தான் பெரிய
தவறு செய்துவிட்டோம்
என அவன் மருகி
குறுகிய நிலையில்..
நீ செய்தவை
யாவும் சரியே
என்பதுபோல் அரங்கம்
அதிர்ந்து ஒளித்த
நண்பன் பாடலால்
அவனின் பலத்தை
அவனே உணர்ந்த
நெகிழ்வான தருணம்..!

#Kavin
#Lift https://twitter.com/sheka_abi/status/1283456442079473665">https://twitter.com/sheka_abi...
மீளா துயரில் வீழ்ந்த
அவனை மீட்டெடுத்து
தலைநிமிர்த்தி
நிற்க வைத்த
முகமறிய அன்பிற்கு
நன்றியுரைக்க
அவன் அர்ப்பணித்த
அழகிய புன்னகை..!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/kavinism_page2/status/1283456626297458688">https://twitter.com/kavinism_...
நான்கு நாட்கள்
தவத்திற்கு பின்
கிடைத்த தரிசனம்..
கருப்பிலும் காந்தமாய்
ஒளிர்ந்த ஓவியம்..
துயரிலும் துவளாமல்
மிளிர்ந்த அவன்முகம்..!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/castro_fiedel/status/1283457078556647424">https://twitter.com/castro_fi...
தன்வெற்றி கண்டு
முகம் சுளித்து
தன்னைவிட
உடனிருப்போரின்
நலனில் அதீத
அக்கறை கொண்ட
விசித்திர மானிடன்..!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/kavisistersudha/status/1283457130482135040">https://twitter.com/kavisiste...
பெருமையும்
வெட்கமும்
ஒன்றர கலந்த
பிழையில்லா
மதிமுகம்..!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/NandiniKavi/status/1283457730926088193">https://twitter.com/NandiniKa...
கிடைத்த புகழுக்கு
மயங்காமல்
வந்த துயருக்கு
கலங்காமல்
அத்துணைக்கும்
ஓர் சிரிப்பை
உதிர்த்துவிட்டு
புதைத்தாலும்
மீண்டெழுந்து
மின்னும்
கருப்பு வைரம்..!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/Sibi00377567/status/1283457764585435136">https://twitter.com/Sibi00377...
அவன் பார்வையின்
தாக்கம் தாளாமல்
கண்ணாடியும்
பெண்மை பூசி
நாணம் கொள்ளும்..!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/Sharmini26/status/1283458994389098496">https://twitter.com/Sharmini2...
களங்கமுற்ற அவனின்
கலங்கம் துடைத்த
எண்ணிடலங்கா
அன்பை எண்ணி
கலங்கிய பிறைமுகம்..!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/Officials_offl/status/1283462310661459968">https://twitter.com/Officials...
காண்போர்
யாவரையும்
ரசிக்க வைத்து
அவர்கள் ரசிக்கும்
அழகை இவன்
கண்டு ரசிக்கும்
ரசனையான கள்வன்..!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/Sun_gooner/status/1283465272482037762">https://twitter.com/Sun_goone...
அள்ளிக் கொடுத்தும்
குறையா செல்வம்
கொண்ட கடல் போல்
வள்ளல் குணம்
பெற்ற நீலநிற
கண்ணன்..!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/ArunAk951708/status/1283467012820197376">https://twitter.com/ArunAk951...
ஐந்திரு வருட
அகவை குறைந்த
தோற்றம் தரித்தாலும்..
தீரா குறும்பும்
மறையா புன்னகையும்
மாறா மனதும்
கொண்ட மன்னவன்..!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/LKaviliya/status/1283468803163095040">https://twitter.com/LKaviliya...
பொய் வண்ணம் பூசி
பிறர் இவன்மேல்
சாயமிட்டாலும்..
கறையாகாது
இவன் மாண்பு..!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/MskyogiMsk/status/1283472856043536385">https://twitter.com/MskyogiMs...
அவன்மேல் வீண்பழியிட்டு
தன்னை புனிதனாக
காட்டிக்கொண்ட
தேவதையின்
முகத்திரை கிழித்து
கர்ஜிக்கும் மஞ்சள்..!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/Ramkumar1063/status/1283475055171612672">https://twitter.com/Ramkumar1...
பச்சை உடுத்தி
நிற்கும் உன்
கம்பீரம் கண்டு..
என் கருவிழிகள்
பசுமையாய் மாறும்
மாயம் என்ன..!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/kavinfc75/status/1283498712694525952">https://twitter.com/kavinfc75...
பட்டாம்பூச்சியும்
பறக்க மறந்து
சிலையாகி போகும்..
கள்ளத்தனம் கொண்டு
அவன் நோக்கும்
வசீகர பார்வையில்..!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/h1dayat_1mpacto/status/1283553907248107532">https://twitter.com/h1dayat_1...
கனவுகளையும்
தேடல்களையும்
சுமந்துகொண்டு
அதற்கு உறுதுணையாக
நிற்க போகும்
தன்பலத்தை
கரம் நீட்டி வரவேற்ற
அவன் பிம்பம்..!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/AnnKGF/status/1283580346664022016">https://twitter.com/AnnKGF/st...
கருமை கண்களில்
செம்மை சூழ
நுண்ணிய நாளங்கள்
வெம்மையாக
மெல்லிய நரம்புகள்
புடைத்து நிற்க
நியாயமான
கோபத்தில்
பிரகாசிக்கின்ற
மஞ்சள்நிற சூரியன்..!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/Meenakshi_KFF/status/1283586370905096192">https://twitter.com/Meenakshi...
தேடல் கொண்ட
கண்ணோடு
உறுதி கொண்ட
மனத்தோடு
வருவதை
எதிர்கொள்ளும்
துணிவோடு
விடியலை நோக்கி
ஆயுத்தமாகும்
கருப்பு நிலா..!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/Vimsliya91/status/1283589841012142081">https://twitter.com/Vimsliya9...
கருமை பக்கங்கள்
வெண்மையாக மாற
சுய சரித்திரத்தில்
புதிய அத்தியாயம்
அவன் எழுத
நேரமும் கைக்கொடுத்து
தூக்கி நிற்க வைத்து
அழகு பார்க்கும்
போராளியின்
எழில் கோலம்..!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/CutiepieKavin/status/1283602385563074560">https://twitter.com/CutiepieK...
தன்நிலை தரமாய்
விளக்கும் கருத்தான பேச்சு!
பிறர்நிலை உணர்ந்து
காயப்படுத்தாத கண்ணிய பேச்சு!
பிரதிவாதங்களும்
கட்டுண்டு போகும் பேச்சு!
எதிரியின் மனநிலையும்
லாவகமாக மாற்றும் பேச்சு!
எதிராருக்கு புரியும்வரை
நிற்காத பேச்சு!
ரௌத்திரத்திலும்
தரம்குறையாது
இவன் பேச்சு..!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/Prave91/status/1283603944481017856">https://twitter.com/Prave91/s...
காற்றில் ஆடும்
கலைந்த சிகையுடன்..
கண்ணாடிக்குள் ஒளிந்த
கூரிய கண்களுடன்..
கம்பீரமாய் கைகள்
முறுக்கும் மீசையுடன்..
அளவாய் விரிந்த
இதழின் வசீகர புன்னகையுடன்..
செதுக்கிய சிலைப்போல்
காட்சியளிக்கும்
மலைக்கோட்டை ஈன்ற
மாவீரன்..!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/sowms19/status/1283615157873020929">https://twitter.com/sowms19/s...
கண்டவுடன்
கண்ணங்களை
சிவக்க செய்யும்
சிவப்பு நிற
சிங்காரன்..!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/divyaravindra13/status/1283629884343033856">https://twitter.com/divyaravi...
தடைகள் வந்தாலும்
துயர்கள் இடைப்பட்டாலும்
உன்னை உருவாக்கிய
உண்மையை மட்டும்
கைக்கொண்டு
துணிந்து நில்..
வானமும் உன்
வசப்படும்..!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/sureshshine26/status/1283632199854518272">https://twitter.com/sureshshi...
நிலா முற்றத்தில்
கடந்து வந்த பாதையின்
நினைவுகளை
அசைப்போடும்
கருஞ்சூரியன்..!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/kaviliya19/status/1283637714659622912">https://twitter.com/kaviliya1...
இதோ, மறுபிறப்பெடுத்து
புதிய அரிதாரம் தரித்து
உயர்த்தியில் ஏறுகிறான்..
இந்த உயர்த்தி
அவன் கனவுகளுக்கு
உந்துசக்தியாக அமையும்
என்ற நம்பிக்கையில்..!

#Lift
#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/kiruthigaM/status/1283639540704399360">https://twitter.com/kiruthiga...
சாய்ந்த பொழுதுகள்
மீண்டும் புதுவிடியல் பெறும்..
வாடிய வானம்
மீண்டும் ஒளிபெறும்..
தேங்கிய கனவுகள்
மீண்டும் உயிர்பெறும்..
தளரா முயற்சியும்
முடியா தன்னம்பிக்கையும்
உன்னைவிட்டு நீங்கா வரை..!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/yathniranjith/status/1283659519734607872">https://twitter.com/yathniran...
மொழிகள் மறந்து
அலைந்தேன்..
வார்த்தைகள் தேடி
களைத்தேன்..
எழுத்துக்கள் கோர்க்க
திணறினேன்..
இவன் வெட்கத்தை
கவிதையாய்
வர்ணிக்க..!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/KUSHI331/status/1283741110901239808">https://twitter.com/KUSHI331/...
விண்ணை எட்டும்
விசிலின் சத்தம்
காதை கிழிக்கும்
கைத்தட்டல்கள்
அரங்கம் மிரண்ட
ஆரவாரம் கண்டு
தன் படைப்பலம்
அறிந்தபோதிலும்
அவன் உதிர்த்தது
"வேலையை மட்டும்
பாக்கணும்" ..!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/thiseason/status/1283717655334191104">https://twitter.com/thiseason...
கண்ட தோல்விகளும்
தவறிய வாய்ப்புகளும்
பெற்ற அவமானங்களும்
தந்த பாடம் ஏற்று
கோதையின் ஆசியும்
படையின் பலமும்
வாய்மையின் வழியும்
கைக்கொண்டு
தன்னம்பிக்கையுடன்
தலைநிமிர்..!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/Murugan_Pon1/status/1283716469423890432">https://twitter.com/Murugan_P...
பாடுகளும்
சோதனைகளும்
நிறைந்த நினைவுகளை
மகிழ்வோடு
திரும்பி பார்க்க
வைத்த ஓராண்டு
கொண்டாட்டத்திற்கு
அவன் உரைத்த
நன்றியுரை..!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/raja_rajak15894/status/1283810062272565249">https://twitter.com/raja_raja...
காலங்கள் கடந்து
கோலங்கள் மாறி
காட்சிகள் மறந்தாலும்
தீராதே! இவன் மேல்
நான் கொண்ட
காதல்...!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/gokila_gokila97/status/1284046466793607168">https://twitter.com/gokila_go...
இன்பமோ துன்பமோ
வெற்றியோ தோல்வியோ
சாதனைகளோ சோதனைகளோ
எதில் பயணிக்க
நேர்ந்தாலும்
மங்காது இவன்
மாசற்ற புன்னகை...!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/vamsivicky5490/status/1283710240664334337">https://twitter.com/vamsivick...
தற்குறி தந்திரங்களுக்கும்
போலி போதனைகளுக்கும்
செவி சாய்க்காமல்
தன்மனம் சொல்வதை
மட்டும் நம்பி
தனித்து நிற்கும்
& #39;மதி& #39;யாளன்..!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/Sangami76307882/status/1284051377224744966">https://twitter.com/Sangami76...
நிலா முகமும்
பிறை விழிகளும்
ஒளிரும் குணமும்
உயரும் துணிவும்
பெற்று நிற்கும்
பொன்மஞ்சள்
ஆதன்..!

#Kavin
#aarthihttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✍️" title="Schreibende Hand" aria-label="Emoji: Schreibende Hand"> https://twitter.com/Swetha692302/status/1284062507762544641">https://twitter.com/Swetha692...
You can follow @aarthi_KnL.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: