Honestly speaking, திமுக'வ் விமர்சிச்சு இங்க எதாச்சும் எழுதாலாம்னு நினைச்சாலே பகீர்ங்குது. Needless to say, அதிமுக, பாஜக எல்லாம் விமர்சனத்துக்கே தகுதியில்லாததுன்னு.
கூடவே, இவர்களது பொதுவான concept திமுகவை விமர்சித்தால் அதிமுக ஆதரவு. அல்லது திராவிட சித்தாந்த எதிர்ப்பு. ஆக, திமுக செய்யும் எதையும் விமர்சிக்கக் கூடாது. சுயவிமர்சனம் என்பதுவும் இருக்கவே கூடாது. simple and convenient.!
இங்கே நிலவும் மற்றொரு பிரச்சனை சித்தாந்தத்தை கடவுள் போல வணங்குவது. மதமே இப்படித் தான் தொடங்கியது. அதன் frameworkக்கில் சிக்கியவர்கள் என் மதம் vs உன் மதம் என்று தான் சிந்திக்க முடியுமோ தவிற என் மதத்திற்குள் பிழை இருக்கிறதா என்கிற கேள்வியே எழாது. The same applies for Ideology.
சித்தாந்ததிற்கு இன்னும் கோவில் கட்டி சிலை வைத்து வணங்க மட்டும் தான் இல்லை. நல்ல சித்தாந்தம் பக்கம் இருக்கிறோம் என்றால் நல்ல கருத்தைச் சொல்கிறேன் என்பது மொக்கை வாதம். அதன் கீழ் என்னென்ன செய்கிறோம் என்பதே விசயம். நல்ல கொடியின் கீழே போர் செய்து கொண்டு நன்மை செய்வதாக எண்ணிக்கொள்வது.
சீமான், மதன் ரவிச்சந்திரம், மாரிதாஸ் போன்றோரை ஓரம்கட்டுவதற்கு பெரிய ஜீனியஸ் தேவையில்லை. அவர்கள் டுபாக்கூர்கள். அதனால் அவர்கள் கேட்ட ஒரு திமுக எதிர்ப்பு/விமர்சனக் கேள்வி கூட valid அல்லவா? அவைகளையும் ஏன் குப்பையில் போடுகிறோம்? நாம் பொதுமக்களா இல்லை திமுக கட்சிக்கார்களா?
பாஜக'வை விமர்சித்தால் antiIndian என்பதற்கும் திமுக'வை விமர்சித்தால் 'நீ போய் முதலில் அதிமுக, பாஜகவை 10 வருடம் விமர்சித்துவிட்டு வா' என்பதற்கும் என்ன வித்தியாசம்? வரிக்கு வரி நான் அதிமுக, பாஜக எதிர்ப்பாளன் என்று நோட்டில் ஓட்டிக்கொண்டு தான் திமுக மீது விமர்சனம் வைக்க வேண்டுமா?
You can follow @navi_n.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: