இலங்கையில் ஒரு விவகாரம் வெடிக்கின்றது, விஷயம் இந்தியா இலங்கை செய்த 1987 ஒப்பந்தம் பற்றியது

இலங்கை தமிழருக்கு தீர்வினை கொடுக்கும் 1987 ஒப்பந்தபடி அவர்களின் 13ம் சட்ட பிரிவு திருத்தம் செய்யபட வேண்டும், இந்த சிக்கல்தான் இந்தியாவுக்கும் புலிகளுக்கும் முரண்பாட்டை கொடுத்தது
புலிகள் கேட்டது தனி நாடு இந்தியா உருவாக்க நினைத்தது தனி மாகாணம்

உன் நாட்டில் தமிழன் மாநிலம் எனும் பெயரில் அடிமையாய் இருப்பான், எம்மால் அப்படி இருக்க முடியாது என ஒப்பந்ததை கிழித்து போட்டான் பிரபாகரன், இந்தியாவோ ஓணான் எது வரை ஓடும் என்பது போல இதைதவிர தீர்வே இல்லை என
அதன் போக்கில் இருந்தது

2006 யுத்தமுடிவில் இந்தியாவின் ஒப்புதலின்றி அவர்களை மீறி புலிகளை ஒழிக்கமுடியாது என தெரிந்த ராஜபக்சே புலிகள் இல்லா இலங்கையில் தாம் 13ம் சட்டபிரிவினை திருத்துவதாக சம்மதம் தெரிவித்தார்

அப்படி இந்தியாவும் ஒப்புகொண்டு அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
எம்.கே நாராயணன் உட்பட பலர் பேசி முடிவு செய்துதான் யுத்தம் தொடங்கியது, அப்பக்கம் கோத்தபாயா கூட ஒப்புகொண்டிருந்தார்

இந்தியாவின் நிலைப்பாடு என்னவென்றால் புலிகள் ஒருகாலமும் தனிநாடு கோரிக்கையினை கைவிட்டு மாகாண நிலைப்பாட்டுக்கு வரபோவதில்லை, ராஜிவ் கொலை என்பது இந்தியாவின் தேசிய அவமானம்
அதை கடக்க முடியாது

இலங்கையில் இன்னொரு சக்தி கால் ஊன்றுவதை தடுக்க இலங்கை அரசு அவசியம் புலிகளை நம்ப முடியாது" எனும் ரீதியில் இருந்தது

ஆனால் இந்திய உளவு அமைப்பான ரா புலிகள் பலமிழந்தால் போதும், பிரபாகரன் இல்லா புலி இயக்கம் போதும், சிங்களன் இப்பொழுது இப்படி சொல்லலாம் ஆனால் புலிகள்
அழிந்தபின் அவன் மாறிவிடுவான் என கணக்கிட்டது

இதை உணர்ந்த பிரபாகரன் தன் இயக்கம் ஒரு காலமும் தனி மாகாணம் அமைக்க கூடாது என்ற நல்லெண்ணத்தில் இயக்கத்தை முற்றாக அழித்துவிட்டு தானும் செத்துவிட்டான்

அந்த யுத்தம் சில வாரங்களிலே முடிந்திருக்கும், ஆனால் 2006ல் தொடங்கிய யுத்தம் 2009 வரை
நீண்டது ஒரு நாட்டு உளவுதுறையின் விளையாட்டு என்பது உலகுக்கு என்றோ தெரிந்த ஒன்று

பின் புலிகள் ஒழிக்கபட்டு இந்தியா 13ம் சட்டத்தை திருத்த சொன்னதும் தன் பிரத்யோக சிரிப்பை சிரித்தபடி ராஜபக்சே சொன்னான் "இனிதான் புலிகள் இல்லையே, தமிழ்மக்கள் யாரும் சட்டத்தை திருத்த கோரவில்லையே,
பின்னர் ஏன் திருத்த வேண்டும்?"

ஆம், இந்திய உளவுதுறை அஞ்சியதுதான் நடந்தது. சோனியா அரசு அவர்களிடம் ஏமாந்தது. தன் நாட்டில் இந்தியா தீவிரவாதத்தை பரப்பி பெரும் அழிவினை கொடுத்தது என்ற தீரா கோபத்தில் சகுனி போல் இருக்கும் இலங்கையினை காங்கிரஸ் அரசு நம்பியது பெரும் தவறு.
ஒழுங்காக ராமாயணம் படிக்காவிட்டால் இப்படித்தான் ஆகும்..

அதன் பின் மன்மோகன் சிங்கும் சோனியாவும் அவர்கள் போக்கில் இருக்க, பின் ஒரு லட்சத்து எழுபத்தையாரம் கோடியினை இந்தியா எண்ணிகொண்டிருக்க எல்லாம் எல்லோருக்கும் மறந்தது

ஆனால் மோடி அரசு விடவே இல்லை , ஒப்புகொண்டபடி இப்பொழுது அதை
செய்யுங்கள் என அழுத்தம் கொடுக்க தொடங்கிவிட்டது

அழுத்தம் கொடுத்துவிட்டதே தவிர அதை அங்கு அழுத்தி சொல்ல யாருமில்லை , புலிகளுமில்லை இதர குழுக்களும் இல்லை எல்லாம் பிரபாகரனால் நாசமாயிற்று. அங்குள்ள அரசியல்வாதிகள் நம்ம ஊர் திமுக கோஷ்டிகளை விட மோசம்

இனி இலங்கையில் இந்திய பிடி இருக்க
ஒரு குழு அவசியம் ஆனால் இனியொரு தீவிரவாத குழுவினை உருவாக்க முடியாது, ஆனால் செய்தாக வேண்டும், என்ன செய்யலாம் என யோசித்த இந்திய தரப்பு புன்னகைக்கின்றது

அவர்கள் பார்வையில் பிரபாகரனிடம் பயிற்சி பெற்ற ஒரே ஒரு நபர்தான் இருக்கின்றார் அதுவும் இந்தியாவில் பாதுகாப்பாக இருக்க்கின்றார்
அவரிடம் "இன விடுதலை" அடையவேண்டி போராட லட்சகணக்கான தொண்டர் படை உண்டு, இது போக இந்திய ராணுவத்தில் சிலரே "நெய்தல் படை" என ஒன்றை ரகசியமாக வைத்திருக்கின்றனர்

இப்படி பல தகவல்கள் கசிய இலங்கை அரசு அதிர்ந்து நிற்கின்றது, ஆம் விரைவில் நாம் தமிழர் அங்கிள் சைமன் புலிகொடி ஒரு கையிலும்
ஒரு கையில் ஏ கே 74 ஏந்தியபடி தன் பெரும் படையோடு இலங்கை செல்வார், அங்கு ஆமைகறியோடு சிங்களன் நிற்பானா காட்டுபன்றி கறியோடு நிற்பானா என்பது தெரியவில்லை

சீமானுக்கு முன் நாம் தமிழர் கட்சியின் சமாதான தூதரான மன்சூர் அலிகான் பேச்சுவார்த்தை நடத்தினாலும் நடத்தலாம்
எப்படியோ "இன விடுதலை" அடைய வேண்டி களமாட‌ தும்பிகளுக்கு நேரம் நெருங்கிவிட்டது. அதே நேரம் ஈழகடலின் ஆமைகளையும் இறாலையும் காக்க சர்வதேச உயிரியல் அமைப்பும் பெரும் கவலை தெரிவித்துள்ளதும் குறிப்பிடதக்கது
You can follow @Wolfrik1.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: