

C.N அண்ணாதுரை


பார்ப்பனச் சேரியா? அரசாங்க அலுவலகமா?
இன்ஜினீயர் இலாக்கா
சர்க்கார் வெளியிட்ட சிவில் லிஸ்ட்படி சீப் இன்ஜினியர்கள் 3 பேர். 3 பேரும் பார்ப்பனர்களே , தோழர்கள் சம்பளம்
இவர்களுக்குக் கீழ் வேலை செய்யும் திராவிட கீழ் ஆபீசர்கள் உருப்படி ஆகி முன்னுக்கு வர முடியுமா?
எக்ஸியூட்டிவ் இன்ஜினியர் இலாக்கா
எக்ஸியூட்டிவ் இன்ஜினியர் இலாக்கா
இன்று 1940 முதல் 50 வரை 10 வருஷம் கழிந்த பின்பு – பார்ப்பனரும் நாமும் சற்றேறக் குறைய சரிசமம்தான் ஆகி இருக்கலாம். அதுவும்மேல் உத்தியோகங்களில் இஞ்ஜினீயர் இலாக்காவில், வைத்திய இலாகாவில், நீதி, மின்சார முதலிய இலாகாவில் பார்ப்பனர் 100-க்கு 75, 80, 90 வீதம் அமர்ந்திருக்கிறார்கள்.
உதாரணமாக, 1950 ஜனவரியில் சர்க்கார் பிரசுரித்த உத்தியோக விவர பட்டியல்படி:- ஐகோர்ட் ஜட்ஜூகளில் இந்துக்கள் 12 பேர்கள், இதில் பார்ப்பனர் 7 பேர்கள்; திராவிடர் 5 பேர்கள்தான்.
ஹைகோர்ட் ரெஜிஸ்ட்ரார் முதலிய பெரிய உத்தியோகம் இந்துக்கள் 8-ல்,
பார்ப்பனர்கள்- 5
திராவிடர்கள்-3
ஹைகோர்ட் ரெஜிஸ்ட்ரார் முதலிய பெரிய உத்தியோகம் இந்துக்கள் 8-ல்,
பார்ப்பனர்கள்- 5
திராவிடர்கள்-3
அபிஷியல் அசைனி உத்யோகம் 2-இல் இரண்டு பேரும் பார்ப்பனர்களே
லா ஆபீசர்கள் இந்துக்கள் 10-இல்
பார்ப்பனர்கள்-6
திராவிடர்கள்-4
லா ஆபீசர்கள் இந்துக்கள் 10-இல்
பார்ப்பனர்கள்-6
திராவிடர்கள்-4
சிட்டி சிவில் கோர்ட் ஜர்ஜூகள் மொத்தம் 2 உத்தியோகங்களில் 2-ம் பார்ப்பனர்களே
சிட்டி சிவில் ஸ்மால்காஸ் கோர்ட் ஜட்ஜூகளில் இந்துக்கள் 2-இல்
பார்ப்பனர்-1
திராவிடர்-1
சிட்டி சிவில் ஸ்மால்காஸ் கோர்ட் ஜட்ஜூகளில் இந்துக்கள் 2-இல்
பார்ப்பனர்-1
திராவிடர்-1
ஜில்லா ஜட்ஜூகள் இந்துக்கள் 20-இல்
பார்ப்பனர்கள்- 14
திராவிடர்கள் -6 தான்
பார்ப்பனர்கள்- 14
திராவிடர்கள் -6 தான்
சப்ஜட்ஜூகள் இந்துக்கள் 33-இல்
பார்ப்பனர்கள்-22
திராவிடர்கள்- 11
சப்ஜட்ஜூகள் ஆக்டிங்கு இந்துக்கள் பதவி 45-இல்
பார்ப்பனர்கள்-20
திராவிடர்கள்-25
பார்ப்பனர்கள்-22
திராவிடர்கள்- 11
சப்ஜட்ஜூகள் ஆக்டிங்கு இந்துக்கள் பதவி 45-இல்
பார்ப்பனர்கள்-20
திராவிடர்கள்-25
இதில் திராவிடர் 5 ஆதிக்கத்துக்குக் காரணம் சமூக நீதி ஜீ.ஓ வை இதில் சிறிது நாளாக அமுலாக்குவதால் தான். அதுவும் அவர்கள் ஜனவிகிதபடி 1 1/4 பெற வேண்டியதற்கு 20 பெற்று இருக்கிறார்கள்.
முனிசீப்புகள் நிரந்தரம் இந்துவில் பதவி 86-இல்
பார்ப்பனர்கள் 34
இந்தப் பேதம் சமூக நீதி ஜி.ஓ
திராவிடர்கள் 52
இதில் பயன்படுத்தியதால்
அப்படி இருந்தாலும் பார்ப்பனர் எண்ணிக்கைப்படி 86-க்கு 3 பதவி தான் உண்டு. கம்யூனல் ஜீ.ஓ படி பார்ப்பனருக்கு 12 பதவி தான் உண்டு
பார்ப்பனர்கள் 34
இந்தப் பேதம் சமூக நீதி ஜி.ஓ
திராவிடர்கள் 52
இதில் பயன்படுத்தியதால்
அப்படி இருந்தாலும் பார்ப்பனர் எண்ணிக்கைப்படி 86-க்கு 3 பதவி தான் உண்டு. கம்யூனல் ஜீ.ஓ படி பார்ப்பனருக்கு 12 பதவி தான் உண்டு
தற்கால முனிசீப்புகளில் இந்துக்கள் பதவி 63-இல்
பார்ப்பனர் 21
இந்தப் பேதமும் கம்யூனல் ஜீ.ஓ
திராவிடர் 42
அனுசரிப்பதால் ஏற்பட்டதாகும்.
மேற்கண்ட புள்ளி விவரம் நீதி இலாக்காவில் உள்ள புள்ளிகளாகும்.
பார்ப்பனர் 21
இந்தப் பேதமும் கம்யூனல் ஜீ.ஓ
திராவிடர் 42
அனுசரிப்பதால் ஏற்பட்டதாகும்.
மேற்கண்ட புள்ளி விவரம் நீதி இலாக்காவில் உள்ள புள்ளிகளாகும்.
நிர்வாக இலாக்காவைப் பற்றிய புள்ளி விவரமாவது-நிர்வாகத்தில் தலைமைப் பதவி I. C. S பதவி ஆகும்.அதில் இந்துக்கள் பதவி 62-இல்
பார்ப்பனர் 45
திராவிடர் 17
பார்ப்பனர் 45
திராவிடர் 17
இந்த 17-ல் மலையாள திராவிடர் 11 போக, தமிழ் ஆந்திரர் 6 தான். இந்த 6-லும் ஒருவர் சிலோன்காரர்; மீதி 5 தான். ஆகவே I.CS. என்கிற சர்வ அதிகாரம் உள்ள பதவிகளில் பார்ப்பனர் இன்றும் 100-க்கு 75-க்கு மேல் பெற்று இருக்கிறார்கள்.
(மற்ற விபரம் பின்னால் வரும்) இந்தப்படி அவர்கள் அனுபவித்துக் கொண்டு நாம் பெற்று இருக்கும் ஒரு சில பதவிகள் “வகுப்பு துவேஷத்தின்மீது” பெற்றதாகப் பத்திரிகை மூலம், கோர்ட்டு மூலம் புகார் கூறுகிறார்கள்.
காந்திஜிக்கு அல்லாடி கோஷ்டி துரோகம்
தோழர் எஸ்.எஸ்.மாரிசாமி அவர்களை ஆசிரியராகக் கொண்டுள்ள தமிழ் வார இதழான ‘காண்டிபம்’, கம்யூனல் ஜி.ஓ. இந்திய அரசியல் சட்ட விதிக்கு முரணானது என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கண்டு, 4-8-1950-ல் நீண்டதோர் கட்டுரை தீட்டியுள்ளது.
தோழர் எஸ்.எஸ்.மாரிசாமி அவர்களை ஆசிரியராகக் கொண்டுள்ள தமிழ் வார இதழான ‘காண்டிபம்’, கம்யூனல் ஜி.ஓ. இந்திய அரசியல் சட்ட விதிக்கு முரணானது என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கண்டு, 4-8-1950-ல் நீண்டதோர் கட்டுரை தீட்டியுள்ளது.
அது ஒரு தேசீய ஏடு. அக்கட்டுரையில் காணப்படும் சில முக்கிய பகுதிகளை அப்படியே தருகிறோம்.
மொத்த ஸ்தானங்கள் 14 என்று வைத்துக்கொண்டால்:
மொத்த ஸ்தானங்கள் 14 என்று வைத்துக்கொண்டால்:
இதுதான் வகுப்புவாரிப் பிரதிநிதித் துவத்தின்படி பள்ளிக்கூட ஸ்தானங்களை ஒதுக்கும் விதி. 70 சதவிகிதத்துக்கு 6+2 ஸ்தானங்கள் தான் என்னும்போது இரண்டே முக்காலுக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு 2 ஸ்தானங்கள் தருவது குறைவு என்றால் இதை முட்டாள் கூட ஏற்க மாட்டான்.
அதேபோல 16, 3 % இருக்கும் ஹரி ஜனங்களுக்கும், பிராமணர்களுக்கும் ஒரே விகிதத்தில் 2 ஸ்தானங்கள் ஒதுக்கப்படுகின்றன என்றால் இது அநியாயமென்பதை சாதாரண ஆட்கள் கூட ஒப்புக் கொள்ளுவார்கள். 2.7 சதவிகிதத்துக்கு 2 ஸ்தானங்கள் என்றால் 16.3 சத விகிதத்தினருக்கு 16 ஸ்தானங்கள் அல்லவா தரவேண்டும்?
திடுக்கிடக் காரணம்
வழக்கு விசாரணையையும், குறுக்குக் கேள்விகளையும் பார்த்த பொழுது தீர்ப்பு இப்படித்தானிருக்குமென பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. எனவே தீர்ப்பு நம்மை ஆச்சரியத்தில் வைக்கவில்லை. ஆனால் ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் நம்மை திடுக்கிட வைக்கிறது.
வழக்கு விசாரணையையும், குறுக்குக் கேள்விகளையும் பார்த்த பொழுது தீர்ப்பு இப்படித்தானிருக்குமென பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. எனவே தீர்ப்பு நம்மை ஆச்சரியத்தில் வைக்கவில்லை. ஆனால் ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் நம்மை திடுக்கிட வைக்கிறது.
மகாத்மா உயிரோடு இருக்கும்வரை ஹரிஜனங்கள், தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்றெல்லாம் கூறி வந்தவர்கள் இப்போது அந்த ஒடுக்கப்பட்டவரை இன்னும் ஒடுக்க முயற்சி செய்து வெற்றியும் பெற்றுவிட்டார்களே என்பதுதான நாம் திடுக்கிடக்காரணம்.
தகுதிப் பேச்சு
தகுதி என்ற முறையில் பரிட்சை நடந்தால் ஹரிஜனப் பிள்ளைகளும் பின்னணி பிராமணரல்லாதவர்களும் நிச்சயமாக வெற்றி பெறமாட்டார்கள். அப்படியனால் பிராமணரல்லாதவர்களும், ஹரிஜனங்களும் தகுதியற்றவர்களென்று அர்த்தமில்லை. சூழ்நிலையும், சந்தர்ப்ப வசதிகளும்தான் இப்போது தகுதிகளாக
தகுதி என்ற முறையில் பரிட்சை நடந்தால் ஹரிஜனப் பிள்ளைகளும் பின்னணி பிராமணரல்லாதவர்களும் நிச்சயமாக வெற்றி பெறமாட்டார்கள். அப்படியனால் பிராமணரல்லாதவர்களும், ஹரிஜனங்களும் தகுதியற்றவர்களென்று அர்த்தமில்லை. சூழ்நிலையும், சந்தர்ப்ப வசதிகளும்தான் இப்போது தகுதிகளாக
இருக்கின்றன. தகுதியை மட்டும் யோக்கியதையாக வைத்து பரீட்சை நடந்தால் வசதி பெற்றவர்கள்தான் முன்னேற முடியும். டிப்டி கலெக்டர் பிள்ளைதான் சாதாரண கிளர்க்காவாவது வரமுடியுமென்ற நிலை இத்தேசத்தில் இருக்கிறது.
நீடித்த வரலாறு
ஏற்கெனவே சமூக ஏணியில் மேல்படியில் உள்ளவர்கள்தான் உயர உயரப் போய்க் கொண்டிருக்கிறார்கள். பின்னணியில் உள்ளவர்கள் என்னதான் முயன்றாலும் போக முடியவில்லை. இந்தியாவின் சரித்திரத்தை நெடுகப் புரட்டிப் பார்த்தால் இந்த அவக்கேடு அனாதிகாலம் தொட்டு இருந்து வருகிறது என்பது
ஏற்கெனவே சமூக ஏணியில் மேல்படியில் உள்ளவர்கள்தான் உயர உயரப் போய்க் கொண்டிருக்கிறார்கள். பின்னணியில் உள்ளவர்கள் என்னதான் முயன்றாலும் போக முடியவில்லை. இந்தியாவின் சரித்திரத்தை நெடுகப் புரட்டிப் பார்த்தால் இந்த அவக்கேடு அனாதிகாலம் தொட்டு இருந்து வருகிறது என்பது
தெளிவாகத் தெரியும். முகலாயர் ஆட்சியில் முகலாயர்தான் முன்னேறினார்கள். பிஷ்வாக்கள் காலத்தில் பீஷ்வாக்கள்தான் முன்னேறினார்கள் என்று சரித்திரம் கூறுகிறது.
இதே மாதிரிதான் இந்த 20-ம் நூற்றாண்டிலும் நடந்து வருகிறது. உதாரணமாக வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம் அமுலுக்கு வரும் முன்னால் ஒரு தாலுகா ஆபீஸில் அய்யரோ, அய்யங்காரோ, பிள்ளையோ, முதலியாரோ, நாயுடுவோ, அல்லது வேறு யாருமோ பதவியில் இருந்தால் அவர்கள் தத்தம் வகுப்பாருக்குத் தான்
பதவிகளை வழங்கி வந்தார்கள். இதில் பிராமணர் பிராமணரல்லாதார் என்ற வித்தியாசமே இல்லை. வேண்டுமானால் ஒரு வகுப்பார் இதில் அதிக தீவிரமாக இருக்கலாம். இன்னொரு ஜாதிக்காரர் சற்று தீவிரம் மட்டுப்பட்டு இருக்கலாம். இந்த ஜாதியப் பற்று இல்லாமலிருந்தவர்கள் ரொம்ப அரிது. அப்படி அரிதாக
இருந்தவர்கள் அநேகமாக மேல் பதவிகளுக்கு வராமலிருந்தார்கள். அப்படியே வந்தாலும் குடத்துக்குள் வைத்த விளக்குபோல இருந்தனர்.
அப்பி இருந்தார்கள்
ஹிந்துக்களை மட்டும் தனியாகப் பிரித்து அதோடு பிராமணரை சதவிகிதம் போட்டுப் பார்த்தால் 3.8 சதவிகிதம் ஆகிறது.அதாவது 100 பேரில் 4 பேர் கூட
அப்பி இருந்தார்கள்
ஹிந்துக்களை மட்டும் தனியாகப் பிரித்து அதோடு பிராமணரை சதவிகிதம் போட்டுப் பார்த்தால் 3.8 சதவிகிதம் ஆகிறது.அதாவது 100 பேரில் 4 பேர் கூட
பிராமணர் இல்லை. இந்தக் குறுகிய தொகையினர் தான் 30 ஆண்டுகளுக்கு முன்னால் உயர்நீதி மன்றத்திலிருந்து சகல சர்க்கார். கட்டிடங்களிலும் அப்பியிருந்தார்கள். இதைக் கண்டு மற்ற வகுப்பார் கொதிப்படைந்திருந்தார்கள்.
படிப்பினை:
மெஜாரிட்டி வகுப்பின் கொதிப்புக்கு உள்ளான எந்த மைனாரிட்டி
படிப்பினை:
மெஜாரிட்டி வகுப்பின் கொதிப்புக்கு உள்ளான எந்த மைனாரிட்டி
வகுப்பு சுகமாக வாழமுடியாது. ஜெர்மனியில் யூதர் மீது எவ்வளவு வெறுப்பு இருந்ததோ அதே மாதிரி இங்கும் பிராமணர்மீது வெறுப்பு ஜெர்மணியில் பலாத்காரத்தில் இறங்கியது போல இங்கு இறங்கவில்லை. இப்படி இறங்காதபடி காத்தது வகுப்பு வாரிப் பிரதி நிதித்துவ உத்தரவு தான்.
மூண்ட தீ
ஆரம்பத்தில் இந்த உத்தரவு வருவதற்கு முன்னால் தேசத்தில் எந்த மாதிரி நிலைமை இருந்தது என்பதை நண்பர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். சைமன் கமிஷன் வந்த சமயம் சென்னையில் பிராமண சகோதரர்கள் தாக்குண்டதற்கு புறக்காரணங்கள் என்னவாக இருந்தாலும் அடிப்படைக் காரணம் ஜாதி வித்யாசம்தான்.
ஆரம்பத்தில் இந்த உத்தரவு வருவதற்கு முன்னால் தேசத்தில் எந்த மாதிரி நிலைமை இருந்தது என்பதை நண்பர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். சைமன் கமிஷன் வந்த சமயம் சென்னையில் பிராமண சகோதரர்கள் தாக்குண்டதற்கு புறக்காரணங்கள் என்னவாக இருந்தாலும் அடிப்படைக் காரணம் ஜாதி வித்யாசம்தான்.
பிராமணர் –பிராமணரல்லாதார் என்ற துவேஷமே வளராதபடி தென்னாட்டுத் தலைவர்கள் காத்தார்கள். வகுப்பு வெறியைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதிக்கம் பெற அலைந்தவர்களை அடக்கியதும், தேர்தலில் புறமுதுகிடச் செய்ததும் தமிழ் நாட்டு பிராமணரல்லாத தலைவர்கள் தான்.
இது குறைவாம்
இந்த வருஷம் இஞ்சினீயரிங், வைத்தியக் கல்லூரிகளில் கீழ்க் கண்டவாறு ஸ்தானங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த வருஷம் இஞ்சினீயரிங், வைத்தியக் கல்லூரிகளில் கீழ்க் கண்டவாறு ஸ்தானங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றன.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமைப்படி ஹரிஜனங்களுக்கு இன்னும் அதிகமான கிடைத்திருக்க வேண்டும். அதற்கு தோதாக ஹரிஜன மாணவர்கள் இல்லையாதலால், காலி ஸ்தானங்களைப் பெரும்பாலும் பிராமணப் பிள்ளைகளுக்கே தந்திருக்கிறார்கள். இப்படி செய்ததால்தான் 20 சதவிகிதம் பிராமணர்களுக்குக்
கிடைத்திருக்கிறது. இதைத்தான் குறைவு என்று சர் அல்லாடி சொல்லுகிறார் – ஸ்ரீனிவாச அய்யங்கார் கர்ஜிக்கிறார். ‘ஹிந்து-மித்திரன்’ போன்ற பிராமணப் பத்திரிகைகள் இதற்கு பக்கமேளம் கொட்டுகின்றன. கல்லூரிகளில் புராட்டஸ்டன்ட் கிறிஸ்துவர் நடத்தும் ‘கிறிஸ்டியன் காலேஜில்’ 1849-50ல் இண்டர்மிடியட்
வகுப்புக்கு 88 பிராமணர் சோக்கப் பட்டிருக்கிறார்கள். ஜனத்தொகையில் 70 சதவிதம் பேர் இருக்கும். பிராமணரல்லாதாரோ 87 இடங்களைத்தான் பிடித்திருக்கிறார்கள். இரண்டு வகுப்புக்கும் உள்ள வித்தியாசம் ஒன்றே ஒன்றுதான்!
ஜேஸுட் மிஷன்கார்கள் நடத்தும் “லயோலா காலேஜில்” அதே வகுப்புக்கு பிராமணர் 201 பேரும் பிராமணரல்லாதார் 174 பேரும் அனுமதி பெற்றிருக்கிறார்கள் இந்த வித்தியாசத்தையும் சர்.அல்லாடி களுக்கு சமர்ப்பிக்கிறோம். பிரஸிடென்ஸி காலேஜில் பி.ஏ.வகுப்புக்கு பிராமணர் 16-ஸ்தானங்களையும்
பிராமணரல்லாதார் 38-ம் பெற்றிருக்கிறார்கள். இது சர்க்காரே நிர்வகிக்கும் காலேஜ் என்பது கவனிக்கத்தக்கது. சாதாரண படிப்பு படிக்கும் இந்த காலேஜ்களில்தான் நிலைமை இப்படி என்றில்லை. மெடிகல் காலேஜிலும் இஞ்சினியரிங் காலேஜ்களிலும் இதுதான் நிலைமை. 1947-ல் மொத்த மெடிகல் காலேஜ்களில்
பிராமணர் 24.4 சதவிகிதமும் பிராமணரல்லாதார் 45.8 சதவிகிதமும் பெற்றிருக்கிறார்கள். இதே வருஷம் இஞ்சினீயரிங் காலேஜ்களில் பிராமணர் 25 சத விகிதமும் பிராமணரல்லாதார் 49.4 சதவிகிதமும் பெற்றிருக்கிறார்கள். 1949-50லும் இஞ்சினீயரிங் காலேஜ்களில் பிராமணர் இடம் பெற்ற சதவிகிதம் 205
பிராமணரல்லாதார் 35-4சத விகிதம்தான்.
இருவர் தேசீயம்
மூன்றாவதாக காட்டப் போகும் உதாரணம்தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்தரவின் அவசியத்தைத் தெளிவாக விளக்கி வைப்பதாகும் சென்னையில் உள்ள “விவேகானந்தர் காலேஜ் அனைவருக்கும் தெரியும். இதை நடத்துகிறவர்கள் பிராமணர்கள்.
இருவர் தேசீயம்
மூன்றாவதாக காட்டப் போகும் உதாரணம்தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்தரவின் அவசியத்தைத் தெளிவாக விளக்கி வைப்பதாகும் சென்னையில் உள்ள “விவேகானந்தர் காலேஜ் அனைவருக்கும் தெரியும். இதை நடத்துகிறவர்கள் பிராமணர்கள்.
இதில் 1949-50ம் வருஷத்துக்கு இன்டர்மீடியட் வகுப்புக்கு 268 பிராமணப் பிள்ளைகளும் 30 பிராமணரல்லாத “சூத்திரப் பிள்ளைகளும்” அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். விவேகானந்தர் கல்லூரிக்குப் போட்டியாக நடத்தப்படுவதாகக் கூறப்படும் (ஆனால் நாம் நம்பவில்லை) பச்சையப்பன் காலேஜில் 172
பிராமணர்களுக்கும் 828 பிராமணரல்லாதாருக்கும் ஸ்தானங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
மகத்தான துரோகம்:
இன்றைய ஹைக்கோர்ட் தீர்ப்பால் மகாத்மா கண்ணெனக் காத்திருந்த ஹரிஜனப் பிள்ளைகள் பள்ளிக்கூடங்களுக்குள் நுழைய முடியாது என்று ஏற்படுகிறது. மகாத்மாவை தேசத்தின் பிதாவென்றும் தந்தையென்றும்
மகத்தான துரோகம்:
இன்றைய ஹைக்கோர்ட் தீர்ப்பால் மகாத்மா கண்ணெனக் காத்திருந்த ஹரிஜனப் பிள்ளைகள் பள்ளிக்கூடங்களுக்குள் நுழைய முடியாது என்று ஏற்படுகிறது. மகாத்மாவை தேசத்தின் பிதாவென்றும் தந்தையென்றும்
வாய்க் கூசாமல் அழைக்கும் பக்தர்களே இந்த துரோகத்தைச் செய்கிறார்களென்றால் வேறென்ன வேண்டும்? 100க்கு 97 பேர் இருக்கும் தேச மக்கள் கல்வி அறிவின்றி வாழ 3 சதவிகிதப் பேர் ஆதிக்க வெறியோடு அலைந்தால் எந்தக் குடியரசு தான் குடியரசாக இருக்க முடியும். ஜார் காலத்தில் படித்தவர் பாமரரை
கசக்கிப் பிழிந்த நிலை, இந்தியாவிலும் குறிப்பாக தென்னிந்தியாவிலும் ஏற்படாது என்பது என்ன நிச்சயம்?
நீர் மேல் எழுத்து
ஜாதி, சமயமற்ற சர்க்கார் ஏற்பட்டிருக்கும் இந்நாளில் ஒரு ஜாதியார் மட்டும் உயர வரவும்; மற்றவர் அவர்களது காலடிப் புழுவெனக் கிடக்கவும் இருந்தால் நாட்டின் முன்னேற்றத்தை
நீர் மேல் எழுத்து
ஜாதி, சமயமற்ற சர்க்கார் ஏற்பட்டிருக்கும் இந்நாளில் ஒரு ஜாதியார் மட்டும் உயர வரவும்; மற்றவர் அவர்களது காலடிப் புழுவெனக் கிடக்கவும் இருந்தால் நாட்டின் முன்னேற்றத்தை
ஓடும் தண்ணீரில் தான் எழுத வேண்டும்.
பரிகாரம்:
வகுப்புகளின் ஜனத்தொகையின்படி அவரவர்களுக்குப் பள்ளிக்கூட இடங்களைப் பிடித்துத் தருவதாக இருக்க வேண்டும். இதற்காக அரசியலமைப்பைத் திருத்த வேண்டுமென்றால் திருத்தித் தான் ஆகவேண்டும். இதற்கான நடவடிக்கைகளுக்கு சென்னை சர்க்காரும்
பரிகாரம்:
வகுப்புகளின் ஜனத்தொகையின்படி அவரவர்களுக்குப் பள்ளிக்கூட இடங்களைப் பிடித்துத் தருவதாக இருக்க வேண்டும். இதற்காக அரசியலமைப்பைத் திருத்த வேண்டுமென்றால் திருத்தித் தான் ஆகவேண்டும். இதற்கான நடவடிக்கைகளுக்கு சென்னை சர்க்காரும்
பொது மக்களும் தயாராகவே இருக்க வேண்டும். இப்படிச் செய்யா திருக்கும்வரை தென்னிந்தியர், ஜார் காலத்து ரஷ்யா மாதிரியும், ஔரங்கசீப் காலத்து தர்பார் மண்டபம் மாதிரியாகவும் தானிருக்கும். இப்படி ஏற்படுவது
மகாத்மாவின் நெறிக்கும், இந்தியக் குடியரசு லட்சியத்துக்கும் நேர்விரோமானவை என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை.
அத்திப்பூ:
வழக்கு விசாரணையின் போது தாழ்த்தப்பட்டவர்களே ஏன் முன்னேறிக் கொண்டு வரக்கூடாது என்று நீதிபதிகள் சார்பில் கேட்கப்பட்டது. இன்டர்மிடியட்டோ, பி.எஸ்ஸியோ படிக்கும்
அத்திப்பூ:
வழக்கு விசாரணையின் போது தாழ்த்தப்பட்டவர்களே ஏன் முன்னேறிக் கொண்டு வரக்கூடாது என்று நீதிபதிகள் சார்பில் கேட்கப்பட்டது. இன்டர்மிடியட்டோ, பி.எஸ்ஸியோ படிக்கும்
பின்னணி சமூகத்தினர் இன்னும் சற்று முன்னேறி ‘தகுதி’ யோடு போட்டியிடலா மல்லவா என்று நீதிபதி விசுவநாத சாஸ்திரிகள் பின்னிப் பின்னிக் கேட்டார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் அம்பேத்காரை உதாரணத்துக்குக்கூட காட்டினார். 8 கோடிப் பேர் இருக்கும் தாழ்த்தப்பட்டவர் வகுப்பில்
மாதிரிக்காக ஒரு அம்பேத்காரைத்தான் பார்க்க முடிகிறது. ஆனால் 1,308,000 இருக்கும் பிராமணர்களிலோ எத்தனை விசுவநாத சாஸ்திரிகளையும், அல்லாடி களையும், ஸ்ரீனிவாச அய்யங்கார்களையும் பார்க்க முடிகிறது? இதற்கு கனம் நீதிபதி தீர்ப்பில் பதிலில்லை. தாழ்த்தப்பட்டவர்களைக் கைதூக்கி விடாமலே
அம்பேத்கார்கள் உற்பத்தியாவார்களென நினைப்பது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போலத்தான். பொய்க் கூக்குரலை விளக்கும் புள்ளி விவரம் தோழர் டி.எஸ். சொக்கலிங்கம் அவர்களை ஆசிரியராகக் கொண்டுள்ள. ‘தினசரி’ இதழ் 31-7-50-ல் எழுதியுள்ளதின் சுருக்கம். பிராமணர்கள் என்பதற்காக
சென்னை சர்க்கார் அச்சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மேல் படிப்புக்கான வசதியைக்வட அளிக்க மறுக்கிறது என்பது கூக்குரல். இதுபற்றி ஓயாது பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. இதே காரணத்தைக் காட்டி சர்க்காரின் வகுப்புவாரி வீதாசார உத்தரவை ஆட்சேபித்து சமீபத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
ஹைகோர்ட்டும், ஜாதி, மத, இன அடிப்படையில் காலேஜ்களில் அட்மிஷன் செய்வது இந்தியக் குடியரசுட அரசியல் 15 (1), 29(2) ஆகிய ஷரத்துகளுக்குப் பொருத்தமல்ல என்று தீர்ப்பளித்தது. வகுப்புவாரி வீதாசார உத்தரவு அரசியல் ஷரத்துக்கு பொருந்தாததாக இருக்கலாம். ஆனால் வகுப்பு வீதாசார உத்தரவு
பிராமணருக்கு காலேஜ்களில் கதவடைத்து விட்டதா? பிராமண வாலிபர்களுக்கு படிப்பு வசதி மறுக்கப்படுகிறது என்பது உண்மையா? இம்மாகாண ஜனத் தொகையில் 2, 7 சதவிகிதத்தினராகவுள்ள பிராமணர் 40 சதவிகித அட்மிஷன்களை காலேஜ்களில் பெறுகின்றனர். அதோடு சென்ற இரு வருஷங்களில் அட்மிஷன் பெறும் மாணவர்
தொகையும் அதிகரித்து வருகிறது. இந்த உண்மையை இக்கட்டுரையில் கண்ட புள்ளி விவரங்கள் வெட்ட வெளிச்சமாக்குகின்றன.
சென்னை நகர காலேஜிகளில் நிலைமை
சென்னை நகரிலுள்ள சில முக்கியமான காலேஜுகளில் மாணவர்கள் வகுப்புவாரியாக எவ்விதம் இடம் பெற்றிருக்கின்றனர் என்ற விவரத்தை கீழே காணும் புள்ளி விவரங்கள் தெளிவாக்குகின்றன. இந்த புள்ளி விவரங்களை அறிய, வெவ்வேறு விதமான நிர்வாகத் திற்குப் பட்ட சில காலேஜுகளே
சென்னை நகரிலுள்ள சில முக்கியமான காலேஜுகளில் மாணவர்கள் வகுப்புவாரியாக எவ்விதம் இடம் பெற்றிருக்கின்றனர் என்ற விவரத்தை கீழே காணும் புள்ளி விவரங்கள் தெளிவாக்குகின்றன. இந்த புள்ளி விவரங்களை அறிய, வெவ்வேறு விதமான நிர்வாகத் திற்குப் பட்ட சில காலேஜுகளே
எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. பல சமூகங்களிலும் எந்தெந்த சமூகத்திற்கு எந்தெந்த நிர்வாகம் அதிக சலுகை அளித்திருக்கிறது என்பதை கீழ்வரும் புள்ளி விவரங்கள் வெட்ட வெளிச்சமாக்கும்.
1949-50-ல் சேர்க்கப்பட்டோர் விவரம்
1949-50-ல் சேர்க்கப்பட்டோர் விவரம்
மெடிகல் இன்ஜினீயரிங் காலேஜ்கள்
தொழில் படிப்பு சம்பந்தமான கல்வி ஸ்தாபனங்களில் அதிகம் பேர் சேர ஆவல் கொள்ளும் காலேஜுகளில் இரண்டு மெடிகல் காலேஜும் இன்ஜினீயரிங் காலேஜும் தான். சர்க்கார் நிர்வாகத்தில் இம் மாகாணத்தில் 4 மெடிகல் காலேஜுகளும் 4 இன்ஜினீயரிங் காலேஜு களும் உள்ளன.
தொழில் படிப்பு சம்பந்தமான கல்வி ஸ்தாபனங்களில் அதிகம் பேர் சேர ஆவல் கொள்ளும் காலேஜுகளில் இரண்டு மெடிகல் காலேஜும் இன்ஜினீயரிங் காலேஜும் தான். சர்க்கார் நிர்வாகத்தில் இம் மாகாணத்தில் 4 மெடிகல் காலேஜுகளும் 4 இன்ஜினீயரிங் காலேஜு களும் உள்ளன.
இந்த காலேஜ்களில் 1947-ல் எந்தெந்த சமூக மணாவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள் என்ற விவரம் கீழே கொடுக்கப்படுகிறது.
இதில் எது அநியாயம்?
இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் புள்ளி விவரங்களிலிருந்து, சென்னை ராஜ்யத்தில் பல காலேஜுகளிலும் ஒவ்வொரு சமூகத்தையும் சேர்ந்த மாணவர்கள் எவ்வளவு பேருக்கு அட்மிஷன் கிடைத்திருக்கிறது என்பது நன்கு விளங்கும். 1949-50 இண்டர், மீடியட் வகுப்புகளில் சேர்ந்த மொத்த
இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் புள்ளி விவரங்களிலிருந்து, சென்னை ராஜ்யத்தில் பல காலேஜுகளிலும் ஒவ்வொரு சமூகத்தையும் சேர்ந்த மாணவர்கள் எவ்வளவு பேருக்கு அட்மிஷன் கிடைத்திருக்கிறது என்பது நன்கு விளங்கும். 1949-50 இண்டர், மீடியட் வகுப்புகளில் சேர்ந்த மொத்த
மாணவர்கள் 13,117 பேரில் 4,432 பேர் பிராமண மாணவர்கள். பி.ஏ.பி.காம் வகுப்புகளில் சேர்க்கப்பட்ட மொத்த மாணவர்கள் 3610 பேரில் 1394 பேர் பிராமணர்.காலேஜிகளில் பி.எஸ்ஸி, ஆனர்ஸ் வகுப்புகளில் படிக்கத்தான் அநேகம் மாணவர்கள் ஆவலுடன் வருகிறார்கள். ஆனால், இதில் எந்த சமூகத்திற்கும் அதிக சலுகை
கிடைத்திருக்கிறது? 1949–50ல் பி.எஸ்.ஸி வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கும் மொத்த மாணவர்கள் 1794 பேரில் 837 பேர் பிராமணர். பி.ஏ. ஆனர்ஸ் பி.எஸ்ஸி ஆனர்ஸ் வகுப்புகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கும் மொத்த மாணவர்கள் 656 பேரில் 318 பேர் பிராமணர்.
வர வர அதிகம்:
போன இரண்டு வருஷங்களில் காலேஜ்களில் அட்மிஷன் செய்யப்பட்டிருப்போரின் தொகையை கவனித்தால் பிராமண மாணவர்களின் தொகை அதிகரித்தே வந்திருக்கிறது என்பதும் நன்கு விளங்கும். கீழே கண்ட புள்ளி விவரத்தைப் பார்த்தால் நன்றாக புரியும்.
போன இரண்டு வருஷங்களில் காலேஜ்களில் அட்மிஷன் செய்யப்பட்டிருப்போரின் தொகையை கவனித்தால் பிராமண மாணவர்களின் தொகை அதிகரித்தே வந்திருக்கிறது என்பதும் நன்கு விளங்கும். கீழே கண்ட புள்ளி விவரத்தைப் பார்த்தால் நன்றாக புரியும்.
3 சதவிகிதத்திற்கு எத்தனை சதவிகிதம்?
இம்மாகாணத்தின் மொத்த ஜனத் தொகையில் இரண்டே முக்கால் சதவிகிதத்தினருக்கும் குறைவாகவே பிராமணர்களிருக்கிறாகள். ஆனால் காலேஜுகளில் சேர்க்கப்படும் மொத்த பிராமணரில் இந்த 2.7 சதவிகித சமூகத்தினருக்கு எத்தனை சதவிகித ஸ்தானங்கள் அளிக்கப் பட்டிருக்கின்றன.
இம்மாகாணத்தின் மொத்த ஜனத் தொகையில் இரண்டே முக்கால் சதவிகிதத்தினருக்கும் குறைவாகவே பிராமணர்களிருக்கிறாகள். ஆனால் காலேஜுகளில் சேர்க்கப்படும் மொத்த பிராமணரில் இந்த 2.7 சதவிகித சமூகத்தினருக்கு எத்தனை சதவிகித ஸ்தானங்கள் அளிக்கப் பட்டிருக்கின்றன.
எத்தனை சதவிகித ஸ்தானங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன என்பதை காட்டுவதே கீழே இருக்கும் புள்ளி விவரம்.
1949-50 ல்
1949-50 ல்
பிராமணர் என்பதற்காக பிராமண இளைஞர்களுக்கு படிக்கக்கூட வசதி மறுக்கப்படுகிறது என்று கூக்குரல் போடுகிறார்கள் அல்லவா? இக்கூக்குரல் நியாயம் என்பதற்கு ஏதாவது உண்மை உண்டா? இதுவரையில் கொடுக்கப்பட்டிருக்கும் புள்ளி விவரங்களைப் பார்க்கிறவர்கள் யாராவது பிராமணருக்கு வசதி மறுக்ப்படுகிறது என்று
யோக்கியமாக சொல்ல முடியுமா? மெடிகல் காலேஜ், இன்ஜினீரியங் காலேஜ்களில் பிராமணருக்கு இடம் மறுக்கப்படுகிறது என்றுதான் ரொம்ப ரொம்ப பலமாக கூக்குரல் போடுகிறார்கள். அந்த காலேஜுகளைப்பற்றிய புள்ளி விவரங்களை கவனித்தால் அவற்றிலுள்ள மொத்த இடங்களில 25 சதவிகிதம் பிராமணருக்கு கொடுக்கப்படுகிறது
என்பது நன்கு விளங்கும். இவ்விதம் பிராமணருக்கு ஒதுக்கி அளிக்கப்பட்டிருக்கும் இவ்வளவு ஸ்தானங்களில் பாதிகூட வேறு எந்த சமூகத்திற்கும் இல்லை என்பதும் கவனிக்க வேண்டியதாகும். கல்வித்துறையில் இந்திய கிறிஸ்தவர் சமூகம் முன்னேற்றமுள்ள சமூகம் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். இம்மாகாணத்தின்
மொத்த ஜனத் தொகையில் 3.7, சதவிகிதத்தினர் இந்திய கிறிஸ்தவர். ஆனால் பிராமணர் 2.7 சதவிகிதத்தினரே. எனினும் காலேஜுகளில் பிராமணருக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஸ்தானங்களில் மிகக் குறைவான ஸதானங்களையே இந்திய கிறிஸ்தவர் பெற்றிருக்கிறார்கள். மெடிகல் காலேஜுகளில் படிக்கும் மாணவர்களில்
16.6. சதவிகிதத்தினரே கிறிஸ்தவர்கள். ஆனால் 24.4 சத விகித மாணவர்கள் பிராமணர்கள். இன்ஜினீயிரிங் காலேஜ்களில் கிறிஸ்தவ மாணவர்கள் 10.4 சதவிகிதத்தினரென்றால் பிராமணர் 25 சதவிகிதத்தினர். காலேஜ்களில் மாணவர்களை சேர்க்கும் விஷயத்தில் வாஸ்தவத்தில் இப்பொழுது இருந்து வரும் நிலைமை என்ன
என்பது மாத்திரமே இக்கட்டுரையில் புள்ளி விவரங்களுடன் எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது. தங்களுடைய ஜனத்தொகைக்கு அதிகமாக அதுவும் மிதமிஞ்சி யார் அனுபவிக்கிறார்கள் என்பதை வாசகர்களே யூகித்துக் கொள்ளலாம். இந்த உண்மை விவரங்களையெல்லாம் அறிந்தபிறகும்கூட, குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்கு
படிக்கக்கூட உரிமை மறுக்கப்படுகிறது என்று யாராவது கூச்சல் போடுவார்களானால் அப்படிப்பட்டவர்களை ஒரே ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்றுதான் தோன்றும். “இந்த ராஜ்யத்தில் 97.3 சதவிகிதத்தினராக இருக்கும். மக்களுக்கு, அவர்களுடைய மேல் படிப்புக்கு இன்னும் எவ்வளவு குறைந்த இடம் அளித்தால்
போதுமென்று நினைக்கிறீர்கள்?” பிராமணர்களுக்கு மேல் படிப்பு வசதி மறுக்கப்படுகிறதென்று கூப்பாடு போடுபவர்களை இது தான் இனி கேட்கவேண்டும்.
முகாம் அமைக்கிறார்கள்:
“இம்மாகாணத்தில் பிராமணர்கள்மீது பிற வகுப்பாருக்குக் கெட்ட எண்ணம் ஏற்படும்படிச் செய்யப்பட்டு வருகிறது.
முகாம் அமைக்கிறார்கள்:
“இம்மாகாணத்தில் பிராமணர்கள்மீது பிற வகுப்பாருக்குக் கெட்ட எண்ணம் ஏற்படும்படிச் செய்யப்பட்டு வருகிறது.
இதை அலட்சியமாக விட்டுவிடக் கூடாது. முளையிலேயே கிள்ளிவிட வேண்டும்” சேலம் ‘பிராமண’ மாநாட்டினர் இவ்விதம் பேசியும், தீர்மானித்தும் இருக்கிறார்கள். ஏகாதிபத்ய தாசராக இருந்து பதவிகளில் புரண்டு பழுத்த கிழவராக இருக்கும் விஜயராகவாச்சாரியார் தலைமை தாங்கினார், இந்தத் தர்ப்பாசூரர்
மாநாட்டுக்கு! தென்னாட்டிலே பெரிய முதலாளியாகி உள்ள மோட்டார் சுந்தரம் அய்யங்கார், திறந்துவைத்தார் இந்தத் திருப்பிரம்மங்களின் மாநாட்டை! பிராமண மாநாடு; பிரம்மணீயத்தை எப்படி வளர்ப்பது, என்பதற்காக என்றால், பதவி காரணமாகவும், பணம் தேடுவது காரணமாகவும்,
படிப்படியாகப் ‘பிராமண தர்மத்தை’ இழந்து போக வேண்டிய நிலை பெற்று விட்டவர்கள், கூடிக் கலந்து பேசிப் பயன் என்ன? ‘பிராமணன்’ என்னவிதமாக இருக்கவேண்டும்-அவனுடைய வாழ்க்கை முறை எப்படி இருக்கவேண்டும் என்று அவர்கள் போற்றிப் புகழ்ந்து வரும் ஏடுகளிலே குறிப்பிட்டுள்ள இலட்சணங்களை
இழந்தவர்களும், அந்த இலட்சணங்களின்படி இந்நாட்களில் வாழமுடியாது என்பதை அறிந்து கொண்டவர்களும், மாநாடு கூடி, “பிராமணியத்தை” பாதுகாக்க முற்படுவது, மொட்டைத் தாதர்கள் கூடிக்கொண்டு, கூந்தலின் நேர்த்தியைப் பற்றிப் பேசி வழிவகுப்பது போன்றதுதான்! பிராமண தர்மத்தின் படி நடந்துகொள்ளாமல்,
ஆச்சாரத்தை அறியாமல், வாழ்ந்து வரும், தமது இனத்தவரை, அவர்களிலே ஆச்சார அனுஷ்டானம் அறிந்தவர்கள், அவைகளிலே அக்கறை கொண்டவர்கள், மீண்டும் அந்த ஆச்சாரம் துலங்கவேண்டும் என்பதிலே ஆவலுள்ளவர்கள், யாரார் எவ்வெவ்வகையில் என்ன காரணங்களால், பிராமணனுக்குரிய தர்மத்தினின்றும் வழுவி
விட்டிருக்கிறார்கள் என்பது பற்றிய விசாரணை நடத்தி, திருத்தம் கூறியோ, தண்டித்தோ அவர்களை, ‘பிராமண’ தர்ம மார்க்கத்துக்குத் திருப்பி அழைத்துச் செல்லும் திருப்பணியிலே ஈடுபட்டால், நமக்கு ஆட்சேபனை இல்லை-வேடிக்கையாக இருக்கும் “பிராமண தர்ம்த்தை” இழந்த பிராமணர்களின் பட்டியலை நாம்கூட,
மாநாட்டினரின் உபயோகத்துக்காகத் தரமுடியும் - அவர்கள் திடுக்கிடும் வகையான தகவல்களை, ஆதாரங் களைக் காட்ட முடியும். மாநாடு பிறகு நடைபெறுமா என்பதே சந்தேகம் ஆகிவிடும். ஏனெனில், “பிராமண தர்மம்” என்று அவர்களின் ஏடுகளிலே குறிப்பிட்டுள்ள முறையிலே வாழ்ந்து வரும் “பிராமணர்” நூற்றில் ஒருவர்
கூடக் கிடையாது. நமது பெண்கள் பரதநாட்டியம் ஆடுவது கூடாது - என்று துக்கத்துடன் பேச வேண்டிய நிலைக்கு வந்து விட்ட இந்நாளிலா, “பிராமண தர்மம்” பாதுகாக்கப்பட முடியும். உண்மையான “பிராமண தர்மம்” எப்படிப்பட்டது என்பதைப் பற்றி விவாதிக்காமலே, வாதத்துக்காக ஒப்புக்கொண்டு, நிச்சயமாகவே,
“பிராமண தர்மத்தை”க் காப்பாற்றும் நோக்கம் கொண்டிருந்தால், இப்போது கூட்டியது போன்ற மாநாடுதானா, அந்தத் “தர்மத்தை”க் காப்பாற்றக் கூடியவர்கள், என்று கேட்கிறோம். எப்படிப்பட்ட பழைமை மனப்போக்கினரும், இன்று அறிவர், பிராமணர்கள் பிராமணருக்கு உரிய தர்மத்தின்படி நடக்கவில்லை-
நடந்துகொள்ள முடிவதில்லை என்பதை. சற்றுத் தெளிவுள்ளவர்கள் அந்த நாட்களிலே, ‘பிராமணனுக்கு’க் குறித்துள்ள தர்மம் மட்டுமல்ல, எந்தக் குலத்துக்காகக் குறிப்பிடப்பட்டுள்ள தர்மமும், இக்காலத்திலே நடைமுறைக்கு ஏற்றதல்ல என்பதை அறிவர். தெளிவு இன்னும் சற்று அதிகமாகப் பெற்றவர்கள், குலதர்மத்தை
அனுசரிக்க முடியாது என்பதை மட்டுமல்ல, “குலதர்மம்” வகுக்கப்பட்ட காலம், சமுதாயத்தின் குழந்தைப்பருவ ஏற்பாடு - சமுதாயம் இன்று அடைந்துள்ள வளர்ச்சியிலே, அந்தத் தர்மங்கள் வெறும் கேலிக் கூத்துத்தான் என்பதை அறிவர். மேலும் கொஞ்சம் பகுத்தறிவு பெற்றவர்கள், இந்தக் குலத்தர்மம்-ஜாதி
ஆச்சாரம்-எனும் ஏற்பாடுகளே, சூதானவை சுரண்டல் முறை. ஒரு குலத்தின் உயர்வுக்காக வகுக்கப்பட்ட சூழ்ச்சித் திட்டம என்பதை அறிவர். சற்று மான உணர்ச்சி உள்ளவர்கள், இந்த முறையை முறியடிப்பதை, வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொள்வர். நிலைமை இப்படியிருக்க, பிராமணர்கள் மாநாடு கூட்டுகிறார்கள்.
பதவியில் புரண்ட ஒரு கிழவரையும் பணப் பெட்டிகளின் மீது படுத்துறங்கும் மற்றோர் பிரமுகரையும் அழைத்துக்கொண்டு, “பிராமண மாநாடு நடத்துகிறார்கள் என்றால், உண்மையில்,பிராமண தர்மத்தைக் காப்பாற்றவோ ஆச்சாரத்தை நிலைநிறுத்தவோ,அல்ல!
ஆனால் ஏன் கூடினார்கள்? அவர்களுக்கு உண்மையாகவே பழைய கால பிராமணராக, கோலத்தில் கோட்பாட்டில், வாழ்க்கையில், இருக்கும் நோக்கமா என்றால் நிச்சயமாக அது அல்ல- அவர்களின் நோக்கம் ஆச்சரியத்தைப் பற்றியதல்ல ஆதிக்கத்தைப் பற்றியது!
சமுதாயம் மாறிவிட்டது- மக்களின் மனப்போக்கு மாறிக் கொண்டே இருக்கிறது-இவர்களும் கூடத்தான்! இந்த மாறுதலின் காரணமாக, முன்பு இந்த ஜாதியாரால், எளிதிலே பெறமுடிந்த ஆதிக்கம் இன்று பெற முடியவில்லை. அதனால்தான் மாநாடு கூட்டுகிறார்கள்- மடிசஞ்சியின் மகத்துவத்தை மாநிலத்துக்கு அறிவிக்க அல்ல-
மயிலை திருவல்லிக் கோணிக்கே அறிவிக்க முடியாது- ஆதிக்கம் அழிந்து படுவதைத் தடுக்கும் முயற்சிக்காக மாநாடு கூட்டுகிறார்கள்.
'சேலம் பிராமண மாநாடு' ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு கூட்டம், நாட்டிலே ஏற்பட்டுவரும் புதிய போக்கின் காரணமாகத் தமது ஆக்கம் குறைவது கண்டு , கூடி அழுவதற்கும்-
'சேலம் பிராமண மாநாடு' ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு கூட்டம், நாட்டிலே ஏற்பட்டுவரும் புதிய போக்கின் காரணமாகத் தமது ஆக்கம் குறைவது கண்டு , கூடி அழுவதற்கும்-
ஆத்திரத்தைக் கொட்டிக் கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டதேயொழிய, உண்மையிலேயே, ‘பிராமண தர்மம்’ என்று ஏடுகளிலே குறிப்பிடப்பட்டுள்ள முறை பாழாகிறதே என்பதனால், மனம் பதறிக் கூட்டப்பட்ட மாநாடு அல்ல! ‘பிராமண மாநாட்டுக்கு’ பிராமண தர்மம் தெரிந்த நிபுணர்களல்ல முன்னணி நிறுத்தப்பட்டவர்கள்
- சர்க்காரிலே செல்வாக்கு உள்ள ஒரு, சர்! – ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் திட்டம் தயாரிக்கப்பட்டால். அதற்கான செலவுக்குப் பணம் தரக்கூடிய ஒரு முதலாளி - வேதம் ஓதித் தேர்ச்சிப் பெற்றவரோ, உபநிஷத்தின் உட்பொருளை அறிந்தவரோ, அல்ல, மாநாட்டுக்கு, முன்னணி நின்றவர்கள். ஒரு சமயம், தங்கள்
அச்சத்தைப் போக்கிக் கொள்ள ஆறுதல் பெற, அந்தச் ‘சர்’ரையும் ஒரு சீமானையும் கொண்டு வந்து நிறுத்தி அழகு பார்த்தனரோ என்னமோ, நாமறியோம்."
"ஒரு சமயம் அச்சமூட்டுகிறார்களோ,எமது ஆதிக்கத்தைக் குலைத்திட முயற்சிக்கும் பேர்வழிகளே! ஜாக்ரதை! இதோ பாருங்கள், எம்மிடம் உள்ள குல மணிகளை, சர். விஜயராகவாச்சாரியார் - சீமான் சுந்தரம் அய்யங்கார்! இவர்களைக் கொண்டு, உங்களை என்னென்ன பாடுபடுத்துகிறோம் பாரீர், என்று மிரட்டுகிறார்கள்
போலும்." காலம் உணராதவர்களாக இருப்பின் அவர்கள் அவ்விதம் எண்ணிக் கொள்ளவும் கூடும். ஆனால் இது‘சர்’கள், ‘சீமான்’கள், ஆகியோரின் சீற்றத்தைக் கண்டு சீர்திருத்தவாதி பயப்படும் காலமல்ல. ஒரு வகையிலே, பார்க்கும்போது “பிராமணர்கள்” தங்கள் ஆதிக்கத்தைப் புதுப்பித்துக்கொள்ள, ஒரு தனி முயற்சி
எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதே, நமக்குக் கிடைத்துவரும் வெற்றியின் அறிகுறி என்று கூறுவோம். பிரம்மஞான சங்கம் - சுதர் சமாஜம் - மகா ஜனசங்கம் - தேசியக் காங்கிரஸ் - என்ற பல்வேறு போர்வைகளும் பயனற்றுப் போய், பச்சையாகவே, ‘பிராமண மாநாடு’ நடத்த வேண்டிய நிலைக்கு வந்திருப்பதே, நமது
வெற்றிகளில் ஒன்று என்றே நாம் கருதுகிறோம். அதிலும் தங்கள் ஆதிக்கத்தைப் புதுப்பிக்க இவர்கள் என்ன செய்கிறார்களா? ‘யாகம் செய்து பூதத்தைக் கிளப்பி ஏவும் காரியமா? சாபம் கொடுத்து, சர்வ நாசத்தை ஏவும் காரியமா? அல்ல! அல்ல! அந்தக் காலம் மலையேறிவிட்டது! சர்ரையும் சீமானையும்
ஏவிப் பார்க்கிறார்கள்! - அதுவும் சர்களுக்கும் சீமான்களுக்கும் அஞ்சும் காலம் கருகிவிட்ட பிறகு! ‘மகா மேதாவிகள்’ என்று கூறுவர். இந்த ‘பிராமணர்களை!’ தவறு - மிக மிகத்தவறு - குதிரை பறி போனபிறகு கொட்டிலைப் பூட்டும் மந்த மதியீனனை விட, மட்டரகமான மனப்போக்கு ஏற்பட்டு விட்டது -
வீழ்ச்சியின் அறிகுறி. என்ன செய்து விடுவார் சர்.விஜயராகவர்! சர்க்காரிடம் தமக்குள்ள செல்வாக்கின் காரணமாக, வகுப்புவாரி நீதியை ரத்துச் செய்யச் சொல்வார்? இவ்வளவுதானே செய்வார்? இதுவும் முடிகிறதா - காங்கிரஸ் திராவிடர்கள் சும்மா இருந்து விடுவார்களாக என்பது வேறு பிரச்னை – முடிகிறது,
என்றே வைத்துக் கொண்டாலும், அதன் விளைவு என்ன ஆகும்?"
தீர்மானம் நிறைவேற்றினார்களே மாநாட்டில் பிராமண ஜாதியார் மீது மற்ற வகுப்பாருக்கு விரோத உணர்ச்சி ஊட்டப்படுகிறது. என்று அந்த விரோத உணர்ச்சியை ஊட்டிக் கொண்டிருக்க வேண்டியதில்லை எவரும்? தானாகத் தழைக்கும்! தடுக்க முடியாத அளவு
தீர்மானம் நிறைவேற்றினார்களே மாநாட்டில் பிராமண ஜாதியார் மீது மற்ற வகுப்பாருக்கு விரோத உணர்ச்சி ஊட்டப்படுகிறது. என்று அந்த விரோத உணர்ச்சியை ஊட்டிக் கொண்டிருக்க வேண்டியதில்லை எவரும்? தானாகத் தழைக்கும்! தடுக்க முடியாத அளவு
தழைக்கும்!! இப்போதாவது, வகுப்பு வாரியாக உத்தியோகம் தரும் முறையும் கல்வி வசதி ஏற்படுத்தித் தரும் முறையும் இருப்பதால், மற்ற வகுப்பார்களிலேயும், கல்வி பெறவும், உத்தியோகம் பெறவும் குறிப்பிடத்தக்க அளவுக்கு முடிகிற காரணத்தால், எங்கு பார்த்தாலும், ‘பிராமண ஆதிக்கம்’ என்ற பேச்சுக்கு
இருந்துவந்த பயங்கரச் சக்தி ஓரளவுக்குக் குறைந்திருக்கிறது. என்று பேச முடிகிறது - சாந்தி உண்டாக்கச் சவுகரியம் ஏற்படுகிறது. சர்ரையும் சக்கரச் சீமானையும் துணைகொண்டு வகுப்புவாரிப் பிரதி நிதித்துவ முறையை ரத்து செய்து விட்டால், பிறகு, அணைக்க முடியாத ‘ஜ்வாலை’ கிளம்பப் போகிறது!
இந்தக் கேட்டினைத்தான், தேடித்தேடி அழைக்கிறார்கள். தாராளமாகச் செய்யட்டும். நாம் தடுக்கப் போவதில்லை! சேலம் மாநாட்டின் மூலம் அவர்கள் ஏதாவது வெற்றி பெறுவது என்று ஆசைப்படுவதானால், நாம் முதலில் குறிப்பிட்டபடி, பழைய முறையை குலதர்மத்தைக்காப்பாற்றும் காரியத்திலே வெற்றி பெற முடியாது -
உத்யோகத்தைப் பறித்துக் கொண்டு அதன் மூலம் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, கம்யூனல் ஜி.ஓ.வை, ரத்து செய்ய வைப்பது என்ற வெற்றியைப் பெறலாம். நேரு சர்க்காரின் துணை கொண்டு, இந்த வெற்றியைப் பெறமுடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அந்த ‘வெற்றி’யே, தங்களுக்கு வீழ்ச்சியைத்
தரப்போகிறது என்பதை பாவம் உணரவில்லை! எதையோ, முளையிலேயே கிள்ளிவிட வேண்டும்’ என்று பேசினார்களே, அதற்காக, அவர்கள் கையாள நினைக்கும் காரியம், எங்கெங்கிருந்தெல்லாமோ அவர்களை எதிர்க்கும் சக்தியைக் கிளப்பிவிடும் விளைவைத் தான் உண்டாக்கப் போகிறது. வேண்டுமானால் செய்தே பார்த்து விடட்டும்.
உண்மையாகவே, நாம் இம்முறை, அவர்களின் மாநாடு உருப்படியான ஓர் காரியமாற்றும் என்று நம்பினோம் - நம்பும் விதமாக, சேலம் பிராமண சேவா சங்கச் செயலாளர் நடந்து கொண்டார். இந்தப் பேத உணர்ச்சியும் எதிப்புப் பேச்சம் இனியும் இருக்கத்தான் வேண்டுமா? ஏதேனும் ஓர் சமரசத்துக்கு வர இயலாதா,
தீர்க்கப்படவே முடியாத சிக்கல்களா உள்ளன என்று நாம், உண்மையாகவே சிந்திக்கும் ஓர் சூழ்நிலை உண்டாயிற்று, ஒரு சிறு சம்பவத்தின் காரமணாக. ஒரு திங்களுக்கு முன்பாக நமது தலைவர் பெரியார் இராமசாமிக்கு சேலம் பிராமண சேவா சங்கத் தலைவர், பால சுப்பிரமணிய அய்யர் என்பவர் ஓர் கடிதம் அனுப்பி
இருந்தார். நம் நாட்டிலே மேலோங்கி வரும், பார்ப்பன எதிர்ப் புணர்ச்சியைப் பற்றிய தமது கருத்தைத் தெரிவித்ததுடன், பெரியாரின் பெருந் தொண்டுகளைப் பாராட்டி, அவருடைய சீர்திருத்த நோக்கத்தைப் புகழ்ந்து, அவருடைய தலைமையின் கீழிருந்து பணிபுரியும் வாய்ப்புக் கிடைக்குமானால் அதனைப் பெரியதோர்
பாக்கியமாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுவிட்டு, பிராமண சேவா சங்கச் செயலாளர் சமரசமாகப் போவதற்கு வழி காணவும் சிக்கல்கள் இருப்பின் தீர்த்துக் கொள்ள முயற்சிப்பதற்கும். பெரியாருடன் நேரில் கலந்துபேசி விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்தச் சிறு சம்பவம், நமக்கு ஓர் நம்பிக்கையை
ஊட்டிற்று. குடந்தையில் நடைபெற்ற கூட்டத்திலே, பெரியார் அவர்களும் இக்கடிதத்தைக் குறிப்பிட்டு, சமரசமாகப் போவதிலே தமக்கு எப்போதுமே ஆட்சேபனை இருந்ததில்லை என்று பேசினார். இப்படிக் கடிதம் எழுதியவர், மாநாடு வட்டி, அதிலே மீண்டும் கனலைக் கக்குவதன் காரணம் என்ன? மாநாடுதான் கூட்டினாரே,
அதிலே, ‘கடிதத் தூது’ பற்றிப் பேசி, பெரியாரைச் சந்தித்துப்பேச, ஒரு தீர்மானம் நிறை வேற்றி, ஒரு சிறு கமிட்டி அமைத்திருந்தால், எவ்வளவு நல்லறிவு படைத்த கரியமாக இருந்திருக்கும். இதைச் செய்ய மறந்தார், சர்ரையும் சீமானையும் காட்டி, சல்லடம் கட்டிப்பார்க்கிறார். சேலம் பிராமண மாநாடு, அந்த
வகுப்பாருக்கு, இன்னமும், ஆதிக்க நோக்கம் இருப்பதை எடுத்துக் காட்டுவதற்குத்தான் பயன் பட்டதே ஒழிய, ‘பிற வகுப்பாருக்கு உள்ள கெட்ட எண்ணத்தை’ப் போக்கப் பயன்படவில்லை, பயன்படாது! முகாம் அமைக்கிறார்கள் முப்புரியினர்- என்று தான் மக்களை எண்ணச் செய்யும், அவர்களின் மாநாடு.
-C.N.Annadurai
-C.N.Annadurai