பொதுவாக நாம் சோகத்தையும் மனசோர்வையும் குழப்பி கொள்கிறோம்! சோகம் என்பது மனநிலை மனசோர்வு/depression என்பது பாதிப்பு!!நெருங்கிய உறவுகளை இழப்பது, வேலையிழப்பு, குடும்ப பிரச்சினைகள் இப்படி நிறைய விஷயங்களுக்காக நம்ம மனசு கஷ்டப்படும்! அதையெல்லாம் டிப்ரஷன்னு சொல்லிட முடியாது! 1/n
அதே சோகம் ஒரு 2 முதல் 4 வாரங்களுக்கு மேல குறையாம அதிகமாயிட்டே நம்ம day today activities பாதிச்சி, நம்மையும் நம்ம சுத்தி உள்ளவங்களையும் பாதிச்சா அப்போ அதை மனசோர்வுனு சொல்லலாம்...2/n
டிப்பஷன்னோட காரணங்கள்,
1. Personal and social problms (குடும்ப/ தாம்பத்திய பிரச்சனைகள், பணபிரச்சனை, work placeல வர்ற stress)
2. சிலவகையான உடல்நலகேடுகள் (தைராய்ட், சில வகையான வைரஸ் நோய்கள் தாக்குதலக்கு பின், புற்று நோய் பாதிப்புக்கு பின்னால், மாரடைப்புக்கு பிறகு...3/n
3. மரபு வழியாக..
4. குடிபழக்கம் அல்லது போதை பழக்கம்....
5. உணவு முறை (vit D/B, omega 3 fatty acids, folate, magnesium, zinc, iron குறைபாடுகள் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள்) ...4/n
6. Some medicines like Corticosteroids, anticonvulsants, beta blockers, etc
7. Postnatal depression (குழந்தை பிறந்த உடன் ஏற்படும்)

இன்னும் பல....5/n
அறிகுறிகள்

எப்பொழுதும் சோகமாக இருப்பது, வாழ்க்கை மேல் பிடிப்பு இல்லாமை, எதிலும் நாட்டம்/மகிழ்ச்சி இல்லாமை, முடிவு எடுக்க முடியாத நிலை (சிறு விஷயங்களில் கூட), உடல் சோர்வு, மனஅமைதியின்மை, பசியின்மை/அதிகம் உண்பது, உடல் எடை குறைதல்/கூடுதல், தூக்கமின்மை, No libido...6/n
தன்னம்பிக்கை இல்லாமை/தாழ்வு மனப்பான்மை, எளிதில் எரிச்சல் அடைதல், நண்பர்கள்/உறவினர்களிடம் இருந்து விலகுதல், தனிமையாக இருத்தல், தற்கொலை எண்ணம், தலைவலி மற்றும் உடம்பு வலி, etc..7/n
PHQ-9 scores மூலமாக மனசோர்வு mild, moderate, severe என வகைபடுத்தபட்டு சிகிச்சையளிக்கபடும்..

லேசான மனசோர்வு
ஆரம்ப கட்ட மனசோர்விக்கு..உடற்பயிற்சி, group therapy, yoga, காலை/மாலை நடை, நம்பிக்கைகுரியவர்களிடம் மனம் விட்டு பேசுதல், நாய் வளர்தல், புதிதாக ஒன்றை கற்றுகொள்வது இப்படிசில
மிதமான/தீவிரமான மனசோர்வுக்கு

சில antidepressants, counselling sessions, CBT, REBT போன்ற முறைகளில் சிகிச்சை அளிக்கபடும்...
Depressionனும் ஒரு தலைவலி வயிறுவலி போல ஒரு நோயே! குடும்பத்தில் யாராவது மனசோர்வுடன் இருப்பது தெரியவந்தால் ஆரம்ப கட்டத்திலேயே இத்துறை வல்லுனர்களை அணுகுங்கள்! மறுபடியும் நான் சொல்வது depression சிகிச்சையளிக்க வேண்டிய ஒரு நோய்!...
ஆரம்பகட்டத்திலேயே சிகிச்சையளித்தால் சில வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் சராசரி வாழ்க்கைக்கு உடனே திரும்ப முடியும்!!

Sorry for this long thread, thought of sharing dese to you all 🙏🙏
You can follow @JRGRP_.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: