#ஆடி ஸ்பெஷல்....!

ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர் என்கிறது புராணம்.

ஒரு சமயம் பார்வதிதேவி ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எடுத்து கயிலையின் உள்ளே யாரும் அறியா வண்ணம் நுழைந்தாள்.
பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள் அப்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான் உணர்ந்தார். தன்னை நோக்கி வந்தவள் பார்வதி அல்ல என்பதை அறிந்து தன் சூலாயுதத்தால் ஆடியை அழிக்க நினைத்தார். அப்போது சூலாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடையச் செய்தது.
அவள் ஈசனை வணங்கி ஒரு நிமிடமாவது தங்கள் அன்பான பார்வை என்மீது பாட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துகொண்டேன்.

என்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினாள் ஆனால் சிவபெருமான் என் தேவி இல்லாத சமயம் நீ அவளைப்போல வடிவம் கொண்டு வந்தது தவறு.
எனவே பூவுலகில் கசப்புச் சுவையுடைய மரமாகப் பிறப்பாய் என்றார்.

அவள் விமோசனம் கேட்க கவலை வேண்டாம் நீ மரமாகிப் போனாலும் ஆதிசக்தியின் அருளும் உனக்குக் கிட்டும். சக்தியை வழிபடுவதுபோல் உன்னையும் வழிபடுவார்கள்.

ஆடியாகிய உன் பெயரிலேயே ஒரு மாதம் பூலோகத்தில் அழைக்கப்படும்.
அந்த வேளையில் நீ கசப்பு குணம் கொண்ட மரமாக இருந்து மக்களுக்கு நல்லதைச் செய்வாய் என்று அருளினார்.

ஆடி என்ற தேவலோகத்துப் பெண் தான் பூலோகத்தில் வேப்ப மரமாகத் திகழ்கிறாள். ஈசனின் சாபமே அவளுக்கு வரமாக மாறியது. தெய்வம்சம் பொருந்திய வேம்பு ஆதிசக்தியின் அம்சமாக உள்ளது.
நோய்கள் பலவற்றை குணமாக்கும் சக்தி கொண்டவளாக திகழ்ந்தாள் அந்த மங்கை.

உச்சி முதல் அடி வரை அதாவது நுனிவேர் வரை முழுவதும் மருந்துக் குணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது வேப்ப மரம். விஷக்கடிகளின் விஷத்தைப் போக்கும் மருத்துவர்களுக்கும்,வேப்ப இலை பயன்படுகிறது.
இந்தியாவில் மட்டும் 25 மில்லியன் மரங்கள் உள்ளதாக ஆய்வில் கிடைத்த செய்தி இதில் 32 க்கும் மேற்பட்ட தாவர இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மனிதனை வாழவைக்கும் அமுத சுரபியாகும் தாவரவியல் பெயர் அசாடிரக்டா இன்டிகா (AZADIRACHTA INDICA Adv.Juss ). தாவரக்குடும்பம் மீலியேசி (Meliaceae).
இந்தியா முழுவதும் பரவி காணப்படும். ஜூன்,ஜூலையில் கனிகள் உருவாகும். மார்ச்சு,ஏப்ரலில் பூக்கள் பூக்கும். பல்லாண்டு வாழும் மரம்.

கருவேம்பு, நிலவேம்பு, மலைவேம்பு, சர்க்கரை வேம்பு எனப் பல வகைகள் இருந்தாலும், கருவேம்பையே பொதுவாக வேம்பு எனக் கூறப்படுகிறது.
ஏறக்குறைய 400 ஆண்டுகள் வரையிலும் முதிர்ந்து வளரும் தன்மைக் கொண்டது.

இதன் எண்ணெய் உணவுக்கும், விளக்கெரிக்கவும், தோல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இலை முக்கியமாகக் கொசு விரட்டியாகப் பயன்படுகிறது. இயற்கை பூச்சுக்கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது.
இலையை அரைத்துக் களிம்பாக்கிப் புண்களை ஆற்றவும், கட்டி வீக்கங்களைக் கரைக்கவும் வைத்துக் கட்டுவார்கள். பட்டை ஜுரத்தைப் போக்கவும் பயன்படுகிறது எண்ணெய் மூலம், பலவீனம்,கருத்தடை, குஷ்டம்,மூட்டுவலி,பொடுகு,புண்,அம்மை, புற்றுநோய்,பாம்புக்கடி ஆகிய பிரச்சினைகளுக்குப் பயன்படுகிறது
பச்சைப் பசேல் என்று இருக்கும் வேப்ப மரத்தைத் தினசரி 40 நாட்கள் காலையிலும் ,மாலையிலும் அரை மணி நேரம் பார்த்து அதன் காற்றைச் சுவாசித்து வருபவர்களுக்கு கண் சம்பந்தமான நோய்களும் ,சுவாச உறுப்புகள் சம்பந்தமான நோய்களும் வருவதில்லை,சுவாச உறுப்புகள் சுத்தமடையும்,கண் பார்வை தெளிவடையும்,
மூலிகை வர்க்கங்களிலேயே அனைத்து வகை நோய்களையும் தீர்க்கக் கூடிய சக்திவாய்ந்த ஒரு மூலிகை உண்டென்றால் அது வேப்ப மரமாகத்தான் இருக்கும்.

வேப்பிலையிலிருக்கும் மருத்துவ குணம் கொண்ட சக்தி இலை வீசும் பொழுது வெளிப்படும் இந்தச் சக்தி எந்த வியாதியையும் குணப்படுத்தக் கூடியதாக இருக்கிறது.
வேப்பிலைக் கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும். தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் மலேரியாக் காய்ச்சல் குணமாகும்.
சர்க்கரைவியாதியை கட்டுக்குள் கொண்டுவர தினமும் வேப்பங்க்காயை சாப்பிட்டு வாருங்கள் மாத்திரையின்றி கட்டுக்குள் கொண்டு வரலாம்.

வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரையை சேர்த்து காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் தீராத
தொழுநோய் முதலான அனைத்து சரும வியாதிகளும் குணம்டையும்.

இலையை தண்ணீரில் போட்டு அதனை நன்கு கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் முகம் கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் பரு, கரும் புள்ளிகள் ஆகியவை நீங்கும் வேப்பங்காய் இரத்த மூலத்தையும்,குடற் பூச்சிகளையும் சிறுநீரகத் தொல்லைகளையும் போக்கும்
அம்மை நோய் வந்தவர்கள் வேப்பிலையை கீழே போட்டு அதன் மேல் படுத்துக்கொள்வது நல்லது. மேலும் வேப்பிலை அல்லது இளந்தளிருடன் மஞ்சள் சேர்த்து அரைத்து அம்மை கொப்புளங்களின் மீது தடவி வந்தால்,நோய் விரைவில் குணமாகும்.
காய்ந்த வேப்பம்பூ தூளை 4 சிட்டிகை எடுத்து இஞ்சிச் சாறில் கலந்து சாப்பிட்டால் அடிக்கடி வரக்கூடிய ஏப்பம் குணமாகும்.

வேப்பம்பூ தூள் 4 சிட்டிகை அளவு எடுத்து, 2 சிட்டிகை பெருங்காயத்தூளுடன் சேர்த்து வெந்நீரில் கரைத்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை விலகும்.
100 வயதான வேப்பமரப் பட்டையை நிழலில் உலர்த்திச் சூரணித்து பாலில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்,

அதனால் தான் நம் முன்னோர்கள்
அமைத்த வீடுகளில் முன்பக்கம் வேப்பமரம் இருக்குமாறு பார்த்துக் கொண்டனர்.

வீட்டினுள் தொத்து நோய் வருவதற்கான எந்தவிதமான அறிகுறிகளும் இருக்காது.
வேப்பம்பூ ரசம், துவையல் ஆகியவற்றை சமைத்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தால் நம்மை கொரானா அண்டவே அண்டாது.

இப்பொழுதுள்ள சூழ்நிலைக்கு தேவையானதும் கூட ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றும் திருவிழா நடந்து கொரானாவை ஒழிக்கட்டும்.
முன்னோர்கள் வகுத்த வாழ்வியல் முறை
ஒவ்வொன்றுக்கும் பின்னால் 1000 ஆண்டுக்கால அனுபவம் சார்ந்து அறிவியலும் கலந்திருக்கிறது ஆனால் இங்கே கலாச்சாரம் பண்பாடு வாழ்வியல் முறை என்பது மதம் சார்ந்தே இருக்கிறது
ஆன்மிகம் என்பது இந்துக்களுக்கானது மட்டும் என்ற பிம்பத்தை #திருட்டு_திமுக வளர்த்து தமிழ்நாட்டை குட்டிசுவராக்கி வைத்துள்ளனர்

இதை முறியடிக்க அணைத்து மதத்தினருக்கான ஆன்மிக அரசியலை முன்னெடுக்க ஆளுமை மிக்க #தலைவர் ரஜினியால் மட்டுமே முடியும் மக்கள் 2021ல் உணர்த்துவார்கள்.

நன்றி🙏
#SSR
You can follow @SSR_Sivaraj.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: