Thread
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👇" title="Rückhand Zeigefinger nach unten" aria-label="Emoji: Rückhand Zeigefinger nach unten">https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👇" title="Rückhand Zeigefinger nach unten" aria-label="Emoji: Rückhand Zeigefinger nach unten">https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👇" title="Rückhand Zeigefinger nach unten" aria-label="Emoji: Rückhand Zeigefinger nach unten">
புதிய கல்விக் கொள்கை 2020ல் நன்மைகள் இருக்குனு சிலபேர் சொன்னாலும்
நம்ம‌ அடிமடியில கை வைக்கிற மாதிரியான திட்டங்கள் தான் அதிகமா இருக்கு.

60பக்க வரைவை நான் Interpret பண்ணதை வச்சு இந்த Thread போடுறேன்.

திரும்பவும் சொல்றேன் இது நான் Interpret பண்ணது.
தவறுகள் இருக்கலாம்
1.6~ அங்கண்வாடில பணிபுரிகிற ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு
6 month Certificate Program
1 Year Diploma Program

சொல்லி தர்ற போறாங்கலாம்.

இவங்களுக்கு வகுப்புகள் பெரும்பாலும் Digital Mode ல தான் நடக்குமாம் அதாவது Smartphone மற்றும் DTH channels மூலமாக.
அதுல கண்டிப்பா 1 மாதம் நேரடி வகுப்புல கலந்துக்கனும்.
அங்கண்வாடி ஆசிரியர்களுக்கு வகுப்பு நடத்துனா அதுல ஒரு ஞாயம் இருக்கு.
சாதாரண ஊழியர்களுக்கு ஏன்?
பெரும்பாலான ஊழியர்கள் ஏழை குடும்பத்து விதவைகள் தான்.
அவங்களுக்கு Smartphone எட்டாத கனவு.
1.7~ மதிய உணவு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இல்லாம, அதுக்கு முந்தைய வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்த போறாங்கலாம்.

இதுலாம் ஏற்கனவே நடந்துட்டு தானே இருக்கு?
3.6~ பள்ளிகள் ஏற்படுத்த சாத்தியக்கூறுகள் இல்லாத ஊர்கள்ல, அரசு சாரா அமைப்புகள் மூலமா குருகுலம் ஏற்படுத்தப்படும்.
4.9~ ஐந்தாம் வகுப்பு வரைக்கும் தாய் மொழிக் கல்வி அல்லது இந்திய மொழியில ஏதேனும் ஒரு மொழியில தான் Medium of Instruction இருக்கனுமாம்

English ஒரு Medium of Instructionஆ இருக்காது

5வது வரை Englishயை படிக்க வாய்ப்பு தராம இருந்தா, அப்பறம் இந்தியை படிச்சு தானே ஆகனும்
இது மறைமுக இந்தி திணிப்பு.

5வது வகுப்புக்கு அப்பறம் English அ அறிமுகப்படுத்துற இவங்களே

4.10ல என்ன சொல்றாங்கனா, குழந்தைகளுக்கு 2 வயது முதல் 8 வயதுவரை வேற்று மொழியை கத்துக்குற ஆற்றல் இருக்கும்,
அதுனால 3வது வகுப்புக்கு அப்பறம் மூனு மொழில எழுதவும் வாசிக்கவும் கத்துக்கனும்
4.12~ 6ம் வகுப்புல English படிக்க ஆரம்பிச்சு‌ 9ம் வகுப்பு வர்றப்போ மாணவர்கள் லாம் English ல பேச கத்துக்குவாங்க.

English க்கு தனியா Coaching Center தான் போகனும் போல
4.15~ சமஸ்கிருதம் பத்தி குழந்தைகள் தெரிஞ்சுக்கணும்.

அது மட்டுமில்லாம முக்கியமான இந்திய மொழிகள் எல்லாத்துலையும் ரெண்டு வரி பேச கத்துக்கனும் https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😂" title="Gesicht mit Freudentränen" aria-label="Emoji: Gesicht mit Freudentränen">
4.16~ சமஸ்கிருதம் ஒரு முக்கியமான நவீன (?) மொழி.
பள்ளிக்கல்வி எல்லாத்துலையும் மாணவர்கள் அதை படிக்கிறதுக்கு முக்கியத்துவம் குடுக்கப்படும்.

அதை எளிய முறைல கத்துக்க பாடப்புத்தகம் தயாரிக்கப்படும்
4.18~ சமஸ்கிருதம் இல்லாம மத்த செம்மொழிகள் எல்லாத்தையும் சொல்லித்தருவோம், ஆனா ONLINE MODULE ல.

0.00198% மக்கள் பேசுற சமஸ்கிருதத்துக்கு Simple Standard Sanskrit னு ஒன்னு உருவாக்கி புதுசா பாடப்புத்தகம் எழுதப்போறாங்க.
ஆனா மத்த மொழிகளுக்குலாம் வெறும் Online Module தான்
செம்மொழியை படிக்கபோறதுல, சமஸ்கிருதத்துக்கு மட்டும் தான் பாடப்புத்தக வாய்ப்புகள் இருக்கு மத்ததுலாம் Online Moduleனு 4.16 & 4.18ல சொல்லிட்டாங்க.

4.19ல என்ன சொல்றாங்கனா, எந்த ஸ்கூலா இருந்தாலும் கண்டிப்பா 2 வருசம் ஒரு செம்மொழிய படிக்கனும்.

மறைமுக சமஸ்கிருத திணிப்பு
4.32~ Entrance Exam அப்பறம் Board Examக்கு Coaching Center போற கலாச்சாரம் அதிகமாய்டுச்சு, அதுனால தேர்வுகளை சுலபமா ஆக்கபோறோம்.
மதிப்பெண்ணை கூட்ட இன்னொரு தேர்வு எழுத கூட Option வச்சிருக்கோம்.

சரி நல்லது தானேனு பாத்தா
4.38~ பட்ட மேற்படிப்புக்கு அட்மிசனுக்கு பழையபடி Entrance Exam எழுதுற நடைமுறையே பின்பற்றப்படும்.

அப்பறம் எதுக்கு 14 வருச Schooling?
4.36~ 3வது, 5வது, 8வது, 10வது, 12வது வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வப்பாங்க.

இந்த Mental Tortureல Fail ஆகி பள்ளி படிப்ப நிறுத்துற மாணவர்கள் என்ன பண்ணலாம்னு 16.7ல சொல்லி இருக்காங்க.

அவங்களை Vocational க்ரூப்புல சேர்த்துவிட்டு Semi skilled laboursஆ ஆக்கிடுவாங்க
5.4~ எல்லா ஸ்கூல்லையும் அந்த மாநிலத்து மொழிய பேச தெரிஞ்ச டீச்சர்ஸ் கொஞ்ச பேராச்சும் இருப்பாங்க.

மறைமுகமாக என்ன சொல்ல வராறங்கனா, மெஜாரிட்டி டீச்சர்ஸ் வேற்று மொழி ஆட்களா இருப்பாங்க
6.10 ~ நவோதயா ஸ்கூல் மாதிரியே நிறைய திறக்கப்போறோம் (!)
அதுல பொருளாதாரத்துல (சமூக ரீதியா இல்ல) பின்தங்குன மாணவர்களுக்கு முக்கியத்துவம் குடுப்போம்
8.7~ எல்லா அரசு மற்றும் தனியார் ஸ்கூல் Standards செக் பன்றதுக்கு SSSA னு ஒன்னு உருவாக்கப்போறோம்.

மத்திய அரசு கட்டுப்பாட்டுல வர்ற ஸ்கூல்ல தவிர்த்து மத்த எல்லா ஸ்கூல்லையும் செக் பண்ணுவாங்கலாம்
19.2~ உயர் கல்வி நிறுவனங்களை நிர்வகிக்க Board of Governors நியமிப்பார்கள்.
அந்த கல்வி நிறுவனத்தை யாரோட தலையீடும் இல்லாம் நிர்வகிக்க எல்லா அதிகாரமும் அவங்களுக்கு இருக்கு.

அநேகமா ரிசர்வேஷன் காலியாகலாம்
10.7~ Gross Enrollment Ratio இப்போதக்கி தேசிய சராசரி வெறும் 26% தான் இருக்கு. வரும் 2030க்குள்ள 50% ஆக்கனும்.

ஏற்கனவே தமிழ்நாடு 50% எட்டிருச்சு.https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🖤" title="Schwarzes Herz" aria-label="Emoji: Schwarzes Herz">https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="❤️" title="Rotes Herz" aria-label="Emoji: Rotes Herz">
You can follow @tweetsofKarthi.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: