சிவகாமியின் செல்வன் ❤❤❤

எக்காலமும் அவன் ஒரு அதிசயம், அவனை நினைத்தால் கண்களில் ஒருதுளி நீர்வராமல் நினைவு கலையாது, நெஞ்சில் ஒரு விம்மலோடுதான் அவனில் இருந்து மீள முடியும்

"விருதுபட்டி பெற்றபிள்ளை உண்மையிலே தெய்வபிள்ளை" எனும் அந்த வைகுண்டரின் வாக்கும் அவனால் நிறைவேறிற்று,

(1/N)
இப்பொழுதும் இனிவரப்போகும் தமிழக மக்களுக்கு அவன் ஒரு அதிசயம், அப்படியும் ஒரு தலைவன் இருந்தான் என நம்ப மிகவும் கஷ்டம்தான், நம்ப முடியாத விஷயம்தான்

ஆனால் அப்படியும் ஒரு மனிதன் இருந்திருக்கின்றான், அவன் ஆண்ட காலத்தில் தமிழகத்திற்கும் ஒரு பொற்காலம் இருந்திருக்கின்றது

(2/N)
கண்ணதாசன் வரிகளில் சொன்னால் "காலத்தின் கடைசி கருணை அவன், ஞாலத்தில் பாரத சாட்சி அவன்"

நாட்டை தன் போல் பாவித்த, ஒவ்வொரு நொடியும் நாட்டுக்காய் வாழ்ந்த, ஏங்கி நின்ற எந்த சாதி குழந்தையானாலும் அந்த இந்திய குழந்தைக்காக கண்கலங்கிய, தமிழக குழந்தை கல்விக்காக பிச்சை எடுத்த,

(3/N)
தனக்கென வாழாமல் நாட்டுக்கே வாழ்ந்த‌ அந்த பெருமகன் காமராஜ் என்று,

உறுதியாக சொல்லலாம், ஒரு ஜனநாயக நாட்டு அரசியல்வாதி எப்படி வாழவேண்டும், எப்படி ஆட்சி செய்யவேண்டும், எப்படி சிந்திக்கவேண்டும் என்பதற்கு அவர் ஒரு பெரும் இலக்கணம், அரிச்சுவடி

(4/N)
தமிழகத்தில் தர்மனின் ஆட்சியை, சித்திரகுப்தனின் துல்லியத்தில் கொடுத்துகொண்டிருந்தார். ஆனால் எதிர்கட்சி திராவிட கும்பல்கள் அவரை எதிர்த்தே அரசியல் செய்தன,அதில் ராஜாஜியும் சேர்ந்தது கொடுமை,ராஜாஜி அறியாமல் தடுமாறினார் திமுக பிடி தன்கையில் இருக்கும் என கணக்கிட்டார் அது பொய்த்தது

(5/N)
ஆட்சியில் யார் இருந்தாலும் ஆதரிக்கும் ஈரோட்டு ராம்சாமி தவிர யாரும் அன்று தமிழகத்தில் காமராஜருக்கு ஆதரவில்லை. ராம்சாமி வாழ்க்கையில் சொன்ன ஒரே நல்ல விஷயம் காமராஜர் ஆட்சி நீடிக்க வேண்டும் என்பது

அவர் சொன்ன நல்ல விஷயத்தை திமுக என்றாவது கேட்குமா? கேட்டால் உருப்படதான் முடியுமா?

(6/N)
என்ன செய்யவில்லை காமராஜர்

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை திறந்தது, அவர்களுக்கு கஞ்சியும் ஊற்றியதென அந்த சாதனை ஒருபுறம்

இன்றும் எண்ணற்ற மக்களுக்கு சோறுபோடும் ஆவடி தொழிற்சாலை,திருச்சி பெல்கம்பெனி,துப்பாக்கி தொழிற்சாலை என முக்கியமானவற்றை தமிழகத்திற்கு கொண்டுவந்துவிட்டு

(7/N)
தேவிகுளம் பீர்மேடு மலைபகுதியை கேரளத்திற்கு கொடுத்து முப்போகம் விளையும் குமரிமாவட்டத்தை ராஜதந்திரமாய் தமிழகத்திற்கு சேர்த்தது மறுபுறம்

இன்னும் மேட்டூர் அணையினை உயர்த்தியது, வைகை அணையினை கட்டி மாபெரும் திருப்பம் கொடுத்தது என தமிழகத்தில் பிரமாண்ட திட்டமெல்லாம் அவர் கொடுத்தது

(8/N)
இன்னும் ஏராளம், ஒவ்வொன்றும் ஆழ்ந்த தொலைநோக்கும், மக்கள் நலனும் தேச அபிமானமும் கொண்டது.

(கன்னியாகுமரியினை அவர் தமிழகத்தோடு சேர்த்தற்கும் பின்னாளில் சாதி சாயம் பூசபட்டது. வரலாறு தெரிந்தவருக்கு தெரியும் விருதுநகர் நாடார்கள் தென்பகுதி நாடார்களோடு அக்காலத்தில் ஒட்டுவதே இல்லை

(9/N)
தென்பகுதி நாடார் மக்கள் விருதுநகர் நாடார்களுக்கு தாழ்த்தபட்டவர்கள், உட்சாதி விவகாரம் இது, காமராஜர் சாதிபார்த்தார் என்பதெல்லாம் வடிகட்டிய பொய்

11 ஆண்டுகள் முதல்வர், வெறும் 7 அமைச்சர்கள், நிதி இல்லா மாநிலத்தின் மிகபெரும் சிக்கன நடவடிக்கையில்தான் பத்தாயிரம் பள்ளிகளை திறந்து

(10/N)
பிச்சை எடுத்து சோறும்போட்டார்

வேலை கொடுக்க தொழிற்சாலை, கல்வி கொடுக்க பள்ளிச்சாலை, நீர்கொடுக்க அணைகள் என அம்மனிதன் போட்ட அஸ்திவாரங்கள் கொஞ்சமல்ல‌

தாழ்த்தபட்ட மக்களின் மேலான தாக்குதலுக்கு துப்பாக்கிசூட்டை நடத்தவும் அவர் தயங்கவில்லை, அது வாக்கினை பாதிக்கும் என்றாலும் கலங்கவில்லை
சூது அறியாத, எதிர்கட்சிகளை முடக்க தெரியாத, சினிமாவை அதன் இயல்பான நாடகமாக அப்பாவியாக எண்ணிய, பத்திரிகைகள் உண்மையை மட்டும் பேசும் என எண்ணிய அந்த தலைவனை,
இந்த தமிழகம் புறக்கணித்தது.

சினிமா எனும் மாயையில் அந்த கர்ணனை வீழ்த்திற்று

(12/N)
பொய்க்கும் வஞ்சகத்திற்கும் மயங்கியது.திராவிட கட்சிகளின் பொய்க்கே இலக்கணம் எழுதும் புரட்டுக்களில் அது காமராஜரை வீழ்த்திற்று. எல்லா பிரச்சினையும் காமராஜர் காரணமாம்.

இந்தி முதல் இதயகனி சுடபட்டது வரை எல்லா பிரச்சினையும் அவர்தான் என திராவிட கரம் நீண்டது

(13/N)
வாட்ச் கூட கட்டாத அவருக்கு சுவிஸில் வங்கி கணக்கு இருப்பதாக சுவிஸ்கடிகாரம் அணிந்த கரம் நீட்டி சொல்ல, ஒப்புகொண்டது தமிழகம்.

தர்மனின் அரியணை சகுனிக்கு கிடைத்தால் என்னாகும்? அதுதான் இங்கு நடந்தது

அவனின் இலவச கல்வியை இவர்கள் காசாக்கினார்கள், கஞ்சி ஊற்றி கல்வி கொடுத்தவன் அவன்

(14/N)
குழந்தைக்கும் மதுகொடுப்பது இவர்கள்

தொழிற்சாலை எல்லாம் கொண்டுவந்தது அவன்,தொழிற்சாலைகளில் எல்லாம் சொந்தபங்கு வைத்திருப்பது இவர்கள்

அணைஎல்லாம் கட்டி விவசாயம் பெருக்கியன் அவன்,தண்ணீதொட்டி கட்டிவிட்டு அது அணை என சொல்பவர்கள் இவர்கள்,கூடவே நீரையும் வியாபாரமாக்கியவர்கள் இவர்கள்

(15/N)
மருத்துவமனை கட்டியது அவன், மருத்துவத்தை தொழிலாக்கியவர்கள் இவர்கள்

கடைசிவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவன் அவன், இவர்களோ லண்டன் அமெரிக்கா அப்பல்லோ என ஓடிகொண்டிருப்பார்கள்

கடைசிவரை சொந்தவீடு இன்றி வாழ்ந்தவன் அவன், ஊரெல்லாம் வீடு வைத்திருப்பவர்கள் இவர்கள்

(16/N)
அவன் கட்டிய அணைகள்,அவன் கட்டிய ஆலைகள் போல் ஒன்றுகூட பின்னாளில் கொண்டுவர முடியாத கையறுநிலையில் எதிர்கட்சிகள் இன்றுவரை தலைகுனிந்து நிற்பதுதான் அவனின் வெற்றி

10 ஆயிரம் பள்ளிகள் அவன் திறந்ததை மூடி தனியார்கல்வி கொள்ளையினை வளர்த்து இவர்கள் தலைகுனிந்து நிற்பதுதான் அவனின் வெற்றி

(17/N)
எத்தனையோ அணைகட்டி அவன் நீர்பெருக்கிய மாநிலத்தில் இன்று ரயிலிலும் வண்டியிலும் ஏன் ஒரு லாரி தண்ணீர் 5 ஆயிரம் என ஏலம் போடும் நிலைதான் அவனின் வெற்றி

ஆம் காலம் கடந்தே அந்த மாமனிதனின் வெற்றி உலகிற்கு உரக்க சொல்லபடுகின்றது.

சொன்னால் சொல்லிகொண்டே போகலாம்.

(18/N)
இந்த தேசத்தை மனமார நேசித்த, இந்த மண்ணிற்காகவே வாழ்வினை அர்பணித்த அந்த உத்தம தலைவனுக்கு இந்த தேசம் கொடுத்தது என்ன?

வாழும் காலத்தில் இந்தியாவில் காந்தி,நேரு வரிசையில் வைக்கபட்டவர் அவர். நேருவிற்கு பின் கென்னடி, குருச்சேவ்,காமராஜ் என உலகம் ஒரு வரிசை வைத்திருந்தது.

(19/N)
ஐ.நாவின் உலக கல்வி பிரிவு அவரை உலகெல்லாம் சொல்லி சொல்லி கொண்டாடியது. ரஷ்யா உண்மையான மக்கள் போராளி என மாஸ்கோ மாளிகையில் பாராட்டு பத்திரம் வாசித்தது

உலகமே அவரை கொண்டாடியது, அழைக்காத நாடில்லை, வணங்காத தலைவரில்லை

ஆனால் தமிழகம் மட்டும் அவரை கண்டுகொள்ளவே இல்லை என்பதுதான் மகா சோகம்.
அவர் சாதிகளையும், மதங்களையும் கடந்த மகான் வாழ்க்கை வாழ்ந்தவர், அவரின் உயரம் பெரிது.

அவர் எங்கள் சாதி என மார்தட்டுபவர்கள் கொஞ்சம் சிந்திக்கலாம், அப்படி உங்கள் சாதிக்கு அவர் என்ன செய்துவிட்டார்?

(21/N)
ஒரே மகனாக பெற்றெடுத்த அன்னைக்கும், தந்தையில்லா சகோதரிக்கும் கூட ஒன்றும் செய்யாமல் போனதை போலத்தான் உங்கள் சாதிக்கும் அவர் ஒன்றும் செய்யவில்லை

(22/N)
சதாம் உசேனின் பெருமை ஈராக்கில் தெரிகின்றது, கடாபியின் பெருமை சீரழிந்த லிபியாவில் அப்பட்டமாக தெரிகின்றது.

அப்படியே சுயநல‌ கட்சிகளின் ஆட்சிகளின் தமிழகத்தின் நிலையில் காமராஜர் எப்பொழுதும் உயர மின்னிகொண்டே இருப்பார்.

(23/N)
அவ்வகையில் அவரை வீழ்த்தியதாக நினைத்துகொள்ளும் கட்சிகள் அவருக்கு செய்த பெரும் உதவி இது.

இவர்கள் ஆட்சியின் சீரழிவில் , இவர்கள் வீழ்த்தியதாக சொல்லபட்ட காமராஜர் புன்னகைத்துகொண்டே இருப்பார், அதுதான் அவரின் மாபெரும் வெற்றி

அழியாத வெற்றி

(24/N)
கர்ணனை வீழ்த்த நினைத்த கூட்டணி போல் காமராஜருக்கும் பலர் எழுந்தனர். காமராஜர் இந்திய தலமையினை நிர்ணயிப்பவர் என வல்லரசுகள் கணக்கிட்டன‌

பாகிஸ்தான் போரில் எல்லைக்கே சென்று சாஸ்திரியுடன் அவர் காட்டிய துணிச்சல், ரஷ்யாவிடம் அடிபணிய கூடாது

(25/N)
முழு காஷ்மீரையும் மீட்க வேண்டும் என அவர் சாஸ்திரிக்கு கொடுத்த அழுத்தமெல்லாம் பல நாடுகளுக்கு பொறுக்கவில்லை

காங்கிரஸில் சில சி.ஐ.ஏ கரங்கள் ஊடுருவின, அவைதான் காமராஜருக்கு எதிராக திட்டமிட்டன, காங்கிரஸில் இருந்து அவர் வெளியேறியது அப்படித்தான்

(26/N)
அதே கரங்கள் மிஷனரிகள், வியாபாரிகள், பத்திரிகை, ஊடகம் என திமுகவினை வளைத்து காமராஜரை இங்கும் விரட்டின‌

நாட்டுக்காய் 11 வருடம் சிறையிருந்தான் அவன், ஒரு இடத்தில் அதை சொல்லி அனுதாபம் தேடினானா, பாடல் படித்தானா?

அம்மனிதனை கொஞ்சபாடா படுத்தினார்கள்?

(27/N)
அவன் பத்தாயிரம் பள்ளிகளை திறந்தான், படித்து முடித்தோருக்கு வேலை கொடுக்க இன்றுள்ள சூழல் அன்றில்லை, ஐடி இல்லை இவ்வளவு கம்பெனிகள் இல்லை

இந்தி படித்தால் அவர்கள் வடக்கே வேலை செய்யும் வாய்ப்பு உண்டு என்று கணக்கிட்டான், அதில்தான் கட்டையினை போட்டன திராவிட கும்பல்கள்

(28/N)
அம்மனிதன் 1965 போரை நடத்தியபொழுதுதான் அரிசி பஞ்சம் வந்தது, போர் என்றால் அது சகஜமே, இது தெரிந்தும் பட்டினி போட்டான் காமராஜ் என முழங்கின திராவிட கும்பல்கள்

அம்மனிதன் செய்தது இரண்டே தவறு, ஒன்று தமிழனாய் பிறந்தது இன்னொன்று நாட்டை நேசித்த தேசபக்தனாய் இருந்தது

(29/N)
இதற்குத்தான் அவ்வளவு விரட்டினார்கள், காமராஜரின் உதவியாளன் சொன்னது போல் அவர் சாமி கும்பிட்டு நான் பார்த்ததில்லை ஆனால் வீட்டில் அன்பளிப்பாக வந்த நடராஜர் சிலைமுன் சில நேரம் நிற்பார், உற்றுபார்ப்பார்

மெல்ல கண்களை துடைத்துகொண்டு சென்றுவிடுவார்

(30/N)
ஆம்,அந்த மனிதனின் அழுகையினையெல்லாம் அந்த நடராஜர் சிலைதான் அறிந்திருந்தது, அது ஒன்றுதான் அறிந்திருந்தது. இந்ந நாட்டுக்கு இன்னும் நிறைய செய்யாமல் முடிந்துவிடுவோமோ எனும் ஏக்கம் இருந்தது,அன்று செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருந்தன‌,

(31/N)
ஒவ்வொரு இந்தியனும் நன்றி எனும் மலர்களால், கண்ணீர் எனும் தூபத்தால் அந்த தர்ம தேவனுக்கு பூஜை செய்யும் குருபூஜை

ஏழைக்காய் வாழ்ந்து , ஏழையாகவே கடைசிவரை வாழ்ந்த அவன் எக்காலமும் இங்கு ஒளிகாட்டும் விளக்கு, வழிகாட்டும் தெய்வம்

(32/N)
அந்த அசாத்திய தேசபற்றாளனுக்கு, காலம் கொடுத்த கொடைக்கு, தர்மத்தின் வடிவானவனுக்கு, கர்ணனின் சாயலுக்கு,

தேசத்தையே நினைத்திருந்து, நாட்டுக்கே வாழ்ந்திருந்து, நாட்டுக்கே உயிர்விட்ட உத்தனனுக்கு நெஞ்சின் அடியாழத்திலிருந்து நன்றி

(33/33)
You can follow @Samuelclicks.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: