கொரோனா ஊரடங்கால், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு,

ஜப்பான் அரசு, உள் நாட்டு உற்பத்தியில்(GDP) 20% நிவாரணம் தந்திருக்கிறது. அமெரிக்கா 15% தந்திருக்கிறது.

ஆனால் இந்தியா கொடுத்திருப்பது 1%.

_ செய்தி. 1/n
இந்த கொரோனா ஊரடங்கு கோடிக் கணக்கான ஏழை நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை, முற்றிலும் புரட்டி போட்டிருக்கிறது.

இதனுடைய தாக்கம் வரும் மாதங்களில் பெரிய அளவில் தெரிய வரும்.

பல தனியார் நிறுவனங்கள், ஆட்குறைப்பில் ஈடுபடத் துவங்கிவிட்டனர். 2/n
ஊரடங்கு தளர்வு அளித்தபோது, 33% பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்தது
இவர்களுக்கு சாதகமாக மாறிவிட்டது.

100% பணியாளர்களால் நடந்த வேலையை 33% பணியாளர்களை வைத்தே முடித்துக்கொள்ள முடியும் என்பதை, இந்த ஊரடங்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. 3/n
வேலை இழந்த, இழக்கப் போகின்ற தொழிலாளர்களுக்கு,

மாற்று வேலை வாய்ப்பை உருவாக்க, மத்திய மாநில அரசுகள் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன?

பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்ட மக்களை, சிக்கலிலிருந்து மீட்டெடுக்க அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 4/n
அமைப்பு சார்ந்த, சாராத 60லிருந்து 75 சதவீத தொழிலாளர் குடும்பங்களின் எதிர்கால வாழ்வாதாரத்திற்கான,

வேலை வாய்ப்புகள், திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப் படவேண்டும்.

அரசுகள் மெத்தனமாக செயல்பட்டால், நாட்டில் பொருளாதாரக் குற்றங்கள் பெருமளவில் நடக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது. 5/n
தற்போதைக்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஜப்பான் &அமெரிக்கா நாடுகளின் நிவாரண அளவுக்கு இல்லாவிட்டாலும்,

5% அளவுக்காவது நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும்.
அப்போதுதான் மக்கள் ஓரளவுக்காவது தாக்குப் பிடிக்க முடியும்.

குற்றங்கள் பரவாமல் தடுக்க முடியும். அரசுகள் விழித்துக் கொள்ளுமா? 6/n
You can follow @MPrabhu67.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: