Thread!

#NewEducationPolicy2020

ஆ.ராசா 2ஜி வழக்கில் வாதாடியதை பார்த்து இந்தியாவின் மிகப் பிரபலமான சீனியர் வழக்கறிஞர்களே மிரண்டுபோனார்கள். சிபிஐ வழக்கறிஞர்கள் ராசாவின் வாதங்களை எதிர்கொள்ளமுடியாமல் வாய்தா மேல் வாய்தா வாங்கினார்கள்.

#TNRejectsNEP

(1/8)
ஒரு கட்டத்தில் அவரை எதிர்கொள்ளமுடியாமல் “யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ அவர் இந்த வழக்கில் வெற்றி பெறட்டும்” என நீதிமன்றத்திலேயே பதிவு செய்தார் சிபிஐ வழக்கறிஞர். ஒட்டுமொத்த நாடும் தனக்கு திரும்புகிற அளவுக்கு சதி செய்யப்பட்ட வழக்கில்,

#TNRejectsNEP

(2/8)
ஆ.ராசா வாதாடிய விதத்தை வைத்துப் பார்க்கும் போது இந்தியாவின் மிகச்சிறந்த வழக்கறிஞர்களில் அவரும் ஒருவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அப்படிப்பட்ட அறிவுச்சுடர் ஆ.ராசா , "3ம் வகுப்பு , 5 ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு வைத்திருந்தால்,"

#TNRejectsNEP

(3/8)
"நான் எல்லாம் படிச்சு வழக்கறிஞராக ஆகியிருக்கமாட்டேன். நாடாளுமன்ற வாசல்படியில் கூட கால் வைத்திருக்க முடியாது" என்று சொல்கிறார்

இதுதான் யதார்த்தமான உண்மை. பள்ளி படிப்பில் சுமாராக இருந்த பலர் கல்லூரியில் சேர்ந்து ஒரு கட்டத்திற்கு பிறகு

#TNRejectsNEP

(4/8)
மிகச் சிறந்த திறன்மிக்கவர்களாக மாறுவதை நாம் ஒவ்வொருவரும் நமக்கு நன்கு தெரிந்தவர்களை வைத்தே கண்டிருக்கிறோம். என்னுடன் பள்ளியில் படித்தபோது ஒரு English poem ஐக்கூட spelling தெரியாமல் எழுத சிரமப்பட்ட , ப்ளஸ் டூ வில் தோல்வியடைந்த அந்த நபர் தற்போது MBA படித்து

#TNRejectsNEP

(5/8)
தமிழ்நாட்டின் பிரபலமான கம்பெனி ஒன்றில் விற்பனைபிரிவு மேலாளராக இருக்கிறார். நுனிநாக்கில் அவர் பேசும் ஆங்கில உச்சரிப்பை கண்டு அசந்துபோனேன். இதுபோல உங்கள் எல்லாருக்குமே பள்ளியில் படித்ததற்கும் தற்போது இருப்பதற்கும் நிறைய ஆச்சரியங்களைத்தரும் நபர்கள் இருப்பார்கள்

#TNRejectsNEP

(6/8)
ஒருவரது தகுதிகளையும் திறமைகளையும் வளர்ப்பது தான் பள்ளிகளின் கடமை. உனக்கு தகுதியில்லை என ஒதுக்குவதல்ல. பள்ளிப் படிப்பில் சுமாராக கூட படிக்காத பலர் பிற்பாடு மிகச் சிறந்த கல்விப்புலமை பெறுவதுண்டு.

#TNRejectsNEP

(7/8)
காவி பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை என்பது பள்ளியில் படிக்கும்போதே மாணவர்களை உளவியல் ரீதியாக தாக்கப்போகிறது. ஒரு சில விளைவுகளை எச்சரிக்கையாக சொல்லும் போது புரியாது. நடக்கும்போது அது மோசமான விளைவாக இருக்கும். இப்போதே விழித்துக் கொள்ளுங்கள்!

#TNRejectsNEP

(8/8)
You can follow @Surya_BornToWin.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: