தலைவரின் பயணம்

நடிகர் ரஜினிகாந்த் பால்ய பருவத்திலேயே தனது தாயை இழக்க நேரிட்டதால் தனது அண்ணன், அண்ணியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.

#STELLARLeaderRajini
தலைவரின் தந்தை ராணோஜி ராவ், கர்நாடக காவல்துறையில் காவலராக பணி புரிந்தவர்.

#STELLARLeaderRajini
தலைவர், ஸ்ரீராமகிருஷ்ணா மடத்துப் பள்ளியான ஆச்சார்யா பாட சாலையில் தனது எஸ்.எஸ்.எல்.சி பள்ளிப் படிப்பை படித்து முடித்தார். அதுவரை இவர் உணராத பக்தி அனுபவங்களை இந்தப் பள்ளி இவருக்கு உணர்த்தியது என்றே சொல்ல வேண்டும்.

#STELLARLeaderRajini
மாலைநேர பிரார்த்தனை, தியானம், பிராணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சி எல்லாம் இங்கே தான் ரஜினி முதலில் கற்றுக் கொண்டார்.

#STELLARLeaderRajini
இயற்கையிலேயே முரட்டுத்தனமும், பிடிவாத குணமும் உள்ள ரஜினிக்கு இந்தப் பள்ளி, அவர் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை தந்தது.

#STELLARLeaderRajini
ஆபிஸ் ப்யூனாக தனது முதல் பணியை ஆரம்பித்த ரஜினி, மூட்டை தூக்கும் தொழிலாளியாகவும், தச்சுப் பட்டறைத் தொழிலாளியாகவும் பணிபுரிந்திருக்கின்றார்.

#STELLARLeaderRajini
தலைவர் கர்நாடக போக்குவரத்துக் கழகத்தில் சிவாஜி நகர் சாமராஜ்பேட்டையை இணைக்கும் 134 எண் கொண்ட பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்தார்.

#STELLARLeaderRajini
தலைவருக்குள் ஒரு நடிகர் இருக்கின்றார் என்பதை அறிந்து இவருக்கு அரிதாரம் பூசி நடிகராக்கியது இவருடைய நண்பர் ராஜ் பகதூர்.

#STELLARLeaderRajini
பொழுது போக்கிற்காக நாடகம் போடும் இவருக்கு அப்போதைய ரஜினியின் வேகமான நடை சுறுசுறுப்பு பிடித்துப் போக தனது "குருஷேத்திரம்" நாடகத்தில் துரியோதனன் வேடமேற்று நடிக்க வைத்தார்.

#STELLARLeaderRajini
தொடர்ந்து சினிமாவிலும் ரஜினியை நடிக்க தூண்டியவரும் இவரே. அதன் விளைவு தமிழக அரசு திரைப்படக் கல்லூரிக்கு விண்ணப்பித்தார்.

#STELLARLeaderRajini
நேர்காணலுக்கு ரஜினியை வரச்சொல்லி கடிதம் வர, அதுவரை பார்த்துக் கொண்டிருந்த கண்டக்டர் பணிக்கு நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டு சென்னை புறப்பட்டார்.

அதன்பின்பு நடந்தது எல்லாம் அற்புதமும், அதிசயமும் 🤘

#STELLARLeaderRajini
You can follow @rakks_twitz.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: