மீன் வகைகள் பத்தி ஒரு இழை !
மீன் பத்தி சொல்ற அளவுக்கு பெரிய அனுபவம் எல்லாம் இல்லை ஆனா தெரிஞ்ச வரைக்கும் உங்களோட பகிர்ந்துக்கலாம்னு தான் இந்த இழை குற்றம் குறை இருந்தால் சுட்டி காட்டுங்க திருத்திக்களாம் .
கடல் மீன் , ஆத்து (ஏரி)மீன் , குளத்து மீன் இப்படி வகைப்படுத்தலாம் 1/N
மொதல்ல கடல் மீன்ல இருந்து வரலாம் . பொதுவா மீன்ல என்ன மாதிரியான டிஷ் செய்வாங்கன்னா மீன் குழம்பு , வறுவல் (தவா வறுவல் , டீப் ஃப்ரை) , தொக்கு , புட்டு , சுட்டு சாப்பிடறது (BBQ) ஏன் பிரியாணி வரை பண்றாங்க . மீன் சாப்பிடறதுனா செதில் வகை மீன்கள் தான் உடம்புக்கு ரொம்ப நல்லது , 2/N
செதில் இல்லாத மீன்கள் ஆபத்தானதில்லை ஆனா தொடர்ச்சியா சாப்பிடறதை தவிர்பது நல்லது. பெரிய சைஸ் மீன்களை விட சின்ன சைஸ் மீன்களுக்கு முக்கியத்துவம் தரது நலம்
மீன்ல ராஜான்னா அது வஞ்சிரம் மீன் தான் சைஸ் கூட கூட விலையும் கூடும் மீன் வகை இது மலையாளத்துல நெய் மீன் 3/N
இங்கிலீஸ்ல Spanish mackerel- king mackerel - seerfish னு சொல்லுவாங்க திருநெல்வேலி மாவட்டத்துல ஷீலான்னு சொல்றாங்க இது செதில் இல்லாத மீன் இதை அதிகமாக மக்கள் விரும்ப முக்கிய காரணம் சுவை , முள் குறைவு முள்ளை எடுத்து சாப்பிடனும்னு அவசியமில்லை அப்படியே சாப்பிடலாம் 4/N
அடுத்ததா சங்கரா - செம்மீன் மலையாளத்துல கிளிமீன் , இங்கிலீஸ்ல Red-snapper மீனை பாக்கலாம் , செதில் உள்ள மீன் இது சுவையான மீன் வகைல இதுவும் ஒன்னு முள் அதிகமா இருக்கும் கவனமா சாப்பிடனும் , குழம்பு , வறுவலுக்கு ஏத்த மீன், இதே மாதிரி சின்னதா ஒரு மீன் இருக்கும் நவரை 5/N
இதான் நவரை 6/N
சீலா - ஷீலா- barracuda fish இதுல பல வகை இருக்கு குழி சீலா , கரை சீலா , ஓலைச்சீலா , லோப்பு சீலா எல்லாமே barracuda குடும்பத்தை சேர்ந்தது , செதில் உள்ள மீன் எல்லா டிஷ் வகையும் செய்யலாம் இதுல புட்டு செஞ்சி சாப்பிட்டு பாருங்க சுவையா இருக்கும் முள் குறைவா இருக்கும் 7/N
மத்தி - sardine -pilchards மளையாளத்துலயும் மத்தி தான் செதில் உள்ள சுவையான மீன். இதை சமைச்சா வீடே ஒரு வித மனம் வரும் சிலருக்கு பிடிக்காது இந்த வாசம் . ஒமேகா-3 சத்து அதிகம் உள்ள மீன் விலையும் குறைவா தான் இருக்கும் , குழம்பு வறுவல்க்கு ஏத்தது முழுசா தலை முதல் சாப்பிடலாம் 8/N
நொணலை-சாளை -sardine இது மத்தி மாதிரியே இருக்கும். செதில் உள்ள மீன் இதையே மத்தினு சொல்லி விப்பாங்க , மத்தி வயிறு பகுதி உருண்டா மாதிரி இருக்கும் , சாளை வயிறு பகுதி ஒட்டினா மாதிரி இருக்கும் . மத்தியும் இதுவும் சுவைல ஒரே மாதிரி தான் இருக்கும் மத்தி குடும்ப வகையை சார்ந்தது 9/N
கிழங்கான் - lady fish இந்த மீன் மாதிரியே கொஞ்சம் கறுப்பா இருக்கும் அதையும் கிழங்கான்னு தான் விப்பாங்க அதுல முள் அதிகமா இருக்கும் கவனமா சாப்பிடனும் , இது வெள்ளை கிழங்கான்னு சொல்லுவாங்க fish finger செய்யறதுக்கு ஏத்த ஒரே மீன் இதுதான் நெத்திலி மாதிரி சுவை அள்ளும் 10/N
நெத்திலி -Anchovy சிறிய வகை மீன் குழம்பா வைக்கறதை விட 65 மாதிரி செஞ்சி சாப்பிடலாம் . இதோட கருவாடு மீனை விட மொறுமொறுப்பா இருக்கும் . இதை ஒவ்வென்னா சுத்தம் பண்றது பெரும்பாடு
சட்டில கல்லு உப்பை போட்டு மொத்தமா ஒரு சுழட்டு சுழட்டுனா போதும் 11/N
வாளை - Silver scabbard fish இதை மீனா சாப்பிட்டதை விட கருவாடா சாப்பிட்டவங்க தான் அதிகம் இருப்பாங்க , செதில் இல்லாத வகை மீன் இது இதோட தோல்ல சுண்ணாம்பு மாதிரி பளபளப்பா ஒரு கோட்டிங் இருக்கும் கல்லுல நல்லா தேய்ச்சி கழுவின பிறகு உபயோகப்படுத்தனும் 12/ N
கோலா - coramandal flying fish
படத்தை பார்த்தவே தெரியும் இந்த மீன் சில ஆடி தூரம் வரைக்கும் பறக்கும் மத்தபடி விசேசமான சுவையெல்லாம் கிடையாது . செதில் உள்ள மீன் . 13/N
கானாங்கத்தை- அயிலா- dolphin fish - நல்ல சதைப்பற்று உள்ள மீன் இதை சாப்பிடறப்போ வித்தியாசமான காரல் சுவை வரும் . கேரளால அதிகம் விரும்பி வாங்கற மீன் , செதில் இல்லா வகை மீன் 14/N
கிளிச்சை - scad fish ( Round scad) இது மத்தி மாதிரி இருக்கும் செதில் இல்லாத மீன் விலையும் குறைவா தான் இருக்கும் வலைல கூட்டமா சிக்கும் முள் மத்தில இருக்கறத விட கொஞ்சம் கனமா இருக்கும் 15/N
சூரை - Tuna சூரைல நிறைய வகை இருக்கு இதுல skipjack tuna தான் மார்கெட்ல அதிகமா கிடைக்கும் . செதில் இல்லாத மீன் இந்த மீனை தோலை எடுத்துட்டு சமைச்சா மட்டன் மாதிரியே இருக்கும் ஏன்னா சதைப்பகுதி அதிகம் உள்ள மீன் இது கேரளத்துல மீன் ஊறுகாய் போட இந்த மீனை தான் உபயோகிப்பாங்க 16/N
இறால் - Shrimp இது பல வகை இருக்கு வெள்ளை , சிகப்பு இறால்னு இதுல சிங்க இறால் வகை ஒரே இறால் கிலோ கணக்குல இருக்கும் மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடறதுல இதுவும் ஒன்னு , இதை சுத்தம் பண்ணும் போது தலை மற்றும் தோல் நீக்கனா போதும்னு நினைப்பாங்க சுத்தம் பண்ண இறாலை பாத்திங்கனா முதுகுல 17/N
கருப்பு கலர்ல கோடு மாதிரி இருக்கும் அதை எடுத்துட்டு தான் சமைக்கனும் Tooth pick இல்லை கத்தில கீரிட்டு எடுத்தா வந்திடும் அப்படியே சமைச்சா வயிறு வலி வரும் . இது சாப்பிட்டா வாயு உண்டாக்கும் அதனால இஞ்சி பூண்டு அதிகம் சேர்ப்பாங்க இந்த டிஸ்ல , தொக்கு - சில்லி- கட்லெட் செய்யலாம் 18/N
பாறை - Alectis indicus - horse mackerel இந்த வகைல பல மீன் இருக்கு தேங்காய் பாறை , செம்பாறை , பேரும் பாறை , பாட்டிப்பாறை ,கன்னிப்பாறை, ஒட்டப்பாறை , மெத்தம் பாறை , வரிப்பாறை கண்ணாடி பாறை , புலிப்பாறை etc மீனோட கலர் சைஸ்க்கு ஏத்தா மாதிரி பேர் மாறுபடும். சுவை மிகுந்த மீன் 19/N
வவ்வால் - pomfred இதுல கருப்பு வவ்வால் , வெள்ளை வவ்வால் பல வகை இருக்கு சுவை மிகுந்த மீன்ல இதுவும் ஒன்னு செதில் இல்லாத வகை நடு முள் மட்டும். தான் இருக்கும் அதுவும் கடிச்சி சாப்பிட்டா வஞ்சிரம் மாதிரி மாவு மாதிரி ஆகிடும் வறுவலுக்கு எந்த மீன் , விலையும் அதிகம். 20/N
சுறா - shark இதை பத்தி நிறைய தெரிஞ்சிருக்கும் எல்லோருக்கும் , பெரிய சுறாவை பத்தி பேசப்போறதில்லை இதுல 2 படத்துல இருக்கற சின்ன சைஸ் சுறா தான் பால்சுறா , எல்லா டிஷ் செஞ்சாலும் டாப்ல இருக்கறது புட்டு தான் இட்லி மாதிரி அவிச்சிட்டு அதுல செய்வாங்க இளம் தாய்மார்களுக்கு கொடுப்பாங்க 21/N
கொடுவா- barramundi இதுவும் அதிகம் விரும்பி சாப்பிடும் சுவை மிக்க மீன் விலையும் கொஞ்சம் அதிகமா தான் இருக்கும். செதில் உள்ள மீன் வகை இது . மார்கெட்ல கிடைச்சா விட்றாதீங்க வறுவல் , குழம்புக்கு ஏற்றது 22/N
கணவாய்- கணவா - கூந்தல் - squid இது ஆக்டபஸ் மினியேச்சர் மாதிரி இருக்கும் . இது இறால் மாதிரி முள்ளே இல்லாம இருக்கும் சுத்தம் பண்ண பிறகு சதைப்பகுதி பால் மாதிரி வெள்ளையா இருக்கும் . சமைச்சா கருவாடு மாதிரி வாசம் வரும், கூந்தல்னு ஏன் சொல்றாங்கன்னா விசாரிச்சி தெரிஞ்சிக்கோங்க
23/N
சுதும்பு - false Trevally இதுல வெள்ளை , கருப்பு இரண்டு வகை இருக்கு இது சிறிய வகை தான் முதுகு , வால் பகுதில நெத்திலி மாதிரி சின்னதா செதில் இருக்கும் . தாய்ப்பால் நல்லா சுரக்க இந்த மீனை யூஸ் பண்ணுவாங்க குழம்புக்கு எந்த மீன் பக்கவாட்டு முள் இருக்கும் 24/N
காரப்பொடி - pony fish இதுவும் சுதும்பு மாதிரி சிறிய வகை மீன் செதில் இருக்காது பக்கவாட்டு முள் இருக்கும் சுவையான மீன் வகைல இதுவும் ஒன்னு . இதுவும் இளம் தாய்மார்களுக்காக வாங்குவாங்க 25/N
கெளுத்தி - cat fish , cat fish ல இது ஒரு வகை படத்துல இருக்கற மாதிரி மீனா பாத்து வாங்குங்க கடல் கெளுத்தி இந்த மீன் அதிகமாக மார்கெட்ல கிடைக்காது கிடைக்கும் போது மறக்காம வாங்கிடுங்க இதை குழம்பா வைச்சி சாப்பிட்டா திருநெல்வேலி அல்வா மாதிரி இறங்கும். செதில் இல்லாத மீன் வகை 26/N
கிளி மீன் - parrot fish இதுல 90 க்கும் அதிகமான வகை இருக்காம் ஆத்து கண்டை மீன் மாதிரி கலர் கலரா இருக்கும் , செதில் உள்ள மீன் வகை இது பக்கவாட்டு முள் அதிகமா இருக்கும் 27/N
செம்பலி - Tilapia இது நம்ப ஜிலேபினு சொல்ற ஏரி மீன் குடும்பத்தை சேர்ந்த கடல் ஜிலேபி . செதில் வகை மீன் பக்கவாட்டு முள் முதுகு முள்னு அதிகமா இருக்கும் ஆனா சுவையான மீன் குழம்புக்கு ஏத்த மீன் 28/N
திருக்கை - batodis
Aerodynamic design ல இருக்கற மீன் இனம் வால் பகுதில விஷ முள்ளோட இருக்கற மீன். மீனவர்கள் ஜாக்கிரதையா கையாளும் மீன் இது வால்ல அடிச்சா உயிர் போயிடும் இது பெரிய சைஸ் மீனா வளரும் செதில் இருக்காது தோல் கடினமா இருக்கும் சின்ன சைஸ் மீனா மார்கெட்ல கிடைக்கும் 29/N
வங்கவராசி - பம்மலு - bombay duck , இது Lady finger மீன் மாதிரி தான் இருக்கும் அதிகமாக மார்கெட்ல கிடைக்காது மீனை விட கருவாடுக்கு டிமான்ட அதிகம் , கருவாடு செஞ்சா முருங்ககாய் பொரியல் மாதிரி இருக்கும் சாப்பிடறதுக்கு , கருவாடு விலையும் அதிகம் 30/N
பாசா - basa - pangasius ( broiler fish ) நெய் மீன்னு சொல்லி விப்பாங்க மார்கெட்ல பார்த்தா வாங்கவே வாங்காதிங்க மேலதிக தகவலுக்கு broiler fish னு search பண்ணி பாருங்க 31/N
முரல் - Needle fish முதுகு பக்கம் பச்சை கலர்ல பாக்க அழகா இருக்கும் . மீன் முழுக்க முள் ஊசி மாதிரி இருக்கும் சாப்பிடும் போது கவணமா முள் எடுத்து சாப்பிடனும். செதில் கிடையாது நடு முள்ளும் கலரா இருக்கும் . 32/N
நாக்கு மீன் - மாந்தல் - எறுமை நாக்கு மீன் - sole fish - Dover sole - American sole நாக்கு மாதிரி தட்டையா இருக்கும் ஒரு பக்கம் வெள்ளையாவும் மறு பக்கம் கருப்பாவும் இருக்கும் , தோலை உறிச்சிட்டு சமைக்கனும். பக்க வாட்டு முள் குறைவா தான் இருக்கும் வறுவலுக்கு பெஸ்ட் 33/N
காலா (Kala- Kaala) சீனா காலா - Indian salmon சுவையான மீன் வகைல இதுவும் ஒன்று , செதில் இருக்கும்
. ஒமேகா 3 , விட்டமீன் நிறைஞ்ச மீன் வகை 34/N
பர்ளா - Mahe mahe
இந்த மீன் மார்கெட்ல பார்த்திருப்பீங்க 1 கிலோ மேல தான் இருக்கும் செதில் இல்லாத மீன் வகை இது முள் அவ்வளவா இருக்காது , வறுவல் குழம்பு பெஸ்ட் 35/ End 🙏
இதோட இந்த இழையை நிறுத்திக்கறேன் . எனக்கு தெரிஞ்ச வரையில் இந்த இழையில போட்டிருக்கேன் இது கடல் மீன் வகைல ஒரு துளி தான்.
முக்கியமாக கடல் மீன் ஃப்ரெஷ்ஷா கிடைக்கறவங்க கொடுத்து வச்சவங்க 90 % மீன் ஃப்ரெஷ்ஷா கிடைக்காது பதப்படுத்தப்பட்ட மீன் தான் கிடைக்கும் அதுல மீன் எப்படி வாங்கலாம்
என்ற டிப்ஸ் கொடுக்கறேன் பார்த்து வாங்குங்க இந்த படத்துல இருக்கறா மாதிரி கண் தெளிவாகவும் செவுள் ரத்த சிகப்பாகவும் இருந்தா அது ரொம்ப புது (ஃப்ரெஷ் ) மீன் செவுள் கலர் வெளுத்தும் மீனோட கண் மொத்தமும் வெள்ளை கலர்ல இருந்தா அது ரொம்ப பழைய மீன் வாங்காதீங்க , மீனோட சுவை என்பது அதை
அதை சுத்தப்படுத்தறதுல இருக்கு , சரியா பண்ணலைனா கசக்கும் அதனால வயிற்றுப்பகுதிய நல்லா சுத்தம் பண்ணுங்க . நிறைய பேர் குழம்புல மீன் போட்டா தூள் தூளாகிடுதுன்னு சொல்லுவாங்க குழம்புல வெந்தயம் , மிளகு , சீரகம் , பூண்டு , நல்லெண்ணை , தக்காளி , வெங்காயம் , புளி , மிளகாய் தூள் சேர்த்து
நல்லா கொதிக்க விடுங்க எண்ணெய் பிரிஞ்ச பிறகு மீன் துண்டை சேர்த்து ஒரு கொதி வந்த உடனே அடுப்பை அணைச்சிடுங்க , மீன் துண்டு உடையாது அடுத்த நாள் சாப்பிடுங்க மீன் குழம்போட ருசி அருமையா இருக்கும் 🙏
விரைவில் அடுத்த இழைல நண்ணீர் மீன்களை பத்தி பார்ப்போம் . பொறுத்தற்கு நன்றி 🙏🙏🙏🙏
You can follow @k7classic.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: