணிட்டேன்...அப்ரோம் பெங்களூர் வர சொன்னாங்கனு போனேன்.
மொத்த செட்டில்மெண்ட்டும் வாங்கிக்கோனு செக் போட்டு வச்சுக்கிட்டு ரிசைன் பண்ண சொன்னாங்க ...3 வருசம் வொர்க் பண்ணேன் ...யூனியன்ல ரிசைன் பண்ண சொன்னா பண்ண வேண்டாம்னு சொல்லி அனுப்புனாங்க ...எதுக்கு பிரச்சனைனு நமக்கு நிறைய உதவி செஞ்சுருக்கு இந்த கம்பெனினு Sales மேனேஜர பார்த்தேன்
அவர் செம்ம ஸ்மார்ட் பேர் சுதிர் ..ட்ரெய்னிங் போன 2 வது நாள் 50+ பேரோட பெயரையும் அவுங்க எங்க இருந்து வர்றாங்கனு கரெக்டா சொன்னார்...அவர பார்த்து லீவு விசயத்தை சொன்னேன்...சரி போய் வொர்க் பண்ணுனு என்னை அனுப்பி வச்சுட்டார்..
அப்ரோம் Ordain Health care ல வொர்க் பண்ண என்னோட மேனேஜர் புதுசா கம்பெனி ஆர்ம்பிக்கிறேன்...நீ என்னோட பார்ட்னரா வானு கூப்பிட்டார் ..உனக்கு ஒரு சேர் தாரேனு சொன்னார் சரினு போனேன் ( Orgus Health care)...முதல் மாசமே செக்ண்டரி சேல்ஸ் 80 ஆயிரம் ...9 ஆயிரம் கொடுத்தார்.
அடுத்த மாசமும் 9 ஆயிரம் தான் கொடுத்தார் ...இது சரிவராதுனு விலகி Emcure Shweiz ல ஜாயின் பண்ணேன் சென்னைல ..அது ஒரு செம்ம டீம் ...செம்ம ஜாலியா இருக்கும் வொர்க் பண்றதுக்கு ...மாசம் எல்லாம் சேர்த்து 25000+ வரும்...சென்னைல வீடு வாடகை அதிகம் அட்வான்ஸ் அதிகம்
ஃபேமிலி ய சென்னைக்கு கூப்பிட்டு வரலாம்னு Plan ...வாடகை அதிகம் & அப்பா திருக்கழுகுன்றம் ல இருந்ததுனால அங்கேயே வீடு பார்த்தாச்சு ...(நான் வொய்ப் அப்பா அம்மா ..).காலைல 5 மணிக்கு எழுந்து கிளம்பி திருக்கழுகுன்றம் To செங்கல்பட்டு To தாம்பரம் To எக்மோர்
எக்மோர் ரயில்வே ஸ்டேசன்ல பைக் எடுத்துட்டு வொர்க் முடிச்சுட்டு நைட் அங்கேயே பார்க் பண்ணிட்டு அகைன் எக்மோர் டூ தாம்பரம் To செங்கல்பட்டு To திருக்கழுகுன்றம் ...தாம்பரம்ல கடைசி பஸ் 11 மணிக்கு அத பிடிச்சா 12மணிக்கு வீடு போய்டலாம் இல்லைனா 1 மணி 2மணி தான்...ஏதாவது லாரில தான் வீடு போவேன்
காலைல 5 மணிக்கு எழுந்து நைட் போய் சாப்பிட்டு தூங்க 2 மணி ஆகிடும் ...மூனு மணி நேரம் தான் தூக்கம் ...சில சமயம் பஸ்ல தூங்கிட்டே மேல்மருவத்தூர் போய்ருக்கேன் ...அப்ரோம் அங்கே இருந்து திரும்பி செங்கல்பட்டு வந்து வீடூ போக 5மணி ஆகி குளிச்சுட்டு வேலைக்கு திரும்ப கிளம்பிருக்கேன்
மாமியார் வீட்ல 35 பவுன் போட்டாங்க ...கல்யாணம் ஆன ஒரு மாசத்துல அம்மாக்கு கர்ப்ப பைல கட்டினு ஒரு செயின் அடகு வச்சாச்சு ..அப்ரோம் மச்சினன் வெளினாடு போகனும்னு 10 பவுன் வாங்கிட்டு போய்ட்டான் அண்ணன் துபாய் பொறேனு 10 பவுன் வாங்கிட்டான் ..வீட்டு செலவுக்குனு 10 பவும் அடகு வச்சாச்சு
இப்போ வளைகாப்பு நடத்தி கூப்பிட்டு போகனும்னு வந்துட்டாங்க ...நகை ஓசி கொடுக்க கூட யாரும் இல்லை ...கழுத்தில் ஒரு பவுன் நகை கூட இல்லாமல் தான் வளைகாப்பு நடந்துச்சு ...மாமியார் வரல ...ஊருக்கு கூப்பிட்டு போனதும் நகை இல்லைனு மண் அள்ளி தூத்துனதா ஒரு விவசாயி சொல்லி அறிந்தேன்
சரி வெளிநாடு போவோம்னு சொல்லி முடிவெடுத்து மாமனார் குவைத்தில் இருந்தார் அவர்கிட்ட சொன்னோம் ...சரினு சொன்னாரே தவிர ஏற்பாடு செய்யவே இல்லை அவருக்கு 5 பெண் குழந்தைகள் என் மனைவி 4 வது அடுத்து ஒரு பெண்ணுக்கு கல்யாணம் பண்ணனும் அதனால் விசாக்கு 2 லட்சம் பெரிய காசு அவருக்கு
விசாக்கு காசு கொடுத்திடுறோம் ரெடி பண்ணுங்கனு சொல்லவும் ரெடி பண்ணார் 1 லட்சத்து 80 ஆயிரம் வீட்டில் கொடுக்க சொன்னார் ...கொடுத்ததும் விசா வந்தது ..கிளம்பியாச்சு...முதல்ல சம்பளம் வாங்கி உன் மாமனார்க்கு எவ்லோ பாக்கி இருக்கோ அத கொடுத்துட்டு அப்ரோம் நீ ஊருக்கு பணம் அனுப்புனா போதும்னு
சொல்லி அப்பா அனுப்புனார் ...அது மாதிரியே மெடிக்கல் போட்டது இங்கே வந்து ஒரு மாசம் வேலை இல்லாம சாப்பாடு ரூம்க்கு கொடுத்த காசெல்லாம் கணக்கு பண்ணி 50 ஆயிரம் பேசி முடிச்சு மாசம் மாசம் 20 ஆயிரம் 20 ஆயிரமா கொடுத்து மாமனார் கடனை முடிச்சேன் ...அப்போ சம்பளம் 120 Kd அதாவது 32,000ரூபாய்
இங்கே வந்து அரபி படிச்சு ஒரு எக்சாம் எழுதி பாஸ் பண்ணி Doctor Of Pharmacy சர்டிபிகேட் வாங்கி 400 Kd அதாவது அப்போ (1 Kd 165 ரூபாய் )1 லட்சம் + வாங்கி அப்டியே 2 வருசம் அப்ரோம் ஒரு கம்பெனில ஜாயின் பண்ணி மாசம் 1,75,000 கிட்ட வாங்கிட்டு இருக்கேன் இப்போ .
கடன் எல்லாம் அடச்சு ..அப்பா கட்ன வீட்ட அண்ணனுங்களுக்கு கொடுத்துட்டு சொந்தமா எதிர்த்த மாதிரியே 2 மாடி வீடு கட்டி ....வொய்ப்புக்கு 35 பவுனுக்கு டபுளா 35 பவுன் செஞ்சு போட்டு ஒரு 50 லட்சம் இன்வஸ்ட் பண்ணி வச்சுருக்கேன்....முடிந்த வரை கேக்குறவங்களுக்கு இல்லைனு சொல்லாம உதவி செய்றேன்
வாழ்க்கையில் கஸ்டம் வரும் எதிர்த்து போராடனும் வெற்றி நிச்சயம் கிடைக்கும் அது நாம் எதிர் பார்க்காததை விட பெருசா இருக்கும்....வாழ்க்கையில் சண்டை செய்யனும் 👌
You can follow @L0nely_Mind.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: