@SSR_Sivaraj @EngineerKpn @kumarwinn @True_Machinist @DrRajes39806123 @Mdvnktsh @ragulshiv @gopiyojivizi @ganeshjayabalan @ganeshfi @padmapri @VP3107 @shantweet07 @kanthi90 @warnermani @BrightAmt @Yuvaraj04621873 @Devanat14784027 @annapoorani_2 @logan12_07 @Prabhurs505

திருத்துறையூர் எனவும் வழங்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ளது. பழைய பெயர் - திருத்துறையூர்
மூலவர்:
சிஷ்டகுருநாதேஸ்வரர், பசுபதீஸ்வரர்
அம்பாள்: சிவலோகநாயகி, பூங்கோதை
ஸ்தல விருட்சம்:கொன்றை
தீர்த்தம்: சூர்யபுஷ்கரிணி
வழிபட்டோர்கள் : சுந்தரமூர்த்தி நாயனார்

சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு 'பித்தாய் பிறை சூடி பெருமானே' என பதிகம் பாடியபின் திருவெண்ணெய் நல்லூரில் இருந்து சுந்தரர் இத்தலத்திற்கு வந்தார்.
அப்போது தென்பெண்ணையாறு குறுக்கிடவே, கரையில் இருந்தே சிவனை வேண்டி பதிகம் பாடினார்.





இவ்வாலயத்திற்கு இராஜகோபுரம் எதுவும் இல்லை,ஒரே ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது,உள்வாயிலை கடந்து மண்டபத்தை அடைந்தால் இங்கு அருள் பாலிக்கும் இறைவன் மேற்கு நோக்கிய சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார்



கஜலக்ஷ்மி ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.






இங்கு சித்திரை மாதம் முதல் வாரத்தில் மாலை வேளையில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது.

மாவாய்ப் பிளந்தானும் மலர்மிசை யானும்
ஆவா அவர்தேடித் திரிந்தல மாந்தர்
பூவார்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர்த்
தேவா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே.
–சுந்தரர்
தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 15வது தலம்.

வைகாசி விசாகத்தில் 10 நாள் பிரம்மோற்ஸவம், கந்தசஷ்டி,
சிவராத்திரி, அன்னாபிஷேகம்.
பிரார்த்தனை:
குருதலம் என்பதால் இங்கு சிவன், தெட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. இதனால் கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை.

திருத்துறையூர், பண்ருட்டி தாலுகா, கடலூர் மாவட்டம்.
+91- 4142 – 248 498, 94448 07393
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.



அனைவருக்கும் ஈசன் அருள் கிடைக்க பிரார்த்தனைகள்
