சைக்கிள் வாங்குவதை பற்றி ஒரு த்ரெட் ...
மூன்று விதமான சைக்கிள்கள் பற்றி பார்ப்போம் ..
1.Mountain Bike (MTB)
2.Hybrid
3.Road Bicycles

இதில் நான் முதலில் வாங்கியது
MTB வகை பைக் , இது டயர்கள் ஸ்ட்ராங்கா நம்ம ஊரு ரோடுகளுக்கு ஏற்ற மாதிரி இருக்கும்
MTB ... இது மலைகளில் சைக்கிளில் ட்ரெக்கிங் போவதற்கு தயாரிக்கப்பட்ட் சைக்கிள் ... சோ கண்டிப்பா நம்ம ரோடுகளுக்கு இது நல்லா செட் ஆகும் :-)
Road Bike ....50, 100 , 200 , 300 இப்படி தினமும் நிறைய தூரம் சைக்கிளில் போக இந்த வகை சைக்கிள் நன்றாக இருக்கும் , வெயிட் குறைவா Aerodynamics படி இருப்பதால் வேகமும் கிடைக்கும் ....
இந்த இரண்டுக்கும் இடைபட்டதுதான் Hybrid Cycles :-) சிட்டிக்குள் மட்டுமே ஒட்டுறவங்களுக்கு இது நல்லாருக்கும் .....
எந்த பிராண்ட் சைக்கிள் வாங்குறது ?
பிரான்ட் எல்லாம் முக்கியமே இல்லைங்க , உங்க உயரத்துக்கு ஏற்ற மாதிரி சைக்கிள் வாங்கணும் அது தான் முக்கியம் , சைக்கிளில் நீங்க உட்காரும் போது உங்க இரண்டு கால்களின் பெருவிரல் மட்டும் தான் தரையில் படனும் , அதுதான் உங்கள் உயரத்திற்கேற்ற சைக்கிள்
எல்லாரும் சைக்கிள் வாங்கிட்டு ரொம்ப நேரம் ஓட்ட முடியல , பின் பக்கம் வலிக்குதும்பாங்க ... சைக்கிள் ஓட்டுபவர்கள் கண்டிப்பா இந்த Accessories கண்டிப்பா வாங்கிடுங்க
1.Helmet
2.cushioned cycling shorts
3.Water Bottle with Holder
4.Extra Tube
5.Puncture Kit
With Gear or Without Gear ?

கியருடன் வாங்குவது தான் நல்லது , சைக்கிளிங் ஆர்ம்பிச்சுட்டாலே ஒரு சில மாதங்களில் ஐம்பது கிலோமீட்டர் எல்லாம் ஓட்டிடுவிங்க... கியர்ட் சைக்கிள் இருந்தால் பாலங்கள் , மேடுகளில் போக எளிதாக இருக்கும் #சைக்கிளிங்
சைக்கிளிங் போறவங்க கண்டிப்பா Strava Application இன்ஸ்டால் செய்துக்கோங்க ... Strat the app when u ride and it will calculate the speed and the distance u covered... Do that regularly and it’ll compare your previous day speed with today’s:-) A must have app :-) #Cycling
சைக்கிளிங் போக மோட்டுவேஷன் :-) பெருசா ஒன்னும் இல்லைங்க , எங்க வீட்ல இருந்து அன்னபூர்னா காபிக்கு பத்து கிலோமீட்டர் :-) அது தான் டார்கெட் :-) போயிட்டா திரும்ப வந்து தானே ஆகனும் சோ இருபது கிலோமீட்டர் :-) இப்படி தொடங்கியது தான் அப்படியே பவானி , ஆனைக்கட்டி , கோத்தகிரின்னு ஆகிடுச்சு
சைக்கிளிங் போனதால் கிடைத்த நன்மைகள் ...
Resting Heart Rate குறைய ஆரம்பித்தது ..
உடல் எடை குறைந்தது
நிறைய நண்பர்கள் கிடைத்தாங்க
நிறைய புது இடங்களை எக்ஸ்ப்ளோர் செய்ய முடிந்தது :-)
Road Bike Size Chart #Cycling
You can follow @cricgenie.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: