செஹண்ட் ஹாண்டல கார் வாங்க போறவங்களா நீங்க? இந்த thread உங்களுக்கானது.
Read and RT
இந்திய மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு கனவு
1.வீடு கட்டணும்
2. கார் வாங்கணும்
அந்தளவுக்கு கார் ஆடம்பரத்துல இருந்து அத்தியாவசியத்துக்கு மாறுடுச்சு. வீடு கட்ட கூட பல லட்சங்கள் செலவாகும்.
Read and RT
இந்திய மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு கனவு
1.வீடு கட்டணும்
2. கார் வாங்கணும்
அந்தளவுக்கு கார் ஆடம்பரத்துல இருந்து அத்தியாவசியத்துக்கு மாறுடுச்சு. வீடு கட்ட கூட பல லட்சங்கள் செலவாகும்.
ஆனா 50000 இருந்தா உடனே கார் வாங்கலாம். உங்களோட 2 வது கனவு நிறைவேறிடும். விஷயம் அது இல்ல.
சொல்லவே வேண்டாம் யூஸ்டு கார் வாங்குறவங்க 95 % மிடில்கிளாஸ் தான். நீங்க ஒரு கார வாங்குறதுக்கு வீட்ல அப்பா, அம்மா, பொண்டாட்டி வர ஆட்சேபம் தெரிவிப்பாங்க. அந்த காச பேங்ல இருக்குற நகைய
சொல்லவே வேண்டாம் யூஸ்டு கார் வாங்குறவங்க 95 % மிடில்கிளாஸ் தான். நீங்க ஒரு கார வாங்குறதுக்கு வீட்ல அப்பா, அம்மா, பொண்டாட்டி வர ஆட்சேபம் தெரிவிப்பாங்க. அந்த காச பேங்ல இருக்குற நகைய
திருப்புங்கனு ஒயிப் சொல்லுவாங்க. 4 செண்ட் நிலம் வாங்கி போடுடானு அப்பா சொல்வாரு. எல்லாத்தையும் மீறி ஒரு கார் வாங்குவீங்க. அந்த கார் எப்படி இருக்கணுமுனு தான் நான் எனக்கு தெரிஞ்சத சொல்றேன். யூஸ்டு கார் வாங்குறது 60% உங்க அதிர்ஷ்டத்த பொருத்தது. 40% நீங்க தேர்ந்தேடுக்குறது.
நண்பேண்டா அப்படினு ஒருத்தன் கூட இருப்பான். அவனும் ஒரு யூஸ்டு கார் வாங்கி 2 வருஷமாதான் ஓட்டிட்டு இருப்பான். ஆனா உங்களுக்கு தெரிஞ்ச மிக பெரிய கார் இஞ்சிநேயரே அவந்தானு அவன கூட்டிகிட்டு போய் கார் பாப்பீங்க. ஆனா அவருக்கும் சைலன்சர்ல புகை கருப்பா வருதா இல்லையா தவிர எதும் பாக்க தெரியாது
கார் வாங்குறதுல 3 விஷயம் இருக்கு.
1. பட்ஜெட்
2. காரின் தரம்
3. பிராண்டு
1. யூஸ்டு கார் எந்த ஒரு காரணத்துக்காகவும் EMI கட்டுற மாதிரி வாங்காதிங்க. பை சான்ஸ் உங்க கார் சரியில்லனா நீங்க நெனச்சாலும் அத விக்க முடியாது. ஒரு வேலை உங்கள் வாழ்க்கை தரம் உயர்ந்துருச்சு நீங்க புது கார்

வாங்கனுமுனு நினைச்சாலும் இந்த EMI உங்கள தொந்தரவு பண்ணும். கார் வாங்கிட்டோமுனு சொந்தக்காரங்ககிட்ட பெருமை பேசிட்டு நீங்க அவங்கள கூட்டுகிட்டு பக்கத்து ஊருக்கு போறப்ப பிரேக் டவுன் ஆச்சுனா அவ்வளவுதான் உங்க இமேஜ் குளோஸ். ரொம்ப கஞ்சதனம் ரொம்ப விளைவு மட்டும் இல்ல ரொம்ப மன உளைச்சல்
கொண்டு வந்துடும். என்னோட ரெக்கமெண்டேசன் மினிமம் 1.75 லட்சம் கம்மியா கார் வாங்காதீங்க. காசு இல்லனா அமைதியா இருங்க. இருக்க காசுக்கு வாங்குறேனு நிம்மதிய தொலைச்சுடாதிங்க.
2. கார் தரம்.
3 நாள் திருப்பதி டூர் போக பிளான் பண்ணி குடும்பமே கிளம்புனோம். திருச்சில இருந்து 30 கி.மீ
2. கார் தரம்.
3 நாள் திருப்பதி டூர் போக பிளான் பண்ணி குடும்பமே கிளம்புனோம். திருச்சில இருந்து 30 கி.மீ
தாண்டுறோம். கிளட்ச் அவுட். வண்டி பிரேக் டவுன். குடும்பமே கவலைபட்டு வேற வண்டி புடிச்சு ரிட்டன் வீடு வந்தோம் சோ கார் தரம் ரொம்ப முக்கியம். இஞ்சின் நல்லாயிருந்தா கார் நல்லாயிருக்குனு அர்த்தம் இல்ல. கிளட்ச், சஸ்பென்சன், டயர், இன்ஸ்யூரன்ஸ், ஏசி, பேட்டரி, கியர் பாக்ஸ்னு எது
கை வச்சாலும் 5000 இருந்து 20000 வரை காலி. ஒன்னு தொட்டு ஒன்னு தொட்டு ஒன்னுனு செலவு இழுத்துகிட்டே போகும். சஸ்பென்சன்ல ஒரு பிராப்ளம்னா 3000, 4000 விலையுள்ள ஒரு டயரையே காலி பண்ணிடும். எல்லாமே இப்படி லிங்க் தான். கார வாங்குறப்ப அதோட அடக்க விலைய மட்டும் பாக்காதீங்க
வாங்குனதுக்கு அப்பறம் அதுக்கு எவ்வளவு செலவு பண்ணனுமுனு கணக்கு பண்ணி வாங்குங்க. சும்மா ஒரு சர்வீஸ் பண்ணுனா போதுமுனு உங்க மூளைய கழுவி உங்கள வாங்க வைக்க பாப்பாங்க. Front suspension, lower arm, end, ball joint மாத்தனுமுனா 20000 காலி.
பேட்டரி ஜார்ஜ் போட்டு நம்மகிட்ட வித்துருவானுங்க. கார் வாங்கி 2 வது நாள் காலைல வண்டி ஸ்டார்ட் ஆகாது. 5000 காலி. சோ எல்லாத்தையும் செக் பண்ணனும். வண்டி சர்வீஸ் ஹிஸ்ட்ரி கண்டிப்பா செக் பண்ணுங்க. 2010 மாடல் வெறும் 20000 கிமீ தான் ஓடிருக்கு செம்மையா இருக்குனு வாங்க கூடாது
நிறைய ஓடுன வண்டிய விட ஓடாமையே எடுக்காமையே இருக்க வண்டியும் ஆபத்து. டயரோட பிளக்ஸிபிலிட்டி இருக்காது. வாங்கி நீங்க 4 டயர், பேட்டரி எல்லாம் மாத்துற மாதிரி ஆயிடும்.
3. கார் பிராண்ட்
2012 Volkswagen Polo வெரும் 200000 தான். பிரண்டு ஸ்விப்ட் வச்சுருக்கான் அவன் விட ஒரு படி மேல
3. கார் பிராண்ட்
2012 Volkswagen Polo வெரும் 200000 தான். பிரண்டு ஸ்விப்ட் வச்சுருக்கான் அவன் விட ஒரு படி மேல
Extraordinary இருக்கனுமுனு VW போகுறது முக்கியமில்லை. சரியான சர்வீஸ்தான் ஈரோப் மற்றும் அமெரிக்கா கார்களுக்கு ரொம்ப முக்கியம். சரியா மெயிண்டைண்ட் பண்ணாத காரா இருந்தா சோழி முடிஞ்சுடுச்சு. Ford, Chevrolet, Volkswagen, skoda மாதிரி காரோட இன்ஜெக்டர் தான் அடிக்கடி ப்ராப்ளம் வரும்
4 இன்ஜெக்டர் 60000 வரும். கார விக்கவும் முடியாது சரி பண்ணாம விடவும் முடியாது. மிடில் கிளாஸ் க்கு 60000 எவ்வளவு பெரிய விஷயம். சுசூகி, ஹூண்டாய் இது மட்டும்தான் யூஸ்டு கார்க்கு செம்மையா ஒர்க் அவுட் ஆகும். செலவும் கம்மி ஸ்பேர் பார்ட்ஸ்ம் கிடைக்கும். டாடா, மஹிந்த்ரா பொருத்த வரை
நம்ம அதிர்ஷ்டம் மிக பெரிய ரோல் பண்ணும். கார பத்தி நல்லா எக்ஸ்பீரியன்ஸ் இருக்கவங்கள கூட்டிட்டு போய் வாங்குங்க. குறிப்பா டைரக்ட் ஓனர்ட்ட வாங்க டிரை பண்ணுங்க. டீலர்ட்ட போனா முடிஞ்ச அளவுக்கு ரொம்ப ரொம்ப கேர்புல்லா இருக்கணும். சும்மா 1000 ரூ தான் வருமுனு நீங்க நினைக்கிற விஷயம்
5000, 6000 நு வந்து நிக்கும் அதான் மோட்டார். ஆரம்பத்தில் முதல் கார் முடிஞ்ச அளவு பெட்ரோல் வண்டியாவே வாங்குங்க. ஓரளவு சேப்.
இன்னும் சொல்ல நிறைய இருக்கு இப்ப இது போதும்.
த்ரெட் புடிச்சா RT பண்ணுங்க. உங்களுக்கு கார் வாங்குறப்ப ஏதாவது சந்தேகம்னா எப்பனாலும் என்கிட்ட கேளுங்க.
இன்னும் சொல்ல நிறைய இருக்கு இப்ப இது போதும்.
த்ரெட் புடிச்சா RT பண்ணுங்க. உங்களுக்கு கார் வாங்குறப்ப ஏதாவது சந்தேகம்னா எப்பனாலும் என்கிட்ட கேளுங்க.
என்னால முடிஞ்சளவுக்கு உதவி பன்றேன்.
நன்றி
@ponram_ @aram_Gj @SKtwtz @bharath_kiddo @PrakashMahadev @itisprashanth @guruvetri1 @thirumarant @Riddletiger @Raittuvidu @monk_offi @_VarunKannan @teakkadai1
நன்றி
@ponram_ @aram_Gj @SKtwtz @bharath_kiddo @PrakashMahadev @itisprashanth @guruvetri1 @thirumarant @Riddletiger @Raittuvidu @monk_offi @_VarunKannan @teakkadai1