நான் அரசியலுக்கு வருவது உறுதி என தலைவர் கூறியதும்,நம் கண்களுக்கு தெரிந்தது,தமிழ்நாட்டிற்கு ஒரு "விடியல்" "மாற்றம்"நம் தலைவர் என்ற நம்பிக்கை. ஏற்கனவே அரசியலுக்கு பழகிப்போன தலைவர்,"அம்பு விடுறது தான் பாக்கி" என்றதும், பல அரசியல் வியூகங்களை உள்ளடக்கி கூறுகிறார் என்றே தோன்றியது(1/11)
ஆன்மிக அரசியலை முன்வைக்கும் அவர் எவ்வாறான கருத்துக்களை பிரதிபலிக்கிறார்?அவருடைய எண்ண ஓட்டங்கள் எத்தகையவை?தற்போதைய திராவிட அரசியலில் இருந்து எவ்வாறு மாறுபட்டுள்ளது?திரையில் மட்டுமல்லாது,ஒரு மனிதனாகவும் ரசித்த தெய்வத்தின் கருத்துகளை ரசிகையாக ஆசைகொண்டு தொகுத்து வழங்கும் பதிவு இது
தன் ரசிகர்கள் மேல் அதீத அன்பும் நம்பிக்கையும் கொண்டவர் தலைவர்.என் ரசிகர்களுக்கு அரசியல் கற்றுதர தேவையில்லை,அவர்கள் மற்றவர்களுக்கு கற்றுக்கொடுப்பார்கள் என்றார். வெளியில் சத்தம் போடுபவர்கள் போடட்டும்.நாம் சத்தமில்லாமல் செய்வோம் என்று சொன்னது அரசியல் மாற்றத்துக்கான கோடு.வலுவான கோடு.
நமக்கு நீச்சல் தெரியும்,குளத்தில் இறங்கியதும் நீந்தலாம் என்றும், அறிக்கைவிட, போராட்டம் பண்ண நிறைய பேரு இருக்காங்க, நமக்கு அது வேண்டாம் என்று கூறி தமிழகத்தின் பழகிப் போன பழைய அரசியல் போக்கிற்கு check வைத்து புதுவித நல்ல மாற்றம் கொண்ட ஆன்மிக நேர்மறை அரசியலுக்கு வித்திட்டார் தலைவர்
மக்களுக்கு நியாயமான சௌகரியங்களை,தேவைகளை உரிமைகளை போக விடாமல் செய்யும் கும்பல்களை தடுக்கும் காவலர்கள் வேண்டும்.சுயநலத்துக்காக MP,MLAகிட்ட நிக்காத காவலர்கள் தேவை என்றார் தலைவர்.ஊழல்,பதவிவெறி என்ற முதலைகள் மத்தியில், சுயநலமில்லாத மக்கள் நலனுக்கான அரசியலை முன்வைத்த ரஜினி ஒரு சித்தரே
எனக்கு நீ உனக்கு நான் எதிரி என்று அடித்துக்கொள்ளும் அரசியல்வாதிகள் மத்தியில், எனக்கு எதிரி,
ஏழ்மை
வேலையில்லா திண்டாட்டம்
லஞ்சம்
ஏழைகள்,விவசாயிகள்,மீனவர்கள் கண்ணீர்
என்று தன்னோட ஆன்மிக அரசியல்,தமிழ்நாட்டின் எத்தகைய பிரச்சினைகளை ஒழிக்க களம் இறங்கும் என்பதை சொல்லி அடித்தார் தலைவர்
தன்னோட தமிழ்நாடு வளர,"தமிழன் வளர்ந்தாதான் தமிழ் வளரும்,பல மாநிலங்களுக்கும் நாடுகளுக்கும் சென்று பேரும் புகழும் பெற்றால் தமிழனுக்கு பெருமை தமிழ்நாட்டிற்கு பெருமை" என்று குண்டுசட்டியில் குதிரை ஓட்டும், தமிழன் என வாயளவில் பேசும், தமிழ்நாடு பெருமை கொள்ளாத கூட்டத்திருக்கு ஒரு சவுக்கடி
பிண அரசியல் செய்யும் கூட்டத்திற்கு மத்தியில்,மாணவர் அணி என பாழடிப்பவர்கள் மத்தியில்,தலைவர் மாணவர்களை நோக்கி,4 வருஷம் நல்லா படிச்சா 40 வருஷம் நல்ல வாழலாம் என்றும்,அரசியல் பத்தி தெரிந்து கொள்ளுங்கள் ஆனால் படிக்கும் பொழுது அரசியலில் முழுசாக ஈடுபடாதீர்கள் என்றும் அன்பு கட்டளையிட்டார்
நடிகர்கள் அரசியலுக்கு எதற்காக வருகிறார்கள் என்று ரஜினி பயம் கொண்டு விமர்சனங்கள் எழுந்த பொழுது, "ஐயா உங்கள் வேலையை நீங்க சரியா செய்யலையேயா" என்று தலைவரோட பதிலடி ஒரு அழகு
பணம் பதவி ஆசை இல்லாத,இளைஞர்களை முன்னிறுத்த நினைக்கும்,எழுச்சி விரும்பும், ரஜினி என்ற ஒரு மாமனிதனை தலைவனை இனி தமிழகம் காணாது

எங்கள் இளைஞன் தலைவன் நீங்கதான் தலைவா @rajinikanth

நீங்கள் விதைத்தது ரஜினி என்ற உணர்வு.இனி வரும் பிறவிகளிலும் உங்களோடு எங்கள் பந்தம் தொடர வேண்டும்.🙏🙏🙏🤘
You can follow @Vrisha18.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: