ரஜினியின் தனித்துவம்!

தலைவர் ரசிகர்கள் என்ற வட்டத்திலிருந்து கொஞ்சம் தள்ளி வந்து சிலவற்றை கவனிப்போம்.

ரஜினி என்பவர் யார்? தமிழக அளவில் அவர் எவ்வாறு பார்க்கப்படுகிறார். ஒரு சாமானியனின் பார்வையில் அவருடைய பிம்பம் என்ன?

அவர் சினிமாவின் சூப்பர்ஸ்டார் உச்ச நடிகர் (1/13)
கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். இதெல்லாம் அனைவரும் அறிந்ததே. இது சினிமாவில் ரஜினியை பற்றி ஒரு சாமானியன் அறிந்து வைத்திருக்கும் பார்வை.

இதிலிருந்தும் வெளியே வருவோம். பொதுவெளியில் அவர் எவ்வாறு அறியப்படுகிறார். அனைத்து மட்டங்களிலும் ஒரு random sample எடுத்து, மக்களிடம் (2/13)
கேட்டால் பொதுவான பதிலாக அவர் நல்லவர் நல்ல மனுஷன் என்ற பதில் வரும்.

இது அவரின் திரை வெற்றியால் மட்டுமே சாத்தியமானதா?

நிச்சயமாக இல்லை. அந்தந்த தலைமுறை வேண்டுமானால் அத்தலைமுறை நடிகர்களுக்கு முட்டு கொடுக்கலாம். ஆனால் தலைமுறை கடந்து இப்பெயர் வாங்குவது சுலபமில்லை (3/13)
இதற்கு காரணம்?

திரையை தாண்டிய அவரது தாக்கம். தமிழ் மக்களிடத்தில் அது அழுத்தமாக பதிக்கப்பட்டிருக்கிறது. பொது வெளியில் அவரின் நடத்தையினால். இது அவரின் பேச்சு செயலின் மூலம் வெளிப்படுவது.

யாரையும் மனதளவில் கூட புண்படுத்தாத பண்பு, மனதில் படும் உண்மையை பேசுவது, அனைவரையும் (4/13)
மதிக்கும் குணம், புறம் பேசாமை, எளிமையான தோற்றம் இப்படி பல. ஆரம்ப காலங்களில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும் அதையும் வெற்றிகரமாக தாண்டி வந்தவர். அதையும் எங்கேயும் மறைத்ததில்லை. இது வெளிப்படைத்தன்மை.

இதையெல்லாம் அறிந்து வைத்திருக்கும் மக்கள் ரஜினியை நல்லவர் என summarize (5/13)
செய்கிறார்கள். 90களுக்கு பிறகு அரசியல் காற்று அடிக்க ஆரம்பித்த பிறகும் அவர் இதில் எந்த பண்பையும் இம்மியளவும் கைவிடவில்லை.

இங்கு ஒன்றை கவனிக்கலாம். அவரின் பொதுப் பார்வை. அது சுயசார்பற்று சமுதாயம் அதாவது people centric ஆகவே இருக்கும். 96ல் திமுக கூட்டணியை அவர் (6/13)
ஆதரித்ததற்கும் இது தான் காரணம். அவரும் கவனித்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இது சான்று.

2017ன் இறுதியில் வந்த அரசியல் அறிவிப்பிற்கு பிறகும் இது தொடர்கிறது. இம்முறை நேரடி கள அரசியல். எளிதாக வெறுப்பரசியல் செய்துவிட்டு போகலாம்.

பத்தோடு பதினொன்றாக இருக்க அவர் விரும்பவில்லை. (7/13)
முன் சொன்னது போல சமுதாயம் சார்ந்த பார்வையை வைத்தே அவர் தன் சிந்தாந்தத்தை கட்டமைக்கிறார். மக்களின் பிரச்சினைகள் என்ன? மக்களின் தேவை என்ன? அதை தீர்க்க என்ன வழி? ஒன்று தீர்ப்போம் அல்லது விலகிவிடுவோம். காந்தியடிகளின் செய் அல்லது செத்து மடி போன்றதுதான் இது.

இதையே திரையில் (8/13)
புகழேந்தி போன்ற ஒருநாள் முதல்வர்கள் செய்யும் போது விசிலடிக்கும் இன்டெலக்சுவல்கள் நிஜத்தில் ஒருவர் அதை நோக்கி ஒரு கல்லையாவது நகர்த்தலாம் என முனைந்தால் கிண்டலடிக்கின்றன.

அடுத்து அவரின் சமுகப்பார்வை மாடி வீட்டில் அமர்ந்து கொண்டு ரோட்டை பார்த்து என்ன கவர்ன்மென்ட் என்ன நாடு (9/13)
இது என சும்மா இருக்கும் வாய்க்கு வேலை கொடுப்பதல்ல, அது ஒரு சாமானியன் இந்த சமுகத்தை எவ்வாறு பார்க்கிறான் என்பதே. எதற்கெடுத்தாலும் போராட்டம் ஏன் என அவர் கூறியதை வெக்கமே இல்லாமல் திரித்து கூறிய ஊடகங்களுக்கு அதுதான் சாமானியனின் பார்வை என தெரியாதா?

போராடவே கூடாது. அதுவல்ல (10/13)
ரஜினி சொல்வது. அறவழியில் போராடி சட்டத்தின் மூலம் உரிமைகளை பெறுவோம் என்பது தான் அவர் சொல்வது. வெற்று போராட்டம் ஒரு வேளை பிரியாணி கொடுக்கலாம் ஆனால் சட்டம் மட்டுமே தீர்வை கொடுக்கும்.

தமிழ்நாட்டை போராட்டகளமாகவே வைத்திருக்க நினைப்பவர்களுக்கு இது வலிக்கிறது. (11/13)
எல்லாவற்றிற்குமே போராட்டம் என்றால் அப்போது எந்த பிரச்சினையுமே தீர்க்கப்படவில்லை அல்லவா? அப்போது இது இத்தனை நாள் ஆண்ட ஆளும் கட்சிகளின் தோல்வி தானே?

அப்போது அதை சரிசெய்ய ஒரு மாற்று வேண்டுமல்லவா? அது வெறும் ஆட்சிமாற்றம் அளவில் இருந்தால் போதுமா? கட்டமைப்பு சீர்செய்யப்பட (12/13)
வேண்டாமா? அதை செய்ய வேண்டும் என்பதே ரஜினி சொல்வது. அதற்கு விதைபோடவே அவர் முயல்கிறார். அதை அவர் நம்பும் people centric, inclusive politics & social development வழியே செயல்படுத்த விழைகிறார்.

அவர் கரத்தை வலுப்படுத்துவது காவலர்களாகிய நம் கடமை. (13/13)

#தலைவர் @rajinikanth
You can follow @parthispeaks.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: