#சீமான் #கமல் ரெண்டு பேரும் தேர்தல் களத்துல இறங்கி அவுங்க பலம் எவ்வளவுன்னு தெரிஞ்சுக்கிட்டாங்க . சீமான் பல மேடைல வெளிப்படையாவே நாங்க இப்போ ஜெயிக்க போறதில்ல இன்னும் 20-25 வருஷம் ஆகும், ஆனா அதுவரை உழைப்போம்னு சொல்லிருக்காரு. திமுக அதிமுக பண பலம் என்னன்னு 1/9
சீமான்,கமல் நேர்ல பாத்திருக்காங்க & ஈடு கொடுக்க முடியாம தோல்வி அடஞ்சிருக்காங்க. இந்த ரெண்டு போலி திராவிட கழகங்கள் இல்லாத எதிர்க்கலாம் தான்,மாற்று அரசியல் தேடி பயணிக்கிற எல்லா கட்சிக்கும் ஆட்சி அமைக்க வாய்ப்பு தரும். இந்த சூழ்நிலையில ரஜினி வந்து,ஜெயிச்சு, ஆட்சிய புடிச்சா 2/9
அது எதிர்காலத்துல சீமான்/கமல்க்கு சாதகமா தான் அமையும். ரஜினி ஆட்சியில், நேர்மையற்ற கழக அரசியல் தொடர்வது கஷ்டம். சீமான்/கமல் ரெண்டு பேரும் நேர்மையான, மக்கள் நலன்ல அக்கறையுள்ள கட்சி நடத்துனா ரஜினி ஆட்சிலயும் அவுங்க அரசியல தாராளமா தொடர முடியும். கழகங்கள் இருக்கிற வரை இந்த 3/9
மாற்று அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பு 0% தான். ரஜினி தான் போலி திராவிட கட்சியை எதிர்க்க ஒரே வழின்னு சொல்றது ரஜினி மேல இருக்கிற ரசிக வெறினால இல்ல, வேற யாருக்கும் இந்த அளவு பரவலான மக்கள் செல்வாக்கு இல்லை அப்டிங்கிறனால.ரஜினிக்கு செல்வாக்கு இருக்குன்னு ஏத்துக்க மறுத்தீங்கன்னா கூட 4/9
பரவால்ல,கமல் சீமான் க்கு இப்போதைக்கு செல்வாக்கு இல்லன்னு போன தேர்தல் முடிவு உணர்த்திருக்கும். அப்டி பாத்தாலும் ரஜினி தான் உங்களுக்கு இருக்கிற நல்ல வாய்ப்பு. உங்களுக்கு 2021 ல வாய்ப்பு இல்லன்னு தெரிஞ்சும் ,விதண்டாவாதமா பேசி,போலி கவுரவத்துக்கு பலி ஆகி 5/9
ரஜினியை ஆதரிக்காம விட்டா உங்க வாய்ப்பு இன்னும் கை நழுவி போகும். "ரஜினி முதல்ல வரட்டும் அப்புறம் பேசுங்க" னு smart ஆ பேசுற ஆளா இருந்தா அது வரை ரஜினிய பேச விட்டு, போலி திராவிடத்து மேல மட்டும் எதிர்ப்பை காட்டுவீங்கன்னு நம்புறேன். ரஜினியை வெச்சு திமுக அதிமுக வ அடிக்கிறது 6/9
உங்களுக்கும் சாதகம் தான்னு புரிஞ்சுக்குவீங்க. நீங்க எவ்ளோ தான் ரஜினியை வெறுத்தாலும் , போலி கழகங்கள விட ரஜினி எவ்வளவோ மேல் ன்னு உங்களுக்கும் தெரியும். மாற்று அரசியல், நேர்மையான அரசியல், மக்கள் நலன் சார்ந்த அரசியல் நீங்க தரணும்ன்னு ஆசை பட்டீங்கன்னா , புடிக்குதோ புடிக்கலையோ 7/9
, ரஜினியோட வெற்றி தான் உங்களுக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்தி தரும். ரஜினி எதிர்ப்புன்னு கண்மூடித்தனமா இருந்து, உங்க வாய்ப்பை நீங்களே கெடுத்துக்கிறது அவ்ளோ smart move இல்ல. உங்களுக்கு அரசியல் எதிர்காலம் இருக்கணும்ன்னு ஆசை இருந்தா, 8/9
அரசியல் எதிர்காலம் இருக்கணும்ன்னு ஆசை இருந்தா, இருக்குன்னு நம்பிக்கை இருந்தா, இந்த தேர்தல்ல உங்க வாக்கு ரஜினிக்கு தான் இருக்கும். Now or Never