சார் 'வெறும்' MBBS ஆ !!??

நானும் ரொம்ப நாளா பாக்குறேன் .. தெரிஞ்சவன் தெரியாதவன், அறிஞ்சவன் அறியாதவன்.. சொந்தக்காரன் ,பொண்ணு கொடுக்றவன்.. எல்லாரும் கேக்குற ஒரே கேள்வி..

"சார் வெறும் MBBS தான் படிச்சிருக்கீங்களா..?"

ஏன்டா உங்க புள்ளைங்கெல்லாம் +2 ல ஊற சுத்திட்டு இருந்த நேரத்துல
ராத்திரி பகல் பாக்காம படிச்சு, முட்டி மோதி மூச்சுத்திணறி, ஐம் புலன்களையும்(கஷ்டப்பட்டு) அடக்கி.. எகிறி அடிச்சி ஏறி மிதிச்சி.. MBBS சீட் எடுத்து காலேஜ்கு போனா.. அங்க ராக்கிங் ல அடிபட்டு மிதிபட்டு.. அரியர் வச்சு, திக்கி திணறி, தட்டு தடுமாறி MBBS பாஸ் பன்னி, House surgeon ன்ற பேர்ல
apprentice'கள விட கேவலமா அடிமை வேலை பாத்து (துபாய்ல ஒட்டகம் கூட மேச்சுடலாம்).. சரி இனிமேலாவது குடும்பத்த கரை சேக்கலாம்னு நினைச்சு MBBS degree முடிக்கிற நேரம் பாத்து.. கரெக்டா ஹெல்த் மினிஸ்ட்டர் டெல்லில AC ரூம்ல உக்காந்துட்டு அறிக்கை விடுவாரு.. "இந்த அடிமைகள் 5 வருஷம் படிச்சு அவன்
மட்டும் நாசமா போனது பத்தாது.. இன்னும் ரெண்டு வருஷம் 15000 சம்பளத்துக்கு வேலை பாத்து.. அவனோட குடும்பமும் சேர்ந்து நாசமா போனும்"னு பேட்டி கொடுத்துட்டு போய்டுவாரு.. அப்புறம் அத போராடி நீக்குறதுக்குல நாக்கு தள்ளிரும்.. நீங்க நினைகிற மாதிரி 'வெறும் MBBS' னு அஞ்சு செகண்ட்ல சொல்லிட்டு
போறதுக்கு அது வெறும் வார்த்தை இல்ல.. இன்பம், துன்பம், துரோகம், வலி, வறுமை(சிலருக்கு), ஏக்கம், துக்கம், ஏற்றம், ஏமாற்றம், சுகம், சுகவீனம் னு கலந்து.. ஆறு வருஷம் நாங்க அனுபவிச்சு வாழ்ந்த வாழ்கைடா அது..

எனக்கு ஒரே ஒரு டவுட் தான்.. என்னைக்காவது BE படிச்சவங்க கிட்ட "தம்பி நீங்க
வெறும் BE யா படிச்சிருக்கிங்கனு கேட்ருகீன்களா.. இல்ல.. BSC படிச்ச வங்க கிட்ட நீங்க வெறும் BSC யா னு கேட்ருகீங்க்ளா.. அப்புறம் ஏன்டா எங்கள பாத்து மட்டும் அந்த கேள்விய கேக்றீங்க..?

-இதுவரை பொறுமையுடன் மற்றும் பெருமையுடன் " வெறும் MBBS..
You can follow @iam_DrAjju.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: