ட்விட்டர் நண்பர்களுக்கு வணக்கம்.

2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுக்குள் தமிழகம் 67 சதுர கிமீ அடர் காடுகளை இழந்துள்ளது.
(Indian State of forest report'19)

இங்கே நீங்கள் காணும் இரண்டு படங்களுக்குமான இடைவேளை சரியாக 10 மாதம், 13 நாட்கள்.
டிவிட்டர் எப்போதுமே எங்கள் சேவை, நிறுவனம் குறித்து பலருக்கு தெரியப்படுத்த மிகவும் ஆதரவான தளமாக இருந்தது, இருக்கிறது.

எங்கள் நிறுவனம் குறித்து, என்னை தெரியாத பலர் அன்புடன் நண்பர்களுடன் பகிர்ந்தனர். (உதாரணமாக @VijayRamdoss_ மூலமாக தான் Dr @albyjohnV IAS அவர்களை எனக்கு தெரியும்.)
இதுதே நான் முதன்முதலில் பகிர்ந்த டிவிட்( https://bit.ly/3ksmxE8 ). இதற்கு கிடைத்த வரவேற்பு, மீடியா உதவி, அதனால் கிடைத்த Projects என இன்றைக்கு நாங்கள் இருக்கும் நிலைக்கு இங்கே முகம் தெரியாத பலர் காரணம்.
இடையே பவானிசாகர் பஞ்சாயத் மற்றும் சேலம் மாநகராட்சியுடன் இணைந்து, சுமார் 15,000 சதுர அடியில் அடர் வனம் அமைத்தோம்.

https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/salem-corpn-sets-up-urban-forests-under-jal-shakti-abyan/article28716871.ece

படங்கள் கீழே.
இணையம் மூலமாக இதைக் கண்ட அன்பு நண்பர் @albyjohnV IAS அவர்கள், சென்னையில் அண்ணா நூலகம் எதிரே Kotturpuram MRTS பின்புறம் அடர் வனம் அமைக்க ஆவன செய்தார். குப்பைமேடாக, சிமென்ட் குப்பைகளின் கூடாரமாக இருந்த இடத்தை அழகிய மாற்றத்திற்கான முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம்
நாங்கள் அடர் வனம் அமைக்கும் போது, திடக் கழிவுகளை மண்ணுக்கு உரமாக பயன்படுத்துவோம். அவ்வாறு பயன்படுத்தியதை கண்ட அப்பகுதி மக்கள், அதை எதிர்த்தனர். மூன்று மாதங்கள் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
பின், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் ஒத்துழைப்பால் மீண்டும் துவங்கினோம். @NewsJTamil , குமுதம் மற்றும் @polimernews ஆகிய செய்தி நிறுவனங்களில் வனம் அமைப்பதற்கு முன்னும் பின்னும் வெளியான காணொளிகள்.



கட்சி வேறுபாடு இன்றி, அனைவரும் மரம் நடும் நாளன்று, வந்து வாழ்த்திச் சென்றனர். அவ்வனம் குறித்து, Adyar Times எனும் இதழில் நேற்றைய தினம் வெளியான செய்திக்குறிப்பு.
நண்பர்களான உங்களுக்கு சாதாரணமாக மரம் நடுதலுக்கும் அடர் வனமாக அமைப்பதற்கும் வேறுபாடு புரியாமல் இருக்கலாம். அடர் வனமாக அமைக்கும் போது நாம் பெறும் நன்மைகள் பல.
✓ 10,000 சதுர அடி இடத்தில், சாதாரண முறையில் மரம் நட்டால், அதிகபட்சமாக 100 மரங்கள் வைக்க முடியும். ஆனால், அடர் வனமாக அமைக்கும் போது, 1,000 மரம், செடி, கொடிகள் சேர்த்து நட முடியும்.

✓ பல்லுயிர் பெருக்கம் நடக்க ஏதுவான ஒரு சூழலாக இது இருக்கும்.
✓ நம் பாரம்பரிய நாட்டு மரங்களை பாதுகாக்கும் சிறந்த முயற்சியாக இது.

✓ இங்கே வரும் பறவைகள் குருவிகளால் நம் நாட்டு மரங்கள் பல இடங்களில் உருவாகும். i.e., Propagation of native trees in an Enviro-friendly way using natural resources such as birds.
✓ சமாளிக்க முடியாத அளவுக்கு திடக்கழிவுகளை நாம் உற்பத்தி செய்கிறோம்.. அதை உபயோகிக்க இது ஒரு ஆகாசிறந்த வழி.

✓ கரியமில வாயுவை தனி மரத்தை விட 30% அதிகமாக உள்வாங்கி, உயிர் வாயுவான ஆக்சிஜனை அதிகளவில் வெளியிடும்.
✓ மழை நீரை வனம் போல சேமிக்க நம்மால் கூட முடியாது.

✓ காற்றில் உள்ள ஈரப் பதம் குறையாது அடர் வனம் பாதுகாத்து, வெப்பத்தைக் குறைக்கும்.

இன்னும் பலப்பல நன்மைகளை இது போன்ற வனம் நமக்கு கொடையளிக்க வல்லது.
அதிகளவில் கான்கிரீட் காடுகளை உருவாக்கும் நாம், அதில் சிறிதளவு மரம் கொண்ட காடுகளை அமைக்க விழைவோம்.

1,000 சதுர அடி போதும், ஒரு சிறு வனம் அமைக்க.. தேவை, ஆர்வம் இருப்போர் எங்களைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.
உலகளவில், வருடம் 13 மில்லியன் ஹெக்டேர் காடுகள் அழைக்கபடுகிறது. அதில் பாதி மட்டுமே, மீளுருவாக்கம் செய்யப்படுகிறது. மிச்ச 6.5 மில்லியன் ஹெக்டேர் காடுகள் அழிந்து விடுகிறது. இதனால் பருவ நிலை மாற்றம், புவி வெப்பமயமாதல், புதுக்கிருமிகள் என நாம் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறோம்.
2020ஆம் ஆண்டைப் பற்றி கேட்கவே வேண்டாம். உலகின் நுரையீரல் எனப்படும் அமேசானில் மனிதர்கள் மற்றும் தீயினால் 2020இல் மட்டும் சுமார் 700 சதுர கிமீ காடுகள் அழிக்கப்பட்டுள்ளது. Australia Kangaroo தீவில் இருக்கும் காடுகளில் தீ விபத்தினால், சுமார் 2,000 சதுர கிமீ காடுகள் அழிந்தது.
இயற்கை அன்னையை பாதுகாக்க, எங்களால் இயன்றதை செய்கிறோம். இதுவரை படித்து, பகிர்ந்து, தவறுகளை திருத்திக் கொள்ள உதவிய, வாழ்த்தி, வாழவைத்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் பணிவான நன்றிகள்.

தொடர்புக்கு: +91 8754303296, +91 8056714520
Mail: [email protected].
சில புகைப்படங்கள்:
@GKarvendhan இப்பணியில் இணைந்து பணியாற்றும் பார்ட்னர் இவரே. என்றும்

நம்பிக்கையை மட்டுமே என்னிடம் கடத்தும் நல்லுள்ளம். ♥️🙏
You can follow @EasyForester.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: