Moon Landing - 20th July 1969

மனிதகுல வரலாற்றிலேயே மிகமுக்கிய நாள் இந்த ஜூலை 20, 1969.

உடனே டக்குனு டாஸ்மாக் தொடங்குன நாளான்னு கேக்காதீங்க. நிலவில் மனிதன் முதன்முதலா கால் பதிச்ச நாள்.

#Thread
#MOONLanding
இந்த ஜூலை 2, 1969ல என்ன நடந்ததுன்னு பாக்குறதுக்கு முன்னாடி இந்த நிகழ்வுக்கு பின்னால நடந்த அரசியலை மக்கள் வெளங்கிக்கணும்.
அதாவது 1945ல இரண்டாம் உலகப்போர் முடிஞ்சதுக்கு அப்புறமும் அமெரிக்கா-ரஷ்யா இடையேயான பனிப்போர் நடந்துக்கிட்டே இருக்கு. அரசியல், விளையாட்டு, அறிவியல்ன்னு எல்லா வகைலயும் யாரு பெரியாளுன்னு மாத்தி மாத்தி தப்படிச்சு காட்டிக்கிட்டே இருக்கானுங்க.
1945லருந்து 1960 வரைக்கும் ரெண்டு நாடுகள்லயும் அதிபருங்க  மாறினாலும் பஞ்சாயத்து அப்புடியே தான் இருக்கு. உலக நாடுகளை தங்கள் பக்கம் திரும்பி பாக்க வைக்கும் முயற்சியா அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடி 1961ல ஒரு அறிவிப்பை வெளியிடுறாரு.
Clinical trialலே நடத்தாம எப்புடி ICMR ஆகஸ்ட் 15 கொரோனாக்கு மருந்து வெளியிடும்ன்னு அறிவிக்கிதோ அதே மாதிரி ஜான் கென்னடி இந்த பத்தாண்டு (decade) முடியுறதுக்குள்ள அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியின் வெற்றியா மனிதன் நிலவுல கால் வைப்பான்னு மே 25, 1961ல அறிவிக்கிறார்.
ஐ வாஸ் நாட் ரெடிடானு ஆராய்ச்சியாளர்கள் திகைக்கிறாங்க. அதிபரே சொல்லிட்டாரு, எண்ணி 8வருஷம் தான் இருக்கு. நிலாவை பற்றி ஆராய்ச்சி முடிவுகள் கைல இருந்தாலும் இது சாத்தியமா, சொதப்பிருச்சுன்னா உலக நாடுகளை விடுங்க மார்லின் மன்றோ கூட மதிக்காதேன்னு ஆராய்ச்சியாளர்கள் கன்னத்துல கைவைக்குறாங்க
Announce பண்ணின அடுத்த வருஷம் அத்தாச்சி மார்லின் மன்றோ தற்கொலை பண்ணிக்கிறாங்க, அந்த சோகத்துலருந்த கென்னடிகிட்ட போய் ஆராய்ச்சியாளர்கள் வரைவு திட்டத்த காட்டுறாங்க. நானே நடிகை செத்த சோகத்துல இருக்கேன் உங்களுக்கு நிலா ப்ராஜெக்ட் கேக்குதான்னு கென்னடி மாம்ஸ் டென்ஷன் ஆவறார்.
1959ல ரஷ்யா லான்ச் பண்ணின Sputnik சாட்டிலைட் நிகழ்வுக்கு போட்டியாதான் இந்த நிலா space program சொன்னதாவும் இதை போய் சீரியஸா எடுத்துக்கிட்டு இப்புடி ராக்கெடும் தீப்பெட்டியுமா வந்து நிக்கிறீங்களேன்னு தோசைக்கல்லயே திருப்பிப் போடறார் கென்னடி.

Russia's Sputnik 👇
அடுத்த வருஷமே கென்னடியும் கொல்லப்படுறார். அடுத்து வந்த ப்ரெசிடெண்ட் லின்டன் ஜான்சன் & ரிச்சர்ட் நிக்சன் இந்த ப்ராஜெக்ட் வெற்றி பெற்றாகணும்ங்கிறதுல உறுதியா இருக்காங்க. சொன்ன மாதிரியே ஜூலை மாசம் 1969 நிலவுல இறங்கிடலாம்ங்கிற முடிவுல அப்பல்லோ 11ங்கிற விண்கலத்தை தயார் செய்யறாங்க.
இந்த ப்ராஜெக்ட்க்காக ஒரு குழுவை தயார் படுத்தறாங்க. நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின், மைகேல் காலின்ஸ் ங்கிற இந்த குழு ராத்திரி பகலா பயிற்சில ஈடுபடுது. இந்த இடத்துல நாம லைட்டா நிலவை பற்றிய முந்தைய ஆராய்ச்சி முடிவுகளையும் தெரிஞ்சுக்கணும்.
இந்த நிலா எப்புடிப்பட்ட டகால்ட்டின்னா அது உருவானதுலருந்து இப்போ வரை பாகுபலி தமன்னா மாதிரி ஒரு பக்கத்தை மட்டுமே காட்டிக்கிட்டு பூமியை சுத்திக்கிட்டு இருக்கு. அதுனால நிலவுக்கு அந்தாண்ட என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்குறதுக்கே இரண்டுக்கும் மேற்பட்ட ஆர்பிட்டர்களை அனுப்பிருக்கு அமெரிக்கா
இந்த நீல் ஆம்ஸ்ட்ராங் குழு தாங்கள்தான் நிலவுக்கு போகப்போறோம்னு முடிவானதும் நிலவின் microgravityயை பழகிக்க இங்கயே பயிற்சிகளை எடுத்துக்க ஆரம்பிக்கிறாங்க. ஹூஸ்டன் நகரத்துல இதுக்குன்னே செட்டு போட்டு (பயிற்சிக்கு தான்ப்பா) சைடுலலாம் நடந்து பழகுறாங்க.
எவர்சில்வர் கடைல போயி டிபன் பாக்ஸ் எடுத்து தரைல உக்காந்து சாப்பிட்ற மாதிரி உக்காந்துலாம் பாத்து வாங்குற மாதிரி, அந்த Microgravity environmentல நிக்கிறாங்க உக்காருறாங்க படுக்குறாங்க fakeகா சாம்பிள் கலெக்ட் பண்ணி பாட்டில்ல அடைக்கிறாங்க. ஒருவழியா ட்ரைனிங் முடிஞ்சு அந்த நாளும் வருது.
சீனியரே இல்லாத லேப்க்கு PhD சேரப்போற மாதிரி நிலவுல கால் வைக்க ஜூலை 16 அப்பல்லோ 11 விண்கலத்தை தாங்கிட்டு Saturn Vங்கிற சூப்பர் மாடல்.. சீ.. சூப்பர் ராக்கெட் நீல் ஆம்ஸ்ட்ராங் குழுவை கூட்டிட்டு கெளம்பிடுது. சரியா 3நாளுக்கு அப்புறம் அப்பல்லோ 11 விண்கலம் நிலவின் வட்டப்பாதைல நுழையுது.
2011ல Game of Thrones முதல் எபிசொட் ஒளிபரப்பும்போது 2.2 மில்லியன் மக்களால் பார்க்கப்பட்டதாம். ஆனா 1969ல இந்த மனிதகுலத்தின் ஆகப்பெரும் நிகழ்வை உலகம் முழுக்க 1 மில்லியன் மக்கள் நேரடியாக ஒளி-ஒலி மூலம் கவனித்துக்கொண்டிருந்தனராம்.
ஜூலை 20, 1969 குழுவில் காலின்ஸ் விண்கலத்திலேயே இருந்துகொள்ள  நீல் ஆம்ஸ்ட்ராங் முதலில் தனது காலை எடுத்து வைக்கிறார். That's one small step for man, one giant leap for mankind என்ற மிகப்பிரபலமான அவரது வாசகத்தை கூறி பிரமிக்கிறார். 8 வருசத்துக்கு முன்ன கென்னடி கண்ட கனவு நெனவாகுது.
பின்னாலேயே உதயநிதிக்கு உதவும் சந்தானம் போல பஸ் ஆல்ட்ரின் தனது அடியை எடுத்து வைத்து சிம்பிளாக magnificent desolation என்று கூறியது மட்டுமில்லாம பின்னாட்கள்ல அவரது நிலவின் நினைவுகளை புத்தகமாக எழுதி அதையே தலைப்பா வச்சுட்டார். விற்பனைல சக்கப்போடு போட்ட புத்தகம் அது.
சுமார் இரண்டரை மணி நேரம் இங்கிட்டும் அங்குட்டும் உலாத்திட்டு பலவித சாம்பிள்களை கலெக்ட் செய்துவிட்டு விண்கலத்துக்கு திரும்பறாங்க. கலெக்ட் செய்த சாம்பிள்கள் மற்றும் நினைவுகளோடே பூமிக்கு திரும்பறாங்க.
பசிபிக் பெருங்கடல்ல தொபுக்கடீர்ன்னு விண்கலத்தோட விழுந்த  மூவரையும் அப்புடியே தொடாம கொள்ளாம ஒரு மொபைல் ஷெல்டர்ல அடைச்சு quarantine பண்றாங்க. காரணம், நிலவுலயோ spaceலயோ எங்கிருந்தாவது கொரோனா மாதிரி வைரஸ் தூக்கிட்டு வந்துரக்கூடாதுங்கிற முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
ப்ரெசிடெண்ட் ரிச்சர்ட் நிக்சனுக்கு சந்தோசம் தாங்கல. space ப்ரோக்ராம் வெற்றியடைஞ்சது ஒரு புறம், உலகநாடுகள் மத்தில அமெரிக்கா மானம் காப்பாத்தப்பட்டது மறுபுறம். மொத்த குழுவையும் கொண்டாடி தீத்துட்டார். 2,00,000 மைல்களுக்கு அந்தாண்ட இருக்குற நிலாவுக்கு போய் வர்றதுன்னா சும்மாவா?
சும்மா அளந்து வுடாதய்யா. இந்த space ப்ரோக்ராமே இல்லுமினாட்டிகளோட சதி தான். செட்டு போட்டு சூட் பண்ணி ஏமாத்திட்டாங்க. நட்டுவச்ச கொடி ஆடுச்சு, நிழல் இந்தப்பக்கம் விழுந்துச்சு போன்ற controversies  களை அடுத்தடுத்த பதிவுகள்ல பாப்போம். 🙏
You can follow @PhDJokesMemes.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: