இன்று பலரும் தங்கள் பெயருக்கு முன் ‘ஸ்ரீ.உ.வே’ என்று போட்டுக்கொள்வதைப் பார்க்கிறோம். ‘உபய வேதாந்த’ என்பது அதன் விரிவாக்கம். தமிழ் வேதாந்தம், வடமொழி வேதாந்தம் இரண்டிலும் புலமை பெற்றவர்கள் என்பது பொருள். நிகமாந்த மகா #தேசிகன் நான்கு மொழிகளில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்.
நான்கிலும் நூல்கள் இயற்றியுள்ளார். வட மொழியில் கரை கண்டவரான இவர் ‘செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே’ என்று தனக்கு வடமொழியில் இயற்றப்பட்டுள்ள வேத விளக்க நூல்களில் ஐயம் இருப்பின் அவற்றை நீக்க ஆழ்வார்களின் பாசுரங்களில் பொருள் தேடிப்
புரிந்துகொள்வேன் என்று கூறுகிறார். நான்கு மொழிகளில் கரைகண்டவர் சொல்வது இது. #ஸ்ரீநிகமாந்தமஹாதேசிகர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆஸ்தான குருவான அத்வைதி, காஞ்சியில் உஞ்சவ்ருத்தி செய்து ஸம்பிரதாயச் சேவை செய்து வந்தார். அவரை அரசவைக்கு அழைத்துத் தூதனை விட்டு ஓலை அனுப்ப, அதற்குத் தேசிகன்,
‘என்னிடமா சொத்தில்லை? தூதனே, உள்ளே சென்று பார். வரதராஜன் என்னும் பெரும் சொத்து என்னிடம் உள்ளது,’ என்று கவிதை எழுதிக் கொடுத்து அனுப்பிவிட்டார். திருவரங்கநாதன் பாதுகை மேல் ஓரிரவில் 1000 ஸ்லோகங்கள் #ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம் எழுதினார். பக்தர்களின் தலையெழுத்தையே மாற்றும் வல்லமை இறைவன்
திருவடிகளுக்கு உண்டு. ஆகையால் தான் பெருமாள் கோவில்களில் சடாரி வைக்கும் வழக்கம் இருக்கிறது. இறைவனின் திருவடியை கிரீடம் போன்று செய்திருப்பார்கள். அதை வைத்து நமக்கு ஆசி கூறுவார்கள். அது எத்தனை முறை நம் தலை மீது வைக்கப்படுகிறதோ அவ்வளவுக்களவு நம் தலையெழுத்து நன்றாக இருக்கும். இறுதியாக
இறைவனின் திருவடியை பணிபவர்களுக்கு வேறு எவர் காலிலும் விழவேண்டிய அவசியம் எந்த நாளும் ஏற்படாது! தன் தாய் செய்த தவறுக்கு வருந்தும் பரதன் இராமரை காட்டுக்கு போய் சந்தித்து மன்னிப்பு கோருகிறான். மீண்டும் அயோத்தி திரும்பி வந்து ஆட்சி பொறுப்பை ஏற்குமாறு வேண்ட, இராமர் மறுத்துவிடுகிறார்.
எனவே இராமனின் பாதுகைகளை கொண்டு போய் அதை சிம்மாசனத்தில் வைத்து அதன் பிரதிநிதியாக ஆட்சி புரிந்தான் பரதன். இராம ராஜ்ஜியத்தை விட பாதுகா ராஜ்ஜியம் பவித்திரமாக இருந்தது என்றால் அது எந்தளவு சக்தி மிக்கது என்று யூகித்துக்கொள்ளலாம். திருவரங்கத்தில் குடிகொண்டுள்ள இறைவனின் திருவடிகளை மையமாக
வைத்து #ஸ்ரீபாதுகாசஹஸ்ரம் ஸ்லோகம் முழுக்க முழுக்க இறைவனின் திருவடிப் பெருமைகளையே உரைக்கின்றன. இந்த சுலோகங்களில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு பலன் இருக்கிறது. ஒரு ஜாமத்தில் இந்த “பாதுகா சஹஸ்ரம்” என்ற ஆயிரம் ஸ்லோகங்கள் முழுவதையும் தேசிகர் எழுதி முடித்தார் என்பது தான் இதன் சிறப்பு.
ஸ்ரீமதே ரமானுஜயாய நமஹ
ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாத பரபரஹ்மானே நமஹ
ஸ்ரீரங்கநாத திவ்யமணி பாதுகாப்யாம் நமஹ
சுவாமி நிகமாந்த மகா தேசிகன் திருவடிகளே சரணம்
தனியன்
ஸ்ரீமான் வெங்கடாநாதார்ய: கவிதிகார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் சதா ஹ்ருதி
#ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்
1, ஸந்த: ஸ்ரீரங்க ப்ருத்வீச சரணத்ராண சேகரா:
ஜயந்தி புவநத்ராண பதபங்கஜ ரேணவ:

பொருள் – ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான ஸ்ரீரங்கநாதனின் மென்மையான திருவடிகளை எப்போதும் பாதுகாக்கும் அவனுடைய பாதுகைகளைச் சிலர் தங்கள் தலையின் மீது ஆபரணம் போன்று, அலங்காரமாக ஏற்கின்றனர்.
அப்போது, அனைத்து உலகங்களையும் காத்து நிற்கும், மென்மையான தாமரை போன்று சிவந்த திருவடிகளின் தூசிகள், அவர்களது தலையின் மீது படிகின்றன. இதன் காரணமாக அவர்கள் அனைத்திலும் வெற்றியுடன் உள்ளனர்.

விளக்கம் – இந்தச் ச்லோகத்தின் மூலம், நம்மாழ்வாரின் புகழை வெளிப்படுத்துகிறார். ஸ்ரீரங்கநாதனின்
பாதுகை என்பது நம்மாழ்வாரையே குறிக்கும். ஆக, நம்மாழ்வாரைத் தங்கள் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடுபவர்களுக்கு அனைத்திலும் வெற்றியே என்று கூறுகிறார்.
2. பரதாய பரம் நமோஸ்து தஸ்மை
பிரதம உதாஹரணாய பக்தி பாஜாம்I
யத் உபக்ஞம் அசேஷத: ப்ருதிவ்யாம்
பிரதித: ராகவ பாதுகா ப்ரபாவ:II

பொருள் – பரதனின் மூலம் ஸ்ரீராமனின் பாதுகைகளுக்கு உள்ள பெருமைகள் முழுவதும் அனைத்து உலகங்களுக்கும் உணர்த்தப்பட்டன. இதன் மூலம் பலரும் பக்தி அடைந்தனர்.
இப்படிப்பட்ட பரதாழ்வானுக்கு என்னுடைய நமஸ்காரங்கள் என்றும் உரித்தாக வேண்டும்.

3. வர்ணஸ்தோமை: வகுளஸுமந: வாஸநாம் உத்வஹந்தீம்
ஆம்நாயாநாம் ப்ரக்ருதிம் அபராம் ஸம்ஹிதாம் த்ருஷ்ட வந்தம்
பாதே நித்ய ப்ரணிஹித தியம் பாதுகே ரங்கபர்த்து:
த்வந்நாமாநம் முநிம் இஹ பஜே த்வாம் அஹம் ஸ்தோதுகாம:
பொருள் – ஹே ஸ்ரீரங்கநாத பாதுகே! உன்னை வணங்கி ஸ்தோத்ரம் செய்யவேண்டும் என்று நான் எண்ணியுள்ளேன். இதனால் செய்தது என்ன? மகிழ மலர்கள் பல வைத்துக் கட்டப்பட்ட மாலையை ஒத்த மணம் வீசும்படியாக நம்மாழ்வாரின் சொற்கள் என்னும் மலர்கள் கொண்டு கட்டப்பட்ட மாலையாக, தமிழ்வேதமாகிய திருவாய்மொழி உள்ளது
வேதத்திற்கு இணையாக உள்ளது போன்று இத்தகைய திருவாய்மொழியைக் கூறியது யார் என்றால் – எப்போதும் ஸ்ரீரங்கநாதனின் திருவடியையே சிந்தித்தபடி உள்ள நம்மாழ்வார் ஆவார். அத்தகைய நம்மாழ்வார், உனது பெயரான பாதுகை (சடாரி) என்றே கூறப்படுகிறார். அந்த முனிவரை நான் வணங்குகிறேன்.
திவ்ய ஸ்தாநாத் த்வம் இவ ஜகதீம் பாதுகே காஹமாநா
பாத ந்யாஸம் ப்ரதமம் மநகா பாரதீ யத்ர சக்ரே
யோக க்ஷேமம் ஸகல ஜகதாம் த்வயி அதீநம் ஸ ஜாநந்
வாசம் திவ்யாம் திசது வஸுதாச்ரோத்ர ஜன்மா முநிர் மே

பொருள் – பாதுகையே! ஸத்ய லோகத்தில் இருந்து ஸ்ரீரங்கநாதனை நீயே அயோத்திக்கு எழுந்தருளச் செய்தாய்.
உன்னைத் தொடர்ந்து வந்த சரஸ்வதி, அயோத்தி இராமனின் காவியமான இராமாயணத்தின் வாக்குகளை வால்மீகிக்கு அளிக்கும் விதமாக பூமிக்கு வந்தாள். இத்தகைய வால்மீகி முனிவர் எனக்கு சிறந்த சொற்களை அளிக்கவேண்டும்
5. நீசே அபி ஹந்த மம மூர்த்தனி நிரவிசேஷம்
துங்கே அபி யத் நிவிசதே நிகம உத்தமாங்கே
ப்ராசேத ஸ ப்ரப்ருதிபி: ப்ரதம உபகீதம்
ஸ்தோஷ்யாமி ரங்கபதி பாதுகயோர் யுகம் தத்

பொருள் – ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் எப்படிப்பட்டவை என்றால் – மிகவும் உயர்ந்த பொருளான வேதங்களின் தலைகளிலும் உள்ளன; மிகவும்
தாழ்ந்தவனான என் போன்றோர் தலைகளிலும் உள்ளன. இது வியப்பல்லவா? வால்மீகி போன்ற உயர்ந்தவர்களால் துதிக்கப்பட்ட அந்தப் பாதுகைகளை நானும் ஸ்தோத்திரம் செய்யப் போகிறேன்.

6. தத் தே முகுந்த மணி பாதுகயோ: நிவேசாத்
வல்மீக ஸம்பவகிரா ஸமதாம் மம உக்தி:
கங்கா ப்ரவாஹ பதி தஸ்ய கியாநிவ ஸ்யாத்
ரத்யோதகஸ்ய யமுநா ஸலிலாத் விசேஷ:

பொருள் – என்னுடைய இந்த ஸ்லோகங்களை (சொற்களை) நான், உயர்ந்த இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட முகுந்தனான க்ருஷ்ணனின் பாதுகைகள் மீது வைக்கிறேன் . இதனால் நிகழ்வது என்ன? இந்தச் ஸ்லோகங்கள், வால்மீகியின் இராமாயணத்திற்கு நிகராக மாறிவிடுகின்றன.
மழைபெய்து வீதியில் ஓடும் நீர் மற்றும் யமுனை நதியின் நீர் ஆகிய இரண்டும் கங்கை நதியில் விழும்போது இரண்டிற்கும் வித்தியாசம் ஏதும் இல்லை அல்லவா?

7. விஜ்ஞாபயாமி கிம் அபி ப்ரதிபந்ந பீதி:
ப்ராகேவ ரங்கபதி விப்ரமபாதுகே த்வாம்
வ்யங்க்தும் க்ஷமா: ஸதஸதீ விகத அப்யஸூயா:
ஸந்த: ஸ்ப்ருசந்து ஸதயை: ஹ்ருதயை: ஸ்துதிம் தே

பொருள் – ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னைத் துதிக்க நான் இந்த ஸ்லோகங்களை எழுதத் தொடங்கும் முன்னர் (நான் இதனை எழுதத் தகுதி உள்ளவனா என்னும்) ஒரு விதமான பயம் ஏற்படுகிறது. இதனை நான் இங்கு ஒரு விண்ணப்பமாகச் செய்கிறேன் . அது என்னவெனில் –
இந்த உலகில் உள்ள நல்லவை, தீயவை ஆகியவற்றை அறியும் திறன் உடைய பெரியோர்கள், மிகுந்த தயை செய்து, நான் இயற்றிய இந்த ஸ்லோகங்களை, பொறாமை நீங்கிய கருணை கொண்ட மனதுடன் கேட்க வேண்டும்.
8. அச்ரத்ததானநமபி நந்வதுநா ஸ்வகீயே
ஸ்தோத்ரே நியோஜயஸி மாம் மணிபாதுகே த்வம்
தேவ: ப்ரமாணம் இஹ ரங்கபதி: ததாத்வே
தஸ்ய ஏவ தேவி பதபங்கஜயோ: யதா த்வம்

பொருள்–உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! நான் எந்தவிதமான ச்ரத்தையும் இல்லாதவன் ஆவேன். ஆயினும் உன்னைக் குறித்து ஸ்லோகங்கள் இயதிரும்படி
நீ என்னைப் பணிக்கிறாய். ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகளுக்கு நீ எவ்விதம் உள்ளாய் என்று நான் அறியவில்லை. அதனை ஸ்ரீரங்கநாதனே எனக்குக் கூறுவானாக!

9. யதாதாரம் விச்வம் கதிரபி ச யஸ்தஸ்ய பரமா
தமப்யேகா தத்ஸே திசஸி ச கதிம் தஸ்ய ருசிராம்
கதம் ஸா கம்ஸாரேர் த்ருஹிணஹர துர்போத மஹிமா
கவீநாம் க்ஷுத்ராணாம் த்வம் அஸி மணிபாது ஸ்துதிபதம்

பொருள் – கம்ஸனின் சத்ருவாகிய க்ருஷ்ணனின் அழகான திருவடிகளில் உயர்ந்த கற்களுடன் உள்ள பாதுகையே! இந்த உலகம் முழுவதையும் தாங்குபவனாக நம்பெருமாள் உள்ளான். அனைத்தும் வந்து சேரும் இடமாகவும் அவனே உள்ளான்.அப்படிப்பட்ட நம்பெருமாளையே நீ
ஒருத்தியாகத் தாங்குகிறாயே! மேலும் அவனுக்கு ஏற்ற அழகான நடையையும் நீயே அளிக்கிறாய். உனது பெருமைகளை ப்ரம்மன், சிவன் போன்றவர்களால் கூட அறிய இயலாது. அப்படி உள்ளபோது, அற்ப கவியான என் போன்றவர்கள் துதிக்கும் விஷயமாக நீ எப்படி உள்ளாய்?

10. ச்ருத ப்ரஜ்ஞா ஸம்பந் மஹித மஹிமாந: கதிகதி
ஸ்துவந்தி த்வாம் ஸந்த: ச்ருதி குஹரகண்டூஹர கிர:
அஹம் து அல்ப: தத்வத் யதிஹ பஹு ஜல்பாமி ததபி
த்வதாயத்தம் ரங்கக்ஷிதிரமண பாதாவநி! விது:

பொருள் – ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை எப்போதும் பாதுகாத்து வரும் பாதுகையே! சாஸ்திர ஞானம் மூலமும், தங்களுக்கே உரிய ஞானம் மூலமும் பல பெரியவர்கள் உன்னை
எவ்வளவோ துதி செய்துள்ளனர். அவர்கள் துதியானது காதுகளின் துளைகளுக்கு இன்பம் அளிக்கவல்லதாக உள்ளன. ஆனால் இது போன்ற ஞானம் ஏதும் இல்லாத நான், உன்னைக் குறித்துப் பிதற்றுகின்றேன். இதனையும் உனது செயல் என்றே பெரியவர்கள் கூறுகின்றனர்.
இந்தப் பத்துப் பாடல்களை பயில
11. யத் ஏஷ: ஸ்தௌமி த்வாம் த்ரியுகசரணத்ராயிணி தத:
மஹிம்ந: கா ஹாநி: தவ மம து ஸம்பந்நிரவதி:
சுநா லீடா காமம் பவது ஸுரஸிந்து: பகவதீ
தத் ஏஷ: கிம்பூதா ஸ து ஸபதி ஸந்தா பரஹித:

பொருள்–ஞானம், பலம், சக்தி, தேஜஸ், ஐச்வர்யம், வீர்யம் என்ற ஆறு குணங்களுடன் கூடிய நம்பெருமாளின் திருவடிகளைப்
பாதுகாக்கும் பாதுகையே! அற்பனான நான் உன்னைத் துதித்து ஸ்தோத்திரம் இயற்றினால் உனது மேன்மைக்கு குறைவு ஏதும் உண்டாகப் போவதில்லை. ஆனால் அதன் மூலம் எனக்கு எல்லையற்ற நன்மைகள் உண்டாகின்றன. நாய் ஒன்று கங்கை நீரைக் குடித்தால் கங்கைக்கு குறைவு ஏதும் ஏற்படாது; மாறாக நாய்க்கு நன்மை
ஏற்படுகிறது அல்லவா?

12. மித ப்ரேக்ஷா லாபக்ஷண பரிணமத் பஞ்சஷபதா
மத் உக்தி: த்வயி ஏஷா மஹித கவி ஸம்ரம்ப விஷயே
ந கஸ்ய இயம் ஹாஸ்யா ஹரி சரணதாத்ரி க்ஷிதிதலே
முஹு: வாத்யா தூதே முகபவந விஷ்பூர் ஜிதமிவ

பொருள் – ஸ்ரீ ஹரியான க்ருஷ்ணனின் பாதுகையே! அவனுடைய திருவடிகளைப் பாதுகாப்பவளே! உன்னுடைய
தன்மைகளைப் பற்றி, பல உயர்ந்த கவிகள், உயர்வாக ஸ்தோத்ரம் செய்யப்படுபவளாக நீ உள்ளாய். இப்படி இருக்கையில் என்னைப் போன்றவர்களின் ஸ்தோத்ரங்கள் அற்பமானவையே – காரணம் எனக்கு ஒரு நேரத்தில் ஐந்து அல்லது ஆறு பதங்கள் மட்டுமே தோன்றுகின்றன. இப்படி இருந்தாலும் நான் துதி செய்ய முயற்சிப்பது எப்படி
உள்ளது என்றால் – பெரிய மரம் ஒன்றை வாய் மூலம் ஊதி அசைய வைப்பவனின் முயற்சி போன்றதாகும். வாய் மூலம் ஊதி மரத்தை அசைய வைப்பவனின் முயற்சி கண்டு உலகம் பரிகாசம் செய்வது போன்று, எனது கவிதையையும் கண்டு உலகம் பரிகாசம் செய்யாதோ?

13. நிஸ்ஸந்தேஹ நிஜ அபகர்ஷ விஷய உத்கர்ஷ: அபி ஹர்ஷ உதய
ப்ரத்யூட க்ரம பக்தி வைபவ பவத் வையாத்ய வாசாலித:
ரங்காதீச பதத்ர வர்ணந: க்ருத ஆரம்பை: நிகும்பை: கிராம்
நர்மாஸ்வாதிஷு வேங்கடேச்வர கவி: நாஸீரம் ஆஸீததி

பொருள் – எனது தாழ்மையும், நான் ஸ்தோத்ரம் செய்ய முற்படும் பாதுகைகளின் உயர்வையையும் பற்றிச் சந்தேகம் இன்றி நான் உணர்வேன். ஆயினும் எனது
எல்லையற்ற மகிழ்வு, எல்லையற்ற பக்தி காரணமாக துணிச்சல் மிக வந்தது என்றே கூறவேண்டும். அதனால் நான் ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் விஷயமாகத் தாறுமாறான சொற்களைக் கொண்டு இவற்றைக் கூறுகிறேன். இதன் மூலம் தாறுமாறாகக் கவிதை இயற்றக்கூடியவர்களில், வேங்கடேசன் என்கிற நான், முதலிடத்தைப் பிடிக்கிறேன்.
14. ரங்கக்ஷ்மாபதி ரத்நபாது பவதீம் துஷ்டூஷத: மே ஜவாத்
ஜ்ரும்பந்தாம் பவதீய சிஞ்ஜித ஸுதா ஸந்தோஹ ஸந்தேஹதா:
ச்லாகா கூர்ணித சந்த்ரசேகர ஜடா ஜங்கால கங்காபய:
த்ராஸாதேச விச்ருங்கல ப்ரஸரண உத்ஸிக்தா: ஸ்வயம் ஸூக்தய

பொருள் – உயர்ந்த கற்களால் இழைக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னைத்
துதித்து கவி பாட வேண்டும என்ற ஆசை எனக்கு அதிகமாக உள்ளது. உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனின் மிக உயர்ந்த பக்தனான சிவபெருமான் தனது தலையை அசைக்கும் போது அவனது சடைமுடியில் மிகவும் வேகமாக ஓடிவரும் கங்கை நதியின் ஓசை உன்னுடைய அமிர்தம் போன்ற இனிய நாதத்தை ஒத்துள்ளது. அந்த கங்கை நதியானது, தான்
ஓடிவரும் பாதையில் தனக்கு ஏதேனும் தடை வருமோ என்று அச்சம் கொள்ளாமல் கர்வத்துடன் ஓடிவருகிறது. அப்படி ஓடிவரும் கங்கை நீரின் வேகம் போன்று உன்னைப் பற்றிய சொற்கள் எனக்கு வர வேண்டும்.

15. ஹிமவந் நளஸேது மத்யபாஜாம்
பரத அப்யர்ச்சித பாதுகா அவதம்ஸ:
அதபோதநதர்மத: கவீநாம்
அகிலேஷு அஸ்மி மனோரதேஷு
அபாஹ்ய:

பொருள் – பரதனால் ஆராதிக்கப்பட்ட ராமனின் பாதுகையை எனது தலைக்கு அலங்காரமாகக் கொண்டேன். உடனே ஏற்பட்டது என்ன? இமயம் தொடங்கி வானர வீரனான நளன் கட்டிய ஸேது வரை உள்ள அனைத்து கவிஞர்களையும் விட நான் உயர்ந்த மேன்மை பெற்றுவிடுவேன்.

16. அநிதம் ப்ரதமஸ்ய சப்தராசே:
அபதம் ரங்கதுரீண பாதுகே த்வாம்
கத பீதி: அபிஷ்டுவந் விமோஹாத்
பரிஹாஸேந விநோதயாமி நாதம்

பொருள் – ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எப்போது உண்டானவை என்று கூற இயலாதபடி எக்காலத்திலும் இருந்து வரும் வேதங்கள் கூட உன்னை முழுவதுமாகக் கூறி முடிக்க இயலாது. இப்படிப்பட்ட உன்னை, எனது அறியாமை காரணமாக,
பயம் சிறிதும் இன்றி ஸ்தோத்ரம் செய்யத் தொடங்கிவிட்டேன். இதன் மூலம் ஸ்ரீரங்கநாதன் மனம் மகிழ்ந்து புன்முறுவல் செய்கிறான் (நான் அவனை மகிழ்விக்கிறேன்).

17. வ்ருத்திபி: பஹுவிதாபி: ஆச்ரிதா
வேங்கடேச்வரகவே: ஸரஸ்வதீ
அத்ய ரங்கபதி ரத்ந பாதுகே
நர்த்தகீவ பவதீம் நிஷேவதாம்

பொருள் –ஸ்ரீரங்கநாத
திருவடிகளை உயர்ந்த இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்டவளாக அலங்கரிக்கும் பாதுகையே! நாட்டியம் ஆடுபவள் எவ்வாறு பலவித பாவங்களை வெளிப்படுத்துவாளோ, அது போன்று வேங்கடேசன் என்ற கவி மூலம் வெளிப்படும், உன்னைப் பற்றிய பலவிதமான புகழாரங்கள் அடங்கிய சொற்கள், உன்னை வணங்கிச் சேவிக்கவேண்டும்.
18. அபார கருணாம்புதே: தவ கலு ப்ரஸாதாத் அஹம்
விதாதும் அபி சக்நுயாம் சதஸஹஸ்ரிகாம் ஸம்ஹிதாம்
ததாபி ஹரிபாதுகே தவ குண ஔக லேச ஸ்திதே:
உதாஹ்ருதி: இயம் பவேத் இதி மிதாபி யுக்தா ஸ்துதி:

பொருள் – ஸ்ரீஹரியான க்ருஷ்ணனின் பாதுகையே! நீ எல்லையற்ற கருணைக் கடலாக உள்ளாய். இதன் மூலம் உன் மீது பல
லட்சம் ஸ்லோகங்கள் என்னால் இயற்ற முடியும். ஆயினும் இத்தனை லட்சம் ஸ்லோகங்களும் உன்னைப் பற்றி முழுமையாகக் கூற இயலாமல் இருக்கும். எனவே உதாரணமாக இங்கு சில ஆயிரம் மட்டுமே போதுமானது என முடிவு செய்தாய் போலும்.

19.அநுக்ருத நிஜநாதாம் ஸூக்திம் ஆபாதயந்தீ
மநஸி வசஸி ச த்வம் ஸாவதாநா மம ஸ்யா:
நிசமயதி யதா அஸௌ நித்ரயா தூரமுக்த:
பரிஷதி ஸஹ லக்ஷ்ம்யா பாதுகே ரங்கநாத:

பொருள் – ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எனது மனதிலும் வாக்கிலும் சொற்கள் எப்படி வரவேண்டும் என்றால் – உனது ஒலியானது, தான் நடக்கும் போது எத்தனை இனிமையாக உள்ளது என்று ஸ்ரீரங்கநாதன் நினைத்துக் கொள்வானோ அதுபோல் இருக்க
வேண்டும். இவ்விதம் உனது நாதத்தை என் மூலம் நீ வெளிப்படுத்த வேண்டும். இதன் சுவாரஸ்யத்தில் அவன் மயங்கி, ஸ்ரீரங்கநாச்சியாருடன் விழித்திருந்து நான் கூறும் இவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பான். ஆகவே எனது வாக்குகள் அவனுக்கு இன்பமாக இருத்தல் வேண்டும்.

20. த்வயி விஹிதா ஸ்துதிரேஷா
பதரக்ஷிணி பவதி ரங்கநாதபதே
ததுபரி க்ருதா ஸபர்யா
நமதாம் இவ நாகிநாம் சிரஸி

பொருள் – பெருமாளின் திருவடிகளில் செய்யப்படும் பூஜை தேவதைகளின் தலையில் சென்று சேர்ந்துவிடுகிறது. இதே போன்று நான் உன்னைத் துதித்து இயற்றும் இந்தச் ஸ்லோகங்கள் அனைத்தும் பகவானின் திருவடிக்கும் சென்று சேர்கிறது.
21. வந்தே விஷ்ணுபத ஆஸக்தம் தம்ருஷிம் தாம் ச பாதுகாம்
யதார்த்தா சடஜித் ஸம்ஜ்ஞா மத் சித்த விஜயாத் யயோ:

இந்தப் பத்ததி முழுவதும் நம்மாழ்வாரையும் பாதுகையையும் இணைத்துப் போற்றுகிறார்.
பொருள் – சடகோபன் என்னும் நம்மாழ்வார், பாதுகை ஆகிய இருவருமே நம்பெருமாளின் திருவடிகள் மீது மிகுந்த ஆசை
கொண்டுள்ளனர். இவர்களை நான் வணங்குகிறேன். இவர்கள் இருவருக்குமே சடாரி என்னும் திருநாமம், எனது மனதை வென்றதன் மூலம் அர்த்தம் கொண்டதாக ஆனது.

22. த்ரமிட உபநிஷத் நிவேச சூந்யாந்
அபி லக்ஷ்மீரமணாய ரோசயிஷ்யந்
த்ருவம் ஆவிசதி ஸ்ம பாதுகாத்மா
சடகோப: ஸ்வயம் ஏவ மாநநீய:

பொருள் – அனைவராலும்
போற்றிக் கொண்டாடப்பட வேண்டியவர் நம்மாழ்வார் ஏனென்றால் அவர் அனைவரும் பெரியபெருமாளை அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் திருவாய்மொழியை அருளிச் செய்தார். ஆயினும் அதனை அறிய இயலாதவர்களும் பகவானை அடைய ஏதுவாக தானே சடாரியாக, பாதுகையாக அவதரித்தார் என்பது உறுதியே.

23. நியதம் மணி பாதுகே ததாந:
ஸ முநி: தே சடகோப இதி அபிக்யாம்
த்வத் உபாச்ரித பாத ஜாத வம்ச
ப்ரதிபத்யை பரம் ஆததாந ரூபம்

பொருள் – இரத்தினக் கற்கள் பதிந்த பாதுகையே! நீ அடைந்துள்ள நம்பெருமாளின் திருவடிகளிலிருந்து உண்டான சூத்திரவம்சத்தில் நம்மாழ்வார் தோன்றினார். உன் மீது கொண்ட உயர்ந்த பக்தியை உணர்த்தவே அவர் சடகோபன்
என்ற திருநாமத்தை ஏற்றுக்கொண்டார். இதன் காரணமாக அப்பிறப்பில் அவதரித்தார். மற்ற வர்ணங்கள் பாதுகையின் தொடர்பில்லாத அவயவங்களில் தோன்றியதால் அவை தாழ்ந்தவையே. இக்குலத்திற்கு மட்டுமே பாதுகையின் தொடர்புள்ளதால் மற்ற வர்ணத்தைவிட இது உயர்ந்ததே என்பதன் மூலம் இக்குலத்திற்கு கௌரவம் அளித்தார்.
24. முநிநா மணிபாதுகே த்வயா ச
ப்ரதிதாப்யாம் சடகோப ஸம்ஜ்ஞயைவ
த்விதயம் ஸகல உபஜீவ்யம் ஆஸீத்
ப்ரதமேந ச்ருதி: அந்யத: தத் அர்த்த:

பொருள் –இரத்தினக் கற்களல் இழைக்கப்பட்ட பாதுகையே! சடகோபன் என்ற பெயர் பெற்ற நம்மாழ்வாரும் நீயும் ஒரே போன்ற செயல்களைச் செய்தீர்கள். அது என்ன? அனைவருக்கும் பயன்
படக் கூடிய செயலாகும். நம்மாழ்வார் செய்தது வேதங்கள் அனைத்தையும் தமிழில் உரைத்து அனைவராலும் ஓதக் கூடியபடி செய்தார். நீ செய்தது வேதத்தின் பொருளான நம்பெருமாளை அனைவரும் வணங்கும்படி உன் மீது எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வருகிறாய்

25. ஆகர்ண்ய கர்ணாம்ருதம் ஆத்மவந்த:
காதாஸஹஸ்ரம் சடகோப ஸூரே:
மஞ்ஜு ப்ரணாதாம் மணிபாதுகே த்வாம்
தத் ஏக நாமாநம் அநுஸ்மரந்தி

பொருள் – உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஆத்மஸ்வரூபம் என்ன என்பதை உணர்ந்தவர்களுக்கு நம்மாழ்வாரின் திருவாய்மொழி மிகவும் இன்பமாக உள்ளது. இது போன்று அவர்களுக்கு நம்பெருமாள் நடக்கும் போது எழும் உனது ஓசையும் இனிமையாக
உள்ளது. ஆகவே ஒரே போன்ற சப்தம் உடைய உனக்கு நம்மாழ்வாரின் பெயரையே வைத்தனர்.

26. ய: ஸப்தபர்வ வ்யவதான அதுங்காம்
சேஷத்வ காஷ்டம் அபஜத் முராரே:
தஸ்யாபி நாமோத்வஹநாத் த்வயா அஸௌ
லகூக்ருத: அபூத் சடகோப ஸூரி:

பொருள் –முரன் என்ற அசுரனை அழித்த க்ருஷ்ணனின் ஏழு பக்தர்களைக் கடந்து, தான் எட்டாவது
பக்தராக உள்ள உயர்வை நம்மாழ்வார் அடைந்தார். அவருடைய பெயரை, நீ அவருக்குப் பின்னால் வந்து வைத்துக் கொண்டதால் எட்டாவது நிலையில் நீ உள்ளாய். இதனால் நீ அவரை விட உயர்ந்து, அவர் உன் முன்பு தாழ்ந்தவர் ஆனார்.
27. சய்யாத்மநா மதுரிபோ: அஸி சேஷபூதா
பாதாச்ரயேண ச புந: த்விகுணீக்ருதம் தத்
பூயோபி பாகவத சேஷதயா தத் ஏவ
வ்யங்க்தும் பதாவநி சடாரி பதம் பிபர்ஷி

பொருள் – நம்பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மது என்ற அசுரனை அழித்த க்ருஷ்ணன் சயனிக்கும் படுக்கையாக நீ உள்ளதால் அவனுக்குத்
தாஸியாக உள்ளாய். மேலும் தணிந்து அவனது திருவடிகளை அண்டி நிற்பதால், உன் அடிமைத்தனம் இரண்டு மடங்கானது. இத்தகைய பகவத் சேஷத்வத்தை விட, பாகவத சேஷத்வம் மிகவும் உயர்ந்தது என்று உலகிற்குப் ப்ரகாசமாக உணர்த்த விரும்பி, நம்மாழ்வாரின் திருநாமமான சடாரி என்ற பெயரைச் சூட்டிக் கொண்டாய் போலும்.
28. பத்யேந தேவி சடகோப முநி: தவ ஆஸீத்
தஸ்ய அபி நாமவஹநாத் மணி பாதுகே த்வம்
சேஷீ பபூவ யுவயோரபி சேஷசாயி
சேஷம் த்வசேஷம் அபி சேஷ பதே ஸ்திதம் வ:

பொருள் – உயர்ந்த இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட அரங்கனின் பாதுகையே! உன்னைக் குறித்து நம்மாழ்வார் பாசுரங்கள் இயற்றியதால் உனக்குத் தொண்டனாக அவர்
உள்ளார். அவருடைய திருநாமத்தை வைத்துக் கொண்டதால் அவருடைய அடிமை போன்று நீ உள்ளாய். ஆதிசேஷன் மீது சயனித்தபடி உள்ள பெரியபெருமாள் உங்கள் இருவருக்கு மட்டும் அல்லாமல் அனைத்து உலகிற்கும் எஜமானனாக உள்ளான். ஆகவே இந்த உலகம் முழுவதும் உங்கள் மூன்று பேருக்கும் அடியவர்களாக உள்ளனர்.
29. விந்த்யஸ்தம்பாத் அவிஹதகதே: விஷ்வக் ஆசாந்த ஸிந்தோ:
கும்பீஸூநோ: அஸுர கபல க்ராஸிந: ஸ்வைரபாஷா
நித்யம் ஜாதா சடரிபுதநோ: நிஷ்பதந்தீ முகாத் தே
ப்ராசீநாநாம் ச்ருதி பரிஷதாம் பாதுகே பூர்வகநண்யா.

பொருள் – அகஸ்தியர் என்ற முனிவர் விந்திய மலையை அடக்கினார். தான் ஆசமனம் செய்வதற்காக
ஸமுத்திரத்தின் நீரை முழுவதுமாக உட்கொண்டார். வாதாபி என்ற அசுரனைத் தனது ஆகாரமாக உட்கொண்டார். இப்படிப்பட்ட அகஸ்திய முனிவர் தனக்கு இஷ்டமான மொழியாகத் தமிழைக் கொண்டிருந்தார். அப்படி இருந்தபோதும், எப்போதும் இருக்கும் மொழி என்ற போதும், அந்த மொழி ஸம்ஸ்க்ருதம் போன்று பெரும் புகழ் பெறாமல்
இருந்தது. ஆனால் நம்மாழ்வாராகத் தோன்றிய உனது பாதுகை திருவாய் மூலம் வெளிப்பட்ட திருவாய்மொழியால் நிகழ்ந்தது என்ன? தமிழ்மொழியானது வேதத்திற்கும் முந்தைய காலத்தியது என்று எண்ணும்படி ஆனது.

விளக்கம் – இராமாயண காலத்திலேயே அகஸ்த்தியர் இருந்தார் என்பதை அவருடைய பெயர் வால்மீகி இராமாயணத்தில்
இடம் பெற்றுள்ளதன் மூலம் அறியலாம். ஆக தமிழும் அப்போதே இருந்தது என்னும் அறியலாம். இப்படி உயர்ந்த தமிழ் மொழியை திருவரங்கன் மேலும் கௌரவித்தபடி இப்போதும் உள்ளான். திருவரங்கன் திருவீதி உலா வரும்போது முதலில் பிரபந்த கோஷ்டி செல்கிறது. அந்தத் தமிழின் பின்னே அல்லவா நம்பெருமாள் செல்கிறான்?
அவனைப் பின் தொடர்ந்து வேதங்கள் வருகின்றன. தமிழுக்கு இந்த ஏற்றம் நம்மாழ்வாரால் வந்தது. இங்கு நம்மாழ்வாரும் பாதுகையும் ஒன்றே எனக் கூறப்படுவதை பார்க்கவேண்டும்.

30. சடகோப இதி ஸமாக்யா தவ ரங்கதுரீண பாதுகே யுக்தா
ஸூதே ஸஹஸ்ரம் ஏவம் ஸூக்தி: ஸ்வயம் ஏவ யத் மயா பவதீ

பொருள் – நம்பெருமாளின்
திருவடிகளைக் காக்கும் பாதுகையே! நீ என் மூலமாக ஆயிரம் ஸ்லோகங்கள் உண்டு பண்ணினாய். நம்மாழ்வார் திருவரங்கன் மீது ஆயிரம் பாசுரங்கள் இயற்றினார். இந்தப் பொருத்தம் காரணமாக உன்னைச் சடாரி என்றும், சடகோபன் என்றும் அழைத்தனர் போலும்.
அடுத்த பத்துப் பாடல்கள் பிரபாவ பத்ததி.

31. வந்தே தத் ரங்கநாதஸ்ய மாந்யம் பாதுகயோ: யுகம்
உந்நதாநாம் அவநதி: நதாநாம் யத்ர ச உந்நதி:

பொருள் – ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளை வணங்காமல் உள்ளவர்களுக்குத் தாழ்வான நிலை ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் அந்தப் பாதுகைகளைப் போற்றி, வணங்குபவர்களுக்கு
மிகவும் உயர்ந்த நிலை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட அந்த இரண்டு பாதுகைகளையும் நான் வணங்குகிறேன்.

32. நிச்சேஷம் அம்பரதலம் யதி பத்ரிகா ஸ்யாத்
ஸப்த அர்ணவீ யதி ஸமேத்ய மஷீ பவித்ரீ
வக்தா ஸஹஸ்ரவதந: புருஷ ஸ்வயம் சேத்
லிக்யதே ரங்கபதி பாதுகயோ: ப்ரபாவ:

பொருள் – பாதுகையின் பெருமைகளை எப்படி எழுத
இயலும்? ஆகாயம் முழுவதுமாகச் சேர்ந்து பெரியதொரு காகிதமாக இருந்தல் வேண்டும். ஏழு கடலும் இணைந்து, எழுதும் மையாக மாற வேண்டும். எழுதுபவனாக ஆயிரம் தலைகளுடன் கூடிய பரமபுருஷனாகிய ஸ்ரீரங்கநாதனே இருக்க வேண்டும். இப்படி என்றால் – பாதுகையின் பெருமைகளை ஏதோ ஒரு சிறிய அளவு எழுதி முடிக்க இயலும்.
33. வேத உபப்ருஹ்மண குதூஹலிநா நிபத்தம்
விச்வம்பரா ச்ருதிபவேந மஹர்ஷிணா யத்
வ்யாஸேந யத் ச மதுஸூதந பாதரக்ஷே
த்வே சக்ஷுஷீ த்வதுநுபாவம் அவேக்ஷிதும் ந:

பொருள் – மது என்ற அசுரனை அழித்த க்ருஷ்ணனின் பாதுகையே! வேதங்களின் உண்மையான பொருளை உணர்ந்து கொள்வதில் சிரமம் அதிகம் ஆகும். அப்படிப்பட்ட
வேதத்தின் பொருளை உலகிற்கு உணர்த்த எண்ணிய வ்யாஸ பகவான் மஹாபாரதத்தையும், வால்மீகி மஹரிஷி இராமாயணத்தையும் அருளிச்செய்தனர். இவை இரண்டும் பாதுகையாகிய உனது பெருமைகளை நாங்கள் காண்பதற்கு ஏற்ற இரு கண்கள் போன்று உள்ளன.
34. ப்ரத்யக்ஷயந்தி பரிசுத்ததிய : யதாவத்
ராமாயணே ரகுபுரந்தர பாதரக்ஷே
சச்வத் ப்ரபஞ்சிதம் இதம்பரயைவ வ்ருத்த்யா
ஸம்க்ஷேப விஸ்தரதசாஸு தவ அநுபாவம்

பொருள் – ஸ்ரீராமனின் பாதுகையே! ஸ்ரீமத் இராமாயணத்தில் பல இடங்களில் உனது பெருமைகள் சுருக்கமாகவும் விரிவாகவும் கூறப்பட்டுள்ளன. தெளிந்த அறிவை
உடையவர்கள் இவற்றை உணர்கின்றனர். அவர்கள் உனது பெருமையை இவற்றின் மூலம் கண்ணால் காண்பது போன்று தெளிவாக அறிகின்றனர்.

35. அல்பச்ருதைரபி ஜநை: அநுமீயஸே த்வம்
ரங்கேசபாது நிபதம் நிகம் உபகீதா
ஸாரம் ததர்த்தம் உபப்ருஹ்மயிதும் ப்ரணீதம்
ராமாயணம் தவ மஹிம்நி யத: ப்ரமாணம்

பொருள்–ஸ்ரீரங்கநாதனின்
பாதுகையே! மிகவும் சிறிய அளவே வேதத்தைப் பற்றி அறிந்தவர்கள் கூட, “பாதுகையைப் பற்றி வேதத்திலே கூறப்பட்டுள்ளது”, என்று கூறுகின்றனர். இது எப்படி என்றால் வேதங்களின் முழு அர்த்தங்களை வெளிப்படுத்தும் விதமாக உள்ள இராமாயணத்தில் உனது பெருமைகள் பல இடங்களில் கூறியுள்ளதால் ஆகும்.
36. திஷ்டந்து ச்ருத: ததோபி மஹிதம் ஜாகர்த்தி தத் பாதுகே
தத் தாத்ருக் ப்ரதநாய தாவக குண க்ரமாய ராமாயணம்
யஸ்ய ஆஸீத் அரவிந்த ஸம்பவ வதூ மஞ்ஜீர சிஞ்ஜாரவ
ஸ்பர்த்தா துர்த்தர பாதபத்த பணிதி: வல்மீக ஜந்மா கவி:

பொருள் – ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! வேதங்கள் உன்னைப் பற்றி உயர்வாகக் கூறுகின்றன.
ஆயினும் வேதங்களை விட அனைவராலும் கொண்டாடப்படும் இராமாயணம் உனது குணங்களையும் மேன்மையையும் வெளிப்படுத்தியபடி உள்ளது. இந்த உலகில் உள்ள புற்றில் இருந்து வெளி வந்த வால்மீகி மஹரிஷி, இத்தகைய இராமாயணத்தை எவ்விதம் இயற்றினார்? தாமரை மலரில் அமர்ந்துள்ள ப்ரம்மனின் தேவியான ஸரஸ்வதியின் கால்
சிலம்புகளின் ஒலி மூலம் ஏற்பட்ட ஒசைகளே இவரது வாயில் இருந்து இராமாயணச் சொற்களாகப் புறப்பட்டதால் தான்

37. பக்தி ப்ரஹ்வ புரப்ரபஞ்ஜந ஜடாவாடீ ஸநீட ஸ்புரத்
சூடாரக்வத வாஸநா பரிமள ஸ்த்யாநே ஸ்தும: பாதுகே
ரங்கக்ஷோணிப்ருத் அங்கிரிபத்மயுகளீ பூர்ண ப்ரபத்தே: பலம்
நிச்சிந்வந்தி விபச்சித: சமதநா:
நித்யம் யதுத்தம்ஸநம்

பொருள் – திரிபுராஸுரன் என்ற அரக்கனை அழித்த சிவன், தனது சிரஸில் எப்போதும் உன்னைத் தரித்தவனாகவே உள்ளான். உன் மீது உள்ள பக்தியால் இவ்வாறு வணங்கியபடி உள்ளான். இதனால் அவன் ஜடாமுடியில் சூடியுள்ள கொன்றை மலர்களின் வாசம், பாதுகையில் எப்போதும் வீசியபடி உள்ளது. இதனால்
மகிழ்ந்த பாதுகை பருமனாக உள்ளது. இப்படிப்பட்ட பாதுகையை நாம் வணங்குகிறோம். இந்த்ரியங்களை அடக்கத் தெரிந்த வித்வான்கள் பாதுகையைத் தங்கள் சிரஸில் தாங்கி உள்ளனர். அவர்கள் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் அடைக்கலம் என தங்கள் மனம், வாக்கினால் கூறுவதற்கு ஏற்ற பயன் இதுவே என எண்ணுகின்றனர்.
38. மாத: பாதுகே தவ குணாந் க: ஸ்தோதும் அஸ்தோகதீ:
கோடீரேஷு யதர்பண ப்ரணயிநாம் ஸேவாக்ஷணே ஸ்வர்க்கிணாம்
அந்யோந்யம் க்ஷிபதாம் அஹம் ப்ரதமிகா ஸம்மர்த்த கோலாஹலம்
விஷ்வக்ஸேந விஹார வேத்ரலதிகா கம்ப: சிராத் லும்பதி.

பொருள் – மாதவனாகிய க்ருஷ்ணனின் பாதுகையே! அனைவருக்கும் தாய் போன்றவளே ! உனது
குணங்கள் முழுவதையும் நன்கு உணர்ந்து, உன்னைத் துதிபாடும் அறிவு கொண்டவர்கள் யார் உள்ளனர்? உனது நாயகனான நம்பெருமாளைத் தேவர்கள் வணங்க வருகின்றனர். அப்போது உன்னைத் தங்கள் தலையில் ஏற்றுக்கொள்வதற்காக அவர்கள், நான் முந்தி, நீ முந்தி, என்று போட்டி போடுகின்றனர். இதனால் அங்கு பெரும் ஓசை
ஏற்படுகிறது. விஷ்வக்சேனர் தனது கையில் விளையாட்டிற்காக வைத்துள்ள பிரம்பைக் காண்பித்து, சிரமப்பட்டு இவர்கள் எழுப்பும் சப்தத்தை அடக்குகிறார். இப்படிப்பட்ட தேவர்களாலும் உன்னைத் துதிக்க இயலாது.

39. யோஷித்பூத த்ருஷந்தி அபோட சகட ஸ்தேமாநி வைமாநிக
ஸ்ரோதஸ்விநீ உபலம்பநாநி பஸித் உதஞ்சத்
பரீக்ஷிந்தி ச
தூத்யாதிஷ்வபி துர்வசாநி பதயோ: க்ருத்யாநி மத்வேவ யத்
தத் தே தத் ப்ரணயம் தத் ஏவ சரணத்ராணம் வ்ருணே ரங்கிண:

பொருள் – நம்பெருமாளின் திருவடிகள் கல்லாகக் கிடந்த அகலிகையைப் பெண்ணாக மாற்றியவை; பலம் வாய்ந்த சகடாசுரனை உதைத்து அழித்தவை; த்ரிவிக்ரம அவதாரத்தில் வானம் வரை அளந்து
கங்கையை உண்டாக்கியவை; சாம்பலில் இருந்து பரீக்ஷத் அரசனை உண்டாக்கியவை; பாண்டவர்களுக்காகத் தூது சென்றவை ஆகும். இப்படிப்பட்ட பல குணங்களை வெளிப்படுத்திய திருவடிகளுடன் எப்போதும் பாதுகைகள் சினேகத்துடன் பிரியாமல் உள்ளன. இப்படியாக நம்பொருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! எனக்கு
மேன்மை ஏற்பட அருள்வாயாக.

40. வந்தே தத் மதுகைடப ஆரிபதயோ: மித்ரம் பதத்ரத்வயம்
யத்தத் பக்தி பராநதேந சிரஸா யத்ர க்வசித் பிப்ரதி
த்வித்ர ப்ரஹ்ம விநாடிகா அவதி பத வ்யத்யாஸ சங்காபர
த்ராஸ உத்கம்பதசா விஸம்ஸ்துல த்ருதி: த்ரைவிஷ்டபானாம் கண:

பொருள் – மது, கைடபன் என்னும் அசுரர்களுக்குச்
சத்ருவான நம்பெருமாளின் திருவடிகளைப் பாதுகைகள் காப்பாற்றுகின்றன. அந்தப் பாதுகைகளை நான் வணங்குகிறேன். ஒருவன் மிகுந்த பக்தியுடன் பாதுகைகளைத் தனது தலையில் ஏற்கும்போது, ப்ரம்மனின் 2,3 விநாடிகளே பதவியிலுள்ள தேவதைகள் தங்கள் பதவிக்கு இவனால் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சி நடுங்குகின்றன
41. பத்மா காந்த பத அந்தரங்க விபவ உத்ரிக்தம் பதத்ரம் பஜே
யத் பக்த்யா நமதாம் த்ரிவிஷ்டபஸதாம் சூடாபதேஷு அர்பிதம்
நித்ய ஆபீத நக இந்து தீதிதி ஸுதா ஸந்தோஹம் உச்சை: வமதி
அந்த: நூநம் அமாந்தம் அந்திக லஸத் சேஷாபட சத்மநா

பொருள் – தாமரையில் அமர்ந்துள்ள ஸ்ரீரங்கநாயகியின் நாயகனான நம்பெருமாள்
திருவடிகளுடன் சிநேகமாக உள்ளதால் பாதுகை மிகவும் உயர்ந்துள்ளது. அவற்றை நான் வணங்குகிறேன். கோயில்களில் தலை வணங்கி நிற்கும் தேவர்களுக்குச் சடாரி வைக்கப்படும்போது, முதலில் அவர்கள் தலையில் பரிவட்டம் என்ற வெண்மையான பட்டாடை கத்தியபின் சாதாரி வைக்கின்றனர். நம்பெருமாளின் திருவடி நகங்கள்
சந்திரனைப் போன்று குளிர்ந்த கதிர்களை வீசியபடி உள்ளன. அந்த அமிர்தத்தைப் பருகிய பாதுகைகள், அந்த வெண்மையான அமிர்தத்தைக் கக்குவது போல் அந்த பட்டாடை உள்ளது.

42. தத் விஷ்ணோ: பரமம் பதத்ர யுகளம் த்ரயந்த பர்யந்தகம்
சிந்தாதீத விபூதிகம் விதரது ச்ரேயாம்ஸி பூயாம்ஸி ந:
யத் விக்ராந்திதசா
ஸமுத்தித பத ப்ரஸ்யந்தி பாதஸ்விநீ
ஸக்யேநேவ ஸதா நதஸ்ய தநுதே மௌளௌ ஸ்திதிம் சூலிந:

பொருள் – “தத் விஷ்ணோ : பரமம் பதம்” என்று உபநிஷத்துக்கள் பாதுகையின் மேன்மையைக் கூறுகின்றன. இப்படியாக உயர்ந்த ஐச்வர்யம் உடைய ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் நமக்கு உயர்ந்த நன்மைகளை ஏற்படுத்தவேண்டும்.
நம்பெருமாள் த்ரிவிக்கிரமனாக நின்றபோது, அவன் திருவடிகளில் இருந்து பெருகிய கங்கையுடன் பாதுகை தொடர்புடையதாக ஆனது. அப்போதிலிருந்து கங்கை எவ்வாறு சிவனின் தலையில் எப்போதும் உள்ளதோ, அதுபோன்று பாதுகையும் சிவனின் தலையில் உள்ளது.

43. அம்புநி அம்புநிதே: அநந்யகதிபி: மீநை கியத் கம்யதே
க்லேசேநாபி கியத் வ்யலங்கி ரபஸ உத்துங்கை: ப்லவங்கேச்வரை:
விஜ்ஞாதா கியதீ புந: க்ஷிதிப்ருதா மந்தேந கம்பீரதா
கிம்தை: கேசவ பாதுகா குண மஹாம்போதே: தடஸ்தா வயம்.

பொருள் – நீரைத் தவிர வேறு இடங்கள் உயிர் வாழ இயலாத மீன்கள் கூட கடலில் ஓரளவு மட்டுமே செல்ல இயலும். வேகத்தில் சிறந்தவர்களான
அனுமான் முதலானவர்கள் கூட கடலில் ஓரளவு மட்டுமே தாண்டிச் செல்ல இயன்றது. திருப்பாற்கடலைக் கடைந்தபோது மந்தரமலை அக்கடலின் ஆழத்தை ஓரளவு மட்டுமே கண்டது. நம்பெருமாளுடைய பாதுகைகளின் குணங்கள் பெரிய கடல் போன்றுள்ளது. மற்றவற்றைப்போல் அல்லாமல் நாமதன் கரையிலேயே அல்லவா நின்று கொண்டிருக்கிறோம்?
You can follow @anbezhil12.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: